Monday, November 27, 2023

கவிழ்க்கும் நாடகம் அது . . .

 


அரசியல் சாசன தினம் என்றொரு நாடகத்தை வழக்கம் போல டிமோ அரசு நடத்தியுள்ளது. ஞாயிறு விடுமுறை, கார்த்திகை பணடிகை என்றெல்லாம் இருந்தாலும் கூட பொதுத்துறை ஊழியர்களை அரசியல் சாசன உறுதிமொழி எடுத்துக் கொள்ள வரச்சொல்லியுள்ளது. 

அரசியல் சாசன முகப்பில் உள்ள 

இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்

 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்  சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும் அனைவருக்கும் சம வாய்ப்பினையும் சகோதரத்துவத்தையும் கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்   பாதுகாப்போம்

என்பதை ஏற்காத கும்பல் இது. அரசியல் சாசன தின நாடகத்தின் முதல் காட்சி ஒன்பது வருடங்களுக்கு முன்பு மக்களவையில் நடந்த போது "மனுதர்மத்தின் அடிப்படையில் அரசியல் சாசனம் உருவாகியிருந்தால் நன்றாக இருக்கும்" என்று ராஜ்நாத்சிங்கும் டிமோவும் சொன்னதை மறக்க முடியுமா?

அரசியல் சாசனம் குறைபாடானது என்று ஆர்.எஸ்.எஸ்.ரெவி பேசியதையும் கவனத்தில் கொள்ளுங்கள்.

வில்லாதி வில்லன் படத்தின் வில்லன் கேரக்டர் பூவு சத்யராஜ், யாரையாவது கீழே தள்ளி கொல்லும் முன்பு காலில் விழுவார், டிமோ அரசு அரசியல் சாசனத்தின் காலில் விழுவது அதனை கீழே தள்ளி அழித்திடத்தான்.

நேற்று நடந்த ஒரே ஒரு உருப்படியான விஷயம் உச்ச நீதிமன்றத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலையை திறந்தது மட்டுமே . . . 

உச்ச நீதிமன்ற நிகழ்வென்பதால் அந்த சிலையை திறக்கும் வாய்ப்பு ஜனாதிபதிக்கு கிடைத்தது. 

No comments:

Post a Comment