Monday, July 31, 2023

கழுதைக்கு தெரியாது காரல் மார்க்ஸ் பற்றி . . .

 


ஆட்டுத்தாடி ஆர்.எஸ்.எஸ் ரவி உதிர்த்த முத்து கீழே.

 


மார்க்ஸிற்கும் ஜென்னிக்கும் இடையிலான காதல், ஜென்னிக்கு எழுதிய கடிதங்கள் ஆகியயவை பற்றியெல்லாம் எழுதலாம் என்றுதான் நினைத்தேன்.

 

பிறகுதான் தோன்றியது, இந்த சங்கி முட்டாள் சொன்னதற்கெல்லாம் பெரிய விளக்கமெல்லாம் தேவையா என்று.

 

அதனால்

 

ஒரு வார்த்தையில் சொல்கிறேன்.

 சங்கிக் கழுதைக்கு தெரியாது காரல் மார்க்ஸ் பற்றி.

 

15 லட்சம் – இதற்கென்ன விளக்கம்?

 


   

ஒன்பதாண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வெற்றி பெற டிமோ சொன்ன ஏராளமான பொய்களில் முக்கியமான பொய் “கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்ச ரூபாய் செலுத்துவேன்: என்பதுதான்.

 டிமோ ஒரு பொய்யன், மோசடிப் பேர்வழி, ஃப்ராடு பார்ட்டி என்பதற்கான சான்றுகளில் இந்த வாக்குறுதியும் ஒரு சான்று.

 15 லட்சத்துக்கு இப்போது ஆட்டுக்காரன், வானதி சீனிவாசன், குஷ்பு ஆகியோர் வினோதமான விளக்கங்களை கொடுத்து வருகின்றனர். 15 லட்ச ரூபாய் எங்கே என்று முன்பு கேட்ட ட்வீட்டை அழிக்க குஷ்பு மறந்து விட்டார் என்பது வேறு கதை.

 


“இந்தியர்கள் வெளி நாடுகளில் ஏராளமான கோடி ரூபாய் கருப்புப் பணத்தை பதுக்கி   வைத்துள்ளார்கள். அதையெல்லாம் நாம் மீட்பேன். அந்த தொகை ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்ச ரூபாய் செலுத்தும் அளவிற்கான தொகை” என்றுதான் சொன்னார். எவ்வளவு ரூபாய் கருப்புப் பணம் வெளி நாட்டில் உள்ளது என்பதை சுலபமாக புரிய வைக்கவே அப்படி சொன்னாரே தவிர வங்கிக் கணக்கில் போடுவேன் என்று இவர்கள்  முட்டு கொடுத்துளார்கள்.

 

இவர்களிடம் என் முதல் கேள்வி

 

15 லட்ச ரூபாய் வங்கிக் கணக்கில் போடுவேன் என்று சொன்னதெல்லாம் “தேர்தல் காலத்து ஜும்லா”  என்று அமித் ஷாவும்

 


தேர்தலில் வெற்றி பெற வாய்ப்பில்லை என்று நம்பியதால் நிறைவேற்ற வாய்ப்பில்லாத இந்த வாக்குறுதியை அளித்தோம் என்று மந்திரி நிதின் கட்காரியும்

 

சொன்னதற்கு என்ன அர்த்தம்?

 

இரண்டாவது கேள்வி

 

வங்கியில் செலுத்துவதென்பது ஒரு புறம் இருக்கட்டும்.

 

வெளி நாடுகளில் இருந்து எத்தனை ரூபாய் கருப்புப் பணத்தை மீட்டுள்ளார்? 

 

பிகு: ரொம்ப நாள் முன்னாடி எழுதி ட்ராப்டிலேயே இருந்தது.

Sunday, July 30, 2023

பத்ரி கைது - மகிழ்ச்சியாகவே இருந்தது

 


ஒரு நெருங்கிய உறவினரின் இறப்பு காரணமாக நேற்று வலைப்பக்கம் பக்கம் வர இயலவில்லை.

கிழக்கு பதிப்பக சங்கி பத்ரி சேசாத்ரி கைது செய்தி அறியும் முன்னரே அந்தாள் பேசிய காணொளியை பார்க்கும் துரதிர்ஷ்டம் வாய்த்தது.

"மணிப்பூரில் கலவரம் இயல்பானது. அடித்துக் கொண்டு சாவார்கள்தான். பாலியல் கொடூரம் நடக்கத்தான் செய்யும். உச்ச நீதிமன்றம் அபத்தமாக பேசுகிறது. சந்திரசூட் துப்பாக்கி எடுத்துக் கொண்டு  போய் அங்கே என்ன செய்வார்? தமிழர்கள் பொறுக்கித்தனமாக பிரச்சினை செய்கிறார்கள். தமிழ்க் கவிஞர்கள், அதிலும் பெண் கவிஞர்கள் இலங்கை கவிதைகளை காப்பி அடித்து கவிதை எழுதுவார்கள். மத்திய அரசு சரியாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது."

இதை பார்க்கும் போதே இந்தாள் மீது யாராவது புகார் கொடுத்து போலீஸ் கைது செய்து கும்முகும்மு என்று கும்மினால் நன்றாக இருக்குமே என்று நினைத்தேன்.

அது நடந்ததால் . . 

"பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அமெரிக்காவில் இருந்தேன். ஏனோ மிகவும் சந்தோஷமாக இருந்தது"

என்று சொன்ன கயவன் 

கைது செய்யப்பட்டது சொந்த துக்கத்தையும் மீறி சந்தோஷமாகவே இருந்தது. 

Friday, July 28, 2023

ஏன் மந்திரி இதுக்கு மட்டும்?

 



மகளிர் மசோதா பற்றிய ஒரு கேள்விக்கு “ஒரு மித்த கருத்து இல்லாமல் மகளிர் மசோதாவை நிறைவேற்ற இயலாது என்று ஒன்றிய சட்ட அமைச்சர் பதில் சொல்லியுள்ளார்.



டிமோ ஆட்சி நடத்தூம் ஒன்பதாண்டு காலத்தில் இது வரை நிறைவேறிய அனைத்து மசோதாக்களும் முழுமையான கருத்தொற்றுமையோடு நிறைவேறியுள்ளது?

 

காலையில் மக்களவை, மதியம் மாநிலங்களவை, மாலை ஜனாதிபதி ஒப்புதல் என்றுதான் நடந்துள்ளது.

 

நாடாளுமன்ற நிலைக்குழுவின் பரிசீலனைக்குக் கூட அனுப்ப மறுத்த அரசு இந்த அரசு.

 

அப்படி இருக்கையில் இந்த மசோதாவிற்கு மட்டும் ஒருமித்த கருத்து வேண்டும் என்று சொல்வது ஏன்?

 

வெரி சிம்பிள்.

 

மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடியாது என்பதை அப்படி சொல்கிறார். அவ்வளவுதான்.

ஏமாந்துட்டீங்க ஜட்ஜய்யா

 


அமலாக்கத்துறை இயக்குனர் மிஸ்ராவோட பணிக்காலம் 31.07.2023 க்கு மேல் தொடரக்கூடாது, இது வரைக்கும் இருந்ததே சட்ட விரோதம்னு சொல்லிட்டு மறுபடியும் செப்டம்பர் 15 வரைக்கும் பணி நீடிப்பு கொடுத்திட்டீங்களே ஜட்ஜய்யா.

இந்தாளைத்தவிர அமலாக்கப்பிரிவில வேலை பார்க்கற யாருக்குமே திறமையில்லையா? இந்தாள் மட்டும்தான் இயக்குனரா இருக்கனும்னா மற்ற அதிகாரிகள் எல்லாம் சோர்வடைய மாட்டாங்களா என்று சரியா கேள்வி கேட்டு கடைசியில சொதப்பிட்டீங்களே!

ஏதோதோ காரணம் சொன்னாலும் இந்தியா வில் இருக்கிற கட்சித் தலைவர்களை மிரட்ட சரியான அடியாள் இந்தாள் என்பதற்குத்தானே தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கிட்டே இருக்காங்க.

செப்டம்பர் 15 க்கு பிறகும் பணி நீட்டிப்பு கேட்டு உங்க கிட்ட வருவாங்க. அப்போ என்ன செய்வீங்க?

Thursday, July 27, 2023

ஒரிஜினலும் டுபாக்கூரும்

 

தோழர் கருப்பு அன்பரசன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து சுட்டது.



இந்த மனிதன் வாழ்க்கையில் ஒரு நொடியாவது நேர்மையாக நடந்திருக்க வாய்ப்புண்டா?

இப்போ வருவேல்ல, இப்போ வருவேல்ல . . .

 


நாடாளுமன்றத்திற்கு வராமல் டிமிக்கி கொடுத்துக் கொண்டிருந்தார் டிமோ.

இந்தியா கொண்டு வந்த "நம்பிக்கையில்லா தீர்மானம்" டிமோ வை வேறு வழியில்லாமல் நாடாளுமன்றத்திற்கு வர வைக்கும்.

பொய்யும் அபத்தமும் வன்மமும் மட்டுமே இருக்கும் என்றாலும்  கூட வேறு வழியில்லாமல் மணிப்பூர் பற்றி வாய் திறந்தாக வேண்டும்.

தீர்மானத்தில் வெல்லாது. ஆனால் கொண்டு வந்த நோக்கத்தில் இந்தியா வென்றுள்ளது.

Wednesday, July 26, 2023

டிமோவுக்கு பயமோ பயம் . . .

 


தெனாலி சோமன் போல டிமோவுக்கு எல்லாத்துலயும் பயம் வந்துடுச்சு. 

ஆமாம்.

கீழே உள்ள செய்தியை பாருங்க . . .



விருது கொடுப்பதை விட விருது பெற்றவர் அதை திருப்பி கொடுப்பதுதான் பெரிய செய்தி.

அதற்குத்தான் டிமோ பயந்து போயிட்டாரு.

மாலன், ஜெமோ, சாரு மாதிரியான ஆளுங்களுக்கு விருது கொடுங்க டிமோ. அவங்க யாரும் திருப்பி தரவே மாட்டாங்க. நீங்க கொடுக்கற காசுக்கு மேல பல மடங்கு கூவுவாங்க....


பயத்தை மறைக்க டிமோ 😆😆😆


நாடாளுமன்றத்துக்கு  வராமல் பதுங்கும்  டிமோ, தங்கள் கட்சி எம்.பி க்கள் கூட்டத்தில் "இந்தியா" வை கிழக்கு இந்திய கம்பெனி, இந்தியம் மொகாஜிதீன், பாபுலர் ப்ரண்ட் ஆப் இந்தியா ஆகியவற்றில் கூட இந்தியா உள்ளது என்று அபத்தமாக பேசித்தள்ளியுள்ளார்.

எங்காளு வீரத்தை பாத்தியா என்று சங்கிகள் கூச்சல் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

நிஜமா? வீரமா?

கீழே உள்ள இரண்டு மீம்கள் பதில் சொல்லும்.



56 இஞ்ச் மார்பன் என்று உதார் விட்டாலும் அடிப்படையில் மிகப் பெரிய கோழை இவர். 

Tuesday, July 25, 2023

நெஜமா கட்டப்பா?

 


வீரேந்திர சேவாக்கின் கமெண்டை மிகவும் ரசித்ததால் இங்கே பகிர்கிறேன்.

 


ஆதி புருஷ் சொதப்பியது மிகவும் மகிழ்ச்சியானதுதான். அந்த படம் மட்டுமல்ல “காஷ்மீர்  ஃபைல்ஸ்” “கேரளா ஸ்டோரி” ஆகிய பாஜக செயல்திட்டத்தின் பகுதியாக வெளிவந்த திரைப்படங்கள், டிமோ கூவி கூவி விற்றாலும் படு தோல்வி அடைந்தது மிகவும் மகிழ்ச்சியே . . .  

 

பிகு: கொஞ்சம் பழசுதான் . . .                                                

Monday, July 24, 2023

உலகம் சுற்றிய ஊதாரி . . .

 


கீழேயுள்ள விபரங்களை படித்தால் நீங்களும் உரக்கச் சொல்வீர்கள். ஒரு மாநிலம் பற்றி எரிந்து கொண்டிருந்த போது வெளி நாடுகளுக்கு பறந்து கொண்டிருந்த டிமோ ஒரு "உலகம் சுற்றிய ஊதாரி" என்று. 



இமகமுக - யாருக்காவது தெரியுமா?

 


“இந்தியா” கூடிய அதே நாளன்று டிமோவும் ஒரு 38 கட்சிகளின் கூட்டத்தை கூட்டினார் என்பது நினைவில் உள்ளதல்லவா!

அக்கூட்டத்தில் தமிழ்நாட்டிலிருந்து கலந்து கொண்ட ஒரு கட்சியின் பெயர் என்ன தெரியுமா?

“இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம்”:

 


இப்படி ஒரு கட்சி இருக்குன்னு யாருக்காவது தெரியுமா?

 இந்த கட்சியையெல்லாம் கூப்பிட்டவங்க ஏன் தரகுப்புயலை அழைக்கலைன்னு தெரியலை.

 எம்.எல்.ரவின்னு ஒருத்தரு தேசிய மக்கள் சக்தி கட்சின்னு ஒரு லெட்டர்பேட் கட்சி வச்சு சங்கிகளை விட தீவிரமா டிமோவுக்கு ஜால்ரா போடுவாரு. அவரை கூப்பிட்டாங்களான்னு தெரியலை.  அவர் என்னை ப்ளாக் செய்து விட்டதால் விபரம் தெரியலை.

 “புலிக்கு பயந்தவன் எல்லாம் என் மேல படுத்துக்கோ” என்ற கதையாக இந்த கூட்டணிக்கட்சிகளுக்கிடையே  ஒளிந்து கொண்டு சீன் போடுகிறார் “56 இஞ்ச் மார்பன்”

மணிப்பூர் பதுங்கு குழிகள்

 


 இன்று காலை ஆங்கில இந்து நாளிதழில் படித்த மூன்று செய்திகள்…

 மணிப்பூரில் இது வரை  290 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.

 காவல்துறையிடமிருந்து கைப்பற்றப்பட்ட 4000 துப்பாக்கிகளில் இதுவரை 1000 மட்டுமே மீட்கப்பட்டுள்ளன.

 முதலமைச்சரை விமர்சனம் செய்யும் ஒரு பதிவை முகநூலில் பகிர்ந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்ட வாலிபனை சிறைக்கு அழைத்து செல்லும் வழியில் ஆண்களும் பெண்களுமாக 800 பேர் கொண்ட கும்பல் வழி மறித்து அடித்து கொன்று விட்டனர்.

இந்த செய்திகள் மூலம் நான் புரிந்து கொண்டது ...

இது வரை வெளி வந்துள்ள உண்மைகள் சொற்பம். TIP OF THE ICEBERG என்று ஆங்கிலத்தில் சொல்வது போல மிகப் பெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே.



மேலே உள்ள படம் மெய்தி இனப் பெண்கள் நடத்திய இயக்கம். அதிலே NRC குறித்த வாசகத்தின் அர்த்தம் தெரியவில்லை. ஆனால் அவர்கள் பாஜகவினால் தூண்டப்பட்டு வெறியேற்றப்பட்டவர்கள். அதனால் அவர்கள் எதை வலியுறுத்துகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 

பாஜக ஆட்சியில் தொடர்ந்தால் மணிப்பூரில் என்றும் அமைதி திரும்பாது என்பதுதான் இப்படம் உணர்த்தும் யதார்த்தம். 

Sunday, July 23, 2023

நடிகர் திலகமும் இந்தியாவின் தேவையும்

 


முன் குறிப்பு : நடிகர் திலகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மூன்று பாடல்களை பகிர்ந்து கொள்ள தயார் செய்திருந்த பதிவு இது. மணிப்பூர் கொடூரம் காரணமாக அதனை அன்று பகிர்ந்து கொள்ள இயலவில்லை. இன்றைய சூழலில் அவசியமான ஒன்றாக கருதுவதால் தலைப்பை மாற்றி பகிர்ந்து கொள்கிறேன்.

 அவருக்கு எம்மதமும் சம்மதமே

நடிகர் திலகம் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு அவரது மூன்று பாடல்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

இந்துவாக, முஸ்லீமாக, கிறிஸ்துவராக அவர் நடித்த படங்களின் பாடல்கள். இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு உதாரணமாக, எம்மதமும் சம்மதமே என்ற சிந்தனை மக்களின் மனதில் பதிய வேண்டும் என்பதற்காக மதத்தின் மீது நம்பிக்கையில்லாவிட்டாலும் பகிர்கிறேன். அடுத்தவர்கள் உணர்வுகளை மதிப்பது என்பதும் இந்தியாவின் பன்முகத் தன்மையின் ஒரு அம்சமல்லவா!


சித்தமெல்லாம் எனக்கு ......



எல்லோரும் கொண்டாடுவோம் . . .
 

 தேவனின் கோயிலிலே . . .




Saturday, July 22, 2023

அஞ்சலி, அஞ்சலி, அஞ்சலி

 



அஞ்சலி திரைப்படத்தில் வரும் "அஞ்சலி, அஞ்சலி, அஞ்சலி" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில்.

நடுராத்தியில் சுடுகாடு தேவையில்லையே!

 


26 ரபேல் விமானங்கள் வாங்கி கமிஷன் வாங்குவது மட்டும் டிமோவின் பிரான்ஸ் பயணத்தின் நோக்கமல்ல, நீங்கள் ஈபிள் டவர் பார்க்க வேண்டுமென்றால் அதற்கான கட்டணத்தை ரூபாயில் கொடுக்கலாம். அதுதான் டிமோவின் சாதனை என்று பீற்றிக் கொள்கிறது ஒரு கூட்டம்.

 


“நடுராத்திரியில நான் ஏண்டா சுடுகாடு போகனும்?” என்பது போல ஈபிள் டவர் கட்டணத்தை ரூபாயில் வசூலிப்பதற்காக நாங்கள் ஏண்டா பிரான்ஸ் போகனும்?

 அரசியல் சட்டப் பிரிவு 370 அகற்றப் பட்ட போது “யார் வேண்டுமானாலும் காஷ்மீரில் நிலம் வாங்கலாம் தெரியுமா” என்று ஒரு கூட்டம் சொல்லிக் கொண்டிருந்தது. பாவம் அவர்களால் தமிழ்நாட்டில் கூட இடமோ வீடோ வாங்கி அதற்கு ஈ.எம்.ஐ கட்ட முடியாதவர்கள்.

 அது போலத்தான்

 இப்போது பெருமை பேசும் யாரும் பிரான்ஸ் போகக் கூடியவர்கள் அல்ல. பக்கத்தில் உள்ள இலங்கை, ஏன் பெங்களூர் கூட போக வசதியற்றவர்கள்.

 பாரீசுக்கு போக விமானக் கட்டணம், ஈ ஓட்டும் காலத்திலேயே 25 ஆயிரத்துக்கு குறையாதாம். அப்படி செலவு செய்து ஊர் சுற்றப் போகிறவர்களுக்கு அந்த நாட்டு நாணயத்தைக் கொடுத்து ஈபிள் டவர் பார்ப்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதெல்லாம் ஒரு சாதனையா டிமோ?

 

டிமோவின் கேரக்டரையே 😆😆😆😆😆

 


கீழே உள்ள செய்திக்கு டிமோ வின் குரங்குக்குளியல் எப்படி இருக்கும் என்ற சிந்தனையே மேலே உள்ள படம். 



Friday, July 21, 2023

அவர்களை வீழ்த்தியேயாக வேண்டும்.

 



மணிப்பூரில் நிகழ்ந்த கொடுமை கண்டு மனம் கொதிக்கிறது. மனசாட்சி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவரகளுக்கு கோபம் வரும்.

 ஆனால் சங்கிகள் என்ன செய்கிறார்கள்.

 கீழே உள்ள பதிவைப் போட்ட பெண்மணி, மோதல்களை உருவாக்கும் பதிவுகளை பகிர்ந்தமைக்காக ஏற்கனவே சிறைக்கு சென்றவர். கலவரம் தொடங்கிய நாள் முதல் தூங்கிக் கிடந்த டிமோவை விட்டு விட்டு உச்ச நீதிமன்ற நீதிபதியை குறை சொல்கிறார்.

 


இந்த பதிவு கட்சிகள் மாறிக்கொண்டிருக்கும் எப்போதும் கஞ்சா போதையில் திளைக்கும் நபர் போட்டது.

 


மே மாதம் நடந்த சம்பவத்தின் காணொளியை இப்போது வெளியிடுவது சதித்திட்டம் என்று சொல்கிறார் பாஜக மந்தி ரவிசங்கர் பிரசாத்.

 


இதெல்லாம் டிஸ்டாக் டூல்கிட் சதி என்று ஆணவத்துடன் பேசுகிறான் கிழக்கு பதிப்பக பத்ரி சேஷாத்ரி.

 


பெரும்பான்மை சமூகத்தை பழங்குடியின பட்டியலில் கொண்டு வர முயன்றதே பிரச்சினைக்கான அடிப்படைக் காரணம். அவர்களின் வோட்டுக்காக இதை தூண்டியது பாஜக.

 

மணிப்பூரின் மலைகளை டிமோவின் முதலாளிகளுக்கு தாரை வார்க்க வழி செய்ய வேண்டும் என்பது அடுத்த நோக்கம்,

 

உண்மை இவ்வாறிருக்க

 

போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த டிமோ எடுத்த நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவே பழங்குடியின மக்கள் கலவரம் செய்கிறார்கள் என்றொரு பிரச்சாரத்தை துவக்கியுள்ளார்கள்.

 

அதானியின் குஜராத் துறைமுகத்தில் பிடிபடுவதே ஆயிரக்கணக்கான கிலோ போதைப் பொருட்கள் என்றால் அங்கிருந்து பரவும் போதைப் பொருட்களின் அளவு எவ்வளவு இருக்கும் என்று யோசித்து பாருங்கள்.

 

இத்தோடு நிறுத்திக் கொண்டார்களா?

 

கிருஷ்ணரின் காதல் மனைவி மணிப்பூரைச் சார்ந்தவராம். அந்த பூமியில் இந்துக்கள் அவதிப்படலமா என்றொரு கேள்வியோடு மத வெறியை உசுப்பேற்றுகிறார்கள்.

 

ஒரு அயோக்கியத்தனத்தை செய்து விட்டு அதை நியாயப்படுத்திக் கொண்டு, திசை திருப்பிக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்கள் மீதே பழி சொல்கிற சங்கிகள் படு கேவலமானவர்கள்.

 

இனி இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்திய நாடு அழிந்தே போகும்.

 

பாஜக அரசை வீழ்த்தியேயாக வேண்டும்.

 

இது மனசாட்சியுள்ள இந்தியனின் கடமை.

 

பிகு: மேலேயுள்ள ஓவியம் ஓவியர் தோழர் ரவி பாலேட் வரைந்தது.

 

Thursday, July 20, 2023

பாஞ்சாலிகளும் திரௌபதியும் . . .

 

கக்கக் கவென்று கனைத்தே பெருமூடன்
பக்கத்தில் வந்தேயப் பாஞ்சாலி கூந்தலினைக்
கையினாற் பற்றிக் கரகரெனத் தானிழுத்தான்.
‘ஐயகோ’ வென்றே யலறி யுணர்வற்றுப்
பாண்டவர்தந் தேவியவள் பாதியுயிர் கொண்டுவர,
நீண்ட கருங்குழலை நீசன் கரம்பற்றி
முன்னிழுத்துச் சென்றான். வழிநெடுக, மொய்த்தவராய்,
‘என்ன கொடுமையிது’வென்று பார்த்திருந்தார்.
ஊரவர்தங் கீழ்மை உரைக்குந் தரமாமோ?
வீரமிலா நாய்கள். விலங்காம் இளவரசன்
தன்னை மிதித்துத் தராதலத்திற் போக்கியே,
பொன்னையவள் அந்தப் புரத்தினிலே சேர்க்காமல்,
நெட்டை மரங்களென நின்று புலம்பினார்.
பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையாமோ?
பேரழகு கொண்ட பெருந்தவத்து நாயகியைச்
சீரழியக் கூந்தல் சிதையக் கவர்ந்துபோய்க்
கேடுற்ற மன்னரறங் கெட்ட சபைதனிலே
கூடுதலும் அங்கேபோய்க் ‘கோ’வென் றலறினாள்

மகாபாரத புனைவுக் கதையின் ஒரு பகுதியை "பாஞ்சாலி சபதம்" ஆக பாரதி எழுதினான். அதிலே துச்சாதனன் பாஞ்சாலியை அரசவைக்கு இழுத்து வரும் காட்சிதான் மேலே உள்ளது. பாரதி எழுதியதை படிக்கையிலேயே நெஞ்சம் பதைபதைக்கிறது.

புனைவை விட மோசமான நிகழ்வாக மணிப்பூரில் பழங்குடியின பாஞ்சாலிகளுக்கு அராஜகம் நிகழ்ந்துள்ளது.

"நெட்டை மரங்களென நின்று புலம்பினர்" என்று பாரதி மக்களை சாடினான்.

இந்தியாவின் முதல் குடிமகள், பழங்குடியினத்தின் முதல் குடியரசுத் தலைவர் என்ன செய்கிறார்.

நெட்டை மரமென புலம்பும் உரிமை கூட அற்றவர். பீஷ்மரும் துரோணரும் விதுரரும் போல வேடிக்கை மட்டுமே அவரால் பார்க்க இயலும்.

அவரது பெயரும் திரௌபதி என்பது மிகப் பெரிய நகை முரண். 

எரி தழல் கொண்டு வா

 


இது பொறுப்ப தில்லை தம்பி     
எரிதழல் கொண்டு வா
கதிரை வைத்திழந்தான்.
அண்ணன் கையை எரித்திடுவோம்

-         பாஞ்சாலி சபதத்தில் பாரதி

 

நல்ல வேளை, நான் அந்த காணொளியை பார்க்கவில்லை. ப்ளர் செய்யப்பட்ட புகைப்படங்களே  மணிப்பூரில்  நிகழ்ந்த அராஜகத்தை புரிய வைத்தது.

 

கொடுமையைச் செய்தவர்களை தூக்கில் போட வேண்டும். வேடிக்கை பார்த்தவர்களை சிறைக்குத் தள்ள வேண்டும் என்றெல்லாம் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் திருமதி குஷ்பூ ட்வீட்டியிருந்தார்.

 


யாரெல்லாம் குற்றவாளிகள்?

 

 பெண்களை இழிவு படுத்திய   வெறி பிடித்த ஜென்மங்கள்.

 அரசியல் ஆதாயத்துக்காகவும்   பழங்குடி மக்களின் நிலங்களை   அதானி உள்ளிட்ட முதலாளிகளுக்கு   அள்ளிக் கொடுக்கவும் கலவரத்தைத்  தூண்டி விட்ட,அதிகாரத் தரகர்கள், அதான் ஒன்றிய ஆட்சியாளர்கள்.

 அநீதியை அனுமதித்த முதல்வர்,

வேடிக்கை பார்த்த உள்துறை அமைச்சர்,

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலையிடும் வரை

உறக்கத்தில் மூழ்கிப்போன கையாலாகாத டிமோ

 இவர்கள் அத்தனை பேரும்தான் நடந்த கொடூர சம்பவத்திற்கு பொறுப்பு. பாரதி சொன்னது போல் எரிதழல் கொண்டு பொசுக்கிட வேண்டியவர்கள்.

 சரிதானே குஷ்பு மேடம்?

 

குஜராத்துக்கு ஒரு குட்டு

 


குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு போராடிய சமூக ஆர்வலர் டீஸ்டா செதல்வாட் மீது சி.பி.ஐ ஒரு பொய் வழக்கு போட்டு சிறையில் தள்ளியது. உச்ச நீதி மன்றம் தலையிட்டே பிணை கொடுத்தது. 

பிணையை ரத்து செய்து அவரை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டும் என்று குஜராத் உயர் நீதிமன்றம் 1000 பக்க உத்தரவு போட அதனை நேற்று உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

"ஆயிரம் பக்கம் தீர்ப்பு படிப்பதற்கு சுவாரஸ்யமாக  இருந்தாலும் அதில் எந்த விஷயமும் இல்லை. முரண்பாடுகள் ஏராளமாக இருக்கிறது. சாட்சியங்களை போர்ஜரி செய்தார் என்று குற்றம் சுமத்துகிறீர்கள். அந்த சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்ட காலம் 2008 முதல் 2011 வரை. இத்தனை நாள் சும்மா இருந்து விட்டு 2022 ல் குற்றம் சொல்ல வேண்டிய அவசியம் என்ன? "

என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கடிந்து கொண்டுள்ளனர். குஜராத்தை குறை சொல்வதென்றால் அது டிமோவை சொல்வதாகும்.

தைரியமான நீதிபதிகள்தான்.

அதனால் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

நீதிபதி லோயா நினைவுக்கு வருகிறார். குஜராத் நீதிபதியை நினைக்கையில் சதாசிவம், தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், எஸ்.ஏ.பொப்டே, அருண் மிஸ்ரா ஆகியோரும் நினைவுக்கு வருகிறார்கள். 

Wednesday, July 19, 2023

Anti Indians கதறல் ஆனந்தமாக . . .

 



 

எதிர்க்கட்சிகள் தங்கள் கூட்டணிக்கு INDIA என்று பெயர் வைத்ததை சங்கிகள் எதிர்பார்க்கவில்லை.  நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் கதறிக் கொண்டிருக்கிறார்கள். நேற்று சில மாதிரி கதறல்களை பதிவிட்டேன். கட்சியின் பெயருக்கும் கூட்டணியின் பெயருக்கும் வித்தியாசம் தெரியாத மேதாவிகள், இந்த பெயரை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும், நீதி மன்றம் தடை செய்ய வேண்டும் என்றெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவின் தேசிய மலரான தாமரை, பாஜகவின் தேர்தல் சின்னமாக இருப்பதை தடை செய்யச் சொல்வார்களா அந்த மேதாவிகள்? ஆட்டுக்காரன் குழு மாடரேட்டர் புள்ளி வையுங்கள் என்று அறிவுரை சொல்கிறார்.

 குழலினிது யாழினிது என்பார்கள் சங்கிகளின் கதறல் சத்தம் கேட்காதவர்கள்.

அந்த இனிய கதறல்களை நீங்களும் கேட்டு மகிழுங்கள்.

 































இவனுங்களே இப்படி கதறினால் மோடியின் குரங்குக்குளியல் எப்படி இருக்கும்.  

காற்று திசை மாறுவதை சுமந்து புரிந்து கொண்டார் போல. அவரது பதிவை பாருங்கள். பிழைத்துக் கொள்வார்.