Friday, November 24, 2023

பொறாமையா சச்சின்?

 



விராத் கோலி ஐம்பதாவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததற்கு ஒரு வாழ்த்து ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.

 


அந்த செய்தியில் நெருடல் என்னவென்றால்

 கோலியுடனான தன் முதல் சந்திப்பை விவரித்துள்ளதுதான்.

 “என்னுடைய காலை தொட்டு நீ வணங்கியதைக் கண்டு உன் சகாக்கள் உன்னை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நீ அன்று கால்களை தொட்டாய், பின்பு இதயத்தை தொட்டாய்”

 உங்கள் கால்களை கோலி தொட்டதெல்லாம் வாழ்த்துச் செய்தியில் ரொம்ப முக்கியமா என்ன?

 “நான் பார்த்து வளர்ந்த பையன், இப்போ என்னை விட பெரிசா போயிட்டான்” என்ற பொறாமையைத் தவிர வேறொன்றுமில்லை.

 இப்படி பொறாமையை இதே போல பொது வெளியில் இன்னொரு பெரியவரும் இரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

 அவர் இளையராஜா.

 ஏ.ஆ.ர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றதற்காக நடைபெற்ற விழாவிலும் பிறகு இளையராஜா 75 நிகழ்விலும்.

 எல்லாம் வயதின் கோலம்!

பிகு: கிரிக்கெட்டின் தெய்வத்தை நிந்தித்து விட்டேன் என்று எத்தனை பேர் என்னை கண்டிக்கப் போகிறார்களோ! அது போலவே இளையராஜாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இசைக்கடவுள். கொஞ்ச நேரம் தலைமறைவாகச் செல்வது நல்லதென்று நினைக்கிறேன்.

2 comments:

  1. மாணிக்க முனிராஜ்November 24, 2023 at 9:00 AM

    உங்களோட ஒவ்வொரு பதிவும் வேற லெவல் தல

    அநேக அன்புகள் தோழர்

    ReplyDelete
  2. விளையாட்டு வியாபாரி & விளம்பரம் மூலம் பணத்திற்காக விளையாடியவர்.

    ReplyDelete