Wednesday, November 15, 2023

விடுதலைப் போரில் பூத்த மலரே

 



அவர்தான் அடையாளம்.
அவர்தான் உதாரணம்.

தேசத்தின் விடுதலைக்காகவும்
உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காகவும்
தமிழகத்தில் நீண்ட காலம்
சிறைக் கொட்டடியில் 
அடைபட்டவர் அவர்தான்.

மாணவப் பருவத்தில் ஒரு கேள்வி.
படித்து பட்டம் பெற்று 
வழக்கறிஞராகி வசதியாய் வாழ்வதா?
தேசத்தின் விடுதலைக்காக 
போராடச் செல்வதா? 

படிப்பைத் துறந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவர்,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
சிம்ம சொப்பமானவர்.
போராட்டத் தீயில்
புடம் போட்ட தங்கமானார். 

விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக
அர்ப்பணிக்கப்பட்டது அவரது வாழ்க்கை.

சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவர்தான்.
ஆனாலும் எளிமைக்கான உதாரணம் 
என்றும் அவர்தான்.

ஆண்டுகள் கடந்து முதுமை ஒட்டிக் கொண்டாலும்
வாய் திறந்தால் சிங்கத்தின் கர்ஜனைதான்.

தியாகத்தின் வரலாறாய்,
போர்க்குணத்தின் உதாரணமாய்

என்றென்றும் எழுச்சி தருவார்.

செவ்வணக்கம் தோழர் என்.சங்கரய்யா . . .


1 comment: