Thursday, November 30, 2023

ராமரை அசிங்கப்படுத்தாதீர் . . .

 



 

சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை ராமர் காப்பாற்றி அழைத்து வந்தார் என்று சங்கிகள் போட்ட படம் பல கேள்விகளை எழுப்பி விட்டது.

 



மனித சக்தியையும் அறிவியல் சக்தியை பின்னுக்குத் தள்ளி  இறை சக்தியை முன்னிறுத்தும் உத்தியா என்பது முதல் கேள்வி.

மீட்புப்பணிகளில் முன் நின்றவர் ஆஸ்திரேலிய நாட்டவர் என்பதால் அவரை பின்னுக்குத் தள்ள ராமர் கொண்டு வரப்பட்டாரா?

இறுதி கட்டத்தில் சாதித்த “எலி வளை சுரங்க” தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர்கள் என்ற செய்தி பரவாமல் திசை திருப்ப ராமர் கொண்டு வரப்பட்டாரா?

ராமர்தான் காப்பாற்றினார் என்றால் அவர் ஏன் விபத்தை தவிர்க்கவில்லை என்றும் பதினேழு நாட்கள் என்ன செய்தார் என்ற கேள்வி மிக முக்கியமானது. உண்மையான பக்தர்கள் சங்கிகளால் ராமர் அசிங்கப்படுத்தப்பட்டார் என்பதை உணர்வார்கள்.

பிகு: மோடிதான் அழைத்து வந்ததாக படம் போட நினைத்திருப்பார்கள். அப்படி போட்டால் அதை தயாரித்தவனையும் பகிர்கின்றவனையும் மக்கள் கழுவி கழுவி ஊற்றுவார்கள் என்ற பயத்தில் ராமரை இழுத்து விட்டார்கள்.

சட்ட விரோத முறை சாதித்தது.

 



உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கியவர்களை “எலி வளை சுரங்க முறை” தொழிலாளர்கள்தான் இறுதிக்கட்டத்தில் மீட்டார்கள் என்பதை நேற்று எழுதிய பதிவில் குறிப்பிட்டிருந்தேன்.

 

அது என்ன “எலி வளை சுரங்கம்” ?

 

நிலக்கரியை தோண்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ஒரு முறை அது.

 

ஒரே ஒரு தொழிலாளி மட்டும் செல்லும் அளவிற்கு துளை போடப்பட்டு அதிலே ஒருவர் இறக்கப்படுவார். அவர் உள்ளே இறங்கி நிலக்கரியை வெட்டி எடுத்து மேலே மூங்கில் கூடைகள் மூலம் அனுப்புவார். அவர் பின்பு வெளியேறுவார். மிகுந்த திறன் உள்ளவர்கள் மட்டுமே அதனை செய்ய முடியும்.

 

இந்த முறையில் அபாயம் அதிகம். போதுமான ஆக்ஸிஜன் இல்லாமல் மூச்சடைத்து இறந்து போனவர்கள் எண்ணிக்கை அதிகம் என்பதால் பசுமை ஆணையம் இம்முறையை பதினைந்து ஆண்டுகள் முன்பே தடை செய்து விட்டது. இப்படிப்பட்ட முறையில் தொழிலாளர்களை பயன்படுத்துவது சட்ட விரோதம் என்றும் அறிவித்து விட்டது.

 

கிட்டத்தட்ட 16 நாட்கள் பேரிடர் மீட்டுப்படைகள் மிகுந்த சிரமத்துடன் பணியாற்றி சிக்கிக் கொண்ட தொழிலாளர்களை மீட்க பாடுபட்டனர். 12 மீட்டர் மட்டுமே முன்னேற வேண்டிய சூழலில் இயந்திரங்கள் பழுது பட வேறு வழியில்லாமல் “எலி வளை சுரங்க முறை” தொழிலாளர்கள் அழைக்கப்பட்டு அவர்களும் தங்கள் பணியை வெற்றிகரமாக நிறைவேற்றி விட்டனர்.

 

சட்டவிரோதமென்று அறிவிக்கப்பட்ட முறைதான் கடைசியில் கை கொடுத்துள்ளது என்பது சுவாரஸ்யமான ஒன்று.

 

இரண்டு திரைப்படக்காட்சிகள் நினைவுக்கு வந்ததை சொல்லத்தான் வேண்டும். ஒன்று நெகிழ்ச்சி, இன்னொன்று காமெடி.

 

ஆழ்துளைக் கிணறில் சிக்கிக் கொண்ட சிறுமியை மீட்க  அனைத்து முயற்சிகளும் தோற்றுப் போன பின்பு அண்ணனை கயிறு கட்டி உள்ளே இறக்குகிற “அறம்” திரைப்படக் காட்சி நெகிழ்ச்சியானது.

 

லாக்கரின் சாவியை நீதிபதி தொலைத்திட முக்கியமான ஆவணத்தை எடுக்க போலீஸ் ஏற்பாடு செய்த திருடன் ஆர்யா லாக்கரை கள்ளச்சாவி தயார் செய்து திறக்கும் “அவன் இவன்” படக்காட்சியோ செம காமெடி.

 

பிகு : இன்னும் இரண்டு பதிவுகள். அவை சீரியசானவை.

Wednesday, November 29, 2023

மீட்பு - மனித சக்தி மகத்தானது

 


உத்தர்கண்ட் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் நல்லபடியாக மீட்கப்பட்டது மனதுக்கு மகிழ்ச்சியாகவும் நிறைவாகவும் உள்ளது.

இயந்திரங்களால் இறுதி கட்டத்தில் முன்னேற முடியாத போது "எலிப்பொந்து சுரங்கத் தொழிலாளர்கள்"  தங்களின் சாதாரணமான உபகரணங்கள் மூலம் பாறைகளை குடைந்து உள்ளே சிக்கிக்கொண்டவர்களை மீட்டனர். 

மனித சக்திதான் மகத்தானது என்பதை இந்த சம்பவம் உண்ர்த்துகிறது.

மீட்புப்பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் நன்றியும் பாராட்டும்.

சம்பவ இடத்துக்கு போகாமல் இருந்து ஆலோசனைகள் கொடுக்காமல் இருந்த்தற்கும் ஒரு மனிதனுக்கு நன்றி.

ஒரு சுவாரஸ்யமான முரண்பாடு ஒன்று உண்டு,. அது பற்றி மாலை . ..


Tuesday, November 28, 2023

வேண்டியது நடக்கும் டிமோ

 

நேற்று முன் தினம் விமானப்படை பைலட் வேஷம் கட்டிய டிமோ நேற்று திருப்பதியில் பக்தர் வேஷம் கட்டியுள்ளார். 140 இந்திய மக்களின் வளமான, ஆரோக்கியமான எதிர்காலத்துக்காக வெங்கடாசலபதியிடம் வேண்டியதாக  வஜனமும் பேசியுள்ளார் அந்த மகா நடிகர்.


இந்திய மக்களின் சேமிப்பை பறித்து உழைப்பைச் சுரண்டி அவற்றையெல்லாம் பெரு முதலாளிகள் அளிக்கும் தரகுக்கூலிக்காக விற்கிற உன்னைப் போன்ற தரகர்கள் பதவியில் இருக்கும் வரை அதற்கு வாய்ப்பில்லை. ஜாதி மத வெறியை தூண்டுகிற உங்கள் ரத்தக்காட்டேரி சங்கி குண்டர் கூட்டம் இருக்கும் வரையில் இந்தியாவில் அமைதிக்கும் இடமில்லை.

உங்கள் வெறியர்கள் சொல்வது போல அரபிக்கடலில் விழுந்து விடுங்கள், பாகிஸ்தானுக்கு போ என்றெல்லாம் அநாகரீகமாக நான் சொல்ல மாட்டேன்.

உங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் நிச்சயம் உங்களை வீட்டுக்கு அனுப்புவார்கள். அப்போது நீங்கள் வேண்டியது நடக்கும் டிமோ . . .


Monday, November 27, 2023

கவிழ்க்கும் நாடகம் அது . . .

 


அரசியல் சாசன தினம் என்றொரு நாடகத்தை வழக்கம் போல டிமோ அரசு நடத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை, கார்த்திகை பணடிகை என்றெல்லாம் இருந்தாலும் கூட பொதுத்துறை ஊழியர்களை அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக் கொள்ள வரச்சொல்லியுள்ளது. 

அரசியல் சாசன முகப்பில் உள்ள 

இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்

 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்  சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும் அனைவருக்கும் சம வாய்ப்பினையும் சகோதரத்துவத்தையும் கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்   பாதுகாப்போம்

என்பதை ஏற்காத கும்பல் இது. அரசியல் சாசன தின நாடகத்தின் முதல் காட்சி ஒன்பது வருடங்களுக்கு முன்பு மக்களவையில் நடந்த போது "மனுதர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாகியிருந்தால் நன்றாக இருக்கும்" என்று ராஜ்நாத்சிங்கும் டிமோவும் சொன்னதை மறக்க முடியுமா?

அரசியல் சாசனம் குறைபாடானது என்று ஆர்.எஸ்.எஸ்.ரெவி பேசியதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வில்லாதி வில்லன் படத்தின் வில்லன் கேரக்டர் பூவு சத்யராஜ், யாரையாவது கீழே தள்ளி கொல்லும் முன்பு காலில் விழுவார், டிமோ அரசு அரசியல் சாசனத்தின் காலில் விழுவது அதனை கீழே தள்ளி அழித்திடத்தான்.

நேற்று நடந்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் உச்ச நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்தது மட்டுமே . . . 

உச்ச நீதிமன்ற நிகழ்வென்பதால் அந்த சிலையை திறக்கும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்தது. 

போட்டோஷூட் லேட்டாகுதா டிமோ

 


ஒரு வட இந்தியத் தோழரின் பக்கத்தில் பார்த்த கார்டூனை தமிழ்ப் படுத்தி உள்ளேன்.

இரண்டு நாட்கள் முன்பே சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களுக்கான மருத்துவ மனைகள் படுக்கைகள் தயாரென்ற படம் வந்த போதே டிமோ போட்டோஷூட் ஸ்பாட் அதுதான் என்று தெரிந்தது.


டிமோவால் எதை வேண்டுமானாலும் ஏற்றுக் கொள்ள முடியும். மணிப்பூர் மாநிலமே எரிந்து போனாலும் கவலைப்பட மாட்டார். 

ஆனால் போட்டோஷூட் தாமதமாவதை மட்டும் ஏற்றுக் கொள்ளவே மாட்டார்.

ஆமாம்.

அவரு அவ்ளோ ஸ்ட்ரிக்டு, அதுல மட்டும் . . .

Sunday, November 26, 2023

யாரை பிடிக்க வீரா டிமோ?

 


பீஸ்ட் சினிமால உமர் ஃபரூக் எனும் டிமோ தோற்றமுள்ள பிரதமரால் விடுவிக்கப்பட்ட தீவிரவாதியை மீண்டும் பாகிஸ்தான் போய் பிடித்து வருவது போல விஜய் நடித்த வீரா எனும் கேரக்டர் அமைந்திருக்கும்.

வீராவின் கெட் அப்பில் போர் விமானத்தில் செல்வது போல டிமோ போஸ் கொடுப்பது யாரை மீட்டுக் கொண்டு வர?

ஒன்பது வருடமாக நாசமாகிப் போன இந்தியாவின் பெருமையையா?

உலகத்துல எந்த பிரதமரும் இந்தாளு மாதிரி கேவலமா வேஷம் போட்டு திரிஞ்சதில்லை.

 

மாடுகள் மறியலா?

 


மேலே உள்ள புகைப்படத்தை நேற்று மாலை ஏழு மணி அளவில் எடுத்தேன். இடம் எங்கள் தெருதான். இது ஏதோ ஒரு நாள் நிகழ்வு அல்ல. எப்போதும் நடந்து கொண்டிருப்பதுதான். குறுகலான சில தெருக்களில் இரு சக்கர வாகனம் செல்வது கூட சிரமமாக இருக்கும். வேலூரின் பெருவாரியான பகுதிகளிலும் இதே நிலைதான். வேலூரில் திரியும் தெரு நாய்களின் எண்ணிக்கையை தெரு மாடுகள் கடந்து விடும் போலிருக்கிறது!

சாலைகளில் மாடுகளை திரிய விடும் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அறிவிப்பை ஒருமுறை பார்த்தேன். மாட்டு முதலாளிகள் மீது வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாக ஒரு மாலை செய்தித்தாளின் சுவரொட்டியிலும் கூட பார்த்தேன். ஆனால் எந்த முன்னேற்றமும் இல்லை. மாநகராட்சியின் எச்சரிக்கையையெல்லாம் மாட்டு முதலாளிகள் மதிப்பதே இல்லை.

சென்னையில் ஒரு கோர சம்பவம் நிகழ்ந்த பின்பு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அது போன்றதொரு சம்பவத்திற்காக காத்திருக்கிறதா வேலூர் மாவட்ட, மாநகராட்சி நிர்வாகம்?

Saturday, November 25, 2023

அழகல்ல, அழிவு

 


மூன்று நாட்கள் முன்பு காலை ஆங்கில இந்து நாளிதழை கையிலெடுத்ததும் மேலோட்டமாக பார்த்த போது முதல் பக்கத்தில் இருந்த படம் அழகாக இருப்பது போல தோன்றியது.

 செய்தியை படித்ததும்தான் அது அழகிய காட்சியல்ல, அழிவின் சாட்சி என்பது புரிந்தது.

 ஆம். விசாகப்பட்டிணம் மீன் பிடித் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 45 படகுகள் (ஒவ்வொன்றின் மதிப்பும் 50 லட்ச ரூபாய்) எரிந்து போன கொடுமை அது.

உயிர்ச்சேதம் ஏதுமில்லை என்பது மட்டுமே சின்ன ஆறுதல்.

 

Friday, November 24, 2023

ரம்மி ரவி இனி டம்மி ரவி

 


பஞ்சாப் ஆளுனருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை அளித்துள்ளது.

மாநில சட்டப்பேரவை நிறைவேற்றும் மசோதாக்களை நிராகரிக்கும் வீட்டோ உரிமையெல்லாம் ஆளுனருக்குக் கிடையாது. ஆளுனர் ஒரு அலங்கார அடையாளம் மட்டுமே. அவர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை சட்டப் பேரவை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் அவற்றை ஏற்பதைத் தவிர வேறு எந்த வழியும் அவருக்குக் கிடையாது.

ஆக தமிழ்நாட்டின் ஆட்டுத்தாடி ரம்மி ரவி இனிமேல் டம்மி ரவி. அதை புரிந்து கொண்டு ஒழுங்காக நடக்க வேண்டும். இல்லையென்றால் மேலும் மேலும் அசிங்கப்பட வேண்டியிருக்கும். . . .

பொறாமையா சச்சின்?

 



விராத் கோலி ஐம்பதாவது சதம் அடித்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்ததற்கு ஒரு வாழ்த்து ட்வீட் ஒன்று போட்டுள்ளார்.

 


அந்த செய்தியில் நெருடல் என்னவென்றால்

 கோலியுடனான தன் முதல் சந்திப்பை விவரித்துள்ளதுதான்.

 “என்னுடைய காலை தொட்டு நீ வணங்கியதைக் கண்டு உன் சகாக்கள் உன்னை கலாய்த்துக் கொண்டிருந்தார்கள். நான் விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தேன். என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. நீ அன்று கால்களை தொட்டாய், பின்பு இதயத்தை தொட்டாய்”

 உங்கள் கால்களை கோலி தொட்டதெல்லாம் வாழ்த்துச் செய்தியில் ரொம்ப முக்கியமா என்ன?

 “நான் பார்த்து வளர்ந்த பையன், இப்போ என்னை விட பெரிசா போயிட்டான்” என்ற பொறாமையைத் தவிர வேறொன்றுமில்லை.

 இப்படி பொறாமையை இதே போல பொது வெளியில் இன்னொரு பெரியவரும் இரு முறை வெளிப்படுத்தியுள்ளார்.

 அவர் இளையராஜா.

 ஏ.ஆ.ர்.ரஹ்மான் ஆஸ்கார் விருது பெற்றதற்காக நடைபெற்ற விழாவிலும் பிறகு இளையராஜா 75 நிகழ்விலும்.

 எல்லாம் வயதின் கோலம்!

பிகு: கிரிக்கெட்டின் தெய்வத்தை நிந்தித்து விட்டேன் என்று எத்தனை பேர் என்னை கண்டிக்கப் போகிறார்களோ! அது போலவே இளையராஜாவும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்ட இசைக்கடவுள். கொஞ்ச நேரம் தலைமறைவாகச் செல்வது நல்லதென்று நினைக்கிறேன்.

Thursday, November 23, 2023

வடை போச்சா டிமோ?

 


இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெற்றி பெற்றிருந்தால் கீழே உள்ள படத்தை பரப்பி வைரலாக்க பாஜக ஐ.டி விங் தயாரித்து வைத்திருந்தது எப்படியோ கசிந்து விட்டது.

 


எப்படியெல்லாம் சீன் போட்டிருப்பார்! எல்லாத்தையும் நாசமாக்கிட்டீங்களே படுபாவிகளா! மகிழ்ச்சியா போட்டோ ஷூட் நடத்த வேண்டிய நேரத்தில எழவு விழுந்த மாதிரி முகத்தை வச்சுக்க வச்சுட்டீங்க! இதை விமர்சனம் வேற செய்யறீங்க! விஜயேந்திரர் சால்வையை தமிழிசை கிட்ட தூக்கி வீசின மாதிரி இல்லாம கப்பை கையில கொடுத்ததுக்கு சந்தோஷப்படுங்கடா லகுட பாண்டிகளா!

 பிகு: இது கொஞ்சம் பழசுதான். நேரமின்மை காரணமாகவும் புது புது விஷயங்கள் வந்ததாலும் ட்ராப்டிலேயே இருந்தது. இது மட்டுமல்ல, இன்னும் இரண்டு கிரிக்கெட்  பதிவுகளும் மிக முக்கியமாக மூத்த்த்த்த்தவர் பற்றிய பதிவொன்றும் உள்ளது. அவையும் ஒவ்வொன்றாக வரும்.

 

இன்னும் ஆபாசம் குஷ்பு

 


சேரி மொழி என்பதற்கு குஷ்பு அம்மையார் ஒரு விளக்கம் கொடுத்துள்ளார். சேரி என்றால் அன்பு என்று ஃபிரஞ்சு மொழியில் அர்த்தமாம். அந்த அர்த்தத்தில்தான் அவர் அந்த வார்த்தையை தன்னுடைய நேசத்தை வெளிப்படுத்த பயன்படுத்தினாராம்.


அது அன்பைக் குறிக்கிறது என்றால் "உன்னுடைய சேரி மொழியில் என்னால் பேச முடியாது" என்று ஏன் சொல்ல வேண்டும்,



செய்த தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதற்குப் பதில் சம்பந்தமே இல்லாமல் ஃபிரெஞ்ச் மொழியை எல்லாம் இழுத்து கொடுத்திருக்கிற விளக்கம், அவரது முந்தைய ட்வீட்டை விட இன்னும் ஆபாசமாக இருக்கிறது. 

பாஜக கட்சியில் உள்ளவர்கள் யார் நேர்மையாக இருப்பார்கள். செய்த அசிங்கத்தை மறைக்க அடுத்த அசிங்கம், அதற்கடுத்த அசிங்கம் என்று போய்க் கொண்டே இருப்பதுதானே அந்த கட்சியின் கேவலமான பாரம்பரியம். . . .

பிகு 1 : இதே குஷ்பு அம்மையார் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை சீண்டி வாங்கிக் கட்டிக் கொண்டதை இந்த இணைப்பின் மூலம் பாருங்கள். அந்த இணைப்பின் இறுதியில் அப்போது குஷ்பு அம்மையார் போட்ட ஒரு ட்வீட் இருக்கும். "அடி செருப்பாலே"  என்ற வார்த்தையை அப்போது பயன்படுத்தியிருப்பார். "அடி செருப்பாலே" என்பதுதான் குஷ்புவின் கண்ணியமான, நாகரீக மொழி போலும். 

பிகு : ஆமாம். அந்த டிக்சனரியை புரட்டி உங்களுக்கு சொன்ன அந்த அதிமேதாவி யாருங்க மேடம்? அவனுக்கும் உங்களுக்கு கட்டின மாதிரியே ஒரு கோயில் கட்டனும் !

Wednesday, November 22, 2023

இதே எழவுதானா சங்கிகளா?

 


ஆப்கானிஸ்தான் பாகிஸ்தானை வென்ற போது ஆப்கானிஸ்தான் அணியை தலையில் தூக்கி வைத்து ஆடிய சங்கிகள், அதே ஆப்கானிஸ்தானை தனி நபராக ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் வென்ற போது இந்தியாவின் பெருமை மிகு மருமகன், மைலாப்பூர் மாப்பிள்ளை என்றெல்லாம் கொண்டாடினார்கள்.

அதுவே ஆஸ்திரேலியா, இந்தியாவை வென்ற பின்பு அதே மேக்ஸ்வெல்லின் இந்திய வம்சாவளி மனைவிக்கும் இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகனான ட்ரெவிஸ் ஹெட்டின் மனைவிக்கும் ஆபாச மிரட்டல்களை விடுத்துள்ளனர்.

அவர்களை பாலியல் வன்புணர்ச்சி செய்வோம் என்பதுதான் அந்த செய்திகளின் சாராம்சம்.

சங்கிகளுக்கு எப்போதும் பாலியல் சிந்தனைதான் போல. அவர்கள் மிரட்டல்கள் கூட அதே அடிப்படையில்தான் இருந்துள்ளது.

பெண்ணை வேவு பார்க்கச்சொன்னவரை பிரதமராகவும் வேவு பார்த்தவரை உள்துறை அமைச்சராகவும் கொடுத்த கட்சி ஆட்கள் மட்டும் வேறெப்படி இருப்பார்கள்! 

குஷ்பு -செலக்டிவ் பொங்கலும் சேரி லேங்குவேஜூம்

 


சகவாச தோஷம் ஒரு மனிதனை எவ்வளவு கேவலமாக மாற்றி விடும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் குஷ்பு. டிமோ கட்சியில் சேர்ந்தது முதல் எத்தனை நாடகம்! எவ்வளவு பொய்கள்! எத்தனையெத்தனை தரக்குறைவான பேச்சுக்கள்!

நடிகை த்ரிஷாவை மன்சூர் அலிகான் என்ன சொன்னார் என்பதை நான் பார்க்கவில்லை. அவருடைய பழைய வரலாறு தெரிந்தவர்களுக்கு அவர் மோசமாக பேசக்கூடியவர் என்பது தெரியும். அப்படி அவர் கேவலமாக பேசியிருந்தால் நிச்சயம் அவர் கண்டிக்கப்பட வேண்டும். மகளிர் ஆணைய உறுப்பினரான குஷ்பு கண்டித்துள்ளார். ஓகே.

அதனை ஒருவர் விமர்சிக்கிறார். " ஆடைகள் அகற்றப்பட்டு பெண்களை ஊர்வலமாக அழைத்துப் போன மணிப்பூர் விஷயத்தில் தூங்கிக் கொண்டிருந்த குஷ்பு, த்ரிஷாவிற்காக விழித்துக் கொண்டார்". இந்த விமர்சனம் நியாயம்தானே!

அதற்கு குஷ்பு கோபத்தில் பொங்கி எழுந்து முட்டாள்கள், குண்டர்கள் என்றெல்லாம் வசை பாடி உங்களைப் போல் என்னால் சேரி மொழி பேச முடியாது என சொல்கிறார்.


அதென்ன குஷ்பு அம்மையாரே, சேரிகளில் வசிப்பவர்கள் பேசும் மொழி என்ன அவ்வளவு கேவலமா? எங்கிருந்து வந்தது இந்த மேட்டிமை புத்தி? மனுதர்மத்தின் வெளிப்பாடுதானே உங்களின் வார்த்தைகளில் பிரதிபலிக்கிறது! சேரிகளில் வாழும் மனிதர்கள்தானே உங்கள் படங்களை பார்த்து உங்களை உயரத்தில் அமர வைத்தார்கள்! உயரத்துக்கு போனதும் கீழே உள்ளவர்களை கேவலமாக நினைப்பீர்களா? தஞ்சை மாவட்ட மிராசுதார்கள், பண்ணையார்களின் வசவு மொழி பற்றி தெரியுமா? எனக்கு தெரியும். ஆனால்  என் வலைப்பக்கம் நாகரீகமானது.

ஆடைகள் அகற்றப்பட்டது உண்மைதானே! அதைத்தானே அவர் சொல்கிறார்! உங்கள் மகளிர் ஆணையமும் ஒன்றிய அரசும் அந்த பெண்களுக்கு என்ன நியாயம் கொடுத்தது? சரி வார்த்தையை சொன்னதற்கு பொங்குகிற நீங்கள் அண்ணாமலை படத்தின் "கடவுளே, கடவுளே" காட்சியை நினைவு கொள்ளுங்கள். ரஜினி பேசும் வார்த்தைகளை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த காட்சியில் நடிக்கவோ, அல்லது ரஜினி அவ்வாறு பேசக்கூடாது என்று மறுக்கவோ செய்யவில்லையே!

சரி, மன்சூர் அலி கான் பேசியது போலவே தமன்னா பற்றி ரஜினிகாந்த் உமிழ்நீர் பொங்க பேசியதை நான் பார்த்தேன். அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

போலித்தனமாக பொங்குவதை விட்டுவிட்டு பெண்களுக்கு ஆதரவாக உருப்படியான நடவடிக்கைகள் எடுக்க முயற்சியுங்கள். 


Tuesday, November 21, 2023

அந்த நடிகரை மட்டும் காணவில்லை

 ராணுவ அதிகாரிகளின் வேடத்தில் நடித்த பல நடிகர்களின் புகைப்படங்கள் கீழே உள்ளது.


என்ன! அந்த முக்கியமான நடிகரின் புகைப்படம் மட்டும் காணவில்லையா?

கவலைப்படாதீர்கள் . . .

அந்த சிறப்பான நடிப்பை நான் எப்படி தவற விடுவேன்.

கொஞ்சம் கீழே வாருங்கள் . . .

.

.

.

.

.

.

.

...

.

.

.

.

.

.

.

.

...

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

இதோ அந்த நடிகன் . . .



Monday, November 20, 2023

சங்கிக் கரடிக்கே சந்தேகம்

 


கீழே உள்ள பதிவு சங்கிகளின் குழுவான மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் முக்கியமான மாடரேட்டருடையது.

 


பாஜகவை விமர்சிக்கும் பதிவுகளை ஆதாரம் கிடையாது என்று நிராகரிப்பவர் இவர். அதிகமாக கேள்வி கேட்டால் சஸ்பெண்ட் செய்பவரும் இவர்தான்.

 இவரே இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்கள் மீது குற்றம் சுமத்துகிறார். 60,000 கோடி ரூபாய் வரை பெட்டிங் நடந்துள்ளது என்று தினமலர் செய்தியை வைத்து  சொல்கிறார்.



 இதை டிமோ அரசின் அமலாக்கப்பிரிவிற்கு புகாராக அளிக்காமல் ஏன் முகநூலில் பதிவு செய்துள்ளார் என்று தெரியவில்லை.

 ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணியின் சிறப்பான ஆட்டத்தின் மதிப்பை குறைக்கும் எண்ணமா அல்லது டிமோவை நக்கல் செய்வதிலிருந்து திசை திருப்பும் நோக்கமா என்று தெரியவில்லை. ஆனால் இழிவு என்னமோ இந்திய கிரிக்கெட் வாரிய அணியின் வீரர்களுக்குத்தான்.

 சங்கி அடித்த சேம் சைட் கோல் இது.

 பிகு: இன்னும் மூன்று கிரிக்கெட் பதிவுகள் இருக்கிறது.

எதையெல்லாம் இழந்தது இந்தியா?

 


உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்காக போராடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணிக்கு அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.

போட்டி நடைபெறும் நாளன்று யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவின் முதல் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பிறகு இருந்தது. அந்த நிலைமை தொடராத காரணத்தால் இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெற்றியை இழந்தது. டிமோவின் வருகையும் அவர் கையால் கோப்பை பெற வேண்டும் என்பதெல்லாம் அநியாய மன அழுத்தத்தை கொடுத்திருக்கும்.

சரி. இந்தியா வேறென்ன இழந்தது?

வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் போட்டி போட்டு அறிவித்து தங்களின் வள்ளல்தன்மையை காண்பித்து இருப்பார்கள். அதனை இழந்தது.

பல் முழுக்க வாயாக. மன்னிக்கவும், வாய் முழுக்க பல்லாக டிமோ உற்சாகமாக காட்சியளித்து கையில் கோப்பையோடு போட்டோ ஷூட் நடத்தியிருப்பார். இப்படி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நடிக்கக் கூட செய்யாமல் எரிச்சலை வெளிப்படித்திய காட்சியை நாம் பார்க்காமல் இருந்திருப்போம்.

ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தால்தான் வெற்றி என்று இந்திய வீரர்களின் முயற்சிகள் பின்னுக்கு போய் கலவர பாய்ஸ் கத்தியதே காரணம் என்று வரலாற்றில் பதிவாகி இருக்கும்.

அதை விட முக்கியமாக

"மழை பெய்யும் போது போனால்தான் ரேடாரில் விமானம் தெரியாத்" என்று விமானப்படை வீரர்களுக்கு ஐடியா கொடுத்தேன்" என்று சொன்ன டுபாக்கூர், கேரி சோபர்ஸ் கணக்காக ரோஹித் சர்மாவுக்கு கொடுத்த ஆலோசனைகளை அறியும் வாய்ப்பையும் இந்தியா இழந்து விட்டது. 

Sunday, November 19, 2023

நகல் கபிலை அழைத்து அசலை 👿👿👿


தற்போது நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை போட்டியை தொலைபேசியில் ஒரு நிமிடம் பார்த்த போது "83 திரைப்படத்தில் கேப்டனாக நடந்த ரண்வீர் சிங்கும் அவர் மனைவியாக நடித்த தீபிகா படுகோனாவும் வந்துள்ளனர்" என்று காண்பித்தார்கள். 

பிறகு முகநூல் வந்த போதுதான் இந்தியாவிற்கு முதன் முதலில் உலகக் கோப்பையை வென்றெடுத்துக் கொடுத்த கபில்தேவிற்கு அழைப்பு இல்லை என்ற தகவல் தெரிந்தது.



அமிதாப்பச்சன், ரஜினிகாந்த் ஆகியோரை விட கபில்தேவ் எந்த விதத்தில் குறைந்து போய் விட்டார்?

உண்மையான நாயகன் அல்லவா அவர்!

அசலை ஒதுக்கி வைத்து விட்டு நகல் நடிகரை அழைத்துள்ளது கிரிமினல்ஷா வாரியம்.

நடிகரின் ஆட்சியல்லவா? அதனால் நடிகர்களுக்கு மட்டுமே மதிப்பு. நிஜமான நாயகர்களுக்கு அல்ல . . .

திறமையானவர் வெல்லட்டும் . . .

 







தேச பக்தியை கிரிக்கெட் வெற்றியில் தேடுவதென்பது மூடத்தனம் என்று கருதுகிறவன் நான்.

ஆனால் இன்று தேச பக்தி பெரு வெள்ளமென தேசமெங்கும் பாய்ந்து ஓடும். எப்படி ஐ.பி.எல் அணிகளை தங்கள் நகரத்தின் அணிகளாக மக்கள் கருதுகிறார்களோ, அது போலவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அணியை இந்திய அணியாக கருதுகிறார்கள். அரசின் எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாதது இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது கூட பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்கள் அதை இந்திய அணியாகவே நினைக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டுமென்று துடிக்கிறார்கள். அது இயல்பானதுதான். இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெல்ல வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அது நேர்மையானதாக, திறமையின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். 

"எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கு. அதுதான் சந்தேகமாகவும் இருக்கு" என்ற பாபனாசம் படத்து வசனம் நிறைய இந்தியர்களின் மனதிலும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. உலக கிரிக்கெட்டை ஆட்டி வைப்பது இந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் வாரியமோ இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினலின் மகனின் கையில் உள்ளது.

அதனால்தான் சொல்கிறேன்.

இன்றைய ஆட்டத்தில் திறமையாக விளையாடுபவர்கள் வெல்லட்டும். வேடிக்கை பார்க்க வரும் வெட்டி விளம்பரப் பேர்வழி பீற்றிக் கொள்ள வாய்ப்பு தர வேண்டும் என்ற வகையில் போட்டியின் முடிவு அமைய வேண்டும்.

திறமையை வெளிப்படுத்தி உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அணிக்கு வாழ்த்துக்கள்.  



Saturday, November 18, 2023

முட்டாள் சங்கிகளும் முகமது ஷமியும்

 


பாவம் சங்கிகள்!

அவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காத இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை பாராட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். ஏன்யா இப்படி அடிபட்டே என மனதுக்குள் ஹர்திக் பாண்டியாவை திட்டிக் கொண்டிருக்கலாம்.

இன்று காலை முதல் ஒரு படத்தை வைத்து அலட்டிக் கொண்டிருக்கிறார்கள்.


இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் இதை வைத்து சீன் போட்டீர்களே என்று கேட்டால் அப்படியெல்லாம் கிடையாது என்று சண்டைக்கு வருகிறார்கள்.

இப்போ ஸ்டேடியம் கட்டுவார்கள். நாளை ஒழுங்காக விளையாடாவிட்டால் வீட்டை இடிக்க புல்டோசர் அனுப்புவார்கள். பாகிஸ்தானுக்கு போ என்று சொன்ன கூட்டம்தானே! முகமது ஷமிக்கு ஆதரவுக்குரல் கொடுத்ததற்காக "உன் குழந்தையை பாலியல் வன்புணர்ச்சி செய்வேன்" என்று விராத் கோலியையும் மிரட்டி வசை பாடிய கூட்டம்தானே ! என்றெல்லாம் கேட்டால் ஒரு கதை சொல்கிறார்கள் பாருங்கள்! அங்கேதான் நிற்கிறார்கள் முட்டாள் சங்கிகள்!

முகமது ஷமி பற்றி அவரது மனைவியே மேட்ச் பிக்சிங் குற்றச்சாட்டு சொன்னதால் அப்போது ஆற்றிய எதிர்வினை. அது உண்மையல்ல என்று தெரிந்ததால் அமித்ஷா மகன் ஜெய்ஷாதான் முகமது ஷமியை மீண்டும் அணிக்கு கொண்டு வந்தார்.  - இதுதான் சங்கிகளின் கதை.

முகமது ஷமிக்கும் அவரது மனைவிக்கும் பிரச்சினை உண்டு. அவர் குற்றம் சுமத்தினார். அதையெல்லாம் கிரிக்கெட் வாரியம் விசாரித்து ஷமி மீது எந்த தவறும் கிடையாது என்று முடிவு செய்து அறிவித்தது. இதெல்லாம் நடந்தது 2018 ல். ஜெய்ஷா கிரிக்கெட் வாரியத்தை ஆக்கிரமித்தது 2019 ல் தான்.

இதை விட முக்கியமாக முகமது ஷமியை எதற்கு எப்போது "பாகிஸ்தானுக்கு போ" என்று வசை பாடினார்கள் என்பது பற்றி வாய் திறக்கவே இல்லை.

2021 ல் நடந்த டி-20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்றது. பாகிஸ்தான் துவக்க ஆட்டக்காரர்கள் அவுட் ஆகாமல் 10 விக்கெட் வெற்றி பெற்றார்கள். முகமது ஷமி மட்டுமல்ல, எந்த பவுலருமே விக்கெட் எடுக்கவில்லை. ஆனால் வசவு மட்டும் முகமது ஷமிக்குத்தான். அதற்கு அவர் மதம் தவிர வேறென்ன காரணம் இருக்க முடியும்? ஷமியை ஆதரித்த குற்றத்திற்காக சங்கிகளின் ஆபாச வசைக்கு விராத் கோலியின் ஒரு வயது பெண் குழந்தை கூட தப்பவில்லை.

தங்களின் அயோக்கியத்தனமான நடவடிக்கைகள் குறித்து சிறு உறுத்தல் கூட இல்லாமல் அயோக்கிய சங்கிகள் தற்போது ஷமியை தூக்கி வைத்து கொண்டாடுகிறார்கள் (நாளை இந்தியா தோற்றுப் போனால் அப்படியே மாறி விடுவார்கள் என்பது வேறு கதை). முட்டாள் சங்கிகள் நம்பி பரப்புகிறார்கள். 


Friday, November 17, 2023

இம்சை பிரதமர் திறந்த மைதானம்.

 



இம்சை அரசன் 23 ம் புலிகேசி திரைப்படத்தின் காணொளி காட்சி கீழே உள்ளது.



டிமோவின் பெயரில் டிமோவே திறந்து வைத்த அகமதாபாத் ஸ்டேடியமும் அது போன்றதொரு ஸ்டேடியம்தான் என்பதை குஜராத் ஜெய்ஸ்ரீராம் கோஷ்டி நிரூபித்துள்ளது.

இம்சை அரசன் திறந்தது ஜாதிச்சண்டைக்கான மைதானம்.

இம்சை பிரதமர் திறந்தது மதச்சண்டைக்கான மைதானம்.

ஞாயிறுக்கிழமையன்று என்னென்ன கூத்துக்கள் நடைபெறப் போகிறதோ!

Thursday, November 16, 2023

அசிங்கப்பட்ட ஆட்டுத்தாடி

 


தமிழ்நாட்டின் உன்னதமான ஆளுமையான தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு முனைவர் பட்டம் அளிக்கும் கோப்பில் கையெழுத்திட மறுத்த ஜந்து ஆர்.எஸ்.எஸ்.ரெவி.

இன்று தமிழ்நாட்டு மக்கள் அவருக்காக சிந்தும் கண்ணீர், ஆட்டுத்தாடியின் அகம்பாவத்துக்கு விழுந்த சம்மட்டி அடி.

தோழர் என்.எஸ் அவர்களுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என்ற தமிழ்நாடு முதல்வர் திரு எம்.கே.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பு, ரவியின் திமிரால் நொந்த நெஞ்சங்களுக்கு ஒரு ஆறுதல்.

ஆனாலும் இந்த ஆட்டுதாடி திருந்தாது. 

ஆம்.

பலமுறை சொன்னதுதான்.

வெட்கம், மானம், சூடு, சொரணை, ரோஷம் எதுவுமில்லாத அற்ப ஜந்து அது. 

Wednesday, November 15, 2023

விடுதலைப் போரில் பூத்த மலரே

 



அவர்தான் அடையாளம்.
அவர்தான் உதாரணம்.

தேசத்தின் விடுதலைக்காகவும்
உழைக்கும் மக்கள் உரிமைகளுக்காகவும்
தமிழகத்தில் நீண்ட காலம்
சிறைக் கொட்டடியில் 
அடைபட்டவர் அவர்தான்.

மாணவப் பருவத்தில் ஒரு கேள்வி.
படித்து பட்டம் பெற்று 
வழக்கறிஞராகி வசதியாய் வாழ்வதா?
தேசத்தின் விடுதலைக்காக 
போராடச் செல்வதா? 

படிப்பைத் துறந்தார்.
அமெரிக்கன் கல்லூரி மாணவர்,
பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு
சிம்ம சொப்பமானவர்.
போராட்டத் தீயில்
புடம் போட்ட தங்கமானார். 

விவசாயிகளுக்காக, தொழிலாளிகளுக்காக
அர்ப்பணிக்கப்பட்டது அவரது வாழ்க்கை.

சட்டமன்ற உறுப்பினராய் இருந்தவர்தான்.
ஆனாலும் எளிமைக்கான உதாரணம் 
என்றும் அவர்தான்.

ஆண்டுகள் கடந்து முதுமை ஒட்டிக் கொண்டாலும்
வாய் திறந்தால் சிங்கத்தின் கர்ஜனைதான்.

தியாகத்தின் வரலாறாய்,
போர்க்குணத்தின் உதாரணமாய்

என்றென்றும் எழுச்சி தருவார்.

செவ்வணக்கம் தோழர் என்.சங்கரய்யா . . .


என்.ஐ.ஏ நாய்கள் மட்டும் . . .

 


ஆர்.என்.ரெவி வெட்டித்தனமாக பொழுதைக் கழிக்கும் ராஜ்பவன் முன்பாக, ஆட்டுக்காரன் சொல்லி கமலாலயத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலம் கொடுத்து, பாஜக வக்கீலால் ஜாமீன் பெற்றவன்  பெட்ரோல் குண்டு வீசிய வழக்கை அமித்துவின் கட்டுப்பாட்டில் உள்ள தேசிய புலனாய்வு முகமை விசாரிக்கப் போகிறதாம்.

மொக்கை படமான சாமி 2 வில் ஒரு காட்சி வரும். வில்லன்களில் ஒருவரான ஜான் விஜயை விக்ரம் கொடூரமாக கொன்று விடுவார். போலீஸ் நாய் வரும். அங்கே இங்கே போய் விட்டு விக்ரமின் கைகளில் தஞ்சமாகும். போலீஸ்காரரான இமான் அண்ணாச்சி "எந்த போலீஸ் நாய்டா போலீஸ்காரனை காட்டிக் கொடுத்துருக்கு?" என்பார்.

ராஜ்பவன் முன்பாக  பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம், ஆட்டுக்காரனும் ஆட்டுத்தாடியும் சேர்ந்து செய்த சம்பவமாக இருக்குமோ என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் சந்தேகம்.

அப்படி இருக்கையில் என்.ஐ.ஏ நாய்கள் மட்டும் எப்படி பழைய போலீஸ்காரனுங்களை  காட்டிக் கொடுக்கும்?

Tuesday, November 14, 2023

அடித்தாலும் இடித்தாலும் . . .

 


மூன்றாவது வழக்கிலும் உச்ச நீதிமன்றம் 

"ஆளுனர்கள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டவர்கள். அவர்கள் ஒன்றும் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அல்ல. மக்கள் பிரதிநிதிகள் சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் போடுவதெல்லாம் சரியல்ல" 

என்று மிகத்தெளிவாக கூறி விட்டது.

ஆனாலும் ரெவி, புரோஹித், ஆரிப் முகமது கான், தமிழிசை போன்ற ஆட்டுத்தாடிகள் திருந்த மாட்டார்கள்.

அவர்களை நீதிமன்றம் அடித்தாலும் இடித்தாலும் கவலைப்பட மாட்டார்கள். அவர்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்றவர்கள். எதிர்க்கட்சி அரசுகளை சீரழிக்கும் அஜெண்டாவுடன் பதவிக்கு வந்தவர்கள். வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை அற்ற சங்கிகள்.

அதனால் அவர்கள் நீதிமன்றம் சொல்வதை எச்.ராசா போலத்தான் மதிப்பார்கள். 

மரணம் தந்த நினைவுகள் . . .

 


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும் மிகச் சிறந்த நாடாளுமன்றவாதியுமான தோழர் பாசுதேப் ஆச்சார்யா, நேற்று காலமானார். அவருக்கு என் செவ்வணக்கம்.

இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு மிகவும் நெருக்கமானவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. எல்.ஐ.சி நிறுவனத்தை பொதுத்துறை நிறுவனமாக பாதுகாக்க மக்களவையில் தொடர்ந்து குரல் கொடுத்தவர். இன்சூரன்ஸ் ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து துல்லியமாக அறிந்தவர். 01.08.1992 முதல் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஊதிய உயர்வில் அநீதி செய்தது மத்தியரசு. பேச்சுவார்த்தை இல்லாமல் தனது முன்மொழிவை அறிவிக்கை மூலமாக திணித்தது. அந்த அநீதிக்கு எதிரான அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் போராட்டத்தை மக்களவையில் எதிரொலித்தவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா. இது குறித்து விவாதிக்க வேண்டுமென்று சுமார் 90 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையெழுத்துக்களை திரட்டவும் உதவியவர்.

1996 டிசம்பர் இறுதியில் மதுரையில் நடைபெற்ற அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் 16 வது பொது மாநாட்டின் துவக்க நிகழ்வில் அவர் சிறப்புரையாற்றிருக்க வேண்டும். மாநாட்டை துவக்கி வைத்து அன்றைய மேற்கு வங்க நிதியமைச்சர் தோழர் அசிம்தாஸ் குப்தா பேசுவதாக இருந்தார் என்று நினைவு. ஆனால் அப்போது தமிழ்நாடு முழுதும் பெய்து கொண்டிருந்த கடும் மழையால் அனைத்து வித போக்குவரத்துக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது. இருவரும் வர இயலாமல் பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் தோழர் ஆர்.உமாநாத், மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மறுநாள் பிரதிநிதிகள் மாநாட்டில்தான் தோழர் பாசுதேப் ஆச்சார்யா உரையாற்றினார். இன்சூரன்ஸ் ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சினைகள் குறித்து அவர் மிகவும் துல்லியமாக புரிந்து கொண்டுள்ளவர் என்பதை அப்போதுதான் உணர முடிந்தது.

தோழர் பாசுதேப் ஆச்சார்யா என்றால் என் மனதுக்கு இன்னொரு நிகழ்வும் நினைவுக்கு வரும். 1996 ல் வேலூரில் தென் மண்டல மாநாடு நடைபெறுகிறது. அலைபேசி வசதிகள் அறிமுகமாகாத காலகட்டம் அது. அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் அன்றைய பொதுச்செயலாளர் தோழர் என்.எம்.சுந்தரம், டெல்லிக்கு எஸ்.டி.டி பேச வேண்டும் என்று சொல்லுகிறார். அழைத்துச் செல்கிறேன். சிதம்பரம் கிளையின் அன்றைய தலைவர் மறைந்த தோழர் கே.அனந்தராமன் கார் ஓட்டுகிறார். மாநாட்டு அரங்கம் அருகில் இருந்த ஒரு எஸ்.டி.டி பூத் திமுகவின் நகரச்செயலாளராக இருந்து மதிமுக சென்று மீண்டும் திமுகவிற்கே திரும்பிய பூபாளன் என்பவருடையது. நாங்கள் சென்ற போது அவர்தான் இருந்தார்.

இணைப்பு கிடைத்து தோழர் என்.எம்.எஸ் பேசத் தொடங்கிய பின்பு நாங்கள் இருவரும் வெளியே வந்து விட்டோம். கிட்டத்தட்ட முப்பது நிமிடங்கள் தொலைபேசி உரையாடல் நடந்தது. ஆயிரம் ரூபாய் வரை பில் வந்ததாக நினைவு.

பணத்தை கொடுக்க நாங்கள் உள்ளே சென்ற போது திரு பூபாளன், ஆச்சர்யமாக "யார் சார் இவரு! இப்படி ஒரு இங்கிலிஷ் இதுவரை என் வாழ்வில் கேட்டதில்லை. பெரும்பாலான வார்த்தைகளை முதல் முறையாக கேட்கிறேன். அந்த பக்கம் இருந்தவர் பேசினதும் கேட்டதும் அவரும் இவர் மாதிரியேதான் பேசினார்" வினவ பதில் சொல்லி விட்டு புறப்பட்டோம்.

மறுமுனையில் பேசியவர் தோழர் பாசுதேப் ஆச்சார்யா , , ,