Thursday, February 29, 2024

பல்லக்கு தூக்கி ப்ளாக்மெயில் செய்

 


தமிழ்நாட்டில் உள்ள பிரபலமான ஆதீனங்களில் ஒன்றான தருமபுரம் ஆதீனகர்த்தரை ப்ளாக்மெயில் செய்தமைக்காக பாஜக நிர்வாகிகள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம் தலைமறைவாகி விட்டார்.

20 கோடி ரூபாய் பணம் தர வேண்டும், இல்லையென்றால் அவரது ஆபாச வீடியோவை வெளியிடுவோம் என்று மிரட்டியதுதான் பிரச்சினை.

இந்த போலிச்சாமியார்தான் மனிதர்கள் தூக்கும் பல்லக்கில்தான் பட்டிணப்பிரவேசம் போவேன் என்று அடம் பிடித்த இன்னொரு ஆதீனத்திற்கு வக்காலத்து வாங்கியவர். ஆட்டுக்காரனும் தலையிட்டது உங்களுக்கு நினைவில் இருக்கலாம்.

பழங்குடி இனத்தைச் சேர்ந்த பெண் ஜனாதிபதி கூட அழைக்கப்படாத புதிய நாடாளுமன்ற கட்டிடத் திறப்பு விழாவுக்கு அழைக்கப்பட்ட ஜனநாயகக் காவலர் இந்த ஆசாமி. சில நாட்கள் முன்பாகக்கூட ஆட்டுக்காரன் அங்கே போயிருந்தானாம். ஒரு வேளை அப்போதுதான் கேமராவை வைக்கச் சொல்லி ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்திருப்பானோ!

யார் கண்டது! honey trap என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஆபாச வீடியோவுக்கான ஏற்பாடே கூட சங்கிகளே செய்திருக்கலாம். ஏனென்றால் எந்த அளவிற்கும் கீழிறங்கக் கூடிய கட்சி பாஜக, அதன் தலைவர்கள் மோடி முதல் ஆட்டுக்காரன் வரை எல்லோருமே கேவலமானவர்கள்தான்.

இப்படிப்பட்ட கிரிமினல்கள்தான் இந்து மதக் காவலர்கள் என்று நம்பும் முட்டாள்கள் திருந்த வேண்டும். இந்துக்களின் பாதுகாப்பு இவர்களால்தான் கேள்விக்குறியாகிறது.

இன்னொரு கேள்வியை கேட்காமல் இப்பதிவு நிறைவு பெறாது.


இருபது கோடி ரூபாய் கேட்டு மிரட்டும் அளவிற்கு என்ன தவறு செய்தீர்கள் ஆதீனகர்த்தரே? உங்களை நம்பும் பக்தர்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு உள்ளது. சொல்லுங்கள். 

கரும் புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை . . .

 

மதுரை மண்ணின் பெருமையாக, அடையாளமாக திகழும் எம்.பி தோழர் சு.வெங்கடேசன் அவர்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து ஒரு கோழை, அனாமதேய, அநாகரீக, அசிங்க, நேர்மையில்லாத, திருட்டுக் கூட்டம் "கண்டா வரச் சொல்லுங்க" என்றொரு சுவரொட்டி அடித்து ஒட்டு தோழர் சு.வெ, அந்த சுவரொட்டி முன்பாக கெத்தாக நின்று சுவரொட்டி ஒட்டிய அந்த திருட்டுக் கும்பலை "வா, வா" என்றழைக்கிறார்.


சமூகத்தில் ஒளிந்து கொண்டு அயோக்கியத்தனம் செய்வதற்கென்றே ஒரு கூட்டம் உள்ளது.

சமூக வலைத்தளங்களில் போலிப் பெயர்களில், அனாமதேயமாக வன்மம் கக்கும் ஜந்துக்கள்,

போலிப்பெயரில் மஞ்சள் பத்திரிக்கைகளில் எழுதும் அசிங்கப்பிறவிகள்,

மொட்டைக்கடிதம் மூலம் வளர்த்த மரத்தையே அசைத்துப் பார்க்க நினைக்கும் துரோகிகள்.

இவர்கள் அனைவரையும் கண்டறிந்து கரும்புள்ளி, செம்புள்ளி குத்தி கழுதை மீதேற்றி அம்பலப்படுத்த வேண்டும்.

ஒளிந்து கொண்டிருந்தாலும் மண்டை மீதுள்ள கொண்டையை மறைக்கத் தெரியாத மடையர்கள் இவர்கள். ஆகவே கண்டறிவது சுலபம். 

Wednesday, February 28, 2024

மோடியென்றால் விதியை மீறலாமா?

 


மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் சென்று பத்து வருடங்களாவது இருக்கும். அந்த முறை சென்ற போது கெடுபிடிகள் புதிதாக இருந்தன. செருப்புக்கள் வைக்கும் இடத்தோடு புதிதாக அலைபேசிகள் வைப்பதற்கான ஒரு கவுண்டர் உதித்திருந்தது. மொபைலோடு செல்ல அனுமதி மறுக்கப் பட்டிருந்தது. அது போலத்தான் காமெராக்களும் அனுமதிக்கப்படவில்லை. பத்து வருடங்களுக்கு முன்பு போன போதுதான் இந்த கெடுபிடி. அதற்கு முன்பு அப்படி கிடையாது என்று நினைக்கிறேன். பொற்றாமரைக்குளம் அருகிலும் பிரகாரங்களிலும் சினிமாக்களே எடுக்கப்பட்டுள்ளது. உதாரணம் சண்டைக் கோழி. போன், கேமரா தடையை நான் தவறென்று சொல்ல மாட்டேன்.  அப்படி இல்லையென்றால் வழிபாட்டுத்தளங்கள் செல்பி எடுத்துக்கொள்ளும் சுற்றுலாத்தளங்களாகி விடும். (இப்போதும் பெரும்பாலான கோயில்கள் அப்படித்தான் உள்ளது என்பது வேறு விஷயம்)

 என்னுடைய கேள்வி எளிமையானது.

 அலைபேசியோ, கேமராவோ உள்ள எடுத்துச் செல்லக்கூடாது என்ற விதி இப்போது மீனாட்சி அம்மன் கோயிலில் அமலில் உள்ளதா இல்லையா?

 அப்படி அமலில் இல்லையென்றால் பேச ஒன்றுமில்லை.

 அமலில்தான் உள்ளது என்றால்  மோடி எப்படி வழக்கம் போல அவரது போட்டோகிராபர் படையோடு உள்ளே சென்றார்?

 மோடியென்றால் கோயிலின் விதிகள் கூட மீறப்படுமா?

 மோடிக்கு வழங்கப்பட்ட வாய்ப்பு இதர புகைப்படப் பிரியர்களுக்கும் இனி தரப்படுமா?

 இதிலே கொடுமை என்னவென்றால் என் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு, பாஜகவால் எப்போதும் திட்டப்படும் இந்து சமய அற நிலையத்துறை.

 ஆனாலும் ஒன்றை சொல்லித்தான் ஆக வேண்டும்.


மோடியின் புகைப்படக்காரர் பயங்கரக் கில்லாடி. சும்மா பாலு மகேந்திரா, பி.சி.ஸ்ரீராம் கணக்கா வித்தியாசமான ஆங்கிளில் போட்டோ எடுக்கறாரு. கஷ்டமான வேலையும் கூட. உத்தர்கண்டில் மோடி கேதார்நாத் கோயிலுக்கு போன போது எடுத்த ஒரு போட்டோ உதாரணம். சிவ லிங்கத்தின் மீது உட்கார்ந்தால் மட்டுமே அந்த ஆங்கிளில் அப்படி ஒரு போட்டோ சாத்தியம். . . .

ஆட்டுக்காரா சந்தோஷப்படாதே, ஜாக்கிரதையா இரு

 


மோடி முதுகில் தட்டிக் கொடுத்தார் என்று ஆட்டுக்காரனும் ஆட்டுக்காரனின் அல்லக்கைகளும் மகிழ்ச்சி வெள்ளத்தில் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள்.


இதற்காக சந்தோஷப்படாதே ஆட்டுக்காரா! மோடியால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களின் நிலைமை என்ன ஆனது என்று தெரியுமா?

கீழே உள்ளவரை பார்.


A 2 வுக்கான கதி நினைவில் உள்ளதா?

உனக்கும் அப்படிப்பட்ட கதி வரும்.

சும்மாவா சொல்கிறார்கள் மோடியை ............ என்று!


Tuesday, February 27, 2024

வேலூரில் நல்ல வேட்டை

 


வேலூரில் புத்தக விழா என்ற அறிவிப்பைப் பார்த்தது முதலே சென்று வர வேண்டும் என்று திட்டமிட்டுக் கொண்டிருந்தேன். அதற்காக துவக்கப்பட்ட ஒரு வாட்ஸப் குழுவில் வேறு இணைத்து அன்றாட நிகழ்வுகளைப் பற்றியெல்லாம் பதிவு செய்து கொண்டே இருந்தார்கள். ஆனால் தொடர்ச்சியான வேலைகள், பயணங்கள் காரணமாக அதற்கான வாய்ப்பே கிடைக்கவில்லை.

இன்றுதான் விழாவின் இறுதி நாள் என்பதால் இன்று எப்படியாவது சென்றிட வேண்டும் என்ற வேகத்துடன், மதிய உணவு இடைவேளையின் போது வேகம், வேகமாக சென்று, அதை விட அதி வேகமாக அரங்குகளுக்குள் நுழைந்து புத்தகங்களை வாங்கி வந்தேன்.

செலவழித்த நேரம் குறைவென்றாலும் புத்தகங்கள் வாங்கியதில் குறையெதுவும் இல்லை. மனம் நிறைவடையக்கூடிய விதத்தில்தான் இருந்தது. ஞாயிறு கடலூர் சென்று திரும்பிய நேரத்தில் 256 பக்கங்கள் கொண்ட கள அனுபவ கட்டுரை நூலை படித்து முடிக்க முடிந்ததால் உருவான தைரியமே இந்த அளவு புத்தகங்களை வாங்க தூண்டியது.

இன்று வாங்கிய நூல்களின் பட்டியல் கீழே


எண்

நூல்

ஆசிரியர்

பக்கம்

1

தண்ணீர்

அசோகமித்திரன்

112

2

எரியும் மண் -மணிப்பூர்

கிர்த்திகா தரன்

83

3

நாடோடியாகிய நான்

சமுத்திரக்கனி

136

4

நரவேட்டை

சக்தி சூர்யா

280

5

நகலிசைக் கலைஞன்

ஜான் சுந்தர்

143

6

எதனையும் மறக்க இயலாது

நேஹால் அகமது - தமிழில் சுனந்தா சுரேஷ்

160

7

போராட்டம் தொடர்கிறது

பிரபீர் பூர்காயஸ்தா தமிழில் .சுப்பாராவ்

253

8

செயலற்ற அரசு

எம்.ராஜ்ஷேகர் - தமிழில் .சுப்பாராவ்

352

9

பேசும் பொம்மைகள்

சுஜாதா

230

10

திருடர்களின் கைகள் மென்மையானவை

கரங்கார்க்கி

103

11

மலரும் சருகும்

டி.செல்வராஜ்

198

12

சபக்தனி

சம்சுதீன் ஹீரா

272

13

தமிழ்ச் சினிமாவில் கம்யூனிசம்

பாலு மணிவண்ணன்

88

 

 

 

2410

 

பார்ப்போம், எவ்வளவு விரைவாக இவற்றையெல்லாம் வாசித்து முடிக்க முடிகிறதென்று.                                                          

கவர்னர் - ஸ்பீக்கர் சண்டை, இங்கல்ல, எங்கே?

 


இரண்டு மூன்று நாட்கள் முன்பாக நாளிதழில் படித்த செய்தி.



புதிய சட்டப்பேரவை கட்டுவதற்கான கோப்பினை மத்தியரசுக்கு அனுப்பாமல் துணை நிலை ஆளுனரே கிடப்பில் போட்டு வைத்துள்ளார். புதுச்சேரி அரசின் செயல்பாடுகளை அவர் முடக்கி வைத்துள்ளார் என்று புதுவையின் சபாநாயகர் செல்வம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் குற்றம் சுமத்துகிறார். இவர் பாஜக கட்சிக்காரர்.

சட்டப்பேரவைக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக இவர் கொடுத்த மதிப்பீடு மிக மிக அதிகம். முப்பது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட சட்டப் பேரவைக்கு புது டெல்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டிடம் கட்டுவதற்கான தொகையை விட அதிகம் செலவாகும் என்று சொல்கிறார்கள். இந்த ஊழலுக்கு எப்படி ஒப்புதல் தர முடியும் என்று திருப்பிக் கேட்கிறார் தமிழிசை அம்மையார்.

ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்லுங்கள் என்று பாஜக மேலிடம் இருவரிடமும் சொல்லியுள்ளது என்றும் அந்த செய்தி சொல்கிறது.

சரி, தமிழிசைக்கு பாஜக மேலிடம் அறிவுரை வழங்க வேண்டும்? அவர் இப்போது அரசியல் சாசனப்பதவியான ஆளுனர் பதவியில் உள்ளாரா அல்லது பாஜக உறுப்பினராக தொடர்கிறாரா?

இரண்டில் ஏதாவது ஒன்றில்தானே இருக்க முடியும்!

Monday, February 26, 2024

இறைச்சின்னா எல்லாமும்தான் சுமந்து

 


மாட்டிறைச்சி வைத்திருந்தார் என்று குற்றம் சொல்லி கொலை செய்வது சங்கி ஸ்டைல். மாட்டிறைச்சி வைத்திருப்பார் என்று கருதி ஒரு முதிய பெண்மணியை பேருந்திலிருந்து இறக்கி விட்ட ஓட்டுனரையும் நடத்துனரையும் இடை நீக்கம் செய்தது. தமிழ்நாட்டு அரசு.

பேருந்தில் இறைச்சி எடுத்துச் செல்ல தடையில்லை என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் அறிவித்ததும் நம்ம சுமந்திற்கு சந்தேகம் கொப்புளித்துக் கொண்டு வந்து வந்து விட்டது.

இறைச்சின்னா அதில் மாட்டுக்கறி எடுத்துக்கிட்டு போகலாமா, பன்றிக் கறி எடுத்துச் செல்லலாமா? மீனுக்கும் இடமுண்டா என்று கேள்விகளை அடுக்குகிறார்.



ஐயா சுமந்து இறைச்சி கோழி, ஆடு, மாடு கோழி, பன்றி, மீன் மட்டுமல்ல, முயல், காடை,கௌதாரி எல்லாமும்தான் உண்டு. இது கூட தெரியாம நீ எப்படி வினாடி வினா நிகழ்ச்சியெல்லாம் நடத்தின? பேருந்தில் அதெல்லாம் எடுத்துக்கிட்டு போனா   உமக்கு ஏன் நோகுது?

 

அடுத்த ஸ்டண்ட் இதானே மோடி?

 


தண்ணீருக்கடியில் ஸ்டண்ட் வேலை செய்தார் மோடி. அந்த படத்தை நான் போடப்போவதில்லை. இதை சிலாகிக்கிற சங்கி முட்டாள்கள் ஒரு அவமானம். 

அந்த கேடு கெட்ட மனிதனின் அடுத்த வெட்கம் கெட்ட நாடகம் பாராசூட்டில் தொங்குவதாகத்தான் இருக்கும் . .

Sunday, February 25, 2024

அப்படியென்ன அவசியம் டமில்மூசீக் மேடம்?

 


"வெற்றிகரமான தோல்வி" என்ற வாசகத்தை தமிழுக்கு அளித்த தமிழிசை அம்மையார் அளித்துள்ள இன்னொரு கொடை "அவசியமான கால தாமதம்"

அடுத்த செங்கல்லைக் கூட எடுத்து வைக்காத அளவிற்கு அப்படியென்ன அவசியமான கால தாமதம் ஏற்பட்டது என்பதை சொல்லுங்களேன் மேடம்.

அப்புறம், ரொம்ப முக்கியமான விஷயம் ஒன்றுண்டு.

மோடிக்கு முட்டு கொடுக்க நீங்க தமிழ்நாட்டின் ஆளுனரும் கிடையாது, தமிழ்நாட்டு பாஜக மாநிலத் தலைவரும் கிடையாது. உங்களுக்குப் பிறகு எல்.முருகன் வந்து இப்போ ஆட்டுக்காரனும் வந்தாச்சு.

உங்க வேலையை ஒழுங்கா செய்ய மாட்டீங்கறீங்கன்னு பாஜக ஆளே பாண்டிச்சேரியில சொல்றாரு! அதாங்க சபாநாயகர் செல்வம்! அதை முதலில் கவனியுங்க . . .

பிகு: அந்த விஷயம் பற்றியும் இப்போ மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் தாமதத்திற்கு சங்கிகள் கொடுக்கும் முரட்டு முட்டு பற்றியும் பதிவுகள் தொடரும் . ..

Saturday, February 24, 2024

தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் . . .

 

நடிகர் திலகம் நடித்த, பாரதிராஜாவின் இயக்கத்தில் வெளியான "பசும்பொன்" திரைப்படத்தில் வரும் "தாமரைப்பூவுக்கும் தண்ணிக்கும் எண்ணைக்கும் சண்டையே வந்ததில்லை" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . . 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

சாக்கடைக்கும் சர்டிபிகேட்டாம் வானதியம்மா . .

 


தன லாபம் அலுவலகத்திற்கு ஐ.எஸ்.ஓ சான்றிதழ் கிடைத்துள்ளதாக பாஜக வானதி சீனு பீற்றிக் கொண்டாரல்லவா, அந்த சர்டிபிகேட் கொடுத்த நிறுவனத்தின் யோக்கியதை குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ் அவர்கள் எழுதியுள்ள பதிவை படியுங்கள். 

சங்கிகள் எது செய்தாலும் அது திருட்டுத்தனம் மட்டுமே . . .

ISO 9001:2015 - த(ர்)ர சர்டிபிகேட்டா? வாங்குற சர்டிபிகேட்டா?

சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு பாஜகவின் BJP Tamilnadu எம்எல்ஏ திரு. வானதி ஸ்ரீனிவாசன் Vanathi Srinivasan அவர்கள் தனது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திற்கு ஐஎஸ்ஓ சான்றிதழ் கிடைத்துவிட்டதாகவும் தமிழகத்திலேயே அதுதான் முதல் என்றும் கொண்டாடி மகிழ்ந்திருக்கிறார்.
நிற்க...
அந்த சர்டிபிகேட் எவ்வளவு தரமானது என்பதை இப்போது பார்க்கலாம்...

மதுரை நகரத்தின் ஊடாக பாயும் வைகையின் கிளை நதியான கிருதுமால் நதி சாக்கடை நதியாகவே இப்போதும் இருக்கிறது. இதை சுத்தப்படுத்த வேண்டுமென்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மதுரை மாவட்டக்குழு தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளது. இயக்கங்களையும் நடத்தியுள்ளது. ஆனால், இப்போதும் சாக்கடை கழிவுகள் கலக்கும் இடமாகவே இருந்து வருகிறது.

அந்த நதிக்கு ISO 9001:2015 தரச் சான்று வேண்டுமெனக் கோரி மதுரையைச் சார்ந்த ஆர்.எம்.பாபு RM Babu Mallanginar என்பவர் விண்ணப்பிக்க, 5000 கொடு, 3000 கொடு என்று கேட்டு, இறுதியாக 1000 ரூபாய் வாங்கிக் கொண்டு கிருதுமால் சாக்கடை நதி என்கிற பெயரில் சர்டிபிகேட் வழங்கியிருக்கிறது அந்த நிறுவனம். பாராட்டப்பட வேண்டிய விசயம் என்னவென்றால் அவர்கள் கறாராக 180 ரூபாய் ஜிஎஸ்டி வசூலித்துவிட்டார்கள். அவ்வளவு தேசபக்தி.

அந்த நிறுவனம் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் அலுவலகத்திற்கு தரச் சான்று வழங்கிய அதே Quality Research Organization நிறுவனம்தான். இதில் வேடிக்கை என்னவென்றால் அந்தச் சாக்கடையை குடிநீர் என்று தரச் சான்று வழங்கியிருப்பதுதான். சாக்கடைக்கு குடிநீர் என்று தரச் சான்று கொடுத்தவர்கள்தான் திரு. வானதி ஸ்ரீனிவாசன் அவர்களின் சட்டமன்ற அலுவலகத்திற்கு சிறந்த சட்டமன்ற அலுவலகம் என்று சான்று வழங்கியிருக்கிறார்கள்.


இப்போது திரு. வானதி ஸ்ரீனிவாசனும் பாஜகவும் அந்த சர்டிபிகேட்டை அலுலவகத்தில் மாட்டி வைப்பார்களா? கிருதுமால் நதியில் வீசிவிடுவார்களா என்பதுதான் சாதாரணமான கேள்வி.

மோதீ- தீதீ – இருவரையும் புறக்கணிப்பீர்

 


சந்தேஷ்காளி என்று மேற்கு வங்கத்தில் ஒரு ஊர். அது கொந்தளிப்பாக இருக்கிறது. அந்த தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர் பல்வேறு பாலியல் முறைகேடுகளில் ஈடுபட்ட காரணத்தால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அனைத்து கட்சிகளும் போராடுகின்றன.

மம்தாவின் ஆட்சியில் பெண்கள் படும் பாடு கொஞ்சநஞ்சமல்ல, அவர்கள் கட்சிக்காரர்கள் எல்லோருமே குண்டர்கள், ரௌடிகள். அக்கட்சியினரையும் வன்முறையையும் பிரித்துப் பார்க்க முடியாது. பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகும் பெண்களை எல்லாம் அக்கொடுமையே மேல் என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அவதூறுகளை அள்ளி வீசுவது மம்தாவின் வாடிக்கை. அதனால் அவர் ஆட்சியில் இருக்கும் வரை தவறிழைத்த சட்டப் பேரவை உறுப்பினர் பாதுகாப்பாக தனது பாலியல் லீலைகளை தொடர்ந்து கொண்டே இருப்பார்.

இப்பிரச்சினையில் போராடும் பாஜக எப்படிப்பட்டது?

மம்தாவின் மேற்கு வங்கத்திற்கும் பாஜக ஆளும் உபி, மபி, ராஜஸ்தான் மாநிலங்களுக்கும் பெரிய வித்தியாசம் கிடையாது. பாலியல் குற்றவாளிகளை மேற்கு வங்கத்தில் மம்தா எப்படி பாதுகாக்கிறாரோ, அதே வேலையை உபியில் மொட்டைச்சாமியார் செய்கிறார். உபியின் உனாவ் தொகுதிக்கு பாலியல் குற்றங்களின் தலைநகர் என்றே பெயர்.

அதனால் மேற்கு வங்கப் பெண்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அவர்கள் மோதியின் பாஜக, தீதியின் திரிணாமுல் காங்கிரஸ் என இரண்டு கட்சிகளையுமே புறக்கணிக்க வேண்டும். அவர்களின் பாதுகாப்பு அரணாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்து மீண்டும் ஆட்சியில் அமர்த்த வேண்டும்.

சமீபத்தில் வாலிபர் சங்கம் கொல்கத்தா பிரிகேட் மைதானத்தில் நடத்திய பேரணியின் பிரம்மாண்டம், பேசு பொருளாக மாறி இருக்கிறது. மக்கள் சிவப்பை மீண்டும் நம்பத் தொடங்கியுள்ளனர் என்பதன் அடையாளமாகும்.

இதிலிருந்து மக்களின் கவனத்தை திசை திருப்ப இரண்டு சந்தர்ப்பவாதக் கட்சிகளும் திட்டமிட்டு சந்தேஷ்காளி பிரச்சினையை கையிலெடுத்து   உள்ளனரோ என்று சந்தேகம் கூட வருகிறது.

சுவை தரும் கனியாய் மார்க்சிஸ்ட் கட்சி இருக்க, கசப்பான காய்கள் எதற்கு?