Monday, February 16, 2026

டுபாக்கூர் சமூக ஆர்வலர்கள் தொல்லை ஓவராயிடுச்சு

 


நேற்றிலிருந்து பாஜக=அதிமுக கூட்டணியினர் ரொம்ப பெருமையோடு பகிர்ந்து கொண்டிருக்கும் செய்தி கீழே . . .


இந்த மனிதனை ஒரு டுபாக்கூர் என்றுதான் சொல்ல வேண்டும்.

இது மகளிர்  உரிமைத் தொகை.

யாருடைய பணத்தை இவர் திருப்பி அனுப்பினார்?

தாய்?

மனைவி?

சகோதரி?

மகள்?

மற்றவர்களுக்கு உரிமையான தொகையை திருப்பி அனுப்ப இவருக்கு ஏது உரிமை?

அடுத்தவர் பணத்தை எடுத்து தனக்கு பெயர் வாங்கிக் கொள்ள நினைத்த இந்த மனிதர் ஒரு முக்கியமான உண்மையை மறந்து விட்டார்.

விண்ணப்பம் கொடுக்காமல் மகளிர் உரிமைத் தொகை வராது. ஆக இவர் குடும்பத்தில் யாரோ கொடுத்த விண்ணப்பத்தினால்தான் பணமே வந்தது என்பது கூட தெரியாத இவரை டுபாக்கூர் என்றழைக்காமல் வேறு எப்படி அழைப்பது?

மேலும் இத்தனை நாள் வந்த பணம் என்ன ஆனது?


Sunday, February 15, 2026

அடடே! இதுதான் தலைமைப்பண்பா விஜய் 😆😆😆😆


தவெக உறுப்பினர்களை தற்குறிகள் என்று சொல்வது மிகவும் சரி என்பதை கீழேயுள்ள காணொளி உணர்த்தும்.


நல்லா டான்ஸ் ஆடுவதுதான் தலைமைப் பண்பு என்றால் தமிழ்நாட்டில் தலைமைப் பண்பு கொண்டவர்கள் நிறைய பேற் இருக்கிறார்கள் அல்லவா! திரைத்துறையிலேயே விஜய்யை விட பிரபு தேவா, ராகவா லாரன்ஸ் ஆகியோர் கூடுதல் தலைமைப் பண்பு கொண்டவர்கள். பாவம் கே.பாக்கியராஜிற்குத்தான் தலைமைப் பண்பே கிடையாது அல்லவா 😜

விஜய் நன்றாக நடனமாடக்கூடிய ஒருவர் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். .  பிகில், மாஸ்டர், வாரிசு ஆகிய படங்களில் பாடல்கள் இல்லாமல் வெறும் இசைக்கு மட்டும் விஜய் ஆடிய நடனங்களை ஒப்பிட்டால் இந்த காணொளியில் மேடையில் ஆடும் நடனம் ரொம்பவே சுமார்தான். விஜயின் தலைமைப் பண்பு குறைந்து வருகிறது போல . . .

Saturday, February 14, 2026

இந்தில பேசினா தப்பாத்தான் வரும்

 


இனிமேல் தமிழ்நாடு, பாண்டிச்சேரி எல்லைக்குள் இந்தியில் பேசக் கூடாது என்று ஜண்டா அமித்ஷா முடிவெடுத்திருப்பார். கீழேயுள்ள காணொளியை பாருங்கள், அமித்ஷா யாரை திட்டுகிறார் என்பதும் தெரியவில்லை, புதுவை முதல்வர் யார் என்பதும் தெரியவில்லை. இதுதான் அங்கேயுள்ள பாஜகவினரின் அரசியல் தரம். 

சரியான காமெடி இது.



அந்த பதவிக்கு அவர் அருகதையில்லை . . .

 

இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் இது நாள் வரை இவ்வளவு மோசமான அவைத்தலைவரை பார்த்ததில்லை. 

அந்த பதவியில் இருந்தவர்கள் அனைவருமே தோழர் சோம்நாத் சட்டர்ஜி, திரு ஜி.எம்.சி.பாலயோகி, திரு மனோகர் ஜோஷி  நீங்கலாக  அனைவருமே எது ஆளும் கட்சியோ, அதைச் சேர்ந்தவர்கள்தான்.

ஆளும்கட்சி சார்பாகத்தான் அவர்கள் செயல்பட்டிருந்தாலும் கொஞ்சமாவது நடுநிலையோடு நடந்து கொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை சொல்ல கொஞ்சமாவது வாய்ப்பு கொடுத்திருக்கிறார்கள்.

ஆனால் ஓம் பிர்லா?

ஒரு சபாநாயகரின் முதல் கடமை - துணை சபாநாயகர் தேர்வு. 

12 வருடங்களாக நடக்கவில்லை. இவருக்கு முன்பிருந்த சுமித்ரா மகாஜன் அம்மையாரும் சரி, இவரும் சரி, அதைப் பற்றி கவலைப்படவே இல்லை.

அமைச்சர்கள் சொல்ல வேண்டிய பதில்களை இவரே சொல்லி விடுகிறார். 

எதிர்க்கட்சி உறுப்பினர்களை இடை நீக்கம் செய்து அதில் மகிழ்ச்சி அடைபவர், அப்போதுதானே அவர்கள் அரசை விமர்சிக்க முடியாது.

இதில் மிக மிக மோசமான நடவடிக்கைதான் பெண் எம்.பி க்கள் மோடியை தாக்கவிருப்பதாக பழி போட்டது. மோடியை விட கற்பனை வளத்தில் சிறந்தவராக இருக்கிறார்.

அவரை பதவி நீக்கம் செய்ய கொண்டு வரப்பட்ட தீர்மானம் மிகவும் சரியானது. அது தோற்றுப் போகும். ஆனால் ஒரு சபாநாயகர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது என்பது வரலாற்றில் பதிவாகிறதல்லவா! அது போதும்.

பிகு: எழுதி இரண்டு நாளான பதிவு இது. ஓம் பிர்லா பல்பு வாங்கிய ஒரு சம்பவம் சிரிப்பைத் தந்தது. அது கீழே . . 


 

Friday, February 13, 2026

5000 ரூபாயால் சங்கிகள் கதறல் . . .

 


மகளிர் உரிமைத் தொகை ரூபாய் 5000 இன்று வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது ஒரு அதிரடி யுக்தி. பாஜக-அதிமுக கூட்டணி சதி செய்தார்களோ, சதி செய்யவில்லையோ, இந்த முடிவால் அவர்கள் ஆடிப் போயிருக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

பீகாரிலும் மகாராஷ்டிராவிலும் பாஜக பயன்படுத்திய ஆயுதம் அவர்களையே தமிழ்நாட்டில் திரும்பத் தாக்கியுள்ளது.

பாஜகவினரின் கதறல் ஓசை காதுக்கு இனிமையாக இருக்கிறது என்பதும் உண்மை.

நான் பெற்ற இன்பம் நீங்களும் பெறுக.

மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் சங்கிகளின் கதறலை கீழே பாருங்கள்.












சங்கிகளிடம் இயல்பாகவே இருக்கிற பெண்களுக்கு எதிரான மனப்பான்மையையும் நாம் மறந்து விடக் கூடாது.

தமிழ்நாடு அரசு எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இந்த நிலைமையை மாற்ற பாஜக-அதிமுக கூட்டணி எந்த அளவிற்கும் கீழிறங்கும். கலவரத்தை தூண்டினால் கூட ஆச்சர்யப்பட வேண்டியதில்லை. 

பருத்தியில் சிக்கிக்கொண்ட மோடி மந்திரி

 


அமெரிக்காவுடன் இந்தியா ஏற்படுத்திக் கொண்ட அடிமாட்டு, அடிமை ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவின் விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் கிடையாது என்று புரோக்கர் மந்திரி பியூஷ் கோயல் கதை விட்டுக் கொண்டிருந்தார். 

ஆனால் அவர் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து "இந்திய விவசாயிகளின் நலனை அமெரிக்க கட்டளைக்கு அடிபணிந்து விட்டுக் கொடுத்து விட்டோம்" என்று ஒப்புக் கொண்டு விட்டார்.

இந்திய ஆடைகளின் இறக்குமதிக்கு 18 % வரி விதிக்கும் அமெரிக்கா, வங்க தேச ஆடைகளின் இறக்குமதிக்கு 0 % வரி மட்டுமே விதித்துள்ளதே, அதனால் இந்திய ஆடைத் தயாரிப்பாளர்கள் பாதிக்கப்படுவார்களே என்று கேள்வி கேட்டதற்கு 

"வங்க தேசம் போல நாமும் மூலப் பொருளை அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்து அதனை பதப்படுத்தி, ஆடையாக்கி ஏற்றுமதி செய்யும் போது நமக்கும் 0 % வரிதான் விதிக்கப்படும். இதற்கான உடன்பாடு விரைவிலேயே எட்டப் படும்? 

என்று பியூஷ் கோயல் சொல்லியுள்ளார்.

ஆடைக்கான மூலப் பொருள் எது?

பருத்தி.

பியூஷ் கோயல் சொல்லியபடி அமெரிக்கப் பருத்தியை நாம் இறக்குமதி செய்யப் போகிறோம்.

அமெரிக்க பருத்தியை இறக்குமதி செய்வதால் இந்திய பருத்தி விவசாயிகள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

இந்தியாவில் பருத்தி முக்கியமான பணப் பயிர்.

130 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் இந்தியாவில் பருத்தி பயிரிடப் படுகிறது. பத்து மாநிலங்களில் 60 லட்சம் விவசாயிகள், பருத்து விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

உள் நாட்டு ஆடை உற்பத்திக்கு அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பருத்தி பயன்படத்தப்படும் என்றால் இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் பருத்தியின் நிலை என்ன? இந்திய பருத்தி விவசாயிகளின் நிலை என்ன ஆகும்?

ஆக இந்திய பருத்தி விவசாயிகளின் நலனை பின்னுத் தள்ளி அமெரிக்காவிலிருந்து பருத்தி வாங்கப் போகிறது மோடி அரசு. 

வங்கதேசத்தில் கூட  பருத்தி விளைகிறதே! அந்த விவசாயிகளுக்கு பாதிப்பு கிடையாதா என்று எவனாவது மூடச்சங்கி அனாமதேயமாக ஆங்கிலத்தில் பின்னூட்டம் இடுவான். அந்த அனாமதேயம் ஒரு விஷயத்தை தெரிந்து கொள்ள வேண்டும்.

வங்க தேசத்தில் வெறும் 45000 ஹெக்டேர் நிலத்தில்தான் பருத்தி விளைகிறது.  அதிலும் 1,70, 000 விவசாயிகள்தான் ஈடுபடுகின்றனர். வங்க தேச ஆடைத்தொழில் எப்போதுமே இறக்குமதி செய்யப்படும் பருத்தியை நம்பித்தான் இருக்கிறது.

ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் புதிதல்ல

என்பது போல

மோடி அரசுக்கு துரோகங்கள் புதிதல்ல . . .

Thursday, February 12, 2026

தெனாலி கமல் என்னை மன்னிக்க

பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்தவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் பணியில் இருக்கும் போது சரி, பணி ஓய்விற்குப் பிறகும் என்ன எழுதுவதாக இருந்தாலும் அவர்கள் அதனை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். அரசு அதனை படித்து ஒப்புதல் கொடுத்த பிறகுதான் வெளியிட வேண்டும். இது மோடி அரசு நேற்று போட்டுள்ள உத்தரவு.

இந்த உத்தரவே  முன்னாள் ராணுவத் தளபதி இந்திய ராணுவத்தின் முன்னாள் தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே எழுதிய “விதியின் நான்கு நட்சத்திரங்கள்” (Four Stars of Destiny) என்ற நூலைக் கண்டு மோடி நடுங்கிக் கொண்டிருக்கிறார் என்பதற்கான சான்று.

மோடியின் பயங்களை நினைத்தேன். தெனாலி படத்தில் கமல் பட்டியலிடும் பயங்கள்தான் நினைவுக்கு வந்தது. வேறு வழியில்லை. அந்த காட்சியைத்தான் சுட வேண்டியிருந்தது.



 

இன்று ஏன் வேலை நிறுத்தம்?

 


இன்று இந்தியா முழுதும் இந்தியாவை நேசிக்கும் தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். 

சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி, ஹெச்.எம்.எஸ், ஐ.என்.டி.யு.சி போன்ற மத்திய தொழிற்சங்கங்களும் இன்சூரன்ஸ், வங்கி, தொலை தொடர்பு போன்ற பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள அகில இந்திய அமைப்புக்களும் மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என கோடிக்கணக்கான தொழிலாளர்கள் இந்த வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவுள்ளனர்.

என்ன கோரிக்கைகள்?

காலம் காலமாக உழைப்பாளி மக்கள் போராடிப் பெற்ற பல்வேறு உரிமைகளை பறிக்கின்றன மோடி அரசு கொண்டு வந்த தொழிலாளர் சட்டத் தொகுப்புக்கள்.

சிக்காகோ தொழிலாளர்கள் உயிர் கொடுத்து வென்றெடுத்த எட்டு நேர வேலை நேரத்தை காவு கொடுக்கிறார்கள்.

நிரந்தர வேலை என்பதையே கடந்த காலமாக மாற்றி ஒப்பந்த தொழிலாளர்கள் முறையும் குறிப்பிட்ட கால நிர்ணய பணி என்பதும் தொழிலாளர்களின் எதிர்காலத்தை பலி கொடுக்கும் செயலாகும்.

வங்கி, இன்சூரன்ஸ் மற்றுமுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பது என்பது இந்தியப் பொருளாதாரத்தை பாழுங்கிணறுக்குள் தள்ளும் மூடத்தனம்.

இந்திய உழைப்பாளிகளை சுரண்டும் முதலாளிகளுக்கு ஆதரவாக, அவர்கள் என்ன தவறு செய்தாலும் சட்டப்படியே கண்டு கொள்ளாத கேவலமான நிலையை உருவாக்கியுள்ளது மோடி அரசு.

இதற்கு எதிராகத்தான் இன்று வேலை நிறுத்தம்.

எல்.ஐ.சி யின் இன்னும் சில கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

மூன்றாம் பிரிவு, நான்காம்  பிரிவு பணிகளில் புதிய பணி நியமனம் உடனடியாக மேற்கொள்ளப்பட வேண்டும். பணிச்சுமை ஒரு புறம் அதிகரித்து வரும் வேளையில் மறு புறம் பணி ஓய்வுகளின் காரணமாக காலிப் பணியிடங்கள் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையை சரி செய்ய நிர்வாகம் சுணக்கம் காண்பிக்கிறது.

எல்.ஐ.சி யின் பங்குகளை விற்கக் கூடாது.

இன்சூரன்ஸ் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை 100 % ஆக உயர்த்தும் முடிவை திரும்பப் பெற வேண்டும்.

2010 க்குப் பிறகு பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய பென்ஷனே தரப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகள் வென்றெடுக்கப்படும். உழைப்பாளி மக்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நம்பிக்கையோடு கோடிக்கணக்கான தொழிலாளர்கள், போராட்ட களம் புகுகின்றனர். போராட்டங்கள் என்றைக்கும் தோற்றது கிடையாது.

பணி ஓய்வு பெற்றதால் நேரடியாக வேலை நிறுத்தப் பங்கேற்பு என்பது கிடையாது.  எல்.ஐ.சி வேலூர் கோட்ட அலுவலகத்தில் நடைபெறும் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டக் கூட்டத்தில் பங்கேற்க புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன், ஊதியத்தை இழந்து வேலை நிறுத்தத்தில் பங்கேற்கும் தோழர்களிடமிருந்து  உற்சாகத்தைப் பெற . . .

Wednesday, February 11, 2026

தின மலர் மீது கேஸ் போடுமா அனாமதேய சங்கி?

 


இந்துக்கள் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் பேசியதை கண்டித்து ஒரு பதிவு எழுதியிருந்தேன்.

நேற்று இரவு அதற்கு ஒரு பின்னூட்டம் வந்திருந்தது. 

Any one can file case on this post, because you are posting some thing not verified and personal. I will forward this to bjp it cell for handling your fake messages.

மனதுக்குள் சிரித்துக் கொண்டேன்.

பிறகு ஒரு மணி நேரம் கழித்து இன்னொரு பின்னூட்டம். 

அந்த அனாமதேயம் பாஜக ஐ.டி விங்கிற்கு அனுப்பிய கடிதத்தை எனக்கு பின்னூட்டமாக போட்டிருந்தது. அந்த கடிதத்திலும் பெயர் இல்லை, மொட்டைக் கடிதம் போல.

அதன் பின்பு ஒரு பதில் எழுதினேன்.

சர்சங்சாலக் பற்றிய பதிவு தொடர்பாக மிரட்டியுள்ள சங்கிக்கு ஒரு தகவல். அந்த தகவல் தவறென்றால் அதற்கு பொறுப்பு சங்கிப் பத்திரிக்கையான தின மலர் தான். அதிகம் பிள்ளைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பல சங்கிகள் பல முறை வலியுறுத்தியுள்ளனர். அதனால் இது சங்கிகளின் நிலைப்பாடுதான். எனக்கு எந்த பயமும் இல்லை. அதனால்தான் வெளிப்படையாக பதிவிட்டுள்ளேன். என்னை மிரட்டிய சங்கிதான் அனாமதேயமாக ஒளிந்து கொண்டு விட்டது.

அதன் பின்பு அந்த சங்கியிடமிருந்து எந்த பின்னூட்டமும் இதுவரை இல்லை. 

பாவம் அந்த சங்கி தன் அமைப்பைப் பற்றியும் அதன் தலைவர்களைப் பற்றியும் உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள் போல. 

அது அனுப்பிய கடிதத்தையும் அதற்கான எதிர்வினையையும் நேரம் கிடைக்கும் போது எழுதுவேன்.

மோகன் பகவத் சொன்னதாக நான் எழுதியிருந்தது பொய்ச் செய்தியா?

நான் அதனை எடுத்ததே தின மலரின் ட்விட்டர் (X) பக்கத்திலிருந்துதான்.

அந்த பக்கத்திற்கெல்லாம் நானாக செல்வதில்லை. ட்விட்டரே காண்பிப்பதுதான்.

ட்விட்டரில் மட்டும் தின மலர் வெளியிடவில்லை. தினமலர் தன் முக நூல் பக்கத்திலும் பகிர்ந்து கொண்டிருந்தது.



இத்தோடு நிற்கவில்லை.

தின மலரின் இணைய தளத்திலும் இருக்கிறது.


ஆகவே இந்த செய்தி பொய்ச்செய்தி என்றால் அந்த சங்கி தினமலர் மீதுதான் வழக்கு போட வேண்டும். 

நான் சொன்ன பக்கங்களில் தேடிப்பார்த்து வழக்கு போடட்டும்.

அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா, இஸ்லாமியர்களை குறி வைத்து சுட்ட காணொளியை அஸ்ஸாம் மாநில பாஜக நீக்கியது போல தின மலரும் நீக்கியிருந்தால் . . .

அந்த அனாமதேயேம் தன் உண்மையான அடையாளத்துடன் என்னை அணுகினால் நான் வேண்டுமானால் நான் எடுத்து வைத்துள்ள ஸ்க்ரீன் ஷாட்டுக்களை அனுப்பி வைக்கிறேன்.

சங்கிப் பத்திரிக்கை தின மலர் மீது வழக்கு தொடுக்கும் தைரியம் அந்த அனாமதேய சங்கிக்கு உண்டா அல்லது அது முறையிட்டுள்ள பாஜக ஐ.டி விங்கிற்குத்தான் உண்டா?

பைத்தியக்காரப் பசங்க!!!!

என்னமோ நடக்குது! மர்மமா இருக்குது !!

 


இது சொந்தக் கதை, சோகக் கதை அல்ல. மர்மக்கதையோ என்றொரு சந்தேகம்.

வழக்கமாக வலைப்பக்கத்தின் பார்வைகள் (HITS) ஒரு நாளைக்கு சராசரியாக 800 லிருந்து 900 வரை செல்லும். 

ஆனால் நேற்று முன் தினம் 3081 பார்வைகள். நேற்று இரவு 8.30 மணிக்கு 3163. 




எங்கிருந்து பார்க்கிறார்கள்  என்று ஆராய்ந்து பார்த்தால்



சிங்கப்பூரிலிருந்தும் சீனாவிலிருந்தும்தான் அதிகமான பார்வைகள் வந்துள்ளதாக ப்ளாக்ஸ்பாட் சொல்கிறது. அதை ஒப்பிட்டால் இந்தியாவில் பார்வைகள் குறைவுதான்.



இப்போது காலை 10.10 மணிக்கு பார்த்தால் நேற்றைய பார்வைகளின் எண்ணிக்கை 4891 ஆகவும் இன்று இது வரை 1018 பார்வைகள் (வலைப்பக்கத்தைப் பொறுத்தவரை இன்றைய நாள் என்பது காலை ஆறு மணிக்குத்தான் தொடங்கும்) வந்துள்ளது. 


ப்ளாக்ஸ்பாட் கொடுக்கும் தகவல்களை எப்படி சேகரிக்கப்படுகிறது என்று தெரியவில்லை.

அது தெரியும் வரை அது மர்மக்கதைதான். 

பிகு: மூடச்சங்கியால் மிரட்டப்பட்ட கதை - மாலையில் , , , ,

Tuesday, February 10, 2026

சங்கிகளின் நடையே தனி!!!

 


முக நூலில் பார்த்து சிரித்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் நேரடி பிரதிநிதியாக தமிழ்நாடு பாஜகவின் அமைப்புச் செயலாளராக இருந்த கேசவ வினாகத்தை அந்த பதவியிலிருந்து தூக்கியுள்ளார்கள். அதெல்லாம் அவர்களின் உட்கட்சி விஷயங்கள். அந்தாள் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக நிச்சயம் நடவடிக்கை எடுத்திருக்க மாட்டார்கள். காரணம் BJP என்பதன் விரிவே B.JOLLU.P தான்.



துன்பம் வரும் வேளையில் சிரிங்க என்பது போல பதவி பறிப்புதான் இந்த கிறுக்கு நடைக்கு காரணமாக இருக்குமோ?

மூவரைப் பெற்றால் சர்சங்சாலக் சோறு போடுவாரா?

 


இந்தியாவின் மிகப் பெரிய தீவிரவாத, அடிப்படைவாத அமைப்பான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் உதிர்த்த முத்து கீழே உள்ளது.


அவர் சொல்லும் முதல் விஷயம் விஷம். வழக்கமான விஷம். மத வெறியை தூண்டுவதை மட்டுமே நூறாண்டுகளாக செய்து கொண்டிருக்கும் கேவலமான அமைப்பு இது.

கடந்த பல பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் சிறுபான்மையினரின் சதவிகிதம் அதிகரிக்கவே இல்லை என்பதுதான். அது மட்டுமல்ல, கடைசி இரண்டு மக்கட்தொகை கணக்கெடுப்புக்கள் இஸ்லாமியர்களின் மக்கட்தொகை வளர்ச்சி விகிதம் இந்துக்களை விட குறைவாகவே இருந்திருக்கிறது. 

2021 ல் எடுக்கப்பட வேண்டிய மக்கட்தொகை கணக்கெடுப்பை இதுவரை துவக்காமல் இருப்பது கூட ஆர்.எஸ்.எஸ் அளந்து கொண்டிருக்கும் கட்டுக்கதை அவர்கள் ஆட்சியிலேயே அம்பலமாகி விடும் என்பதுதான்.

நிற்க

மூன்று பேரை பெற்றெடுக்க வேண்டும் என்று சொல்கிற மோகன் பகவத் திருமணமாகாதவர். அவருக்கு குடும்பத்தை நடத்துவதில் உள்ள சிரமங்கள் தெரியாது. வெங்காயம் சாப்பிடாதாதால் எனக்கு வெங்காய விலை உயர்வு பற்றி தெரியாது என்று சொன்ன நிர்மலா அம்மையார் கேடகிரிதான் இவர்.

இவருக்கு குழந்தைகளை வளர்ப்பதற்காக ஆகும் உணவுச் செலவு, கல்விச் செலவு, மருத்துவச் செலவு, திருமணச் செலவு ஆகியவற்றைப் பற்றி தெரியுமா?

வேலையின்மை பிரச்சினையைப் பற்றி தெரியுமா?

குடும்ப பாரம் சுமக்காத இவருக்கு குடும்பத்தை பெருக்கச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

மூன்று குழந்தைகளுக்கான செலவுகளை அரசு கொடுக்குமா? இது என்ன பழைய சோவியத் யூனியன் அரசா?

கார்ப்பரேட்டுகளிடம் லஞ்சம் வாங்கி கொழுத்துப் போயிருக்கும் பாஜக அளிக்குமா?

முடியாது அல்லவா?

SO SHUT UP MR MOHAN BHAGAWATH

Monday, February 9, 2026

மோடிக்கு இதெல்லாம் ஒரு பிழைப்பா சங்கிகளே?

 மலேசியாவில் மோடி தமிழை உயர்த்திப் பிடித்ததாக பாஜக ஐ.டி விங் எழுதிக் கொடுத்ததை அப்படியே பகிர்ந்து கொண்டு பீற்றிக் கொண்டிருக்கும் மருத்துவனையில் படுத்துக் கொண்டிருக்கும் ஹைகோர்ட் புகழ் எச்.ராசா உட்பட அனைத்து சங்கிகளுக்கும் கீழே உள்ள படம் சமர்ப்பணம். . . 



அஸ்ஸாம் முதல்வருக்கு கருணை கூடாது



 ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா - அஸ்ஸாமின் முதலமைச்சர், 2015 ம் ஆண்டு வரை காங்கிரஸ் கட்சியில் அமைச்சராக இருந்தவர். முதல்வர் கனவிலும் இருந்தவர். ஏராளமான ஊழல் குற்றச்சாட்டுக்களை பாஜக முன் வைக்க, பாஜகவிலேயே சேர்ந்து மோடி வாஷிங் மிஷின் மூலமாக புனிதராக மாறி பாஜக சார்பிலேயே முதலமைச்சராக ஐந்தாண்டுகளாக குப்பை கொட்டிக் கொண்டு இருப்பவர்.

அஸ்ஸாம் பாஜக நேற்று ஒரு காணொளி வெளியிட்டது. அந்த காணொளியில் ஹி.பி.சர்மா துப்பாக்கியால் சுடுகிறார். அவர் குறி பார்ப்பது இஸ்லாமியர்களை. NO MERCY கருணையே கிடையாது என்ற வாசகத்துடன் காணொளி முடிகிறது.



அப்பட்டமான இஸ்லாமிய வெறுப்பின் வெளிப்பாடான இந்த காணொளியை அஸ்ஸாம் பாஜக இப்போது நீக்கி விட்டது.

இப்படிப்பட்ட காணொளி மூலம் ஹி.பி.சர்மா தன் தொ/குண்டர்களுக்கு என்ன சொல்கிறார்?

இஸ்லாமியர்களை அழித்தொழியுங்கள் என்பதைத்தான் மிகவும் வெளிப்படையாக சொல்கிறார்.

இப்படிப்பட்ட முதல்வர் மீது மோடி நடவடிக்கை எடுக்க மாட்டார்.

தெருநாய் பிரச்சினை போல உச்ச நீதிமன்றமும் தன்னியல்பாக நடவடிக்கை எடுக்காது.

அஸ்ஸாம் மக்கள்தான் தெருவில் இறங்கி போராட வேண்டும்,  பதவி விலகும் வரை போராட வேண்டும். ஹி.பி,சர்மாவுக்கு அவசியமே இல்லை, கருணை . . .

Sunday, February 8, 2026

ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்தால்

 


காலையில் முகநூலில் பார்த்த காணொளி கீழே உள்ளது.


டொனால்ட் ட்ரம்ப் இடத்தில் மோடியை நினைத்து பாருங்கள்.

கலாய்ப்பதற்கு ஏராளமான விஷயங்கள் உண்டு.

ஆனால் அப்படி கலாய்ப்பவர்கள் செல்லும் இடம் திஹார் சிறையாகவோ அல்லது போலி எண்கவுண்டராகவோ இருக்கும். 

Saturday, February 7, 2026

ஏலம் போகுது A1 மாளிகை

 


மேலே உள்ள மாளிகை யாருடையது தெரியுமா?

கீழே உள்ள படத்தை பாருங்கள்

இப்போது தெரிந்ததா?

ஆம்.

A1 ஆட்சி செய்த சென்னை போயஸ் கார்டன் வேதா நிலையம் மாளிகைதான் அது.

ஜெ இறந்த பிறகு அந்த மாளிகை அவரது அண்ணன் மகன், மகள் ஆன தீபக், தீபா ஆகியோர் வசம் சென்றது.

1991-92 நிதியாண்டு தொடங்கி 2006-2007 நிதியாண்டு வரை கட்ட வேண்டிய வருமான வரி, 1992-93 நிதியாண்டு தொடங்கி 2015-2016 வரை கட்ட வேண்டிய சொத்து வரி ஆகியவற்றின் பாக்கி, அதற்கான அபராத வட்டி எல்லாமுமாக சேர்த்து 13.69 கோடி கட்ட வேண்டும்.

சொத்துக்களின் வாரிசுகளான தீபக்கையும் தீபாவையும் கட்டச் சொன்னார்கள்.

ஆளுக்கு பாதியாக பிரிக்க வேண்டும், தவணை முறையில் கட்ட வேண்டும் என்று தீபக் நீதிமன்றம் செல்ல, தீர்ப்பும் அப்படியே வந்தது.

தான் கட்ட வேண்டிய தொகையில் இரண்டு தவனைகளோடு தீபக் நிறுத்திக் கொள்ள, தீபாவோ ஒரு பைசா கூட கட்டவில்லை.

அதனால் நீதிமன்ற அனுமதியோடு போயஸ் கார்டன் மாளிகையை ஏலம் போடப் போகிறார்கள்.

ஜெ அதிகாரம் செய்த இடம், ஊழல் செய்து வாங்கிய நகைகள் முதற்கொண்டு செருப்புகள் வரை அடுக்கி வைத்திருந்த இடம். வெள்ளத்தில் சென்னை மிதக்கும் நிலை  வந்தது கூட தெரியாமல் தூங்கிக் கொண்டிருந்த இடம். ரஜினிகாந்தை நடந்து போகச் சொன்ன இடம்.

"ஆடாத ஆட்டமெல்லாம் போட்டவங்க மண்ணுக்குள் போன கதை தெரியுமா?" என்று ஒரு சூர்யா பாட்டு உண்டு.

அதில் ஒரு கதை தான் ஜெ வின் கதை.

இப்போது ஆட்டம் போட்டுக் கொண்டிருக்கும் மோடி வகையறாக்களும் விஜய் வகையறாக்களும் தெரிந்து கொள்ள வேண்டிய அனுபவம். 



மார்க்ஸை நாங்கள் மறக்கவில்லை, இந்தி இசையையும்

 


சென்னையில் பேராசான் காரல் மார்க்ஸின் சிலை கம்பீரமாக எழுந்துள்ளது.


காரல் மார்க்ஸின் சிலை சங்கிகளுக்கு பதற்றத்தையும் எரிச்சலையும் அளித்திருக்கிறது.கண்ட இடம் எல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதிலே இந்தி இசை அம்மையாரின் ஒப்பாரி ரொம்பவே அதிகமாக இருக்கிறது. 


அந்த அறிவு கெட்ட அம்மையாருக்கெல்லாம் விளக்கமாக பதில் சொல்வது வீண்.

தமிழ்நாட்டில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளும் வேறு சில அமைப்புக்களும் கார்ல் மார்க்ஸை மறக்காத காரணத்தால்தான் அவருக்கு சிலை எழுப்ப வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்கள். 

ஆனால் இந்தியிசை அம்மையார்தான் கலைஞர் ஆட்சியில் தமிழறிஞர்களுக்கான இட ஒதுக்கீட்டில்  எம்.பி.பி.எஸ் படித்தார் என்பதை மறந்து விட்டார்.

அடுத்தவர் தயவில் வாழும் அளவிற்கு தன் வாழ்க்கைக்கு காரணமான தந்தையையே மறந்து விட்டார்.

குமரி அனந்தனின் கௌரவத்தை மீட்டெடுக்க திமுக அரசுதான் அவருக்கு வீடு கொடுத்தது என்பதையும் மறந்து விட்டார். 

பாவம்!

அப்புறம் முருகனை கும்பிட முடியவில்லையா? அறுபடை வீடுகளை மூடி விட்டார்களா என்ன? கோயில்களில் எப்போதும் பக்தர்கள் எப்போதும் போல வழிபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். 

முருகனை வைத்து கலவரம் செய்த நினைத்த சங்கிகள்தான் அசிங்கமாக நிற்கிறார்கள், முருகன் அணிந்த அந்த ஒற்றை ஆடை கூட இல்லாமல் . . .

Friday, February 6, 2026

அசிங்கமாக மாட்டிக் கொண்ட பாஜக ஐ.டி விங்

 


பத்திரிக்கையாளர்கள் என்றாலே பயந்து நடுங்கிப் போய் பாத்ரூமுக்குள் ஒளிந்து கொள்கிற மோடி எண்ணற்ற பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பேசுவது போல ஒரு படத்தை பாஜக ஐ.டி விங் வெளியிட்டது.


இந்த படத்தினால் அசிங்கப்பட்டு நிற்கிறது.

பேட்டி கொடுப்பது மோடி என்று சொல்கிறது படம்,

ஆனால் படத்தில் உள்ள மொபைல் கேமராவிலோ ராகுல் காந்தி நிற்கிறார்.

அடுத்து GEMINI AI லோகாவையும் அகற்றாமல் விட்டு விட்டார்கள்.

ஏற்கனவே அசிங்கத்தில் குளித்துக் கொண்டிருக்கிற மோடிக்கு இன்னும் ஒரு அசிங்கம். அவர் இதிலிருந்து வெளிவர கங்கையில் குளித்தாலும் அழுக்கு போகாது. நைல் நதிக்கு வேண்டுமானால் செல்லட்டும். 

நாக்கு அழுகிடும் மோடி

 


பதில் சொல்ல முடியாமல் மோடி ஓடி ஒளிந்ததற்கு ஓம் பிர்லா அயோக்கியத்தனமான ஒரு பொய்யை சொன்னதைப் பற்றி எழுதி இருந்தேன்.

ஓம் பிர்லாவின் அயோக்கியத்தனமான பொய்க்கு அலிபி தேட மோடியும் ஒரு அபாண்டமான, அயோக்கியத்தனமான பொய்யை சொல்லியுள்ளார்.


தேவர் மகன் படத்தில் அபாண்டமான குற்றச்சாட்டு வைக்கிற போது நாசரைப் பார்த்து சிவாஜி "நாக்கு அழுகிடும்டா" என்று சொன்ன காட்சிதான் எனக்கு நினைவு வந்தது.

மோடி ஒரு வேளை இயற்கையான முறையில் பிறந்திருந்தால் அவரது பெற்றோர் "பொய் சொன்னால் போஜனம் கிடைக்காது" என்று சொல்லி வளர்த்திருப்பார்கள்.

ஆனால் இவர்தான் தெய்வக்குழந்தை ஆயிற்றே!

Thursday, February 5, 2026

ஓடி ஓளிவதைத் தவிர மோடிக்கு வேறு வழியில்லை . . .

 


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானம் பிரதமர் பதில் அளிக்காமலேயே நிறைவேற்றப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

சீனப் படைகள் முன் வந்த போது முடிவெடுக்க திராணியில்லாமல் நடுங்கியதை சொல்லும் ராணுவத் தளபதியின் புத்தகத்தைக் கொடுக்க ராகுல் காந்தி காத்திருக்கிறார்.

எங்கய்யா போச்சு உன் 56 இஞ்ச் மார்பு என்று எதிர்க்கட்சிகள் குடைவார்கள்.

டொனால்ட் ட்ரம்பின் நிபந்தனைகளுக்கு அடி பணிந்து அவர் அடிமையாய் மாறி விட்டாயே என்ற கேள்விகள் வேறு.

இதைத் தவிர மோடிதான் முஜ்ரா நடனம்  (விபரங்களுக்கு  இந்த இணைப்பை பார்க்கவும்)   ஆடினார் என்று எப்ஸ்டீன் கோப்புகள் சொல்வதாக வேறு ஒரு தகவல்.

இப்படிப்பட்ட சூழலில் அவர் எப்போதுமே வெறுக்கும் நாடாளுமன்றத்திற்கு மோடி எப்படி வருவார்? 

ஓடி ஓளிவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை.


அதற்கு ஓம் பிர்லா (சபாநாயகர் என்றெல்லாம் அந்த சங்கிக்கு மரியாதை அவசியமில்லை) சொல்லியுள்ள காரணம்.

வழக்கமான பாஜக அயோக்கியத்தனம்.

நாடாளுமன்றம் கூட பாதுகாப்பில்லை என்றால் உள்துறை அமைச்சர் பதவி எதற்கு? அமித் ஷா ராஜினாமா செய்யட்டும். 

பிகு : நான் பனையூரிலேயே பதுங்கி இருப்பதைப் பற்றி பாஜகவினர் யாரும் பேச முடியாது என்று விஜய்க்கு மகிழ்ச்சியாக இருக்கும். 

ஆஹா! அருமை!! அற்புதம் !!!

 


முக நூலில் பார்த்த ஒரு காணொளியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


அழுத்தம் திருத்தமாக உணர்வுபூர்வமாக பாடும் அந்த மழலையை பாராட்ட பொருத்தமான வார்த்தைகள் என்னிடம் இல்லை.

எதிர்காலத்தில் சிறப்பாக வளரட்டும்.

மார்க்சியமே வெல்லும் . . .

அவர்கள் அவர்கள்தான். ஆனால் அவர்களா?

 


நேற்று மணிப்பூரில் புதிய அமைச்சரவை பதவியேற்றுள்ளது.

யும்மாம் கேம்சந்த்சிங் என்ற மெய்தி இனத்தவர் முதலமைச்சராகவும் நிம்சேன் கிப்கேன் என்ற குக்கி இனப் பெண் எம்.எல்.ஏ வும் லோசில் டிகோ என்ற நாகா இனத்தவரும் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளனர். 

மணிப்பூரில் உள்ள அனைத்து குக்கி மற்றும் நாகா அமைப்புக்கள், அரசில் தங்கள் இனத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இணையக்கூடாது என்றும் தாங்கள் வாழும் பகுதியை தனியான யூனியன் பிரதேசமாக பிரிக்க வேண்டும் என்ற கோரிக்கையில் உறுதியாக உள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அவர்களை பாஜக அரசு தாக்கியதன் ஒடுக்கியதன் விளைவு அது. மத்திய அரசின் மீதும் மோடியின் மீதும் அவர்கள் எப்போதோ நம்பிக்கை இழந்து விட்டனர். புதிதாக உருவான அமைச்சரவை ஒரு வெத்து வேட்டு என்பதையும் அவர்கள் அறிவார்கள். 

அவர்கள் சந்தித்த இன்னல்கள், கொடுமைகள், பெண்களுக்கு ஏற்பட்ட அராஜகங்கள், இழந்த உயிர்கள், அழிந்த உடமைகள் அப்படிப்பட்ட நிலைமைக்கு அவர்களை தள்ளியுள்ளன.

இந்த சூழலில் குக்கி இனத்தையும்  நாக இனத்தையும் சேர்ந்தவர்களை துணை முதலமைச்சராக்கினால் பிரச்சினை தீரும் என்று சாணக்கியத்தனமாக முடிவெடுத்துள்ளதாக  பாஜக  கருதுகிறது.

நிம்சேன் கிப்கேனும்  லோசில் டிகோவும் குக்கி, நாகா இனத்தவர்கள்தான். ஆனால் அந்த இனத்தை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களா? அவர்களின் நியாயத்திற்காக குரல் கொடுத்தவர்களா? அம்மக்களின் நம்பிக்கையை பெற்றவர்களா?

இல்லை,

இல்லவே இல்லை.

இதுதான் யதார்த்தம். 

அந்த இனங்களை சேர்ந்தவர்களை துணை முதல்வராக்குவது என்பது பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற விருப்பத்தின் பேரில் செய்யப்பட்டது அல்ல. எப்படி ராம்நாத் கோவிந்த் ஒரு பொம்மையாக இருந்தாரோ, எப்படி திரௌபதி முர்மு பொம்மையாக இருக்கிறாரோ, அது போன்ற பொம்மைகளாக இருக்க பதவி கொடுக்கப்பட்டவர்கள். 

அதனால் அமைதிக்கு வாய்ப்பில்லை.

பிகு: நேற்று மாநிலங்களவையில் கமலஹாசனின் உரை நன்றாக இருந்தது என்பதை இரண்டு மூன்று முறை பார்த்து கேட்ட பின்பே புரிந்தது. எளிய மொழியில் நேரடியாக இருந்திருந்தால் வீச்சு இன்னும் நன்றாகவே இருந்திருக்கும்.

ஒரு குழப்பமான தலைப்பை வைக்க அவரது உரையே காரணமாக இருந்தது.