ஒரு கூட்டுக்
கிளியாக இருந்தவர்கள், ஒரு மரத்துப் பறவையாக இருந்தவர்கள் அன்றாடம் அடித்துக்
கொள்வது துவங்கி இருக்கிறது. நாங்கள் விசா கொடுத்தால்தான் தெலுங்கானாவிற்குள்
யாரும் நுழைய முடியும் என்று இன்னும் கொஞ்சம் நாட்களில் சந்திர சேகர ராவ் சொன்னாலும்
ஆச்சர்யப்படுவதிற்கில்லை.
உயிரற்ற
கட்டிடங்களுக்காக உயிருள்ள மனிதர்கள் சண்டையிடும் காட்சியைக் காணுகிறோம்.
ஓடி வரும்
நதியை சொந்தம் கொண்டாடும் காட்சியைப் பார்க்கிறோம்.
ஒரே மாநிலத்தின்
நிலத்தை இரண்டாய்ப் பிரித்து நீங்கள் போட்ட கோடு
மக்களின் மனதில் அல்லவா கீறலை உருவாக்கியது?
அண்டை
நாடுகளோடுடனான மோதலைக் காட்டிலும் அல்லவா மோசமாக போய்க்கொண்டிருக்கிறது இம்மோதல்?
இருபது எம்.பி
சீட்டுக்களுக்கு ஆசைப்பட்டீர்கள். நம்பினீர்கள். இதற்கு முன்பாகவும் உங்கள்
கட்சியை மோசம் செய்தவர் இப்போது கரம் கொடுப்பார் என்று மோகம் கொண்டது உங்கள்
கட்சி. தேசத்தை மோசம் செய்த உங்கள் கட்சி மோசம் போனதில் ஒன்றும் தவறு இல்லை.
எப்படிப்பட்ட இழிவான தண்டனைக்கும் தகுதி வாய்ந்தது உங்கள் கட்சி. ஆனால் இன்று
அவசியமற்ற மோதல்களை உருவாக்கியிருக்கிறது உங்களின் பேராசை.
ஆனால்
அதைப்பற்றி உங்களுக்கென்ன கவலை?
ஆட்சிப்
பொறுப்பில் இருந்த போதே மக்களைப் பற்றிக் கவலைப்படாத நீங்கள் இப்போது மட்டும்
எப்படி கவலைப்படுவீர்கள்?
உங்களுக்குத்தான்
தெலுங்கானா பகுதியில் சிலை வைத்து கடவுள் ஸ்தானம் கொடுத்திருக்கிறார்களே சில
மூடர்கள்! அது போதாதா?
திருப்தியாக
இருங்கள் மேடம்