Sunday, December 31, 2017

செல், வராதே!!!

Image result for good bye

2017 ம் வருடத்தின் இறுதி நிமிடங்களில் உள்ளோம்.

ஜல்லிக்கட்டுப் போராட்டம் எனும் எழுச்சியோடு தொடங்கிய நிகழ்வுகள் "ஆன்மீக அரசியல்' எனும் காமெடியோடு முடிந்துள்ளது.

இந்த வருடம் பற்றி ஏராளமாக எழுதலாம்.

இரு பேரிழப்புக்கள் இந்த வருடத்தில் எங்களுக்கு.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்

தோழர் ஆர்.கோவிந்தராஜன் அவர்களை பிப்ரவரியிலும்
தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களை டிசம்பரிலும்

இழந்து துயருற்றது.

அந்த வகையில் 2017  மோசமான வருடம்.

இனி இப்படி ஒரு ஆண்டு வேண்டாம் என்பதே 
இன்னும் சில நிமிடங்களில் பிறக்கப்போகும் புத்தாண்டிடம் எதிர்பார்ப்பது.

Good Bye 2017 

கமலஹாசன் சொன்னது இவற்றைத்தான் . . .






ஹேராம் படப்பாடல்கள் பற்றி கமலஹாசன் கூறியது பற்றி நேற்று பகிர்ந்து கொண்டிருந்தேன்.

அது மட்டுமல்லாது அந்த பாடல்களையும் ஒரு முறை யுடூயுபில் பார்த்து ரசித்தேன்.

நான் பார்த்து ரசித்ததை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.






விருமாண்டி படத்தின் 


இளையராஜா இசையை விட இசையிலும் உசந்தது எதுவுமில்லை என்ற உணர்வு இப்பாடலைக் கேட்கையில் வருகிறதல்லவா!

யாரோடு போர் ரஜனி?



அரசியலில் நுழைவது என்றும் தனிக்கட்சி அமைத்து 2021 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவது என்று ஒரு வழியாக முடிவெடுத்தமைக்கு வாழ்த்துக்கள்.

தேர்தலில் வெற்றி பெற்று மூன்று ஆண்டுகளுக்குள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாவிட்டால் ராஜினாமா செய்வேன் என்று சொல்வதன் மூலம் வெற்றி பெற்றதாகவே நினைத்துக் கொண்டுள்ள உங்கள் தன்னம்பிக்கைக்கும் வாழ்த்துக்கள்.

போர் வரும் நேரத்தில் களத்தில் இருப்போம் என்று உங்கள் ரசிகர்களிடம் சொல்லியிருந்தீர்கள். இப்போது அரசியலில் நுழைந்ததன் மூலம் போர் வந்து விட்டதாக நீங்கள் உணர்வதாக நான் உணர்கிறேன்.

உங்கள் போர் யாரோடு என்பதையும் தெளிவுபடுத்துங்கள். அப்போதுதான் என் வாழ்த்துக்களுக்கு அர்த்தம் இருக்கிறதா இல்லையா என்பதை நான் அறிந்து கொள்ள முடியும்.

ஊழலுக்கு எதிரான போர் என்றால் ஊழலின் ஊற்றுக் கண்ணாய் திகழும் முதலாளித்துவ, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் எதிராகவும் உங்கள் ஆயுதங்கள் பாயுமா?

மக்கள் ஓற்றுமையைப் பாதுகாப்பதற்கான போர் என்றால் மதவெறியை இந்தியாவில் பரப்பும் காவிகளுக்கு எதிராக உங்கள் அம்புகள் சீறுமா?

இந்தியாவின் பெருமையை தலை நிமிரச் செய்வதற்கானது உங்கள் போர் என்றால் பெரியண்ணன் மனோபாவத்தோடு நம்மை அடக்கியாள முயலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராக பிரயோகிக்க உங்களிடம் தோட்டாக்கள் உள்ளதா?

முதலில் இந்த மூன்று விஷயங்களில் உங்கள் நிலைப்பாட்டைச் சொல்லுங்கள்.

அதற்கும் முன்பாக உங்கள் மனைவி தொடர்பான நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வாடகை பாக்கியை பட்டுவாடா செய்யுங்கள். ஆசிரியர்கள் சம்பள பாக்கியை கொடுக்கச் சொல்லுங்கள்.

உங்கள் சிஸ்டத்தை சரி செய்வதும் முக்கியம் அல்லவா?
  

மோடியை (காமெராவை) மறைக்காதீங்கப்பா



கேரள நிதியமைச்சர் தோழர் தாமஸ் ஐசக்கை மோடியின் பாதுகாவலர்கள் படுத்தும் பாட்டை பார்த்து சிரியுங்கள்.

காமெரா முன் போஸ் கொடுப்பது முக்கியம் அமைச்சரே (மோடிக்கு)


Saturday, December 30, 2017

தமிழிசை படிக்கக்கூடாத காமெடி




சமீபத்தில் நான் ரசித்த ஒரு கேள்வி பதிலும், ஒரு காமெடியும்

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் தமுஎகச வின் கௌரவத்தலைவர் தோழர் அருணனிடம் கேட்கப்பட்ட கேள்வியும் அவரின் பதிலும் கீழே.


கார்த்திகேயன்: ரஜினி அரசியலுக்கு வருவாரா? 


அருணன்: ரயிலைத் தவறவிட்ட பயணி அடுத்த ரயிலைப்
பிடிக்கலாமா அல்லது வீட்டுக்கு போய்விடலாமா என்று 
நடைமேடையில் உலாத்திக் கொண்டிருப்பது போல 
இருக்கிறார்.

அடுத்ததாக ஒரு காமெடி

சமீபத்தில் வாய் விட்டு சிரிக்க வைத்த காமெடி இது.

தமிழிசை அவர்கள் சொன்னதைச் சொல்லும் கிளி ஒன்றை வாங்கிக் கொண்டு வீட்டுக்கு போகிறார். 

அங்கே அவருக்கும் கிளிக்கும் நடந்த உரையாடல்

தமிழிசை ; என் பேரு தமிழிசை
கிளி             ; என் பேரு தமிழிசை


தமிழிசை ; உன் பேரு என்ன?

கிளி             ;  உன் பேரு  என்ன?


தமிழிசை ; நான் ஒரு டாக்டர்


கிளி             ; நான் ஒரு டாக்டர்




தமிழிசை ; தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும்
கிளி             ; எலேய், அது மட்டும் நடக்கவே நடக்காது



கமலஹாசன் கச்சிதமாய் சொல்கிறார். . .



கமலஹாசன் இளையராஜாவைப் பற்றி ஆனந்த விகடனில் எழுதிய கட்டுரையை ராஜாவின் இசை போலவே   சுகம்.

ராஜா, ராஜாதான்.


"ஹேராம் - முழுப்படத்தையும் முடித்துவிட்டு ஃபைனல் மிக்ஸிங்குக்காக ஒரிஜினல் இசையைக் கேட்டால், ‘ஒரு கோடி ரூபாய் கொடுத்தால்தான் கொடுப் பேன்’ என்றார் அறிமுக இசையமைப்பாளரான அந்த இசைமேதை. ‘வேறு வழியில்லை, ராஜாவிடம் போவோம்’ என்றேன். ‘வேறு ஒருவரிடம் போய்விட்டு வந்ததால் அவர் பண்ணுவாரா என்பது சந்தேகம்’ என்றார்கள். ‘பண்ணுவார், நான் போவேன்’ என்று சொல்லிவிட்டுச் சென்றேன். ‘என்ன’ என்று கேட்டார் ராஜா. ‘தப்புப் பண்ணிட்டேன். இந்த மாதிரியெல்லாம் ஆகிப்போச்சு’ என்று என் குறைகளைச் சொன்னேன்.

வேறு நபராக இருந்திருந்தால், ‘செம மேட்டர் சிக்கிடுச்சு’ என்று நினைத்துக்கொண்டு, ‘எனக்குத் தெரியும்…’ என்று எதிராளியைப் பற்றிக் குறை சொல்லத் தொடங்குவார்கள். இல்லையென்றால், ‘இல்லல்ல… எனக்கு வேறு வேலைகள் இருக்கு’ என்று சொல்லித் தவிர்ப்பார்கள். ஆனால் ராஜாவோ, ‘`சரி, அதை விடுங்க. இப்ப என்ன பண்ணப்போறீங்க?’’ என்று நேராக பிரச்னைக்குள் வந்தார். ‘`பாட்டெல்லாம் ஷூட் பண்ணிட்டேன்’’ என்றேன். ‘`அப்ப அந்தப் பாட்டை யெல்லாம் திரும்ப எடுக்க எவ்வளவு செலவாகும்?’’ என்றார். ‘`அதைப்பற்றி இப்ப பேசவேணாம். நாம அந்தப் பாடல்களைப் புதுசா கம்போஸ் பண்ணி ரெக்கார்ட் பண்ணுவோம். அதைவெச்சு நான் புதுசா ஷூட் பண்ணிக்கிறேன். எவ்வளவு குறைவான பட்ஜெட்டில் இதைப் பண்ண முடியும்னு நீங்க சொல்லுங்க’’ என்றேன்.

‘`எனக்கு என்ன கொடுப்பீங்க?’’ என்றார். ‘`என்னங்க இந்த நேரத்துல இப்படிக் கேக்குறீங்க. தப்புப் பண்ணிட்டேன்னு சொல்லிட்டுதானே வந்திருக்கேன். தண்டனைக்கு இது நேரமில்லையே’’ என்றேன். ‘`அதெல்லாம் பேசப்படாது. பாட்டைப்பூரா எடுத்தீங்கன்னா என்ன செலவாகுமோ அந்தச் செலவை எனக்குக் கொடுங்கன்னா கேக்குறேன்?’’ என்றார். ‘`என்னங்க, இப்ப பண்ண மாட்டேங்குறீங்களா, என்ன சொல்றீங்க?’’ என்றேன். ‘`மாட்டேன்னு எங்க சொன்னேன். உங்களுக்கு அந்தச் செலவே இல்லாம பண்றேன். எனக்கொரு ஐடியா வந்துடுச்சு’’ என்றார்.

‘`என்ன?’’ என்று கேட்டேன். ‘`ஏற்கெனவே எழுதிய பாடல்கள், நீங்க எடுத்த வீடியோ காட்சிகள் எதையும் மாத்த வேணாம். அப்படியே இருக்கட்டும். அந்த வரிகளுக்கும் காட்சிகளுக்கும் பொருந்துறமாதிரியான இசையை நான் கம்போஸ் பண்ணித் தர்றேன். திரும்ப ஷூட் பண்ண வேணாம். எனக்கு என்ன கொடுக்குறீங்களோ கொடுங்க. அதைப்பற்றிக் கவலையில்லை. நான் செஞ்சுகாட்டுறேன்’’ என்றார் உறுதியுடன்.

‘`என்னடா இது, கிணறுவெட்ட வேறு பூதம் கிளம்புதே, தப்பாயிடுமோ’’ என்ற பயம் எனக்கு. ஒருமாதிரி தயக்கத்துடன், `‘அது பரவாயில்லைங்க. என்னைக் காப்பாத்துறேன்னு சொல்லிட்டு மியூசிக்கை நாம கம்மிபண்ணிடக்கூடாது. எல்லாம் ஹிட் சாங்கா வரணும். நீங்க போடுறபடி போடுங்க. செலவானா பரவாயில்லை. நான் ஷூட் பண்ணிக்கிறேன்’’ என்றேன். ‘`அப்படின்னா என் மேல நம்பிக்கை இல்லைனு எடுத்துக்கலாமா’’ என்றார். ‘`ஐயய்யோ… அப்படியில்லைங்க’’ என்று அவசர அவசரமாக மறுத்தேன். ‘என்னமோ நடந்துடுச்சு. இனிமேலாவது நண்பர் சொல்வதைக் கேட்போம்’ என்று நினைத்துக்கொண்டு, ‘`நீங்க சொல்றதுமாதிரியே கம்போஸ் பண்ணுங்க’’ என்று சொல்லிவிட்டு வந்தேன்.

பிறகு, என்னை அழைத்துக் காட்டினார். ‘இது உண்மைதானா, மேஜிக்கா, இசையில் இப்படியெல்லாம் நிகழ்த்த முடியுமா?’ என்று என்னால் நம்பவே முடியவில்லை. ஆம், ‘ஹேராம்’ படத்தில் அத்தனை ஹிட் பாடல்களும் ஏற்கெனவே எழுதி, ஷூட் பண்ணின காட்சிகளுக்குப் புதிதாக இசையமைக்கப் பட்டவை. அதே வரி, அதே சொற்கட்டு. ஆனால், இசையும் ராகமும் வேறு. ராஜா வழி வந்தவை.

அதில் ஒரு காட்சியில், இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்ய, பெண் பார்க்க ஹீரோ வந்திருப்பான். அவள், மிகவும் இளம் வயது பெண். ‘வைஷ்ணவ ஜன தோ…’ என்று காந்தியாருக்கு மிகவும் பிடித்த பாடலை அந்தப் பெண் பாடுவாள். அதில் ஓர் இடத்தில், ‘`ஸ்ருதியை ரொம்ப மேல எடுத்துட்டா பிசிறி நாறப்போகுது’’ என்று ஒரு விதவை ஐயங்கார் பாட்டி சொல்வார். அதனால் அவள் சரியாகப் பாடவேண்டுமே என்கிற பதற்றத்துடன் அனைவரும் கேட்டுக் கொண்டிருப் பார்கள். அவர் மேல் ஸ்தாயியில் பாடும் இடம் வரும். எல்லோரும் பதறி, பிறகு, ‘நல்லா பாடிட்டா’ என்று தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்வார்கள். பின், அந்தப் பெண் பாடியபடியே தன் குடும்பத்தினரை கர்வமாகத் திரும்பிப் பார்ப்பாள். இதுதான் காட்சி. அந்தக் காட்சியையும் ஏற்கெனவே படமாக்கிவிட்டோம்.

அந்தக் காட்சியைக் காட்டி, ‘`இதுக்கு எப்படிப் பண்றது? சரியா உச்சஸ்தாயி போகவேண்டிய இடத்தில் உச்சஸ்தாயி போகணும். எப்படிப் பண்ணலாம்னு எனக்குப் புரியலை’’ என்றேன். ‘`என்ன வேணும் சொல்லுங்க’’ என்றார் ராஜா. ‘`மொத்தக் கதையும் நார்த் இண்டியாவுல நடக்குது. ஆனால், இதுமட்டும் சென்னையில் நடக்கும் காட்சி. அதனால இதுமட்டும் தென்னிந்தியத் தன்மையோட இருக்கணும்’’ என்றேன். ‘`அவ்வளவுதானே’’ என்றவர் உச்சஸ்தாயி போவதுபோல் மூன்று டியூன்கள் போட்டார். அதற்கும் 30 நிமிடங்கள்தான். எனக்கு அந்த மூன்றுமே பிடித்திருந்தன. ‘`நானே சூஸ் பண்றேன்’’ என்று மூன்றில் அவர் தேர்ந்தெடுத்த பாடல்தான் படத்தில் வந்தது.

இப்படி வேலைகள் போய்க்கொண்டிருந்த சமயத்தில், ‘`எல்லாம் சரி, உங்க வேலைகளை முடிச்சுக்கிட்டீங்க. எனக்கு ஒரு பாட்டுப் போட இடமில்லாம பண்ணிட்டீங்களே’’ என்றார். ‘`இதுவே பெரிய சாதனை. அதென்ன பெரிய விஷயம்’’ என்றேன். `‘இல்ல, எனக்கு ஒரு இடம் இருக்கு’’ என்றார். `‘ஒரு இயக்குநரா பார்க்கும்போது, இதுல இன்னொரு பாட்டுக்கான இடம் இல்லையே. தவிர இன்னொரு பாட்டு ரொம்ப ஜாஸ்தியாயிடும், வேண்டாங்க’’ என்றேன். `‘ஐயா, இருக்கிற இடத்துல நான் போட்டுக்குறேன். நீங்க சும்மா இருங்களேன்’’ என்றார். ‘`எங்க?’’ என்றேன். ‘`அவர் பாங்கு குடிச்சிட்டு வர்ற அந்த இடம். இயக்குநரா நீங்க அதை ரீரெக்கார்டிங்கா நினைச்சிருந்தீங்க. நானும் அது ரீரெக்கார்டிங்தான்னு சொல்றேன். ஆனா, அதையே பாட்டா போட்டுக்கொடுக்குறேன்’’ என்றார். ‘`நல்லாருக்குமானு பாருங்க’’ என்றேன் அரைமனதாக.

அப்படி அவரே முடிவு செய்து, கம்போஸ் பண்ணி அவரே எழுதியதுதான், ‘`இசையில் தொடங்குதம்மா’’ என்ற பாடல். முன்பெல்லாம் பாட்டுப்போட்டிகளில் தன் திறமையைப் பார்வை யாளர்களுக்குக் கடத்த, ‘சிந்தனை செய் மனமே’, ‘ஒருநாள் போதுமா’ போன்ற பாடல்களைப் பாடிக்காட்டுவார்கள். நானே சிறுவனாக இருந்தபோது, ‘ஒருநாள் போதுமா’ பாடலை அதைப் பாடிய பாலமுரளி சாருக்கும் பெரிய வீணை வித்வான்களுக்கும் பாடிக்காட்டியிருக்கிறேன். அப்படி இன்று தனக்குப் பாட வரும் என்பதை நிரூபிப்பதற்காக, பாட்டுப் போட்டிகளில் இளைஞர்கள் பாடிக்காட்டும் ஒரு ஐக்கானிக் பாடலாக ‘இசையில் தொடங்குதம்மா’ பாடல் அமைந்திருக்கிறது. இதன்மூலம் பிரபல இந்துஸ்தானி பாடகர் அஜய் சக்கரவர்த்தி அவர்களின் நட்பையும் ராஜா எனக்கு ஏற்படுத்திக்கொடுத்தார்.

‘`பணம், உழைப்பு, நாள்கள்… என்று இந்தளவுக்கு மிச்சப்படுத்திக் கொடுத்திருக்கிறாரே’’ என்று சந்தோஷம். அவரை பதிலுக்கு சந்தோஷப்படுத்திப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் ‘ஹேராம்’க்கான பின்னணி இசையை புதாபெஸ்ட் கொண்டுபோய் ஹார்மோனிக் ஆர்க்கெஸ்ட்ராவை வைத்து ரீரெக்கார்டிங் செய்வது என்று முடிவு செய்தேன். புதாபெஸ்ட் அழைத்துச் செல்லும்போது அவருடன் வந்தவர்கள் அனைவருக்குமே அந்த வடிவம், தொழில்முறை அனைத்தும் புதிதாகவும் வேறாகவும் இருந்தன. ஆனால், அவர்களை ஒன்று சேர்த்தது இசை மட்டுமே. அங்கேயும் வேட்டிகட்டிக் கொண்டு, குளிருக்குக் குல்லாவெல்லாம் போட்டுக்கொண்டு வந்து நின்ற ராஜாவை, அங்குள்ளவர்கள் ‘`இவரா கம்போஸர்?’’ என்பதுபோல் பார்த்தனர்.

அவர்களின் முகத்தில், ‘`இந்தியாவுல இருந்து ஏதோ வந்திருக்காங்க. அவங்களுக்கும் பண்ணணுமே’’ என்ற சலிப்பு தெரிந்தது. ‘`இது சரியில்லை, அது சரியில்லை’’ என்றார்கள். ராஜாவை வைத்துக்கொண்டு அவர்கள் அப்படிப் பேசியது எனக்குக் கோபத்தை வரவழைத்தது. ‘`காசு கொடுத்து வந்திருக்கோம். எங்க ஆளுக்கு இது இது வேணும்னு கேட்கிறார். அதைச் செஞ்சுகொடுக்க வேண்டியது உங்க வேலை. ஏன் இவ்வளவு சலிப்பு’’ என்று அவர்களை அதட்டினேன்.

ஆனால், அவர்கள் திறமையான இசைக்கலைஞர்கள். தியேட்டரை நம்புபவர்கள். ஒருவருக்கொருவர் பேப்பர் கொடுப்பதில் ஏதோ ஒரு பிசகு நடந்திருக்கிறது என்பது தெரிந்தது. நான் அதட்டியதால் முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டு சற்று இறுக்கமாகவே வேலையை ஆரம்பித்தனர். பிறகு இவர் கொடுத்த பேப்பரை அங்கிருக்கும் இசைக்கலைஞர்களின் முன் வைத்ததும் அதை அவர்கள் 10 நிமிடங்கள் கவனித்தனர். பின், ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டார்கள். பிறகு அங்கிருக்கும் கண்டக்டர், பேட்டனைத் தட்டி, ‘ரிகர்சல் பார்க்கலாம்’ என்று உற்சாகத்துடன் அந்தக் குச்சியை ஆட்டியவுடன் இசைக்கலைஞர்கள் அனைவரும் அந்த இசையைப் புரிந்துகொண்டு ஒரே சமயத்தில் இசைத்தபோது எனக்குப் புல்லரித்துவிட்டது. `ராஜா என்ன பண்ணுகிறார்’ என்று திரும்பிப்பார்த்தால், அவரின் கண்களில் கண்ணீர்.

ஏனெனில், குழுவில் உள்ள எல்லோருக்கும் சொல்லிப் புரியவைத்து அந்த ஒலியை வரவழைக்க அவர் அவ்வளவு கஷ்டப்பட வேண்டும். அரைநாளாவது ஆகும். ஆனால் பத்தே நிமிடங்களில் புதாபெஸ்ட்டில் அவர்கள் அதை வாசித்ததும், ‘இது என்ன இசை’ என்று யாரோ போட்ட இசையைக் கேட்பதுபோல் நின்ற இளையராஜாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தேன். அப்போது அதை யாரோ ஒருவர் போட்டோ எடுத்ததாகவும் நினைவு. ‘`யாரோ போட்டமாதிரி நீங்க என்னங்க இப்படி ரசிக்கிறீங்க. உங்க மியூசிக்தாங்க’’ என்றேன். அதன்பிறகு அங்கிருந்த இசைக்கலைஞர்கள் ராஜாவிடம் நடந்துகொண்ட முறையே வேறாக இருந்தது. சென்னையில் அவர் வரும்போது எப்படிச் சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்று வணக்கம் சொல்லி வழிவிடுவார்களோ அப்படி புதாபெஸ்டிலும் அடுத்தநாள் ரெக்கார்டிங்குக்காக வந்தவரை, ‘மேஸ்ட்ரோ, மேஸ்ட்ரோ… மேஸ்ட்ரோ’ என்று அழைத்து ஒதுங்கி வழிவிட ஆரம்பித்தனர். இப்படி ‘ஹேராம்’ படம் மூலம் ராஜா, இசையில் வேறொரு அனுபவத்தைத் தந்தார். அதனால்தான், இசையமைப்பாளர்களாக ஆசைப்படுபவர்களுக்கு `ஹேராம்’ பட இசை ஒரு மிகப்பெரிய மியூசிக்கல் சிலபஸ் என்றேன்.

“ ‘ஹேராம்’ படத்தில் நடந்த இந்த விஷயத்தை ஊர் ஃபுல்லா தண்டோரா போட்டுச் சொல்லணும்ங்க’’ என்று நான் சொன்னபோது, ‘`அதெல்லாம் பண்ணக்கூடாது. ரொம்பத் தற்பெருமையா இருக்கும்’’ என்றார் ராஜா. நானும் சில பேட்டிகளில் இதைச் சொல்ல முற்பட்டிருக்கிறேன். ஆனால், அவர் செய்த சாதனையை ஒவ்வொரு வரியாகப் போட்டுக் காட்டி, எது எதுவாக மாறியது என்று சொன்னால்தான் புரியும். அதாவது கிட்டத்தட்ட காளமேகம் புலவர் ஒரு பாட்டுக்கு இரண்டு அர்த்தம் வருவதுபோல் சிலேடைப் புலமையால் பாடுவார் என்பார்களே, அப்படி இசையில் பல்வேறு அர்த்தங்கள் கண்டறியும் இசைக் காளமேகம் இவர்.

இப்படி நிறைய சம்பவங்கள் உள்ளன. ‘விருமாண்டி’யில் நடந்த இரண்டு விஷயங்கள் சொல்கிறேன். பாடல்கள் தவிர, அந்தப் படக் காட்சிகள் அனைத்தையும் ஷூட் செய்துவிட்டு வந்து படத்தை அவருக்குப் போட்டுக்காட்டினேன். ‘`என்ன கமல், இப்படி வெட்டுக் குத்தா இருக்கு. ஓலமே கேக்குதே’’ என்றார். ‘`வெட்டுக்குத்தைப் பற்றிச் சொல்லும்போது ஓலம் தன்னால வரத்தானே செய்யும்’’ என்றேன். `‘உங்க மூடு அப்படி இருக்கிறதால இப்படியான படங்கள் எடுக்குறீங்களா’’ என்றவர், ‘`காமெடிப் படங்கள் எடுங்க’’ என்றார். ‘`எடுக்கலாம். இது எனக்கு ஆசையா இருக்கு’’ என்றேன். ‘`சரி, முடிவு பண்ணிட்டா பண்ணிட வேண்டியதுதான். வாங்க’’ என்றபடி கம்போஸிங்குக்கு வந்தார்.

ஒரு ட்யூன் வந்தது. ‘`பிரமாதமா இருக்குங்க. இதுக்கு ஒரு நல்ல கவிஞரை வெச்சு எழுத வைக்கணும்’’ என்றேன். ‘`அதெல்லாம் நீங்க சொல்லப்படாது’’ என்றார். எனக்கு என்னவென்று புரியவில்லை. அமைதியாக இருந்தேன். ‘`சரி, இப்ப என்ன பண்றீங்க. இங்க உட்கார்ந்து இந்த ட்யூனுக்குப் பாட்டு எழுதிக்கொடுத்துட்டுப் போங்க’’ என்று ஒரு பேப்பரை என் கையில் திணித்துவிட்டு, தன் வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். ‘`என்னங்க விளையாடுறீங்களா, நான் டைரக்ட் பண்ணிட்டிருக்கேன். எனக்கு நிறைய வேலைகள் இருக்கு. நான் போகணும்’’ என்றேன். `‘அதெல்லாம் தானா வரும். போங்க, எழுதுங்க’’ என்றார். ‘`எனக்கிருக்குற டென்ஷன்ல முதல்வரியே வராது. முதல் வரியையாவது சொல்லுங்க. அதுல இருந்து புடிச்சிக்கிட்டு எழுதுறேன்’’ என்றேன். ‘`சொல்லட்டுமா’’ என்றவர், ‘`உன்னைவிட இந்த உலகத்தில் உசந்தது ஒண்ணுமில்ல… ஒண்ணுமில்ல…’ என்று பாடலாகவே பாடியவர், ‘போங்க, இப்ப எழுதிக்கொடுங்க’ என்றார். ஆமாம், அந்த முதல் வரி இளையராஜா அவர்களுடையது.

பிறகு அந்தப் பாடல் ரெக்கார்டிங். ஸ்ரேயா கோஷல் தன் வசீகரிக்கும் குரலில் அழகாகப் பாடியிருந்தார். ‘உங்களுக்கு நீங்கதான் பாடுறீங்க’ என்றார் ராஜா. ‘`ஏங்க அவங்க நல்லா பாடியிருக்காங்க. விட்டுடலாமே’’ என்றேன். ‘`இல்ல, நீங்க பாடுங்க’’ என்றார். சமயத்தில் சிலர், அழகான பாட்டை பெரிய ஆர்க்கெஸ்ட்ரா போட்டு ‘ஜங்கர ஜங்கர’ என்று சத்தம் எழுப்பிக் கெடுத்துவிடுவார்கள். ஆனால் ராஜா, அந்தப் பாட்டுக்கு சத்தம் கூட்டாமல் வெறும் ஆறு இன்ஸ்ட்ருமென்ட்டுகள் மட்டுமே வைத்து ஒலி கோத்தார். அந்த ஆறுமே ஒன்றோடொன்று பிசிறில்லாமல் தனித்தனியாகக் கேட்கும். என் டீமில் உள்ளவர்களுக்கு என்ன பிடிக்கும் என்று என்னைப்போலவே ராஜாவுக்குத் தெரியும். எங்களுக்குப் பிடித்ததை, விருப்பமானதை அதில் கொண்டுவந்து சேர்த்துவிடுவார்.

அப்போது சந்தானபாரதியின் தம்பி சிவாஜி சின்னமுத்து என்னுடன் இருந்தார். ‘` `காட்டு வழி காளைகள்…’னு வர்ற இடத்துல காளைகளோட கழுத்துமணிச் சத்தம் சேர்த்தா நல்லா இருக்கும். அந்த பெல் சத்தங்கள் பதிவு பண்ணின வீடியோ ரெக்கார்டிங் என்கிட்ட இருக்கு. அதைக்கேக்குறீங்களா’’ என்றார் ராஜாவிடம். `சேர்த்தா கண்டிப்பா நல்லா இருக்கும். வாங்குய்யா அதை’ என்றார். வீடியோ கேமராவிலிருந்து வந்த சவுண்டை ட்ரீட் பண்ணி, அதைப் பாட்டுக்கு நடுவில் எடுத்துப் போட்டுக்கொண்டார். அது, அவ்வளவு பொருத்தமாக இருந்தது.

சின்னச்சின்ன விஷயங்களுக்கெல்லாம் சந்தோஷப்பட்டுக் கண்கலங்கக்கூடிய அந்த இளகிய மனதுதான் அவரின் இசையையே பெரிதாக்குவதாக எனக்குத் தோன்றும். ‘விருமாண்டி’யில் மற்ற பாடல்களை முத்துலிங்கம் சார் எழுதினார். அதில் ஒன்று, அப்பத்தாவைப் பற்றிப் பாடும் ஒப்பாரிப் பாடல். ‘மாடவிளக்கை யார் கொண்டுபோய் தெருவோரம் ஏற்றினா? மல்லிகைப்பூவை யார்கொண்டு முள்வேலியில் சூட்டினா?’ என்ற பாடல். அதில், ‘ஆறாக நீ ஓட, உதவாக்கரை நான்’ என்று ஒரு வரி எழுதியிருந்தார். அதைப் படித்துவிட்டு ராஜாவும் நானும் நேருக்குநேர் பார்த்து, ‘உதவாக்கரைனு வையிறதுக்கான அர்த்தத்தை இதுநாள்வரையிலும் நாம சரியா புரிஞ்சுக்கலையே’ என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அப்போது ராஜாவுக்குக் கண்கள் கலங்கிவிட்டன. முத்துலிங்கத்தின் கைகளைப்பிடித்தபடி பாராட்டினார். அந்த நெகிழ்வு எனக்கு ராஜாவிடம் மிகவும் பிடிக்கும். அந்த நெகிழ்வு இல்லாத எந்தக் கலைஞர்களும் பணி ஓய்வு பெற்றுவிடலாம். இந்தச் சின்னச்சின்ன விஷயங்களை ரசிக்க முடியாதபோது அவர்கள் எல்லோருமே ஒருமாதிரி வெறுத்து சக்கையாகிவிட்டார்கள் என்றே அர்த்தம். எங்களை எளிதாக அழவெச்சிடலாம். ‘உதவாக்கரை’னு ஒரு வார்த்தைக்காக இப்படியா கொண்டாடுவது’ என்றால், கொண்டாடத்தான் வேண்டும். அந்தமாதிரியான சின்னச்சின்னக் கொண்டாட்டங்களில்தான் இளையராஜாபோன்ற ஒருவரை நம்மால் தேர்ந்தெடுக்க முடிந்தது. இதேபோல எத்தனை சின்னச்சின்னக் கொண்டாட்டங்களுக்கு அவர் தன் இசையின் மூலம் காரணமாக இருந்திருப்பார்?

வாலி சாரின் கோபம் தமிழ்க்கோபம் என்றால், ராஜாவினுடையது இசைக்கோபம். அவரின் ரெக்கார்டிங் தியேட்டர் போகும்போது, ‘பட்டர் என்ன பண்றார்?’ என்று கேட்டுவிட்டுதான் உள்ளே போவேன். ஆமாம், ராஜா, அபிராமிபட்டர் மாதிரி. டக்கென ‘போடா’ என்று சொல்லிவிடுவார். அதைக்கேட்பதற்கே அவ்வளவு ஆனந்தமாக இருக்கும். காதலியாக இருந்தால் இன்னொரு முறை சொல்லக் கேட்டு ரசிக்கலாம். இவர் ராஜாவாயிற்றே, கேட்டுவிட்டு அப்படியே ஓடிவந்துவிட வேண்டும்.

ஆனால், அது செல்லக்கோபம்தான். வாலி சாருக்கெல்லாம் இவ்வளவு மரியாதை தருபவர் இல்லை என்பேன். நான்கூட சமயங்களில் வாலி சாரை எதிர்த்துப் பேசுவேன். வாதாடுவேன். ஆனால் இவர், ‘ஏங்க சும்மாயிருங்க. அவர்ட்ட அப்படியெல்லாம் பேசக்கூடாது. பெரிய மனுஷன் சொல்றார். கேட்டுட்டுப் போறதைவிட்டுட்டு, அவர்ட்டபோய் வாக்குவாதம் பண்றீங்க. நாமதான் பொறுமையா இருந்து வாங்கணும். இருங்க, நான் வாங்கித்தர்றேன்’ என்று என்னை சீனில் இருந்து ஓரங்கட்டிவிட்டு, எனக்காக அவர் வேலை செய்வார். ஒருமுறை பிரகாஷ்ராஜ், ‘உங்கப் பேச்சை எடுத்தால் அவருக்குக் கண் பளபளக்குதுங்க’ என்றார். உண்மைதான், இது இருவருக்குமான மியூச்சுவல் புரிந்துணர்வு.

எனக்கு அவரைத் தெரியும் என்பதையும் தாண்டி அவர் எனக்கு உறவாகவே மாறிவிட்டார் என்பதே எனக்குப்பெருமை. இளையராஜா என்கிற கலைஞனை நண்பராக்கி, பிறகு என் சகோதரராகவே ஏற்றுக்கொண்டவன். சந்திரஹாசன் அவர்களின் இழப்புக்குப் பிறகு, `அவரின் இடத்தை நாங்கள் நிரப்புகிறோம்’ என்று என்னுடன் நிற்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவர் இளையராஜா. ஆம், சந்திரஹாசன் அவர்களின் இடத்தை நான் அவருக்குத் தந்திருக்கிறேன்.

இத்தனை ஆண்டுக் காலப் பயணத்தில்… எத்தனையோ பிசகுகள் நேர வாய்ப்புள்ள துறை. இருவருமே கோபக்காரர்கள். காசு, கருத்துவேறுபாடு… என்னென்னமோ இருக்கின்றன. நான் பகுத்தறிவு பேசுகிறவன். அவர் மிகத் தீவிர ஆன்மிகவாதி. ஆனாலும் அவரிடம் பேசும்போது என் கருத்தை அடக்கிவாசித்ததே கிடையாது. ஆனால், அதற்கு இருவருமே இடம்கொடுக்காத அளவுக்கான அன்பு எங்கோ அனைத்தையும் பூசிமெழுகிவிட்டது.
எப்படி பாலசந்தர் சார், சிவாஜி சார், கண்ணதாசன், வாலி, நாகேஷ், ஜெயகாந்தன்… பற்றிப் பேசும்போதெல்லாம் சந்தோஷத்தில் நெஞ்சு விம்முமோ, அப்படி இவரைப்பற்றி அழாமல் பேசுவது சிரமம். இவர்தான் இளையராஜா என்று தெரியாமல் ஆரம்பித்ததில் இருந்து, சின்ன கேசட் கடைகளில் இவரின் படத்தைப் போட்டு தமிழகமே கொண்டாடிக்கொண்டு இருப்பது கடந்து, அவருடனான என் 100 படங்கள், மொத்தமாக அவரின் ஆயிரம் படங்கள்… என்று அவரின் பயணத்தைப் பார்க்கையில் ஏதோ இவரை நானே கண்டறிந்ததுபோலவும் இசை கற்றுக்கொடுத்துக் கூட்டிவந்ததுபோலவும் எனக்கு அவ்வளவு பெருமை.

ஒரு விஷயம் சொல்லட்டுமா, 30 வருடம் முன்பு கேட்டு இருந்தாலும் இதையேதான் பேசியிருப்பேன். அன்று அப்படிப் பேசியிருந்தால், ‘இன்னும் படம் பண்ண வேண்டியிருக்கு. அதனால் காக்கா பிடிக்கிறான்யா’ என்றெல்லாம் நினைத்திருப்பார்கள். அதனால் 30 வருடங்கள் சொல்லாமல் வைத்திருந்ததை இப்போது சொல்கிறேன். ஆம், எங்கள் ராஜா நடந்து வந்தாலும், தவழ்ந்து வந்தாலும் இவரின் இசை யானை மீதுதான் வரும் என்பது எனக்கு அப்போதே புரிந்திருந்தது. அதைத்தான் எனக்கான பெருமையாக நினைக்கிறேன்.

மின் கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்ட . . .

நேற்று இரவு எடுத்த படம்.

கண்ணுக்குள் நிலவு -  பாசில் படம்.
கம்பிக்குள் நிலவு இது


Friday, December 29, 2017

விழிகளில் துளிர்க்கும் நீரோடு



விழிகளில் துளிர்க்கும் நீரோடு
விடை கொடுக்க வருகிறோம்.

இத்தனை நாங்கள் எங்களை

வழிநடத்திய உங்களை 
இறுதியாய் காண வருகிறோம்.

சமதர்ம சமுதாயம் படைக்க
போராட்ட உணர்வூட்டிய உங்களை
போய் வாருங்கள் என
வழியனுப்ப வருகிறோம்.

எல்.ஐ.சி யை பாதுகாக்கும் 
யுத்தியைத் தந்தீர்கள்,
மக்களின் நிறுவனத்தை
மக்களே காப்பார்கள் என்றீர்கள்.
உங்களைக் காக்கும் 
வழிமுறையை மட்டும்
மறைத்து விட்டீர்கள்.

இறப்பு இயல்புதான் என்று
நீங்கள் கற்றுக்கொடுத்த
வாழ்க்கை முறை சொன்னாலும்
உங்களின் இழப்பை ஏற்க
இதயம் மறுக்கிறதே!

தோற்றம் மட்டுமா?
உங்கள் வாழ்வே கம்பீரம்!
உழைக்கும் மக்களுக்காய்
வாழ்வை அர்ப்பணித்த கம்பீரம்!

என்.எம்.எஸ் எனும்
மூன்றெழுத்துக்கு
"கொள்கை" என்றோர் பொருளுண்டு,
அதிலே "உறுதி" என்றும் அர்த்தமுண்டு.

"வாழும் போதும் வாழ்க்கைக்குப் பிறகும்"
எல்.ஐ.சி யின் முழக்கம் இது.

பணியின் போதும்
ஓய்வின் போதும்
ஊழியர்தம் வாழ்விற்கு
ஊதியமும் ஓய்வூதியமும்
உறுதி செய்த ஒளி விளக்கு நீங்கள்.

ஆயிரமாயிரம் விருட்சங்களை
உருவாக்கிய பின்பே
மண்ணுக்குள் செல்லும்
அபூர்வ விதை நீங்கள்.

மண்ணிருக்கும் வரை,
வானிருக்கும் வரை
எங்கள் இதயங்களில்
எப்போதும் இருப்பீர்கள்,





Thursday, December 28, 2017

ஜெமோ விற்கு வயிறு எரியுமே !!!!


வீர யுக நாயகன் வேள் பாரியின் தீவிர வாசகனாக தோழர் சு.வெங்கடேசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

2017 ம் ஆண்டின் டாப் பத்து மனிதர்கள் பட்டியலில் உங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது மட்டுமல்லாமல் தமிழக இலக்கியத்தின் தவிர்க்க இயலாத பொக்கிஷம் என்றும் சொல்லப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது.

விகடனின் டாப் டென் மனிதர்கள் பட்டியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இடம் பெறுவது பெருமிதமளிக்கிறது.

இதைப்படித்தால் ஜெயமோகன் மன நிலை எப்படி இருக்கும் என்று யோசித்துப் பார்த்தேன். மனிதனுக்கு நிச்சயம் வயிறு எரியும். கீழடிப் போராட்டத்தில் இலக்கியவாதிக்கு என்ன வேலை என்று எழுதிய மனிதன் அல்லவா? இவர் வயிறு எரிந்தால் நல்லவர்கள் மனம் குளிரும்.

மீண்டும் வாழ்த்துக்கள் தோழர் சு.வெங்கடேசன். 

வீர யுக நாயகன் வேள்பாரி, காலத்தை வென்ற படைப்பாக நிலைத்து நிற்கும்.

ஒரே ஒரு வருத்தம் உண்டு.

எங்கள் கோட்ட மாநாடு மக்கள் ஒற்றுமை கலை விழாவில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பத்தை நிறைவேற்றாமல் நான்கைந்து ஆண்டுகளாக நழுவிக்கொண்டே இருக்கிறார். 2018ல் பண்ருட்டியில் எங்கள் மேடையில் அவர் குரல் ஒலிக்கும் என்றும் நம்புகிறேன். 

புரிஞ்சா, தயவு செஞ்சு சொல்லுங்க . . .


மேலே உள்ள செய்தி, எங்கள் ஒய்வு பெற்ற அதிகாரி திரு இசக்கிராஜன் அவர்கள் அனுப்பி வைத்தது. 

முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் சசி தரூர் வெளியிட்ட வாழ்த்துச்செய்தியாம் இது.

கிராமத்து பள்ளிக்கூடத்தில் படித்தாலும் 1980 லியே  பத்தாவது பொதுத்தேர்வில் ஆங்கிலத்தில் 89 மதிப்பெண் பெற்றவன் என்ற என் திமிருக்கு பலத்த அடி.

சத்தியமா எனக்கு எதுவும் புரியவில்லை. அகராதி வைத்து புரிந்து கொள்ளும் அளவிற்கு பொறுமை இல்லை.

ஆகவே ஆங்கிலத் தேர்ச்சியுடைய கனவான்களே உங்களுக்குப் புரிந்தால் கொஞ்சம் தயவு செய்து அர்த்தம் சொல்லுங்களேன்.

ஏதோ என்னால் முடிந்தது சின்னதா ஒரு படம் தயாரித்தேன். 



நகராவிட்டால் எதற்கய்யா இது வெட்டியாய்?




காட்பாடி ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுக்கள் (Escaloter) அமைக்கும் பணி தொடங்கிய நாள் முதல் அது செயல்பாட்டுக்கு வரும் நாளை மிகவும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்.

அமைக்கப்பட்ட நகரும் படிக்கட்டு மேலே செல்வதற்கும் மட்டும்தான், கீழே இறங்குவதற்குக் கிடையாது என்று அறிந்த போது கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது. சரி நமக்கான சிரமத்தில் பாதியாவது குறைகிறதே என்று ஒரு சின்ன ஆறுதல்.

அது செயல்பாட்டுக்கு வந்த பின்பு  நான்கைந்து முறை காட்பாடி ரயில் நிலையத்துக்கு சென்று வந்து விட்டேன். ஆனால் ஒரு முறை கூட அது வேலை செய்யவே இல்லை.

காலை ஆறு மணி முதல் மாலை ஆறு மணி வரை மட்டும்தான் அது இயக்கப்படும் என்று சொல்கிறார்கள். பொதுவாக என் மகனை பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை காலை 05.45 மணிக்கு புறப்படும் ரயிலில் ஏற்றிவிடச் செல்வேன். ரயில் கால தாமதமாக வரும் நாட்களில் கவனித்துள்ளேன். ஆறு மணிக்குப் பிறகும் அது இயங்குவதில்லை.

காட்பாடி ரயில் நிலையத்துக்கு வரும் ரயில்களில் பெரும்பாலானவை காலை ஆறு மணிக்கு முன்னாலும் மாலை ஆறு மணிக்கும் பின்னாலும் வருபவை. இடைப்பட்ட காலத்திலும் ரயில்கள் உண்டென்றாலும் அவர்கள் நகரும் படிக்கட்டுக்களின் இயக்கத்தை நிறுத்தி வைக்கும் காலத்தில்தான் மிக அதிகம். பயணிகளும் அதிகம்.

நோயாளிகள் அதிகம் வருகிற ஒரு ரயில் நிலையம் காட்பாடி.  அனைத்து பிளாட்பார்ம்களிலும் இரு புறமும் இருபத்தி நான்கு மணி நேரமும் செயல்படக் கூடிய நகரும் படிக்கட்டுக்கள்தான் அவசியம். ரயில்வே நிர்வாகம் இதை கணக்கில் கொண்டு செயல்பட வேண்டும்.

அப்படி இல்லாமல்  குறிப்பிட்ட நேரத்தில்  மட்டும் செயல்படுவடுவதில் எந்த பிரயோசனமும் கிடையாது.

“எங்க ஸ்டேஷனிலும் எலிவேட்டர் இருக்கு”  என்ற வெற்று பெருமிதம் மட்டுமே மிஞ்சும்.


Wednesday, December 27, 2017

கேரளத்திலும் கூட . . .



ஓஹி புயல் தாக்குதலுக்கு உள்ளான குமரி மாவட்டத்து பழங்குடி மக்களுக்கு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பும் நெல்லைக் கோட்டச்சங்கமும் செய்த நிவாரண உதவிகள் பற்றி முன்பே பதிவிட்டிருந்தேன்.

படிக்காதவர்களுக்காக இணைப்பு இங்கே உள்ளது. 

ஓஹி புயலால் பாதிக்கப்பட்ட  கேரள மாநில மக்களுக்கு உதவுவதற்காக அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் சார்பாக ரூபாய் மூன்று லட்சமும் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் சார்பாக ரூபாய் இரண்டு லட்சமுமாக ஐந்து லட்ச ரூபாய்க்கான காசோலை இன்று கேரள மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தோழர் டி.பி,ராமகிருஷ்ணன் அவர்களிடம் எங்கள் தென் மண்டலக் கூட்டமைப்பின் தலைவர் தோழர் எம்.குன்னிகிருஷ்ணன் அவர்களால் வழங்கப்பட்டது. தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் பி.பி.கிருஷ்ணன் (கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின் பொதுச்செயலாளரும் கூட) கோழிக்கோடு கோட்டச்சங்கத்தின் தலைவர் தோழர் பிஜூ ஆகியோரும் உடன் இருந்தனர்.

ஒரு கேள்வி எழலாம்.

கேரளாவில் அரசிடம் பணத்தை அளித்துள்ளீர்கள், தமிழகத்தில் நேரடியாக பயனாளிகளிடம் நிவாரணப் பொருட்களை அளித்துள்ளீர்களே என்று ஒரு கேள்வி எழுந்தால் அது இயல்பானது.

பதில் மிகவும் சுலபமானது.

கேரள இடது முன்னணி அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி சென்று சேர்வதை உறுதியாகச் செய்யும்.

தமிழக அரசின் மீது அந்த நம்பிக்கை கிடையாது.

காரணம்


இவர்கள் ஸ்டிக்கர் ஒட்டிகள்

வெண்மணியில் புதக அநாகரீகம் – காவித் தொடர்பு?



வெண்மணி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தப் போன இடத்தில் புதிய தமிழகம் கட்சியினர் “வெண்மணியை கைப்பற்றுவோம்” என்று அநாகரீகமாக கோஷமிட்டதாகவும் “ஜாதிய சக்திகளை தமிழ் மண்ணிலிருந்து வேரறுப்போம்”  என்று வாலிபர் சங்கத் தோழர்கள் பதில் முழக்கம் இட்டதும் நழுவிச் சென்றுள்ளனர் என்பதை பல தோழர்களின் பதிவிலிருந்து பார்க்க முடிந்தது.

நான் பார்த்த ஒரு காட்சியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

நாங்கள் வெண்மணியில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பி வருகையில் எதிரில் எந்த ஆரவாரமும் இல்லாமல் ஜான் பாண்டியன், கூட ஒருவருடன் நடந்து வந்து கொண்டிருந்தார். இவருக்கு கொலை மிரட்டல் இருப்பதாகச் சொல்கிறார்களே, எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக வருகிறாரே, செங்கொடி இயக்கத்தின் இடம் என்பதால் தைரியமாக வருகிறார் போல என்று பேசிக் கொண்டோம்.

பிறகு  வெண்மணி ஆர்ச் கேட்டிலிருந்து எங்கள் வாகனத்தில் திரும்புகையில் தேவூருக்கு சற்று முன்பாக ஓவர் ஆரவாரம், அளப்பறையோடு புதிய தமிழகம் கட்சிக் கொடி கட்டிய சுமார் பத்து வாகனங்கள் எதிரில் வெண்மணி நோக்கி வந்து கொண்டிருந்தது. அதனால் எங்கள் வாகனத்தை கொஞ்சம் நிறுத்த வேண்டியிருந்தது.

அவர்கள் வந்த வாகனங்களும் நின்றது. அப்போது சாலையில் ஒரு ஏழெட்டி பேர் வெள்ளை சட்டை, காவி வேட்டியோடு நெற்றியில் செந்தூரத்தோடு நின்று கொண்டிருந்தனர். முதல் வாகனத்தில் அமர்ந்திருந்தவர் காதிலே இந்த காவி வேட்டி பேர்வழிகள்  ஏதோ ஓதிக் கொண்டிருந்தார்கள். பிறகு மீண்டும் அதே ஆரவாரத்தோடு புதக வாகனங்கள் புறப்பட்டுப் போய் விட்டனர். அஞ்சலி செலுத்த செல்பவர்கள் போல அவர்களின் நடவடிக்கை இல்லவே இல்லை.

காவியோடு சேர்ந்த மருத்துவர் கிருஷ்ணசாமி ஏற்கனவே வில்லங்கமாகத்தான் செயல்பட்டு வருகிறார். எனவே அவரது கட்சிக்காரர்களும் அப்படி செயல்படுவதில் எந்த வியப்பும் கிடையாது.

கலவரம் செய்து குழப்பம் ஏற்படுத்தி அதிலே மீன் பிடிக்க ஆசைப்படும் காவிகளின் ஆலோசனையால்தான் ஒரு வேளை புதக அப்படி அநாகரீகமாக நடந்து கொண்டிருக்குமோ என்று தோன்றுகிறது.

நவீன ஆண்டைகளாக தங்களைக் கருதிக் கொள்ளும் கிருஷ்ணசாமி வகையறாக்களுக்கு  வெண்மணியில் மாண்ட உழைப்பாளி மக்கள் மீதென்ன திடீர் பாசம்?


காவிகள் பாணியில் கலவரத்தைத் தூண்டுவதா?

பி.கு : இந்த ஆண்டு வெண்மணியில் வேலூர் கோட்டத் தோழர்கள்

கண்களால் அவர் வாழ்வார்



மறைந்த எங்கள் தலைவர் தோழர் என்.எம்.எஸ் பற்றிய நேற்றைய பதிவில் விடுபட்டுப் போன இரண்டு விஷயங்களை இணைக்கவே இப்பதிவு.

World Federation of Trade Unions அமைப்பின் மாநாடு 1988 ல் பல்கேரியா நாட்டின் தலைநகர் ஸோபியா வில் நடைபெற்ற போது அவர் ஆற்றிய உரை என்பது மிகவும் முக்கியமானது.  அந்த உரை இன்சூரன்ஸ் வொர்க்கர் இதழில் வெளியானது. விரைவில் அதை பகிர்ந்து கொள்கிறேன்.

WFTU அமைப்பின் ஒரு அங்கம் Trade Union International of Public and Allied Sectors என்பது. அதன் நிர்வாகக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் என்.எம்.எஸ்.

World Social Forum நிகழ்வுகளிலும் அவரது பங்கேற்பு, வழிகாட்டுதல் இருந்துள்ளது.

இந்தியாவைக் கடந்தும் அவரது பணி விரிவடைந்துள்ளது. 

இரண்டாவது முக்கியமான செய்தி.

அவரது விருப்பத்தின்படி அவருடைய கண்கள் கொடையாக அளிக்கப்பட்டது.

மரணத்திற்குப் பின்னும் தன் கண்களால் வாழ்கிற மாமனிதர். 




Tuesday, December 26, 2017

இன்று எங்களை தாக்கிய சுனாமி



26 டிசம்பர் மீண்டும் ஒரு முறை துயரம் தோய்ந்த நாளாய் அமைந்து விட்டது. எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மகத்தான தலைவரும், மிகச் சிறந்த பொருளாதார அறிஞரும் உழைக்கும் வர்க்கத்தின் வழிகாட்டியுமான தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று மறைந்தார் என்ற செய்தி சுனாமியாய் எங்களை தாக்கியது.

ஊழியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் எப்படி சமரசம் இன்றி உறுதியாக இருப்பாரோ, அது போலவே ஊழியர்கள் அலுவலகப் பணியை செய்ய வேண்டும் என்பதிலும் சமரசம் இல்லாமல் கண்டிப்பாக இருப்பார்.

உலகமயத்தின் தீமைகளைப் பற்றியும் சர்வதேச நிதி மூலதனத்தின் லீலைகளைப் பற்றியும் மிகவும் நுணக்கமாக ஆராய்ந்து அவர் எழுதியுள்ள பல்வேறு கட்டுரைகள் உழைக்கும் மக்களுக்கு அவர் வழங்கிய சக்தி மிக்க ஆயுதங்கள்.

1986 ல் எல்.ஐ.சி பணியில் இணைந்தாலும் அவரைப் பார்க்கிற, அவர் உரையைக் கேட்கிற வாய்ப்பு என்பது 1988 ல் தான் கிடைத்தது. அவர் என்னை அறிந்து கொள்ளும் வாய்ப்பு என்பது 1989 ல் நான் அடியாட்களால் தாக்கப்பட்ட பிறகே கிடைத்தது. அந்த சம்பவத்திற்குப் பிறகு  ஒரு முறை சென்னை சென்ற போது அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் கே.நடராஜன் அறிமுகப் படுத்தி வைத்தார். கைகளைப் பற்றிக் கொண்டு "Be Brave and Bold. You can face any challenge" என்று சொன்னதை வாழ்நாளில் மறக்கவே முடியாது. இன்றளவும் அந்த வார்த்தைகள்தான் எதையும் சந்திக்கும் தைரியத்தை அளித்து வருகிறது. சோர்வுற்ற வேறொரு நாளில் அவரோடு தொலைபேசியில் நிகழ்த்திய உரையாடலும் உற்சாகம் அளிக்கும் டானிக் 

எங்கள் கோட்டத்தின் வெள்ளி விழா ஆண்டு துவக்க நிகழ்வில் அவர் பங்கேற்று உரையாற்றிய புகைப்படத்தைத்தான் அந்த நாள் முதல் முக நூலில் Cover Photo வாக பெருமிதத்துடன் வைத்துள்ளேன்.  அந்த புகைப்படத்தை இங்கே பகிர்ந்து கொண்டுள்ளேன்.



தன் வாழ்நாள் முழுதையும் இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் இந்தியாவின் தொழிலாளி வர்க்கத்திற்கும் அர்ப்பணித்த தோழர் என்.எம்.சுந்தரம் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தி வெளியிட்ட சுற்றறிக்கையை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். 


இன்சூரன்ஸ் ஊழியர்களின்  இமயம் சரிந்தது.

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாபெரும் தலைவர் தோழர் என்.எம்.சுந்தரம் அவர்கள் இன்று காலை சென்னையில் இயற்கை எய்தினார் என்பதை பெருந்துயரத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

அறுபதுகளின் துவக்கத்தில் எல்.ஐ,சி நிறுவனத்தில் பணியில் சேர்ந்த சில மாதங்களிலேயே தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் இணைச்செயலாளராக ஒரு மிகப் பெரிய பொறுப்பை தன் இளந்தோள்களில் ஏற்றவர் தோழர் என்.எம்.எஸ்.  இரண்டாண்டுகளிலேயே இருபத்தி ஐந்து வயதில் தென் மண்டலப் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் தன் உழைப்பாலும் அறிவாற்றலாலும் உழைப்பாளி மக்களின் மீதான நேசத்தாலும் நாடறிந்த தலைவராக மாறினார்.

1988 ல் ஜெய்ப்பூரில் நடைபெற்ற பதிமூன்றாவது அகில இந்திய மாநாட்டில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலாளராக தோழர் என்.எம்.எஸ் சுந்தரம் தேர்ந்தெடுக்கப்பட்டார். சங்கத்தின் தலைமையக்கம் கல்கத்தாவிலிருந்து சென்னைக்கு மாறியது. மிகுந்த சவால்கள் நிரம்பிய காலகட்டத்தில் அவர் அகில இந்தியப் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார்.

உலகமயமாக்கலின் கோர விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை துல்லியமாக கணக்கிட்டு அதற்கெதிரான போராட்டங்களுக்கு ஊழியர்களை தத்துவார்த்த அடிப்படையில் தயார்படுத்திய பெருமை அவருக்குண்டு. 1990 களின் அமெரிக்கச் சட்டம் சூப்பர் 301, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தை பாதிக்கும் என்ற விழிப்புணர்வை  உருவாக்க புது டெல்லியில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டின் மூலம் ஒரு மிகப் பெரிய போராட்டத்தின் துவக்கப் புள்ளியாய் இருந்தது தோழர் என்.எம்.சுந்தரம் திகழ்ந்தார்.

இன்சூரன்ஸ்துறையில் தனியாரை அனுமதிக்க வேண்டும், எல்.ஐ.சி யின் பங்குகளில் 50 % ஐ விற்க வேண்டும் என்ற மல்ஹோத்ரா குழு அறிக்கை அளித்த போது அவை எப்படி தேசத்திற்கும் மக்களுக்கும் பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்று அவர் எழுதிய இரண்டு புத்தகங்கள், நம்முடைய போராட்டங்களின் சக்தி மிக்க ஆயுதங்கள்.

“எல்.ஐ.சி யை  பாதுகாப்பதற்கான நம் போராட்டம், பாலிசிதாரர்களுக்கு சிறப்பான சேவையை செய்வதன் மூலமாக நம்முடைய மேஜையிலிருந்துதான் துவங்குகிறது” என்று நம்மை தொடர்ந்து வலியுறுத்துபவர். அதனை கடைபிடிப்பதால்தான் நம்மால் இந்நாள் வரை மக்களிடம் தைரியமாக செல்ல முடிகிறது. எல்.ஐ.சி நிறுவனமும் இன்று வரை முழுமையான பொதுத்துறை நிறுவனமாக நீடிக்கிறது.  வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களை இணைத்து கூட்டு போராட்டக்குழு அமைத்து பென்ஷனை வென்றெடுத்ததில் தோழர் என்.எம்.எஸ் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கு எவ்வித பாதிப்பும் எதிர்காலத்தில் நேரக்கூடாது என்று அவர் காண்பித்த உறுதியை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

“இன்சூரன்ஸ் வொர்க்கர்” இதழின் ஆசிரியராக பல்லாண்டு காலம் செயல்பட்ட தோழர் என்.எம்.எஸ் எழுதிய “Let us play Politics” கட்டுரைத் தொடர், நமக்கெல்லாம் அவர் எடுத்த பாடங்கள். தொழிற்சங்கத் தலைவர் என்பதைத் தாண்டி மிகப் பெரிய பொருளாதார நிபுணராகவும் திகழ்ந்தார். சுரண்டலற்ற சோஷலிச சமுதாயமே நம்முடைய இலக்காக இருக்க வேண்டும் என்பதையும் அதற்கான பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்பதை எப்போதும் வலியுறுத்துபவர்.

2002 ம் ஆண்டு ராய்ப்பூரில் நடைபெற்ற பத்தொன்பதவாது மாநாட்டில் அகில இந்தியத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் என்.எம்.எஸ் 2007ல் நாக்பூரில் நடைபெற்ற இருபத்தி ஒன்றாவது மாநாடு வரை அப்பொறுப்பில் தொடர்ந்தார்.  இந்த ஆண்டு துவக்கத்தில் எர்ணாகுளத்தில் நடைபெற்ற இருபத்தி நான்காவது மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டு வழி காட்டினார்.

1988 ல் வேலூர் கோட்டத்தை அவர் துவக்கி வைத்தார். வெள்ளி விழா கொண்டாட்டங்களை அவர்தான் துவக்கி வைக்க வேண்டும் என்று நாம் அழைத்த போது தன் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் கலந்து கொண்டு சிறப்பித்தார். 1994ல் மல்ஹோத்ரா குழு அறிக்கைக்கு எதிரான சிறப்பு மாநாட்டில் மூன்று மணி நேரம் அவர் உரையாற்றியதை யாரால் மறக்க இயலும்!

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தை தத்துவார்த்தப்பாதையில் அழைத்துச் சென்ற மகத்தான தலைவர் மறைந்துள்ளார். அவரது லட்சியங்களை உயர்த்திப் பிடிப்பதே நாம் அவருக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி.

தோழர் என்.எம்.எஸ் அவர்களுக்கு செவ்வணக்கம்

காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கம்,

வேலூர் கோட்டம்

Sunday, December 24, 2017

அங்கே செல்வது ஏன்?



இன்று வெண்மணி தியாகிகள் தினம். 

கீழ்வெண்மணி நோக்கி புறப்பட திருவாரூரிலிலிருந்து இன்னும் சில நிமிடங்களில் புறப்படவுள்ளோம்.


வெண்மணி சங்கமத்தின் நோக்கம் குறித்து எங்கள் தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு வெளியிட்ட சுற்றறிக்கை உங்களுக்காக இங்கே . . .

ராமையாவின் குடிசை ஒவ்வொரு ஆண்டும் அளிக்கும் உணர்வு வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.

அனுபவித்து மட்டுமே உணர முடியும், 
உங்களை உழைப்பாளி என்று உணர்ந்து கொண்டால் . . .





தமிழர்கள் நேர்மையானவர்கள் . ஆர்.கே.நகரிலும்


வாங்கிய பணத்திற்கு சரியாக வாக்களிக்கும் நேர்மையானவர்கள் என்பதை தமிழர்கள் ஆர்.கே.நகரில் நிரூபித்துள்ளனர்.

கரு.நாகராஜன் வாங்கிய வாக்குகளால் கங்கை அமரனுக்கு நிம்மதி பெருமூச்சாம். 

வைகோ ஆதரவளித்ததால்தான் திமுகவுக்கு ராசியில்லாமல் போனதாய் சில உ.பி க்களின் புலம்பல்.

இன்று தந்தை பெரியாருக்கு நினைவு நாள் 

90 % மக்களுக்காக யார்???????

தந்தை பெரியார் அவர்களுக்கு வீர வணக்கம்







"ஆட்சிமுறை என்பது யார் நம்மை ஆள்வது என்கின்ற விஷயமல்ல. நமது மக்களுக்கு எந்த மாதிரி அரசியல் முறை இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியமாகக் கருதப்பெற வேண்டியது."
*
"மக்களை வருணசிரமத் தர்ம முறைக்கும், காட்டு மிராண்டிக் காலத்துக்கும் கொண்டு போகாமல் இருக்கும்படியானதும் அறிவு உலகத்திற்கு இட்டுச் செல்வதுமான ஆட்சி யாருடையதானாலும், அப்படிப்பட்ட ஆட்சி வேண்டுமென்றுதான் போராடுகின்றோம்."
*
"உலகத்தில் பாடுபடும் மக்கள் 100க்கு 90 பேர்கள் உள்ளனர். சோம்பேறிகள், பாடுபடாமல் ஊரார் உழைப்பில் வாழுகின்றவர்கள் 100க்கு 10 பேர்கள்தாம் இருப்பார்கள். ஆதலால் 100க்கு 90 பேர்களுக்கு அனுகூலமான ஆட்சி - அவர்களுடைய நலனுக்காக அவர்களாலேயே ஆட்சி புரியக்கூடிய ஆட்சியாக இருக்க வேண்டும்."

- தந்தை பெரியார்

நன்றி தோழர் வெண்புறா சரவணன்

Saturday, December 23, 2017

நீதி தேவனால் மயக்கமா?



நீண்ட நாட்களாக தள்ளிப்போடப்பட்டு வந்த அலைக்கற்றை வழக்கின் தீர்ப்பு நேற்று முன் தினம் வெளியாகி குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலையாகி விட்டனர்.

நூற்றி ஐந்து பக்க தீர்ப்பை படிப்பதற்கான கால அவகாசம் என்னவோ இதுவரை கிட்டவில்லை. ஏற்றுக் கொண்டுள்ள பொறுப்பின் காரணமாக வேறு ஒரு ஆவணத்தை படித்து அதற்கான பதிலை தயாரிப்பது என்பது வலைப்பக்கத்தில் எழுதுவதை விட முன்னுரிமை அளிக்க வேண்டிய பணி என்பதால் இன்னும் தீர்ப்பை படிக்கவில்லை.

மைக்கேல் குன்ஹா தீர்ப்பை படித்து விட்டே வரவேற்றேன்
குமாரசாமி தீர்ப்பை படித்து விட்டே கண்டித்தேன்.

ஆகவே இப்போதும் தீர்ப்பை முழுமையாக படிக்காமல் எதுவும் எழுத மாட்டேன். வெண்மணி பயணத்தால் அது தாமதமாவதற்கும் வாய்ப்புண்டு.

ஆனால் வேறு ஒரு விஷயம் பற்றி எழுத வேண்டிய அவசியம் உள்ளது.

தீர்ப்பு பற்றி கருத்து சொன்ன மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மீது சமூக வலைத்தளங்களில் உடன் பிறப்புக்கள் பலரும் வன்மத்தோடு சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறார்கள். சரியான பதில் சொல்ல முடியாத சூழல் வருகையில் ஜாதியை தாக்குதல் ஆயுதமாகவோ அல்லது தற்காப்பு கேடயமாகவோ பயன்படுத்துவது என்பதுதான் கலைஞரின் பாணி.  இன்று கலைஞரால் செயல்பட முடியாத சூழலில் அவரில்லாத குறையை அவரது உடன்பிறப்புக்கள் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

மேல்முறையீடு செய்ய வேண்டும் என்பதுதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கருத்து.  பல நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்ட அலைக்கற்றை ஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் நிராகரித்ததே ஊழல் நடந்ததற்கான சான்றாக  மார்க்சிஸ்ட் கட்சி பார்க்கிறது. அப்படி இருக்கையில் மேல்முறையீடு செய்யச் சொல்வதில் என்ன தவறு இருக்கிறது?

நாங்கள் எந்த தவறும் செய்யாதவர்கள் என்று சொல்பவர்களால் மேல்முறையீட்டிலும் நாங்கள்  வெற்றி பெறுவோம் என்று  சொல்ல முடியாத தயக்கத்திற்கு காரணம் என்ன? அதை விடுத்து மார்க்சிஸ்ட் கட்சி மீது சீறிப்பாய்வதன் நோக்கம் என்ன?

பொதுவாகவே சமூக வலைத்தளங்களில் ஒரு பைத்தியக்காரத்தனான புரிதல் இருக்கிறது.

திமுக வை விமர்சித்தால் நீ அதிமுக,
அதிமுகவை விமர்சித்தால் நீ திமுக,
மோடியை எதிர்த்தால் ராகுலுக்கு ஆதரவு,
காங்கிரஸைக் கண்டித்தால்  மோடிக்கு ஆதரவு.

பித்தேறிப் போன இந்த மன நிலையைத்தான் உடன்பிறப்புக்களிடம் பார்க்க முடிந்தது. தலைவர் பாணியில் ஜாதியை வேறு (சட்டசபைத் தேர்தலில் வைகோ 1500 கோடி ரூபாய் பணம் வாங்கினார் என்று செய்த பொய்ப்பிரச்சாரம் போல அது அபத்தம் என்று அவர்களுக்கே தெரிந்தும் கூட) இழுத்து, வசை பாடிக்கொண்டிருக்கிறார்கள்.  அந்த காலத்தில் உயிர்மை தலையங்கத்தில் கனிமொழியை கடுமையாக கண்டித்த மனுஷ்யபுத்திரனைக் கூட அப்படி வசைபாடியிருப்பார்களா என்பது சந்தேகமே! பாஜக வின் அறிக்கையோ என்று சுப.வீர பாண்டியன் வேறு ஒத்து ஊதுகிறார்.

உடன்பிறப்புக்களிடம் ஒரு கேள்விதான் கேட்க வேண்டியுள்ளது.

பாஜக வுடன் கூட்டணி வைத்தது அந்தக்காலமாகவே இருக்கட்டும்.

குஜராத், ஹிமாச்சல் வெற்றிக்கு எடப்பாடியையும் முந்திக் கொண்டு மோடிக்கு வாழ்த்து சொன்னது கூட அரசியல் நாகரீகம் என்று சொல்லலாம். வீடு தேடி வந்த விருந்தாளியான மோடியை வரவேற்றது கூட   விருந்தோம்பல் என்று சொல்லலாம்.

ஆனால் பாஜக ஒன்றும் தீண்டப்படாத கட்சி என்று துரைமுருகன் பேசியதையும் அதற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் செயல் தலைவர் மௌனம் காத்ததை அவ்வளவு சுலபமாக விட்டு விட முடியுமா?

சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் கணிசமான உறுப்பினர் எண்ணிக்கை இருப்பினும் பாஜக அரசின் கொள்கைகளுக்கு எதிராக காத்திரமான போராட்டங்களை  திமுக நடத்தியுள்ளதா? ஜாதிய ஆணவக் கொலைகளுக்கு எதிராக குரல் கொடுத்ததுண்டா? உடுமலை சங்கர் வழக்கின் தீர்ப்பு குறித்து கூட இன்னும் வாய் திறக்கவில்லையே!

குமாரசாமி தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்,
சங்கரராமன் கொலை வழக்கு தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய வேண்டும்

என்றெல்லாம் உடன் குரல் கொடுத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஜாதியச்சாயம் பூசுவது, பாஜகவின் குரல் என்றெல்லாம் சொல்வது எல்லாம் கேவலமான செயலாகத் தெரியவில்லையா?

நீதி தேவன் மயக்கம் என்பது அறிஞர் அண்ணா சொன்னது.
நீதி தேவன் அளித்த தீர்ப்பின் மயக்கத்தை மேல்முறையீடு குலைத்திடும் என்ற அச்சத்தைத்தான் உ.பி க்கள் வெளிப்படுத்துகிறார்கள் பாவம்!

ஒன்று மட்டும் சொல்லி முடிக்க எண்ணுகிறேன்.

கண்கள் பனித்து, இதயம் இனித்து குடும்ப இணை விழா நடவாமல் இருந்திருந்தால் இத்தீர்ப்பு பற்றி  ஒருவர் மிகக் கடுமையாக பேசியிருக்கும் வாய்ப்புண்டு.

ஆ,ம்.

அவர்தான் கருணை அடிப்படையிலான பணி நியமனக் கொள்கை மூலம் அமைச்சரான தயாநிதி மாறன்.

அலைக்கற்றை பற்றி அவரை விடவா நமக்கெல்லாம் உண்மைகள் தெரியும்?????