பாவம் சங்கிகள்!
அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஏன்யா இப்படி அடிபட்டே என மனதுக்குள் ஹர்திக் பாண்டியாவை திட்டிக் கொண்டிருக்கலாம்.
இன்று காலை முதல் ஒரு படத்தை வைத்து அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் இதை வைத்து சீன் போட்டீர்களே என்று கேட்டால் அப்படியெல்லாம் கிடையாது என்று சண்டைக்கு வருகிறார்கள்.
இப்போ ஸ்டேடியம் கட்டுவார்கள். நாளை ஒழுங்காக விளையாடாவிட்டால் வீட்டை இடிக்க புல்டோசர் அனுப்புவார்கள். பாகிஸ்தானுக்கு போ என்று சொன்ன கூட்டம்தானே! முகமது ஷமிக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததற்காக "உன் குழந்தையை பாலியல் வன்புணர்ச்சி செய்வேன்" என்று விராத் கோலியையும் மிரட்டி வசை பாடிய கூட்டம்தானே ! என்றெல்லாம் கேட்டால் ஒரு கதை சொல்கிறார்கள் பாருங்கள்! அங்கேதான் நிற்கிறார்கள் முட்டாள் சங்கிகள்!
முகமது ஷமி பற்றி அவரது மனைவியே மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு சொன்னதால் அப்போது ஆற்றிய எதிர்வினை. அது உண்மையல்ல என்று தெரிந்ததால் அமித்ஷா மகன் ஜெய்ஷாதான் முகமது ஷமியை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தார். - இதுதான் சங்கிகளின் கதை.
முகமது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை உண்டு. அவர் குற்றம் சுமத்தினார். அதையெல்லாம் கிரிக்கெட் வாரியம் விசாரித்து ஷமி மீது எந்த தவறும் கிடையாது என்று முடிவு செய்து அறிவித்தது. இதெல்லாம் நடந்தது 2018 ல். ஜெய்ஷா கிரிக்கெட் வாரியத்தை ஆக்கிரமித்தது 2019 ல் தான்.
இதை விட முக்கியமாக முகமது ஷமியை எதற்கு எப்போது "பாகிஸ்தானுக்கு போ" என்று வசை பாடினார்கள் என்பது பற்றி வாய் திறக்கவே இல்லை.
2021 ல் நடந்த டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது. பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆகாமல் 10 விக்கெட் வெற்றி பெற்றார்கள். முகமது ஷமி மட்டுமல்ல, எந்த பவுலருமே விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் வசவு மட்டும் முகமது ஷமிக்குத்தான். அதற்கு அவர் மதம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? ஷமியை ஆதரித்த குற்றத்திற்காக சங்கிகளின் ஆபாச வசைக்கு விராத் கோலியின் ஒரு வயது பெண் குழந்தை கூட தப்பவில்லை.
தங்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் குறித்து சிறு உறுத்தல் கூட இல்லாமல் அயோக்கிய சங்கிகள் தற்போது ஷமியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் (நாளை இந்தியா தோற்றுப் போனால் அப்படியே மாறி விடுவார்கள் என்பது வேறு கதை). முட்டாள் சங்கிகள் நம்பி பரப்புகிறார்கள்.
No comments:
Post a Comment