Tuesday, January 31, 2023

ஆரம்பிச்சுட்டாராய்யா, சீமான் ஆரம்பிச்சிட்டாரு

 


இறந்து போனவர்களை வைத்து கதையளக்கும் வேலையை கொஞ்ச காலம் செய்யாமல் இருந்த சீமான், தன்னுடைய கற்பனைத்திறனை வெளிப்படுத்தும் வேலையை மீண்டும் ஆரம்பித்து விட்டார்.

இதோ அந்த கற்பனை.


ஆனாலும் சொல்வேன், புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு சீமான் நூறு மடங்கு மேல். சீமான் இறந்தவர்களை வைத்து சொல்லும் பொய் நமக்கு நகைச்சுவை. ஆனால் ஜெயமோகனோ இறந்தவர்களை எவ்வளவு கீழ்த்தரமாக எழுத முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக எழுதுவார். ஆமாம், அவர் பேனாவில் மைக்கு பதிலாக சாக்கடையை ஊற்றி எழுதுபவர். 


ரஜினி – கலாய்க்கலாம், விமர்சிக்கலாம்

 


தன்னுடைய பெயரையோ, புகைப்படத்தையோ, குரலையோ யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ரஜினிகாந்த் தடை விதித்துள்ளதாக முதலில் ஒரு செய்தி வந்தது. வணிக நோக்கத்திற்குத்தான் பயன்படுத்தக்கூடாது என்று இன்னொரு செய்தி விளக்கமாக சொன்னது.

 

இரண்டாவது செய்திதான் சரியானது என்றால் . . .

 

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் பரபரப்பை உருவாக்குபவர் ரஜினிகாந்த் என்று தாராளமாக சொல்லலாம்

 

அரசியலுக்கு வருவேன் என்று சொல்லி பல வருடங்களாக தன் ரசிகர்களை ஏமாற்றி வந்தவர் ரஜினிகாந்த் என்று நீங்கள் நன்றாகவே விமர்சிக்கலாம்.

 

ஆணாதிக்க கருத்துக்களை தன் திரைப்படங்களில் வெளிப்படுத்துபவர் என்று கடுமையாகவே திட்டலாம்.

 

கொலுகைன்னாலே தலை சுற்றக்கூடியவர் ரஜினிகாந்த் என்று நையாண்டி செய்யலாம்.

 

தன் குடும்பத்தினர் நடத்தும் பள்ளிகளுக்கு வாடகை கட்டாததையோ அங்கே பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்காததையோ கண்டு கொள்ளாத கஞ்சப்பிசினாறி என்றும்      அழைக்கலாம்.

 

பட்டியலிட்டால்  பக்கங்கள் போதாது.. இப்போதைக்கு இத்துடன் நிறுத்திக்  கொள்கிறேன்.

 

ரஜினி மீண்டும் மாட்டாமலா போகப் போகிறார்! அப்போது பார்த்துக் கொள்வோம், மிச்சத்தை . . . அதற்குள்ளாக மேலே உள்ள படத்தில் இருப்பது போல செய்யாமல் இருக்க வேண்டும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                    

 

Monday, January 30, 2023

சூடாய் காந்தியின் குருதி

 


கோட்சேவின் தோட்டாக்கள் துளைத்து
வெளியேற்றிய காந்தியின் குருதி

இன்னும் சூடாய் . . .

கோட்சேக்கள் இன்றும் பாய்ச்சுகிற
மதவெறி தோட்டாக்களில் 
பலியானவர்களின் குருதியும் கலந்ததால்....

நாற்காலிக்கான உத்திதான்
கோட்சேக்களின் தோட்டாக்கள் என்பதால்
குருதியாறு ஓடிக்கொண்டுதான் இருக்கும்.

அண்ணலை நினைவு கொண்டு
துப்பாக்கியை பறித்தால்தான்

குருதியாறு பாலையாகும் . . .

Sunday, January 29, 2023

மோடி மந்திரியே, அவங்க தோற்றுப்போனவங்க . . .

 



மோடியின் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஒரு பேட்டியில் "அனுமனும் கிருஷ்ணனும் தான் உலகிலேயே வெற்றிகரமான தூதர்கள்" என்று சொல்லியுள்ளார். 

வெற்றிகரமான தூதர் என்றால் என்ன அர்த்தம்?

தூது போனதன் நோக்கம் நிறைவேறி இருக்க வேண்டும்.

பாண்டவர்களுக்கு பாதி நாடு கேட்டுப் போன கிருஷ்ணனின் தூது வெற்றிபெறவில்லை.

சீதையை திருப்பி அனுப்பச் சொல்லி ராவணன் இடம் சென்ற அனுமனின் முயற்சியும் வெற்றி பெறவில்லை.

நவீன கால தூதர்களின் இலக்கு போர்களை தவிர்ப்பது. இவர்கள் இருவரும் சென்ற தூதுகள் போரையும் தவிர்க்கவில்லை.

ஆகவே இவர்களை வெற்றிகரமான தூதுவர்கள் என்று சொல்வது அபத்தம். 

ராமாயணம், மகாபாரதத்தைக் கூட ஒழுங்காக படிக்காத அரைகுறையாகவே மோடியின் மந்திரி இருக்கிறார்.

மோடியின் மந்திரிகள் மட்டுமென்ன புத்திசாலிகளாகவா இருக்க முடியும்! ஐ.எஃப்.எஸ் படித்தவராக இருந்தாலும் மோடியின் மந்திரிகளும் மோடியைப் போலவே அரைகுறை மூடர்கள்தான் . . .


வில்லங்க சாமியாருக்குதான் விருதா?

 


யாரோ ஒரு சாமியாருக்கு பத்ம பூஷன் விருது கொடுத்து இந்து மதத்தையே பெருமைப்படுத்தி விட்டார் என்று மத்யமர் குழுவில் சங்கிகள் பீற்றிக் கொண்டு இருந்தார்கள்.

யார் அந்த சாமியார் என்று பார்த்தால் நம்ம ஆன்டி இந்தியன் சாமியார். மோடியையும் ஆன்டி இந்தியனாக்கியவர். மோடிக்கு மயிலிறகு சால்வை போட்டவர். ஏற்கனவே அவர் பற்றி எழுதியது நினைவுக்கு வந்தது. மீண்டும் பகிர்கிறேன்.

இந்த சாமியாருக்கெல்லாம் விருதா என்ற கேள்வி இப்பதிவை படித்த பின்பு உங்களுக்கு தோன்றலாம்.

மோடி ஆட்சியில் இவர் போன்றவர்களுக்குத்தான் கொடுப்பார்கள்.

காக்கா பிரியாணி துன்னா உண்ணிகிருஷ்ணன் வாய்ஸா வரும்!

Wednesday, February 9, 2022

வில்லங்க சாமியாரும் வில்லங்க சிலையும் . . .

 



மோடி பட்டை நாமம் போட்டுக் கொண்டு மயில் இறக்கைகளால் ஆன சால்வை (ஆமாம். அந்த மயிலிறகு சால்வை தயாரிக்க எத்தனை மயில்கள் தேவைப்பட்டிருக்கும்?) அணிந்து ராமானுஜர் சிலையை திறந்து வைத்தது நினைவில் உள்ளதல்லவா?


அந்த சிலையை அமைத்தவர் திருதண்டி சின்ன ஜீயர் எனும் சாமியார். மோடியை வரவைத்த சாமியார் என்றாலே வில்லங்க சாமியார் என்றுதானே அர்த்தம்! இதற்கு ஒரு பதிவு வேறு அவசியமா என்ற உங்கள் மைண்ட் வாய்ஸ் கேட்டாலும் நான் அறிந்த தகவல்களை உங்களோடும் பகிர்ந்து கொள்கிறேன்.

சாமியார் தொழிலுக்கு வருவதற்கு முன்பு அமெரிக்காவில் 13 பொறியியல் கல்லூரிகளை நடத்திக் கொண்டிருந்தவர். இப்போதும் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்.

தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் இவரது பக்த கோடி. வாஸ்து பார்த்து கே.சி.ஆர் கட்டிய புது முதல்வர் மாளிகையில் இந்த சாமியாரைத் தான் முதல்வர் நாற்காலியில் அமர வைத்து ஆசி வாங்கிய பின்பே அவர் அமர்ந்தார்.

திருப்பதி கோயில் வழிபாடுகள் குறித்து இவருக்கும் தேவஸ்தானத்திற்கும் நீண்ட காலமாக வரப்புத் தகறாரு உண்டு. தேவஸ்தானத்துக்காக பஞ்சாயத்துக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதியை “தண்டத்தை தூக்கிப் போட்டு விட்டு தலைமறைவான நீயெல்லாம் பேசக் கூடாது” என்றது தனிக் கதை.

ஜாதி வெறி பிடித்த சாமியார் என்பதற்கு அவர் சமீபத்தில் உதிர்த்த தத்துவ முத்துக்களே உதாரணம். அந்த அரிய கருத்து கீழே . . .

“பன்றிக் கறி தின்பவர்கள் மூளையும் பன்றியைப் போலவே இருக்கும்”

“ஆட்டுக் கறி தின்பவர்களுக்கு ஆட்டைப் போலவே மந்த மூளைதான்”

முட்டை சாப்பிடுபவர்கள் கோழியைப் போலவே குப்பையிலே அலைந்து கொண்டு குப்பையில் கிடைப்பதைத்தான் உண்பார்கள்”

இப்படி ஒரு மட்டமான சிந்தனை கொண்டவர் சிலை அமைப்பதென்பது சமூக சீர்திருத்தவாதியான ராமானுஜருக்குத்தான் அசிங்கம். மேலும் அந்த சிலை உருவாக்கப்பட்டது சீனாவில். ஒரு புறம் சீனாவை திட்டிக் கொண்டே சீனத் தயாரிப்பை திறந்து வைத்துள்ளார் மோடி. ஆக அவரும் சிலையை வைத்த சின்ன ஜீயரும்தானே  ஆண்டி-இந்தியர்கள்?

Saturday, January 28, 2023

ஜோஷிமத்துக்கு போகாதீங்க . . .

 


ஜோஷிமத்தில் என்ன நடக்கிறது?

 


ஜோஷிமத் உத்தர்கண்டில் இருக்கிற ஒரு சின்ன நகரம்.  ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாக சொல்லப்படுகிற நான்கு சங்கர மடங்களான சிருங்கேரி, துவாரகா, பூரி, ஜோஷிமத் ஆகிய நான்கு மடங்களில் ஒன்று அங்கே இருக்கிறது.

 காஞ்சி சங்கர மடம் ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதல்ல, சிருங்கேரி மடத்தின் கிளையாக கும்பகோணத்தில் அமைக்கப்பட்டு அது பின் காஞ்சிக்கு மாறி இறையாண்மை கொண்ட தனி மடமாக அறிவித்துக் கொள்ளப்பட்டது என்று மற்ற மடங்கள் சொல்லும் பஞ்சாயத்து இந்த பதிவுக்கு அவசியமில்லை.

 ஜோஷிமத் இந்தாண்டின் துவக்கத்தில்  ஊடகங்களில் அடிபட்டு இப்போது காணாமல் போயுள்ளது. ஜோஷிமத்தில் செய்யும் ஆய்வுகள் தொடர்பாக எந்த ஒரு அமைப்பபும் எந்த ஊடகத்திடமும் வாய் திறக்கவே கூடாது என்று ஒன்றிய சுற்றுச் சூழல் அமைச்சகம் பிறப்பித்த சுற்றறிக்கையே  ஊடகங்களின் மௌனத்திற்கு காரணம்.

 சரி அப்படி என்னதான் அங்கே பிரச்சினை?

 நான்கு செண்டிமீட்டர் அளவில் ஊர் புதைந்து போயுள்ளது. உள்ளூர் சாலைகள் முதற்கொண்டு தேசிய நெடுஞ்சாலைகள் வரை விரிசல் கண்டுள்ளது. சில இடங்களில் சாலையே காணாமல் போய் விட்டது.  861 கட்டிடங்களில் பெரிய விரிசல் ஏற்பட்டுள்ளது. 181 வீடுகள் மக்கள் வசிக்க லாயக்கற்றது என அறிவிக்கப்பட்டு அந்த வீடுகளில் உள்ளவர்கள் அகற்றப் பட்டுள்ளனர்,

 278  குடும்பங்கள் நிவாரண முகாமிற்கு அனுப்பப் பட்டுள்ளனர். உயிர்ச்சேதத்தைத் தவிர்க்க  இரண்டு பெரிய விடுதிகளும் மூன்று தனியார் கட்டிடங்களும் இடிக்கப்பட்டு விட்டன.  எங்கிருந்து வருகின்றது என்று தெரியாமலேயே ஒரு நொடிக்கு 540 லிட்டர் என்று வெளியேறிய தண்ணீர் இப்போது ஒரு நிமிடத்திற்கு 182 லிட்டர் என்ற அளவில் தண்ணீர் வருகிறது. ஜோஷிமத் சங்கர மடத்தில் கூட விரிசல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டு வருகின்றன.

 அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது?

 பல ஆய்வகங்கள் சோதனை சேய்து வருகின்றன. அந்த முடிவுகளைத்தான் வெளியே, ஊடகங்களுக்கு சொல்லக்கூடாது என்று வாய்ப்பூட்டு போட்டுள்ளது மோடி அரசு.

 தடைக்கு என்ன காரணம் என்பதை பின்னர் பார்ப்போம். ஆனால் இங்கே நிலைமை மோசமானதற்கு காரணம் அறிய பெரிய ஆய்வுகள் அவசியமில்லை.  இமயமலைப் பகுதியில் கட்டிடங்கள் கட்ட பல விதிகள் உண்டு. ஆனால் அவை எதுவும் கண்டு கொள்ளப்படாமல் புற்றீசல் போல முளைத்த கட்டிடங்கள், ஆசிரமங்கள், என்.டி.பி.சி அமைக்கும் ஒரு அனல் மின் நிலையம், நெடுஞ்சாலைப் பாலங்கள் போன்ற கட்டுமானப்பணிகள்  ஜோஷிமத்தை பில்டிங்கும் வீக்கு, பேஸ்மெண்டும் வீக்கு என்ற நிலைக்கு தள்ளி விட்டது. விரிசல் விழுந்த கட்டிடங்கள் உயிருக்கு அபாயம் என்ற நிலையில்தான் உள்ளது.

 அரசு ஏன் செய்திகளை மறைக்கப்பார்க்கிறது?

 உத்தர்கண்டின் முக்கியத் திருவிழா சார்தம் யாத்திரை. புண்ணியத் தளங்களாக கருதப்படுகிற  யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு இடங்களுக்கு செல்வதே சார்தம் யாத்திரை. இந்த யாத்திரையின் நுழைவாயில் ஜோஷிமத். ஜோஷிமத்தான் பக்தர்களுக்கான தங்கும் வசதிகள் உள்ள ஊர். இந்த யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மூலமாக ஒவ்வொரு ஆண்டும் 7500 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடக்குமாம். ஜோஷிமத் பற்றிய உண்மைகள் தெரிந்து பக்தர்கள் வராமல் போனால் இத்தனை பணமும் வராமல் போய் விடுமே என்பது மட்டுமே அரசின் கவலை.

 20,000 மக்கட்தொகை  தொகை உள்ள போதே இந்த நிலை என்றால், விரிசல் விழுந்த கட்டிடங்களில் அவர்கள் தங்கினால் என்ன ஆகும்?

 இந்து மதக் காவலர்கள் என்று சொல்லிக் கொண்டே இந்துக்களின் உயிர்களோடு விளையாடுகிறது.

 எனவேதான் சொல்கீறேன்.

 ஜோஷிமத்துக்கு போகாதீங்க.

அல்வா ருசிதான். பட்ஜெட்????

 



பட்ஜெட்டிற்கு முந்தைய சடங்கான அல்வா கிண்டும் சடங்கு முடிந்து அல்வா மிகவும் ருசியாக வந்தள்ளது என்பதை நிர்மலா அம்மையாரின் முக பாவத்திலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 ஆனால் பட்ஜெட் எப்படி இருக்கப் போகிறது?

 இதற்கு முந்தைய பட்ஜெட்டுகளில் எல்லாம் மக்களுக்கு நல்லவற்றை வாரி வாரி கொடுத்துள்ளாரா என்ன?

 மக்கள் மீது தாக்குதல், முதலாளிகளுக்கு கனிவுடன் சலுகைகள்.

 இந்த முறை மட்டும் என்ன வித்தியாசமாகவா பட்ஜெட் இருக்கப் போகிறது!

 நிர்மலா அம்மையார் மக்களுக்கு கொடுப்பது எதுவாக இருந்தாலும் அது அல்வா என்றாலும் கூட கசப்பாகத்தான் இருக்கும். . . .

Friday, January 27, 2023

பழைய கமல் டயலாக்குதான். திருந்துங்கடா சங்கிகளா


 

திரைக்கலைஞர் ஐஸ்வ்ர்யா ராஜேஷ், ஆண் பெண் பாகுபாடுகள் குறித்து தெரிவித்த கருத்துக்கு ஒரு சங்கி ஆபாசமாக ஒரு கமெண்ட் போட்டுள்ளான்.

 


அட அறிவு கெட்ட முட்டாள் சங்கி, நீ சொன்னது ஒன்னும் புதுசு இல்லை, முப்பத்தி ஆறு வருஷம் முன்னாடியே விக்ரம் படத்தில் கமலஹாசன் பேசின டயலாக்தான். படம் வரும் முன்னாடி குமுதத்தில் தொடராக வந்த போது இன்னும் அசிங்கமா சுஜாதா எழுதி வாங்கிக் கட்டினதால் சினிமாவுல மாத்தி வைச்சார். அதற்கும் அப்போது அடி விழுந்தது. படத்துலயே ஹீரோயின் காட்டான் என்று திட்டுவது போல டயலாக்கும் வந்தது.

 அன்னிக்கு அந்த காட்டான் சொன்னதைத்தான் நீ வாந்தி எடுத்திருக்க.

 குமரி மாவட்டத்தில் மேலாடை அணியக்கூடாது என்ற கேவலமான விதிக்கு எதிராகத்தான் தோள்சீலை போராட்டமெல்லாம் நடந்தது என்பதெல்லாம் சினிமா டயலாக் கூட தெரியாத உனக்கு எங்கே தெரியப் போகுது!

 அப்டேட் ஆகுங்கடா சங்கிகளா, உன் கமெண்டை உன் அம்மா, சகோதரிகள், மனைவி, மகள் ஆகியோரிடம் காண்பிக்கவும். அவர்கள் உன்னை அப்டேட் ஆக்கி திருத்துவார்கள்.

 பிகு: ஒருவேளை அவர்களும் சங்கி நோயர்களாக மாறியிருந்தால் நிலைமை மோசம்தான். மத்யமர் ஆட்டுக்காரன் குழு அப்படிப்பட்ட சங்கிப்பெண்கள் பலரின் பதிவுகளை படிக்கும் வாய்ப்பை கொடுத்துள்ளது.

திரையுலகின் செந்தோழருக்கு அஞ்சலி

 


சிவப்புச்சிந்தனையோடு திரையுலகில் செயல்பட்டு வந்த சண்டைப் பயிற்சியாளர் தோழர் ஜூடோ ரத்தினம் அவர்களுக்கு என் செவ்வணக்கம். 

அவரைப் பற்றி முன்பு எழுதிய பதிவினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


டிசம்பர், 2017

திரையில் கொடூரம். நேரில் . . .



திரைப்பட டைட்டிலில் பெயர் போடுகிற போது ஒரு சண்டைப் பயிற்சியாளருக்கு திரை அரங்கில்  முதன் முதலில்  கரவொலி எழுந்துள்ளது என்றால் அது அவருக்குத்தான்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சில பொதுக்கூட்டங்கள் குடியாத்ததில் நடைபெற்றுள்ளபோது முதல் வரிசையில் அவர் அமர்ந்திருப்பதை பார்த்துள்ளேன். ஆனால் அறிமுகம் கிடையாது.

தலைநகரம் திரைப்படத்தில் அவர் கொடூரமான வில்லன்.

இப்போது யார் என்று யூகித்திருப்பீர்கள்.

ஆம். திரு ஜூடோ ரத்னம்.

இல்லையில்லை தோழர் ஜூடோ ரத்னம்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நீண்ட கால உறுப்பினரான தோழர் ஜூடோ ரத்னம் அவர்கள்தான் குடியாத்ததில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 22 வது மாவட்ட மாநாட்டில் செங்கொடியை அவர்தான் ஏற்றி வைத்தார்.

அப்போது அவரை அறிமுகம் செய்து வைத்தார்கள். கொஞ்ச நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு புகைப்படமும் எடுத்துக் கொண்டேன். மிகவும் இனிமையான மனிதராக இருந்தார். 



கை குலுக்குகையில் மனதுக்குள் கொஞ்சம் அச்சம் இருந்தது. நீண்ட கால ஸ்டண்ட் மாஸ்டராயிற்றே, முரட்டுக் கரமாக இருக்கும் என்ற அச்சம்தான். மாறாக மிருதுவான கரமாக இருந்தது கொஞ்சம் ஆச்சர்யம்தான்.


Thursday, January 26, 2023

தேன் குரல் –விருது –பத்து பாடல்கள்

 


தேன் குரல் கொண்ட திருமதி வாணி ஜெயராம் அவர்களுக்கு பத்ம விபூஷன் விருது அறிவித்துள்ளது மகிழ்சியளித்தது.

அவரின் மிகச் சிறந்த தமிழ்ப் பாடல்களை இன்று கேட்டுக் கொண்டிருந்தேன். அந்த பாடல்களின் காணொளிகளை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

ஐந்து தனிப் பாடல்களும் ஆண் பாடகர்களோடு இணைந்து பாடிய ஐந்து பாடல்களும் பகிர்ந்துள்ளேன். அவர் தேசிய விருது வாங்கிய “ஏழு ஸ்வரங்களுக்குள்” பாடலை இன்று நிறைய பேர் கேட்டிருப்பார்கள் என்பதால் அதை மட்டும் கவனமாக தவிர்த்துள்ளேன்.

நான் பெற்ற இசையின்பத்தை நீங்களும் பெறுவீர்கள் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

 மல்லிகை என் மன்னன் மயங்கும்

 


 கண்டேன் எங்கும் பூமகள்

 

 

 

டி.எம்.எஸ் அவர்களோடு “இலங்கையின் இளங்குயில்”

 


யேசுதாஸ் அவர்களோடு “தங்கத்தில் முகமெடுத்து

 


ஜெயச்சந்திரன் அவர்களோடு “கண்ணன் முகம் காண”

 


எஸ்.பி.பி அவர்களுடன் “ஒரே நாள், உனை நான்

 

மலேசியா வாசுதேவன் அவர்களுடன் “ எங்கே நான் காண்பேன் என் காதலன்?"

 

வாணி ஜெயராம் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பிகு: பத்து பாடல்களுக்கும் காணொளியை தரவிறக்கியிருந்தாலும் இரு பாடல்களைத் தவிர மற்ற பாடல்களில் காற்று மட்டுமே வந்ததால் யூட்யூப் இணைப்பையே வழங்கி விட்டேன்

குடியரசு தினம் – புதிதாய் என்ன சொல்ல?

 கடந்த வருடம் எழுதிய பதிவையே மீண்டும் பகிர்கிறேன்.

உண்மையான குடியரசு தினத்தை நோக்கி

  


இந்திய மக்களாகிய நாங்கள்

 இந்தியாவை, இறையாண்மையுடைய, சோஷலிச, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசு நாடாக நிர்ணயிக்க உளமாற உறுதியேற்று

 அனைவருக்கும்


 சமூக, பொருளாதார, அரசியல் நீதியையும்
சிந்திக்கிற, கருத்து சொல்கிற, வழிபாட்டு, உரிமையையும்
அனைவருக்கும் சம வாய்ப்பினையும்
சகோதரத்துவத்தையும்
கண்ணியமாக வாழ்வதற்கான வாய்ப்பினையும்

அளித்து

 இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் கௌரவத்தையும்
 பாதுகாப்போம்

 என்று சொல்கிற அரசியல் சாசனத்தை இந்தியா அமலாக்கிய நாள்தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது

 என்பதை நினைவு படுத்த வேண்டிய நிலையில் இன்றைய ஆட்சியாளர்கள் நம்மை வைத்துள்ளார்கள்.

 அரசியல் சாசனம் சொல்லும் எந்த கோட்பாட்டையும்  விழுமியங்களையும் மதிக்காத, அவற்றுக்கு கொஞ்சமும் பொருத்தமும் இல்லாத, அவற்றை அழிக்கிற, சிதைக்கிற காட்டாட்சியை அகற்றி, உண்மையான குடியரசு தினத்தை கண்டிப்பாக கொண்டாடுவோம் என்று உறுதியேற்கிற நாளாக

 இந்த ஆண்டு குடியரசு தினத்தை கொண்டாடுவோம்.

ஓராண்டில் நிலைமை இன்னும் மோசமாகத்தான் மாறியுள்ளது. சுயேட்சையான அரசியல் சாசன அமைப்புக்களின் சுதந்திரம் பறி போயுள்ளது.

 ஒரே நாளில் பல மாநிலங்களில் தேர்தல் நடந்தாலும் குஜராத் தேதி மட்டும் மோடி சீன் போட்டு முடிந்த பின்னே அறிவிக்கப்பட்டது. இதுதான் த்ர்தல் ஆணையத்தின் லட்சணம். சி.பி.ஐ ஒன்றிய அரசின் ஏவல் நாயாகத்தான் செயல்படுகிறது. உச்ச நீதிமன்றத்தோடு கடும் சண்டை. தலைமை நீதிபதி மாறினால் காட்சிகள் மாறி விடும்.

 எனவே இந்த ஆட்சி தொடரும்வரை ஜனநாயகம் என்பது வெறும் காகிதச் சர்க்கரைதான். . .

Wednesday, January 25, 2023

துயரத்தில் லாபம் பார்க்கும் Sadistகள்

 


கூகிள் நிறுவனப் பங்குகளின் விலை அமோகமாக உயர்ந்துள்ளது. வெறித்தனமாக முதலீடு செய்யப்படுவதாக தகவல்கள் வருகின்றன.

அப்படி வெறித்தனமாக முதலீடு செய்யக்கூடிய விதத்தில் கூகிள் அப்படி என்ன புதிதாக சாதித்துள்ளது?

12000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது.

அந்த முடிவை முதலீட்டாளர்கள் வரவேற்கின்றனர்.

லாபத்தை அதிகரிக்க ஊழியர்களை குறை, முடியவில்லையென்றால் அவர்கள் ஊதியத்தை குறை என்பது ஒரு உலகமயக் கோட்பாடு.

அது இங்கே அமலாகியுள்ளதால் முதலீட்டாளர்களுக்கு குஷி. 

லாபம், லாபம், அதிக லாபம் - இதுவே தாரக மந்திரம்.

அடுத்தவர் துயரத்தில் பணி இழந்தவர்களின் சோகத்தில் குதூகலிக்கும் இவர்களை Sadist என்றழைப்பது பொருத்தமானதுதான். 


பிகு: காலையில் எழுதி வைத்திருந்த பதிவு இது. அதானி வகையறாக்கள் நிறுவனப் பங்குகளின் விலை வீழ்ச்சி அடையும் என்பது அப்போது தெரியாது. அதானி செய்த மோசடிகள் அம்பலமானதால் ஏற்பட்ட சரிவாக தோன்றுகிறது. அதற்காக அவர் கவலைப்பட மாட்டார். அதானிக்கு உதவிக்கரம் நீட்டத்தான் அவரது தரகர் மோடி இருக்கிறாரே!

செம சண்டைப்பா!

 


மோடியின் குரங்குக் குட்டி சட்ட அமைச்சர் கிரண் ரஜ்ஜுவிற்கும் உச்ச நீதிமன்றத்துக்குமான சண்டை களை கட்டியுள்ளது.

கொலோஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளில் மூவரை ஒன்றிய அரசு நிராகரித்துள்ளது.

ஒன்றிய அரசு சொன்ன காரணங்கள் என்ன?

ஒருவர் தன் பால் ஈர்ப்பாளர்.

அதை காரணமாக ஏற்க முடியாது.. 

தன் பால் ஈர்ப்பாளர் என்பதை பதவிக்கான அளவுகோலாக வைத்தால் பாஜகவிலேயே எத்தனை விக்கெட் விழும்?

சமூக வலைத்தளங்களில் ஒன்றிய அரசை விமர்சித்து மற்ற இருவர் பதிவு போடுகின்றனர்.

அவர்களின் கருத்துரிமையை நிராகரிப்பிற்கான காரணமாக சொல்வதை ஏற்க முடியாது.

அதானே பாஜகவுக்கு ஆதரவாக பதிவு போடும் மகளிர் அணிச்செயலாளர் விக்டோரியா கௌரி நீதிபதியாகும் போது விமர்சிப்பவர்கள் ஆகக் கூடாதா?

உளவுத்துறை அறிக்கைகளை உச்ச நீதிமன்றம் பொது வெளியில் வெளியிடுவது ஆபத்தான போக்கு, அறிக்கை அளிப்பவர்களுக்கு அச்சத்தை உருவாக்கும்.

ஆமாம். அறிக்கை பொது வெளிக்கு வருமென்றால் ஆட்சியாளர்கள் விருப்பப்படி கதை கட்டி எழுத முடியாதல்லவா?

பிகு 1: நீல நிறத்தில் இருப்பது அரசு சொன்னது.

சிவப்பு நிறத்தில் உள்ளது உச்ச நீதிமன்றம் சொன்னது. 

மற்றவை என்னுடைய கருத்து.

பிகு 2 : இவர்கள் சண்டை எங்கு போய் முடியும் என்று தெரியவில்லை. ஆனால் பாதிப்பு என்னமோ வழக்காடிகளுக்குத்தான்

Tuesday, January 24, 2023

பகவத் (ஆர்.எஸ்.எஸ்) வாங்கிய பல்பு

 



 

காட்டிக் கொடுத்ததும் மன்னிப்பு கேட்டதுமே சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் காரர்களின் பங்காக வரலாற்றில் பதிவாகியுள்ளதால் சுதந்திரப் போராட்ட நாயகர்களை தங்களவர்களாக காண்பித்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள் சங்கிகள். “நான் ஏன் நாத்திகன் ஆனேன்?” என்று நூலெழுதிய, ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசுப் படை என்று தனது இயக்கத்திற்கு பெயர் சூட்டிய பகத்சிங்கை கைப்பற்ற முன்பு  முயன்று தோற்றுப் போனார்கள்.

 இப்போது அடுத்த கட்டமாக சுபாஷ் சந்திர போஸை தங்களவராக காண்பித்துக் கொள்ளும் முயற்சி நடக்கிறது. தீவுகளுக்கு பெயர் வைக்கும் மோடி அரசியல் பற்றி தனியாக எழுத வேண்டும்.

 ஆர்.எஸ்.எஸ் ஸின் இலக்கும் நேதாஜியும் இலக்கும் ஒன்று என்று சொல்லி ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் சர்சங்சாலக் மோகன் பகவத் ஒரு பிட்டை போட்டு வைத்தார்.

 உங்க அமைப்புக்கும் எங்க அப்பாவுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. சும்மா கதையளக்காதே என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மகள்  அனிதா போஸ் பகவத்தின் மூக்கை உடைத்து விட்டார்.

 


 தாவணிக் கனவுகள் படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் ஒரு பூசாரியிடம் உனக்கு நேதாஜி சுபாஷ் சந்திர போஸை தெரியுமா என்று கேட்டு அதட்ட அவரோ போஸ் பக்கத்து தெருவில பெட்டிக் கடை வச்சிருக்காரு, மத்தவங்களைப் பத்தி தெரியாது என்பார். அந்த பூசாரியிடம் கேட்டிருந்தால் அவர் கூட உங்களுக்கும் நேதாஜிக்கும் சம்பந்தம் இல்லையென்று சொல்லியிருப்பாரே பகவத்! எதுக்கு இப்படி அசிங்கப்படனும்!

 

 

Monday, January 23, 2023

கலைஞர், விஷ மூர்த்தி, ரஜினி

 


மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை எழுதிய பாடலின் சில வரிகளை தமிழ்த்தாய் வாழ்த்துக்காக கலைஞர் வெட்டுவதா? முழுப்பாடலையும் நான் ஒலிக்க விடுகிறேன்  என்று விஷ மூர்த்தி துக்ளக் ஆண்டு விழாவில் பாட வைத்தார்.

 இதோ கலைஞர்  வெட்டிய அந்த வரிகள்.

 



“ஆரியம் போல உலக வழக்கொழிந்து  சிதையா உன்”  என்ற வரிகளை பாட வைத்து, சேம் சைட் கோல் போட்டு விட்டார் விஷ மூர்த்தி.

 “ஆரியம் அழிந்து சிதைந்து” என்ற வரிகள் வேண்டாமென்று கலைஞ்ர் பெருந்தன்மையோடு  நடந்து கொண்டால் அவரை மட்டம் தட்டுவதாகக் கருதி முட்டாளென காட்சியளிக்கிறார் விஷமூர்த்தி.

 துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியரே இவ்வளவு பெரிய முட்டாளென்றால் “துக்ளக் படிப்பவர்கள் எல்லாம் புத்திசாலிகள்” என்று சொன்ன ரஜினிகாந்த் மற்றும் துக்ளக் வாசகர்களின் புத்திசாலித்தனம் எப்படி இருக்கும் !


அந்த பயம் இருக்கட்டும் ரவி

 


தமிழ்நாடு என்ற வார்த்தை இருப்பதால் தமிழ்நாட்டின் இலச்சினையை தவிர்த்து தமிழக ஆளுனர் என்று பொங்கல் விருந்திற்கு அழைப்பிதழ் அனுப்பிய ஆட்டுத்தாடி இப்போது குடியரசு தின விழா அழைப்பிதழில் தமிழ்நாட்டின் இலச்சினையோடு தமிழ்நாட்டின் ஆளுனர் என்றே அச்சடித்துள்ளார்.



 

வாங்கிய அடி பத்து நாட்களில் பல்டி அடிக்க வைத்துள்ளது.

 

இது தமிழ்நாடு ரவி.

 

அந்த பயம் இருக்கட்டும்.

 

இப்படியே உசுப்பேத்துங்க சங்கிஸ்

 


ஒருவன் பொய்யன், இன்னொருவன் பிஞ்சிலேயே பழுத்த பொறுக்கி. எமர்ஜென்சி டோர் விஷயத்தில் இருவரும் அசிங்கப்பட்டிருக்கும் நேரத்தில் கூட இவர்கள் படத்தைப் போட்டு கொடுத்திருக்கிற பில்ட் அப்பை படிக்கும் போது சந்தோஷமாக இருந்தது.

 


சங்கிகள் அயோக்கியர்களாகவோ அடிமுட்டாள்களாகவோதான் இருப்பார்கள் என்ற என் மதிப்பீட்டை  தொடர்ந்து நிரூபித்துக் கொண்டிருப்பதால் ஏற்பட்ட சந்தோஷம் இது.

 

இப்படியே உசுப்பேத்திக்கிட்டே இருங்க சங்கிகளா! அப்போதான் இவங்க கீழே விழற போது அடி பலமா இருக்கும், உங்களுக்கும்தான்.

 

Sunday, January 22, 2023

ஆட்டுக்காரனை இப்படி தாக்கறாங்களே

 

ஆட்டுக்காரனும் அவன் கூட்டாளியும் வானத்தில் அடித்த கூத்து தொடர்பாக மீம் ஆக, கார்ட்டூன் ஆக எப்படி போட்டு தாக்கியுள்ளார்கள் பாருங்க . . .







இவையெல்லாம் போதாதென்று தயாநிதி மாறன் வேறு ஒரு காணொளி போட்டு வெறுப்பேற்றுகிறார்.


இத்தனைக்கும் பிறகு இந்த இருவரை சில முட்டாள்கள் எப்படி பார்க்கிறார்கள் தெரியுமா?

நாளை எழுதுகிறேன். . .