பி.கு:
எல்.ஐ.சி நிறுவனத்திற்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டரிலும் முகநூலிலும்
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
பி.கு:
எல்.ஐ.சி நிறுவனத்திற்கு உங்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை ட்விட்டரிலும் முகநூலிலும்
திரு அகில் குரேஷி - திரிபுரா உயர்நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி. சில நாட்கள் முன்பாக வெளியிடப்பட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பட்டியலில் இவர் பெயர் இருந்திருக்க வேண்டும்.
ஆனால் இடம் பெறவில்லை.
இவருக்கு இதற்கு முன்பாக நிகழ்ந்ததைப் பார்த்தால் இதில் அதிர்ச்சிக்கு இடமில்லை.
குஜராத் மாநில உயர்நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி இவர். தலைமை நீதிபதியாக இவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இவருடைய ஜூனியர் ஒருவருக்கு தற்காலிகப் பொறுப்பு அளிக்கப்படுகிறது. இவர் மும்பைக்கு மாற்றப்படுகிறார். அங்கிருந்து மத்திய பிரதேசத்திற்கு. கிட்டத்தட்ட ஐம்பது நீதிபதிகள் கொண்ட அந்த நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ஆகும் வாய்ப்பு வருகையில் நான்கு நீதிபதிகள் மட்டுமே கொண்ட திரிபுரா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்படுகிறார்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி நாரிமன், நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் கொலேஜியத்தில் இவருக்காக கடுமையாக வாதாடி உள்ளார். அவர் முன்வைத்த கருத்துக்களை நிராகரிக்க முடியாததால் ஒரு வருட காலம் அந்த கோப்பின் மீது எந்த முடிவும் எடுக்காமல், நாரிமன் ஓய்வு பெற்ற அடுத்த வாரமே அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள்.
இப்படி அவரை மோடி அரசு பழி வாங்க என்ன காரணம்?
ஒரு குற்றவாளிக்கு நீதிமன்றக் காவலுக்கு உத்தரவிட்டதுதான்.
அது என்ன வழக்கு?
சோரப் ஷகாபுதீன் போலி எண்கவுண்டர் வழக்கு?
யாரந்த குற்றவாளி?
அமித் ஷா.
அகில் குரேஷி இத்தனை நாள் உயிரோடு இருப்பதே பெரிய விஷயம் என்ற உங்கள் மனதின் குரல் எனக்கும் கேட்டு விட்டது.
மோடி ஆட்சியில் பிணம் தின்னும் சாத்திரங்கள்தானே!
தஞ்சைக் கோட்டத்தின் முன்னாள் தலைவரும் தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் துணைத் தலைவருமான தோழர் ஆர்.புண்ணியமூர்த்தி அவர்களின் முக நூல் பதிவையும் புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன்.
இதுதான் உண்மையான இந்தியா. பன்முகத்தன்மை கொண்ட மத நல்லிணக்க இந்தியா. இதனை கெடுக்காதீர் கேடு கெட்ட சங்கிகளே!
ஜெயமோகனுக்காக சங்கறுப்பேன் என்று வீடியோ போட்ட ஒரு பழைய புத்தகக் கடைக்காரருக்காக பக்கம் பக்கமாக செல்ஃபி கேள்வி பதில் போட்ட புளிச்ச மாவு ஆஜான்
உலக வரலாற்றில் சில புகைப்படங்கள் மறக்க முடியாதவை. அவை
அமெரிக்காவின் ரசாயன குண்டின் தாக்கம் தாங்க முடியாமல் ஆடைகள் இன்றி ஓடி வரும் சிறுமி,
சிறுமியின் மரணத்திற்குக் காத்திருக்கும் வல்லூறு,
புதைகுழியில் கண் மூடிய போபால் விஷ வாயுவில் பலியான சிறுவன்,
ஐரோப்பியக் கடற்கரையில் ஒதுங்கிய சிரிய நாட்டு சிறுவனின் சடலம்
என்று துயரங்களின் வெளிப்பாடாகவே இருக்கும்.
மாறாக தாலிபன் கூட்டத்திடமிருந்து தப்பித்து பெல்ஜியம் மண்ணில் இறங்கியதும் மண்ணில் கால் படாமல் உற்சாகத்துடன் துள்ளிச் செல்லும் சிறுமியின் புகைப்படம் உற்சாகத்தின் வெளிப்பாடு, விடுதலையின் வெளிப்பாடு.
*நாளொரு கேள்வி: 27.08.2021*
ரோஜா திரைப்படத்தின் "புது வெள்ளை மழை இன்று பொழிகின்றது" பாடலின் வயலின் வடிவம்
என் மகனின் கைவண்ணத்தில்
யூட்யூப் இணைப்பு இங்கே உள்ளது
ஆப்கான் பிரச்சினை மூலம் மோடி அகண்ட பாரதத்தை உருவாக்கும் முயற்சியை தொடங்கி விட்டார் என்ற ஒரு சங்கியின் பதிவைப் பற்றி சில தினங்கள் முன்பு எழுதியிருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக இன்னொரு சங்கி இன்னும் விரிவாக எழுதினார். அந்த காமெடியை நீங்களே படித்து வாய் விட்டு சிரியுங்கள்.
“அம்பாள் எந்த காலத்திலடா பேசியிருக்கிறாள்” என்று பராசக்தி வசனம்தான் தேவைப்படுகிறது.
இலங்கை எப்போது இந்தியாவின் பகுதியாக இருந்திருக்கிறது?
அதே
போலவே திபெத்தும், மியன்மரும், நேபாளமும்?
ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த பாபர் அன்றைய இந்தியாவில் இருந்த அரசர்களை வென்று டெல்லியில் முகலாய சாம்ராஜ்யம் அமைத்தாரே, தவிர இந்திய அரசர்கள் யாரும் ஆப்கானை வென்று தங்கள் ஆட்சியின் கீழ் கொண்டு வந்ததில்லை.
இதில் விவேகானந்தரை வேறு இழுக்கிறார்கள்.
நான் எப்போதும் சங்கிகளில் அடி முட்டாள்கள், அயோக்கியர்கள் என்று இரண்டு வகை உண்டு என்று சொல்வேன்.
விவேகானந்தரின் பூர்வாசிரமப் பெயரான நரேந்திரர் என்பதை பயன்படுத்தி அவர் காலத்தில் இருந்த அகண்ட பாரதத்தை இன்னொரு நரேந்திரர் மீட்கப் போகிறார் என்று சொல்வது அடி முட்டாள்களை நம்ப வைக்க அயோக்கியர்கள் செய்யும் தந்திரம்.
பத்திரிக்கையாளர்களை சந்திக்கக்கூட திராணியில்லாத ஒரு கோழை பிரதமர் அகண்ட பாரதம் அமைப்பார் என்று சொல்வது ஒரு குரூரமான நகைச்சுவை.
‘பயமே என்னைப் பார்த்து பயப்படும்” என்று வசனம் பேசிக் கொண்டே குட்டி ஹட்ச் நாயைப் பார்த்து பயப்படும் “தமிழ்ப்படம்” சிவா போன்ற வீரர்கள் இவர்கள் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
பிகு: சுதந்திரப் போராட்டத்திற்காக சிறு துரும்பையும் கிள்ளிப் போடாத. மாறாக வெள்ளையர்கள் நம் எதிரிகள் அல்ல, இஸ்லாமியர்கள்தான் என்று சொன்ன ஹெட்கேவர் சுதந்திரத்தை பேணிக்காக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பை உருவாக்கினார் என்று சொல்வது காமெடி அல்ல, அயோக்கியத்தனம்.
இன்று காலை என்னை சிரிக்க வைத்த ஒரு பதிவும் ஒரு பின்னூட்டமும். தங்களை மிகவும் பிரம்மாண்டமாக நினைத்துக் கொண்டிருக்கிற ஒரு வியாதி (Megalomania) யால் பாதிக்கப்பட்டவர்களாக ஒருவர் இருந்தால் பரவாயில்லை. அத்தனை பேருமே வியாதியஸ்தர்களாக இருந்தால் என்ன செய்வது?
மணிரத்தினம் எடுத்துக் கொண்டிருக்கிற பொன்னியின் செல்வன் படத்தில் நடிப்பவர்களின் தோற்றங்களை வெளியிட்டார்கள். அப்போதே ஒருவர் சொன்னார், அத்தனை பாத்திரங்களிலும் வடிவேலுவை வைத்து கூடிய சீக்கிரம் படம் வரும் பாருங்கள் என்று சொன்னார்.
எஞ்சாய் . . . .
கொரோனா தொற்றால் தாய், தந்தை இருவரையும் இழந்த குழந்தைகளின் கல்வி, எக்காலத்திலும் தடைபடக் கூடாது என்றும் கல்வி ஒரு அடிப்படை உரிமை ஆதலால், அவர்களின் கல்விக்கான கட்டணத்தை பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து செலுத்த முடியுமா என்று கேட்டுள்ள உச்ச நீதிமன்ற நீதியரசர்களே, உங்களைப் பார்த்தால் எனக்கு சிரிப்புதான் வருகிறது.
பிரதமர் நிவாரண நிதி என்பதற்கு மாறாக பி.எம்.கேர்ஸ் நிதி என்று புதிதாக ஒன்றை உருவாக்கியதன் காரணமே புரியாத வெள்ளந்திகளாக இருக்கிறீர்களே நீங்கள்!
பி.எம்.கேர்ஸ் நிதி என்பது ஒரு வழி ரகசியப்பாதை. அதில் என்ன செய்கிறீர்கள் என்று யாரும் கேட்கக் கூடாது, ஆர்.டி.ஐ கூடாது என்பதற்காகத்தானே அதை ஒரு தனியார் அறக்கட்டளையாக அமைத்தோம். பிறகு எப்படி பி.எம்.கேர்ஸ் நிதியிலிருந்து பணம் தர முடியுமா என்று கேட்கிறீர்கள்?
தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய் பாரம்பரியத்திலிருந்து நீங்கள் விலகிச் செல்கிறீர்கள். தடுப்பூசி விஷயத்தில் நீங்கள் கேள்வி மேல் கேள்வி கேட்டதால்தான் அனைவருக்கும் அரசே செலவை ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னோம். அப்போது கூட பி.எம்.கேர்ஸ் நிதியை தொடவில்லை. தனியார் கொள்ளையடிப்பதற்கான வாசலை இந்த சூழலிலும் திறந்தே வைத்துள்ளோம். ஆனாலும் தடுப்பூசி என்பது நான் போட்ட பிச்சை என்று பித்தர்கள் சிலரை பேச வைக்குமளவிற்கு எங்கள் ஆதரவாளர்களை மூளைச்சலவை செய்து மூடர்களாக்கி வைத்துள்ளோம்.
பி.எம்.கேர்ஸ் நிதி யை இப்படி அனாதைக் குழந்தைகளுக்கு செலவிட்டால் எம்.எல்.ஏ க்களை எப்படி எங்களால் விலைக்கு வாங்க முடியும்?
அந்த நிதி பற்றி கேள்வி கேட்பதற்கு யாருக்கும் உரிமை கிடையாது என்று உங்களில் ஒருவரையே சொல்ல வைத்துள்ளேன் என்பதை மனதில் கொண்டு இனியும் அது பற்றி பேசாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.
நோ மீன்ஸ் நோ
இவண்
பி.எம்.கேர்ஸ் பெரு முதலாளி என்று உண்மையான தேசபக்தர்களால்நரேந்திர மோடி
அவர்களுக்கு பிடிக்காதவர்களை எல்லாம் வேவு பார்த்தார்கள். அதற்காக கோடிக் கணக்கில் அரசுப் பணத்தை தாரை வார்த்தார்கள்.
ஆனால் பாவம் . . .
அவர்களை அவர்களே வேவு பார்த்தார்கள். அவர்கள் பேசியதை அவர்களே பதிவு செய்தார்கள். படமும் எடுத்தார்கள்.
தக்காளிச்சட்டினி என ஏகடியம் பேசியவர்களால் ரத்தம் வந்த போது வாய் விட்டு புலம்பக் கூட முடியவில்லை.
ஆட்டுக்குட்டியை அறுத்து பிரியாணி போட்டு விடுவார்களோ?
மேலே படத்தில் உள்ளவர் ஜம்மு காஷ்மீர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பர்வேஸ் ரசூல். அந்த மாநிலத்திலிருந்து இந்திய கிரிக்கெட் அணியில் முதன் முதலில் இடம் பெற்றவர். மோடியால் புகழப்பட்டவர்.
அவருக்கு ஒரு மின்னஞ்சல் தவறுதலாக வந்துள்ளது.
அனில் குப்தா என்ற ஓய்வு பெற்ற ராணுவ உயரதிகாரியும் மாநில பாஜக பொறுப்பாளருமான மனிதர், "பர்வேஸ் ரசூலை போட்டுத் தள்ள ஏதாவது ஆதாரம் இருக்கிறதா?" என்று அம்மாநில கிரிக்கெட் சங்க தலைவருக்கு அனுப்பிய மின்னஞ்சலை ரசூலுக்கும் சேர்த்து அனுப்பி விட்டார்.
ஏற்கனவே அனில் குப்தா தொடர்ச்சியான குடைச்சல்களை கொடுத்துக் கொண்டிருந்ததால் இந்த மின்னஞ்சலைப் பார்த்ததும் கடுப்பாகி வெடித்து விட்டார்.
இதன் விளைவுகள் என்னாகுமோ?
மோடியால் புகழப் பட்டாலோ, ஆறுதல் சொல்லப்பட்டாலோ அவர்களின் எதிர்காலம் என்ன ஆகும் என்பதற்கான உதாரணமாகத்தான் முகப்புப் படம் உள்ளது.
கேடி.ராகவன்
ஆபாசக் காணொளி சங்கிகளுக்கு நடுக்கம் கொடுத்துள்ளது. எந்த ஒரு சர்ச்சையென்றாலும் கொந்தளிக்கும்
பல மத்யமர் சங்கிகள் நேற்று விடுப்பில் போய் விட்டார்கள். மத்யமர் குழு அட்மினோ கேடி
ராகவன் பற்றிய பதிவுகளுக்கு அனுமதி கிடையாது என்று வேறு வேறு வார்த்தைகளில் மறுத்து
விட்டார்.
சங்கிகளின் முக்கியமான பொய்ப் பரப்பாளர் ஸ்டான்லி ராஜன் பதிவு மேல் பதிவு எழுதி மதன் ரவிச்சந்திரனையும் வெண்பா கீதாயனையும் நொடிக்கு நொடிக்கு திட்டிக் கொண்டே இருக்கிறார். மீதமுள்ள பதினான்கு பேரில் இந்த பேனா பொய்யரும் உள்ளாரோ?
மாற்று மதத்தவர்களையும் திமுகவையும் திட்டும் பதிவுகளை பகிர்ந்து கொள்வதையே பிழைப்பாகக் கொண்டுள்ளவர்களும் காணவில்லை. எங்கே பதுங்கிக் கொண்டுள்ளனரோ?
சங்கிகளின்
இந்த பயம் எனக்கு மிகவும் பிடிச்சிருக்கு . . . .
பிகு: அகண்ட பாரதமெனும் சங்கிக் காமெடி - நாளை
இணையத்திலிருந்து சுட்ட ஒரு நிறைவான, நெகிழ்ச்சியான செய்தி.
குழந்தை ஒன்றின் அறுவை சிகிச்சைக்காக ஒலிம்பிக் இல் கிடைத்த வெள்ளி பதக்கத்தை ஏலம் விட்ட போலந்து நாட்டு விராங்கனை
டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் பிரிவில், பெண்களுக்கான போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற மரியா தான் இன்று விளையாட்டு உலகின் சென்சேஷன். தன்னுடைய செயலால் வானளவு உயர்ந்து நிற்கிறார்.
போலந்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பிறந்து எட்டு மாதமே ஆன மிலோசெக் மலிசா என்ற ஆண் குழந்தைக்கு உடனடியாக இருதய சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதற்கு தேவையான தொகை எவ்வளவு தெரியுமா? 3,85,088 டாலர். அதாவது, இந்திய ரூபாய்க்கு கிட்டத்தட்ட 3 கோடி. இந்த தகவலை பேஸ்புக் மூலம் அறிந்த மரியா, அந்த குழந்தைக்கு எப்படியாவது உதவி புரிய வேண்டும் என்று முடிவெடுத்தார். அதற்கு, ஒலிம்பிக் போட்டியில் தான் வென்ற வெள்ளிப் பதக்கத்தை ஏலம் விட முடிவு செய்தார்.
எனினும், 3 கோடி ரூபாயில் பாதிக்கும் மேற்பட்ட தொகையை குழந்தையின் பெற்றோர்கள் ஆன்லைன் மூலம் திரட்டி விட்டனர். மீதமுள்ள தொகையை தன் பதக்கத்தை ஏலம் விடுவதன் மூலம் திரட்ட முடிவு செய்தார். இதுகுறித்து அவர், "பதக்கத்தின் உண்மையான மதிப்பு என்றும் என் இதயத்தில் இருக்கும். பதக்கம் என்பது வெறும் பொருள் மட்டுமே. ஆனால், பலருக்கு அது மிகவும் மதிப்பு வாய்ந்தது. என்னுடைய வீட்டில் இருந்து தூசி அடைவதை விட இந்த வெள்ளிப் பதக்கம் ஒரு உயிரை காப்பற்றட்டும். அதனாலேயே நோய்வாய்பட்ட குழந்தையின் உயிரைக் காப்பாற்ற இதை ஏலத்தில் விட முடிவு செய்தேன்" என்று தன் பதக்கத்தை ஏலத்தை விடுத்தார்.
இந்நிலையில், போலந்து நாட்டைச் சேர்ந்த Zabka எனும் சூப்பர் மார்க்கெட் நிறுவனம் 1,25,000 அமெரிக்க டாலர் செலுத்தி அவரது மெடலை ஏலத்தில் வென்றது. இதனை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார் மரியா. குழந்தையின் பெற்றோரிடம் அந்த பணத்தையும் அவர் ஒப்படைத்தார். இதில் வியக்கத்தக்க மற்றொரு தகவல் என்னவெனில், ஏலத்தில் வென்ற அந்த சூப்பர் மார்க்கெட் நிறுவனம் வெள்ளிப் பதக்கத்தை மீண்டும் மரியாவிடமே கொடுத்துவிட்டது. இதுகுறித்து அந்த நிறுவனம், "மரியாவின் மனிதநேயத்தை நாங்கள் மனதார பாராட்டுகிறோம். டோக்கியோவில் வென்ற அவரது வெள்ளிப் பதக்கம் என்றும் அவரிடமே இருக்கட்டும்" என்று கூறி நெகிழ வைத்திருக்கிறது.