Tuesday, October 31, 2023

கோபம் வரவழைக்கும் காமெடி

 


மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு காமெடி செய்துள்ளார். சிரிப்பு வரவில்லை, எரிச்சல்தான் வந்தது.


தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை நேர்மையான முறையில் வழங்கப்படுகிறதாம். சுத்தமான பணமாம்.

யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுத்தார்கள் என்று அறிய தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் யாருக்கு எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்பதை தகவல் அறியும் சட்டத்தின் வரம்பில் கொண்டு வர வேண்டும் என்ற வழக்கில்

"மக்கள் எல்லாமும் தெரிந்து கொள்ள வேண்டியதெல்லாம் அவசியமில்லை"

என்று ஆணவமாக பேசிய பின்புதான் இந்த காமெடி வஜனத்தை பேசி உள்ளார்.

பாஜகவுக்கு எலும்புத்துண்டுகளை வீசும் முதலாளிகளைப் பற்றி சொல்ல மாட்டோம் என்று வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக ஏன் இந்த கோபமூட்டும் காமெடி மிஸ்டர் அட்டர்னி ஜெனரல்?

பிஎம் கேர்ஸ் நிதி பற்றியே சொல்ல மறுப்பவர்களா, தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறப்பார்கள்!

ஆனாலும் சில முட்டாள்கள் பாஜகவை நேர்மையான கட்சி என்று இன்னும் ந்ம்பிக் கொண்டிருக்கிறார்கள். 


Monday, October 30, 2023

IPS க்கு IAS சவால்

 


ஒடிஷா மாநில முன்னாள் தலைமைச் செயலாளர் திரு ஆர்.பாலகிருஷ்ணன், முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியும் ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகருமான தமிழ்நாட்டு ஆட்டுத்தாடி ரெவிக்கு விடுத்துள்ள அறைகூவல் கீழே . . 

ஆரியம் திராவிடம் இல்லையென்று நுனிநாக்கில் கூறிவிட்டு எவ்வளவு விழிப்போடு உங்கள் அடையாளத்தோடு இருப்பீர்கள் என்று எங்களுக்கு தெரியும்.

எத்தனை யுகங்களாக ஏமாற்றப் பார்க்கிறீர்கள் நீங்கள்!
ஏமாற மறுக்கிறோம் நாங்கள்!

அசோகர் என்றொரு பேரரசன் வாழ்ந்தான் என்பதே அறியாத பூமி இது!
பிரின்ஸ் பிரின்செப் ( James Prinsep ) என்ற வெள்ளைக்காரன் வரும்வரை!

ஒரு ஜான் மார்ஷல் ( John Marshall ) வந்து சிந்துவெளி நாகரிகம் பற்றி அறிவிக்கும் வரை
நீங்கள் சொன்ன பொய்களே இந்நாட்டின் வரலாறு!

கால்டுவெல் (Caldwell) வந்து பிராகுயி மொழி உள்ளிட்ட திராவிட மொழிக் குடும்பம் பற்றி பேசும் வரை
நம்மைப் பற்றிய நமது புரிதல் வேறு!

தேவ மொழி என்ற கதையை நாங்கள் ஒப்புக்கொள்ள மறுத்ததும்
உடுக்கையின் மறுபுறம் பிறந்தமொழி என்று கதை சொன்னீர்கள்!

சிந்துவெளி, சங்க இலக்கியம், கீழடி ஆதிச்சநல்லூர் தரவுடன் நாங்கள் வருகிறோம்!

"எங்கே அமர்ந்து பேசலாம் என்று நீங்கள் சொல்லுங்கள்!

சங்க இலக்கியம் பேசிய பகடையை சிந்துவெளியிலும் கீழடியிலும் நாங்கள் காட்டுகிறோம்!
மகாபாரதப் பகடையை நீங்கள் காட்டுங்கள்!

வரலாறு என்பது
வந்த வழி பற்றிய கேள்விகளுக்கான விடை!
வாயில் சுடும்
வடை அல்ல!

அதே ஆட்டம்
அதே பகடை
உருள்வது ஆடுபவன்
தலை அல்ல!

என்ன ரெவி, ஆட்டத்திற்கு தயாரா?

நீங்கள்தானே காரணம் எல்.முருகன்!

 


ஆட்டுத்தாடி இல்லத்தின் வாசலில் நடந்த பெட்ரோல் குண்டு நாடகத்தை தொடர்ந்து தமிழ்நாட்டில் இது போன்ற சம்பவங்களால் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக சொல்லியுள்ளார்.

ஆனால் அவர் ஒன்றை மட்டும் சொல்லவில்லை.

அது போன்ற சம்பவங்களை செய்த குற்றவாளிகள் அவர் கட்சிக்காரர்கள் என்பதை மட்டும் சொல்லாமல் மறைத்து விட்டார்.

அதற்கு மேலே உள்ள செய்திகளே சான்று. 

Sunday, October 29, 2023

இந்திய அரசின் துரோகம் ...

 


பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்திக் கொண்டிருக்கும் அராஜக தாக்குதல்கள், ஆக்கிரமிப்பு, அத்து மீறல்கள் ஆகியவற்றுக்கு எதிராக நேற்று ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஓடி ஓளிந்திருக்கிறது.

இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் பற்றி தீர்மானத்தில் எதுவும் இல்லாததால் வாக்களிக்கவில்லை என்றொரு விளக்கம் வேறு கொடுத்துள்ளது.

ஹமாஸ் நடத்திய தாக்குதலா இஸ்ரேலின் அராஜகத்திற்கு துவக்கப்புள்ளி?

பல்லாண்டுகளாக இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் மீது நடத்திக் கொண்டிருக்கிற அராஜகம், இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள், பாலஸ்தீனக்குழந்தைகள், அழிக்கப்பட்ட சொத்துக்கள் ஆகியவை பற்றியெல்லாம் கொஞ்சம் கூட கவலைப்படாமல் ஹமாஸின் மீது மட்டும் பழி சொல்வது அயோக்கியத்தனமானது.

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்பது என்ற இந்தியாவின் பாரம்பரியத்தை குழி தோண்டி புதைக்க ஆரம்பித்தவர் வாஜ்பாய்.

இப்போது அதனை டிமோ செய்து முடித்து விட்டார்.

இஸ்ரேலிடமிருந்து ஆயுதங்கள் வாங்குகிறார். அனைவரையும் உளவு செய்வதற்கான கருவிகள் வாங்குகிறார். கோடிக்கணக்கான ரூபாய் இந்திய கஜானாவிலிருந்து போகிறது. அதிலே எத்தனை சதவிகிதம் தரகர்கள் மூலம் பாஜகவிற்கு வருகிறதோ!

அந்த எலும்புத்துண்டுகளுக்காக இந்திய அரசு பாலஸ்தீன மக்களுக்கும் உலக அமைதிக்கும் செய்துள்ள துரோகம் இந்திய நாட்டிற்குத்தான் களங்கம் . .. 

ரத்தமாரே, ரத்தமாரே

 


ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தில் வரும் "ரத்தமாரே, ரத்தமாரே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, October 28, 2023

பாகிஸ்தான் கோப்பையை வெல்லட்டும்

 


கிரிக்கெட் ஒன்றும் எனக்கு பிடித்தமான விளையாட்டல்ல. முழுக்க முழுக்க துட்டு பார்ப்பதற்காக செட்டப் செய்யப்பட்டதாகவே பெரும்பாலான போட்டிகள் அமைகிறது என்பது பரவலான விமர்சனம். அந்த காலத்தில் அடிமைகளை ஏலம் விடுவது போல விளையாட்டு வீரர்களை ஏலம் விடும் ஐ.பி,எல் முறை வந்த பின் வெறுப்புதான் அதிகமானது. அதனால் பிடித்தமான அணி என்று எதுவும் கிடையாது. எரிகிற கொள்ளிகளில் எல்லாமே அடுத்தவர்களை எரிக்கும் கொள்ளிதான்.

ஆனால் இந்த முறை கிரிக்கெட் உலகக் கோப்பையை பாகிஸ்தான் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன். அதற்கு வாய்ப்பெல்லாம் உண்டா என்பதெல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் விளையாட வேண்டும்.

அதுவும் டிமோ ஸ்டேடியத்தில் டிமோவின் முன்பாக இறுதி ஆட்டத்தில் இந்தியாவை வெல்ல வேண்டும். விளையாட்டின் வெற்றியை தேச பக்தியாக பார்க்கும் மூடன் அல்ல நான்.

ஆனால் ஜெய்ஸ்ரீராம் கோஷ்டி செய்யும் அளப்பறைகள், அதிலும் நேற்று பாகிஸ்தான் தென் ஆப்பிரிக்காவிடம் தோற்ற பின்பு ரொம்பவே அதிகமாகி விட்டது.

அந்த மத வெறியர்கள் வாயடைத்து நெஞ்சடைத்து வெறுப்பாக வேண்டும். அதற்காகவாவது பாகிஸ்தான் ஜெயிக்க வேண்டும்.

பிகு: மேலே உள்ள படம் 1992 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்ற தருணம்.

பிகு 2 : டிமோ ஸ்டேடியத்தின் தன்மை குறித்து ஒரு காணொளி பார்த்தேன். அது நாளை

Friday, October 27, 2023

ஆட்டுக்காரன் சரியா பேசினாதான் . . .

 




ஆட்டுக்காரன் இன்று சமூக வலைத்தளங்களில் கலாய்க்கப்படுவதற்கான காரணம் கீழே . . .


1921 ல் இறந்து போன பாரதி எப்படிய்யா 1931 ல் ஈரோட்டிற்கு வந்தார் என்று கலாய்க்கிறார்கள்.

என்னுடைய கருத்து மேலே கவுண்டமணி படத்தோடு உள்ளது.

ஆட்டுக்காரன் சரியா பேசினாதான் அதிசயம். மற்றபடி அவன் பேச்சும் செயலும் நமக்கான நகைச்சுவை. அவ்ளோதான் . . .

Thursday, October 26, 2023

ஒரு ஸ்டேஷன், மூன்று காட்சி

 


ஞாயிறு இரவு மகனை ரயிலேற்ற காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்தேன். அப்போது பார்த்த மூன்று காட்சிகள்,

விசாரணை கவுண்டரில் ஒருவர் சண்டை போட்டுக் கொண்டிருந்தார். இரவு 9.15 மணிக்கு சென்னையில் புறப்படும் காவிரி எக்ஸ்பிரஸை தவற விட்டதாகவும் தான் முன் பதிவு செய்திருந்த அதே பெர்த்தை காட்பாடியில் கொடுக்க வேண்டும் என்று அவர் சொல்ல, சென்னையில் நீங்கள் ஏறாத காரணத்தால் அந்த பெர்த்தை வேறு யாருக்காவது கொடுத்திருப்பார்கள், உங்கள் டிக்கெட் ரத்து செய்யப்பட்டதாக கருதப்படும் என்று ரயில்வே ஊழியர் சொல்ல விவாதம் போய்க் கொண்டே இருந்தது. அப்போது மணி இரவு 11.00

9.15 மணிக்கு சென்னையில் புறப்பட்ட ட்ரெயினை தவற விட்ட அந்த பயணி எப்படி ஒன்றே முக்கால் மணி நேரத்தில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்தார் என்று புரியவே இல்லை. காரில் வருவதெல்லாம் இன்றைய சாலை நிலவரத்தில் வாய்ப்பே இல்லை. ஒரு வேளை ஹெலிகாப்டரில் வந்திருப்பாரோ? அது எப்படி என்று புரியவே இல்லை.

என் மகன் சென்ற திருப்பதி சாம்ராஜ் நகர் எக்ஸ்பிரஸில் லக்கேஜ் ஏற்றுவதற்கான பெட்டியில் மட்டும் குறைந்தது இருபது பேர் இருந்திருப்பார்கள். ரயில்வே ஆட்கள் அவர்களை கீழே இறக்கி முன்பதிவு செய்யப்படாத பெட்டிக்கு போகும் படி விரட்டிக் கொண்டிருந்தார்கள். 

இரண்டாம் வகுப்பு பெட்டிகளையும் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளையும் குறைத்ததன் விளைவு. ரயில்கள் தனியாருக்கு செல்ல செல்ல நிலைமை இன்னும் மோசமாகும்.

ஐந்தாவது பிளாட்பார்மிலிருந்து நான் வந்து கொண்டிருக்க சேலம், கரூர் வழியாக பழனி செல்லும் ட்ரெயின் முதல் பிளாட்பார்மிற்கு வரும் என்ற அறிவிப்பு வந்ததும் பல பயணிகள் அப்படியே இறங்கி தண்டவாளத்தை கடக்க எனக்கோ மிகவும் பதற்றமாக இருந்தது. 

காரணம் அதற்கு முந்தைய நாள் நாளிதழில் படித்த செய்தி.

"ஆம்பூர் ரயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற சகோதரிகள் இருவர் ரயிலில் அடிபட்டு மரணம்"

 அப்படி என்னதான் அவசரம்! அடுத்த ட்ரெயினை பிடிக்க காத்திருக்கலாமே!

ஆட்டுக்காரனும் ஆட்டுத்தாடியும் சேர்ந்து . . .

 


ராஜ்பவனில் நடைபெற்ற சம்பவம் இரண்டு முன்னாள் ஐ.பி.எஸ் களின் சதி என்றே கருதுகிறேன்,

காரணம் இரண்டு.

இருவருமே "போலீஸ் இல்லை பொறுக்கி" என்ற சாமி கேட்டகரியைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் சங்கிகள் சம்பந்தப்பட்ட எல்லா பெட்ரோல் குண்டு சம்பவங்களுமே அவர்களே ஏற்பாடு செய்து கொண்ட அசிங்கம்தான்.

ஆகவே தமிழ்நாடு போலீஸ் தீவிரமாக விசாரித்து இரண்டு முன்னாள் போலீஸையும் தூக்கி உள்ளே போட வேண்டும். 

Wednesday, October 25, 2023

ஆட்டுக்காரா சிம்ரன் படத்தால் குழப்பமா?

 

முகநூலில் ஆளுக்காள் ஆட்டுக்காரனை கலாய்த்துக் கொண்டிருக்கிறார்கள். காரணம் கீழே உள்ளது.



எந்த வீரலட்சுமியைப் பற்றி யார் ஆட்டுக்காரனிடம் கேள்வி கேட்டார்கள் என்று தெரியவில்லை. அவரும் வழக்கம் போல வாய்க்கு வந்ததை பேசி விட்டார்.

அநேகமாக ஆட்டுக்காரன் ஸ்கூலில் படித்த காலத்தில் சிம்ரன் நடித்த "கோயில்பட்டி வீரலட்சுமி" திரைப்படத்தின் போஸ்டர்களை பார்த்திருக்கலாம். அதிலே கையில் துப்பாக்கியோடு இருந்ததால் ஏதோ விடுதலைப் போராட்டம் என்று நினைத்து விட்டார் போல!

இப்படியே முட்டாள்தனமாக உளறிக் கொண்டு இருக்கட்டும். அதுவும் நல்லதுதான் . . .

Tuesday, October 24, 2023

கற்றுக் கொள்ளுங்கள் சங்கிகளே . . .

 


மேலே உள்ள முகநூல் பதிவை நேற்றுதான் பார்த்தேன். மருத்துவமனையில் மருத்துவரின் அழைப்பிற்காக காத்திருந்த அந்த நீண்ட நேரத்தில் அத்தனை பின்னூட்டங்களையும் பார்த்தேன்.

1992 உலகக் கோப்பையில் உங்களுக்கு பிடித்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு கிட்டத்தட்ட அம்பது சதவிகிதம் பேர் பாகிஸ்தான் கேப்டன் இம்ரான் கானையும்  அதை விட சற்று குறைவாக இந்திய கேப்டன் முகமது அசாருதீனையும் குறிப்பிட்டிருந்தார்கள். அதற்கு அடுத்தபடியாக இலங்கையின் அரவிந்த டி செல்வாவும் நியூசிலாந்தின் மார்டின் க்ரோவும் இருந்தார்கள்.

தமிழ்நாட்டின் கிரிக்கெட் ரசிகர்கள் இம்ரான் கானையும் அசாருதீனையும் அவர்களின் விளையாட்டுத் திறனுக்காக மட்டுமே தங்களின் தேர்வாக முன்னுறுத்தியிருந்தனர். அவர்களின் மதமோ அல்லது இம்ரான் கானின் நாடோ ஒரு பொருட்டாக இல்லை.

விளையாட்டை விளையாட்டாக பார்ப்பது என்பது இதுதான்.

கற்றுக் கொள்ளுங்கள் சங்கிங்களே, ஜெய்ஸ்ரீராம் முழங்கும் முன்பு . . .

Monday, October 23, 2023

அவர் தடி கொண்டு அவர்களை . . .

 


என்ன எழவென்று அல்காரிதம் என்று தெரியவில்லை. ட்விட்டருக்கு போனால் சங்கிகளின் பக்கங்களைத்தான் காண்பிக்கிறது. சில சமயங்களில் பதிவு எழுதுவதற்கான கன்டென்ட் கிடைக்கிறது என்றாலும் சில நேரங்களில் எரிச்சலும் வருகிறது.

அப்படி எரிச்சலூட்டிய பதிவு ஒன்று கீழே . . .


பரம்பரை சங்கி போல இந்த பஞ்சத்துக்கு சங்கியான ஜந்துவும் பேசுகிறது.

தங்களின் மூன்று எதிரிகள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், கம்யூனிஸ்டுகள் என்று ஆர்.எஸ்.எஸ் கோல்வாக்கர் வெளிப்படையாக பிரகடனம் செய்தது இந்தாளுக்கு தெரிந்திருந்தாலும் இப்படியெல்லாம் அபத்தமாக உளரும் வாய்ப்பு அதிகம்தான். பிழைப்புவாதிகள் அப்படித்தான் இருப்பார்கள்.

அவர்களையெல்லாம் தந்தை பெரியாரின் தடி கொண்டுதான் அடிக்க வேண்டும். 


Sunday, October 22, 2023

நீயே. நீயே . . .

 


எம்.குமரன், சன் ஆஃப் மகாலட்சுமி திரைப்படத்தில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் வெளியான "நீயே, நீயே . . ." பாடலின் வயலின் வடிவம், என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, October 21, 2023

சங்கி விளம்பர ஏஜென்ஸி

 





பொட்டு வைக்காத பெண்களின் புகைப்படத்தை விளம்பரத்தில் வெளியிட்டதால் கஜானா ஜ்வெல்லரிக்கும் நல்லி சில்க்ஸுக்கும் எதிராக ட்வீட்டி அவர்களின் விளம்பர தூதராகினார் சங்கி எஸ்.ஆர்.சேகர்.

அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் தந்தை பெரியாரை பாராட்டி ஒரு வார்த்தை சொன்ன காரணத்திற்காக அந்த ஹோட்டலை புறக்கணிக்கச் சொல்லி சங்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

அநேகமாக அதன் காரணமாகவே அந்த ஹோட்டலின் வணிகம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.

இப்படியே இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு சங்கிகள் விளம்பரம் தேடித் தரப்போகிறார்களோ!

பிகு: ஏ2பி ஹோட்டலின் இட்லி, சாம்பார், சாப்பாடு ஆகியவை சுமார்தான் என்றாலும் அவர்களின் காபி எனக்கு பிடிக்கும். பருப்பு போளி, தேங்காய் போளி ரொம்பவே பிடிக்கும்

பொட்டுக்கான புலம்பலின் பின்னே . .

 


கஜானா ஜ்வெல்லரியின் பொட்டு வைக்காத பெண்ணின் விளம்பரத்தைக் கண்டு புலம்பிய பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகரு எனும் சங்கி அடுத்து நல்லி விளம்பரத்தைப் பார்த்து புலம்பியுள்ளது.

அந்த ட்வீட்டில் சிலர் போட்ட கமெண்ட்தான் மேலே படமாக உள்ளது.

அது நக்கலுக்காக போடப்பட்டது.

ஆனால் இந்த சங்கி விதைப்பது ஒற்றைக் கலாச்சார சிந்தனையைத்தான். பெண் என்றால் பொட்டு வைத்திருக்க வேண்டும் என்பதை கட்டாயப் படுத்த விழைகிறான். பொட்டு இல்லாமல் இருப்பவர்கள் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள், அவர்களை அடையாளப்படுத்தி விளம்பரம் கூடாது என்ற சிந்தனையை வெளிப்படுத்துகிறான்.விதவைகள் என்றால் பொட்டு வைக்கக்கூடாது என்ற சங்கிகளின் பிற்போக்குத்தனமான சிந்தனையையும் புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவிற்கு இந்திய ஜனாதிபதி அழைக்கப்படாததையும் இணைத்துப் பாருங்கள்.

"பொட்டு பொட்டு" என்று சேகர் புலம்புவதின் பின்னணி இந்த கீழ்த்தர எண்ணம்தான். 


Friday, October 20, 2023

ரொம்பவே ஓவர்தான் . . .

 


ஆன்மீகத்தை வைத்து நன்றாக கல்லா கட்ட முடியும் என்று தமிழ்நாட்டில் மற்ற புது வெர்ஷன் சாமியார்களுக்கு சொல்லிக் கொடுத்தவர். அவ்வளவுதான். 

கால் தூசுக்கு சமமில்லாத கழுதை ரவி

 



நூற்றாண்டு நாயகர், தகைசால் தமிழர், சுதந்திரப் போராட்ட தியாகி, விவசாயிகளுக்காகவும் தொழிலாளர்களுக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்த போராளி, சிம்மமாய் கர்ஜிக்கும் தோழர் என்.சங்கரய்யா அவர்களுக்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் அளிப்பதாக அறிவித்திருந்தது.

அந்த சான்றிதழில் கையெழுத்திட ஆட்டுத்தாடி ரவி மறுத்து விட்டானாம்.

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை என்பார்கள்.
அது போலத்தான் இந்த கழிசடைக் கழுதைக்கு தோழர் என்.எஸ் பெருமை தெரியவில்லை.

தகுதியற்ற தறுதலை தற்குறி இவனெல்லாம் கையெழுத்திட்டால்தான் அசிங்கம். 

Thursday, October 19, 2023

பாவிகளே, படுபாவிகளே

 

பாலஸ்தீனத்தில் ஒரு சிறுவன் எழுதி வைத்துள்ள உயில் கீழே உள்ளது. தன்னிடம் உள்ள செருப்பை கூட யாருக்காவது கொடுத்து விடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு வாழ்வின் மீது அவநம்பிக்கையுடனும், அதை கழுவிக் கொடுங்கள் என்று சொல்லும் அளவிற்கு பொறுப்புடனும் அச்சிறுவன் இருக்கிறான். அவன் தொடர்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் என் ஆசையும் கூட. 


ஆனால் அது சாத்தியமா?

நீ வயதானவுடன் என்னவாகப் போகிறாய் என்ற கேள்விக்கு இன்னொரு பாலஸ்தீன சிறுவனின் பதில் "நான் பெரியவனாகும்வரை  என்னை இஸ்ரேல் உயிரோடு விட்டு வைக்காது" சொன்னது மனதை கலங்க வைத்து விட்டது.

ஒரு இனத்தையே அழிக்கும் இஸ்ரேலையும் அவர்களுக்கு துணை நிற்பவர்கள் அனைவரையும் "நாசமாகப் போவீர்கள் பாவிகளே" என்றுதான் சாடத் தோன்றுகிறது. இரக்கமில்லாத கொடூரர்கள் இவர்கள் . .


Wednesday, October 18, 2023

ஜெய்ஸ்ரீராம் - யாரின் முழக்கம்?

 




பாகிஸ்தான் போட்டியின் போது அகமதாபாத் வெறியர்கள் பாகிஸ்தான் வீரர்களை இழிவு படுத்துவதாக நினைத்துக் கொண்டு ஜெய் ஸ்ரீராம் முழக்கமிட்டார்கள். அன்று தொடங்கிய வாத பிரதிவாதம் இன்னும் தொடர்கிறது.

கொலைகாரர்கள் எழுப்பிய முழக்கம்தான் இது.

கைது செய்யப்பட்ட திருடர்கள் எழுப்பிய முழக்கம்தான் இது.

அடுத்தவன் குடும்பத்தை பிரிக்க அடியாட்களாய் செயல்பட்டவர்கள் கைது செய்யப்பட்ட போது எழுப்பிய முழக்கம் இது.

பாலியல் குற்றவாளிகள் எழுப்பிய முழக்கம்தான் இது.

பக்தர்கள் எழுப்பினால் பிரச்சினை இல்லை.

ஆனால் இந்த பாவிகள் எழுப்புவதில் உள்நோக்கம் இருக்கிறது. கலவரத்தை தூண்டும் கொடூரம் இருக்கிறது. 

சங்கிகள் எழுப்பும் "ஜெய்ஸ்ரீராம்"  நிச்சயம் ஆபத்தானதுதான்.

சங்கிகள் முன்பு எழுப்பிய முழக்கம் "ஓம் காளி, ஜெய் காளி"

கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலில் நரபலி கொடுக்கும் காபாலிகர்கள் எழுப்பிய முழக்கம் அது.

சங்கிகளும் நர வேட்டை ஆட்டும் காபாலிகர் கூட்டம்தான். அவர்களின் 

பழைய முழக்கம் "ஓம் காளி, ஜெய் காளி"

புதிய முழக்கம் "ஜெய்ஸ்ரீராம்"

அவர்களின் அரசியலுக்கு ராமர் காலாவதியாகிப் போனால் வேறு ஒரு முழக்கத்தோடு கூட வருவார்கள். எல்லாமே வன்முறையை அடிப்படையாகக் கொண்டதுதான்.

உண்மையான பக்தர்கள் சங்கிகள் மீதுதான் கோபப்பட வேண்டும். அவர்களின் அராஜகத்தை எதிர்ப்பவர்கள் மீதல்ல . . .


மதிமாறன் எனும் கோமாளி . . .

 


இன்றைக்கு உதயநிதி ஸ்டாலின் இந்திய அளவில் புகழ் பெற்றதற்கு சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் ஆற்றிய உரைதான் காரணம்.

அம்மாநாட்டை நடத்தியது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்.

பவா செல்லதுரை எனும் பதிப்பக உரிமையாளர், எந்த காலத்திலோ தமுஎகச அமைப்பில் இருந்தார். தமுஎகச அமைப்பை புளிச்ச மாவு ஆஜான் அவரை முன்னிறுத்தி சிறுமைப்படுத்தும் போது கள்ள மவுனம் சாதிக்கிறார் என்பதுதான் அவர் மீதான குற்றச்சாட்டு,

எப்படி ஜெயமோகன் புளிச்ச மாவின் மூலம் புகழ் பெற்றாரோ, அது போல தோசை குறித்த ஆய்வின் மூலம் புகழ் பெற்றவர் மதி(யற்ற)மாறன். அவர் ஒரு பதிவு போடுகிறார்.


தமுஎகச வுக்கு சம்பந்தமில்லாத தனி நபரின் செயலை வைத்து தமுஎகச எனும் அமைப்பின் மீது வன்மத்தை கொட்டுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம். அந்தாள் ஒரு கோமாளி என்று பலரும் சொல்வதும் சரிதான் ..

என்ன இவர் தன்னை திக, திமுக வுடன் அடையாளப்படுத்திக் கொண்டு அந்த அமைப்புக்களுக்குத்தான் இழிவு தேடிக் கொள்கிறார்.

அய்யா மதி கெட்ட மாறா! "நாங்களாவது சனாதன எதிர்ப்பு மாநாடுதான் நடத்தினோம். நீங்கள்தான் சனாதன ஒழிப்பு மாநாடு நடத்துகிறீர்கள்" என்று திக தலைவர் ஆசிரியர் கே.வீரமணி அவர்கள் தமுஎகச வை பாராட்டியது உமக்கு தெரியுமா?

தெரிந்துதான் வயிற்றெரிச்சலில் உளரினீரா?

அடுத்த முறையாவது மதியோடு எழுத முயற்சிக்கவும்...

Tuesday, October 17, 2023

குற்றவாளிகளை பாதுகாக்க விசாரணை?

 


       

புது டெல்லி நோய்டாவிற்குப் பக்கத்தில்  நித்தாரி என்றொரு சின்ன ஊர். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தது. நோய்டாவே உத்தரப்பிரதேசம்தான்

 பல வருடங்களுக்கு முன்பு அந்த ஊரில் நடந்த ஒரு சம்பவம் இந்தியாவையே அதிர வைத்தது.

 அந்த ஊரில் உள்ள பெண் குழந்தைகள், இளம் பெண்கள் காணாமல் போகத் தொடங்கினார்கள். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. ஒரு பணக்காரன் வீட்டின் பின்னே இருந்த கழிவுநீர் வாய்க்காலில் ஒரு எலும்புக் கூடு கிடைக்கிறது. அது காணாமல் போன ஒரு சிறுமியுடையது என்று தெரிய வருகிறது.

 அந்த செல்வந்தன் வீட்டை சோதனை செய்கையில் மேலும் பல எலும்புக் கூடுகள். அந்த பணக்காரன் மோனிந்தர் சிங் பாந்தர் என்பவனும் அவனது வேலையாள் சுரேந்தர் கோலி என்பவனும் கைது செய்யப்படுகிறார்கள். வழக்கு சி.பி.ஐ வசம் செல்கிறது.

 கொலை, பாலியல் வன் கொடுமை, ஆள் கடத்தல் ஆகியவை மட்டும் அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அல்ல. அதையும் தாண்டி அதிர்ச்சிகரமான ஒன்றும் உண்டு.

 ஆம். அது நர மாமிசம் சாப்பிட்டதான குற்றச்சாட்டு.

 கடத்தி கொல்லப்பட்டவர்களின் உடல்களை சமைத்து சாப்பிட்டிருக்கிறார்கள். இதனை அவர்களே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்.

 இருவருக்கும்  மரண தண்டனை விதிக்கப்படுகிறது. இவர்களின் கருணை மனுக்கலை பரிசீலிக்க அநியாயமான கால அவகாசம் எடுத்துக் கொண்டதாக சொல்லி உச்ச நீதிமன்றம் இவர்களின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து விடுகிறது.

 நேற்று அலகாபாத் உயர் நீதிமன்றம் இவர்கள் இருவரையும் விடுதலை செய்துள்ளது.

 ஏன்?

 இவர்கள்தான் குற்றவாளிகள் என்பதை ஐயத்திற்கு இடமின்றி நிரூபிக்க விசாரணைக்குழு தவறியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் சாட்சியங்களை பதிவு செய்ய தவறியுள்ளது. குற்றவாளி சுரேந்தர் கோலி சொன்னதை மட்டும் அடிப்படையாகக் கொண்டு மற்ற சாட்சியங்களை சேகரிக்க தவறி விட்டது. விசாரணைக்குழு படு அலட்சியமாக இந்த வழக்கை கையாண்டுள்ளது. குற்றவாளிகளை விடுதலை செய்ய விசாரணைக்குழுவின் அலட்சியம்தான் காரணம்.

 மேலே சொன்னதுதான் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் சுருக்கம்.

 சி.பி.ஐ ஒரு பொறுப்பான அமைப்பு என்று கருதப்படுகிறது.

 ஆனால் அதன் செயல்பாடு அதற்கு நேர் மாறாக இருந்துள்ளது. குற்றவாளிக்கு ஆதரவாக, குற்றவாளியை பாதுகாக்கவே அப்படி அலட்சியமாக செயல்பட்டதா என்று சந்தேகம் வருகிறது.

 பாதிக்கப்பட்டவர்கள் நிலை?

 அவர்கள் கிடக்கிறார்கள் கழுதைகள், அவர்கள் பாதிக்கப்பட்டதோ, அவர்களின் வலியோ எல்லாம் முக்கியமில்லை.  அவர்கள் ஒன்றும் இந்த அமைப்பில் செல்வாக்கானவர்கள் கிடையாதே! குற்றவாளிகள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புண்டு. பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து என்ன கிடைக்கும்? ஐயா, எனக்கு நீதியே வேண்டாம் என்று வெறுத்து ஒதுங்கி போக வைக்குமளவுதானே இன்று நீதி பரிபாலணம் மாறி இருக்கிறது.

 சாதாரண நடவடிக்கை தாமதமானாலே குற்றவாளிகள் திமிர்த்தனத்தோடு அலைவார்கள்! இப்படி அலட்சியமாக அவர்களை பாதுகாப்பது போல நடந்து கொண்டால் இன்னும் மோசமாகத்தான் போவார்கள். குழந்தையை கொன்றவன் பிணையில் வெளி வந்து தன் அம்மாவையே கொன்றானே, அது போலத்தான் நடக்கும். நாமும் இப்படி கோபத்தை வெளிப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும், அதனால் எந்த பயனும் இல்லை என்று தெரிந்து கொண்டே.

 நாட்டையே அதிர வைத்த ஒரு வழக்கில் அலட்சியம் காண்பித்த அந்த விசாரணை அதிகாரிகள், குற்றவாளிகளை விட கேடு கெட்டவர்கள். மொத்தத்தில் நீதி என்பதை கேலிக்கூத்தாக மாற்றி விட்டார்கள்.

 ஒரே ஒரு விஷயம்தான் ஆறுதல்.

 அலகாபாத் நீதிமன்றம் இக்குற்றவாளிகளை பெண்களின் பாதுகாவலர்கள், குழந்தைகளின் பாதுகாவர்கள் என்றெல்லாம் அடைமொழி கொடுத்து எந்த பதவியும் கொடுக்கச் சொல்லி பரிந்துரைக்கவில்லை. அப்படிப்பட்ட கேலிக் கூத்துகள் எல்லாம் நடக்கும் நாடுதானே நம் இந்திய நாடு! சாத்வி பிராக்யா சிங் தாகூர் ஞாபகம் இருக்கிறதல்லவா!

“ஒரே நாடு, ஒரே தேர்தல் – டிமோ மோசடி

 



நாட்டில் எப்போது பார்த்தாலும் ஏதோ ஒரு பகுதியில் தேர்தல் நடந்து கொண்டிருக்கிறது என்று டிமோ  ஒரு மொக்கைக்  காரணத்தை முன்வைத்து நாடாளுமன்றம் தொடங்கி உள்ளாட்சி தேர்தல் வரை ஒரே நேரத்தில் தேர்தல்களை நடத்திட திட்டமிடுகிறார். துடைப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சலம் என்பது போல இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் அவர்களின் தலைமையில் ஒரு குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

இது அமலானால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தல் 2024 ல் நடைபெறவுள்ளது. அத்துடன் அனைத்து மாநில சட்டமன்றங்களின் தேர்தல்களையும் ஒன்றாக நடத்த வேண்டும் என்றால் பல மாநில சட்ட மன்றங்கள் அவர்களின் முழுமையான பணிக் காலத்திற்கு முன்பே முடிந்து விடும்.

உதாரணமாக  தமிழக சட்டமன்றத்தின் ஆயுள் இரண்டாண்டுகள் முன்பே முடியும். கர்னாடக சட்டமன்றத்தின் ஆயுள் நான்காண்டுகளுக்கு முன்பே முடித்து வைக்கப்படும். அப்பட்டமான ஜனநாயக படுகொலை இது.

தேர்தலுக்குப் பிறகு அந்த ஆட்சி தொடர முடியாத சூழல் வருமானால் என்ன ஆகும்?

அடுத்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் வரை அந்த மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி நடக்குமா அல்லது மறு தேர்தல் நடக்குமா? குடியரசுத்தலைவர் ஆட்சி பல ஆண்டுகள் நீடிப்பது ஜனநாயகமாகுமா? அது போன்ற சூழலில் அம்மாநிலங்களில் தேர்தல் நடைபெறுமானால் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” அர்த்தமற்றதாகி விடுமல்லவா?

தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உறுப்பினர் இறந்து போனாலோ அல்லது பதவி விலகினாலோ அல்லது பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுமா அல்லது அடுத்த தேர்தல் வரை காலியாகவே இருக்குமா?

ஒரு வேளை மத்தியரசே கவிழ்ந்து போனால் என்ன ஆகும்?

நாடாளுமன்றத் தேர்தலோடு அனைத்து மாநில சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு அவற்றுக்கும் சேர்ந்து தேர்தல் நடைபெறுமா அல்லது சட்டமன்றத் தேர்தல் நிகழும் வரை மக்களவைத் தேர்தல் நடைபெறாமல் காபந்து அரசு நீடிக்குமா?

இக்கேள்விகள் அனைத்தும் ஒரே ஒரு உண்மையைத்தான் சொல்கிறது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்பது நடைமுறை சாத்தியமற்றது. ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்குவது.

பிகு" ரொம்ப நாள் முன்னாடியே எழுதியது. வேறு ஒரு கேலிக்கூத்து பற்றி எழுத நினைத்தேன். அதனை முடிக்க முடியாததால் இதனை பகிர்ந்து கொண்டு விட்டேன். 

 

Monday, October 16, 2023

பொட்டு வச்சிருந்தா மட்டும்

 


பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் போட்ட ட்வீட் கீழே




கஜானா ஜ்வெல்லரி விளம்பரத்தில் தோன்றும் பெண்ணின் நெற்றியில் பொட்டு இல்லையாம். அதனால் அங்கே அவர் வணிகம் செய்யப் போவதில்லையாம்.

ஏன்யா சேகரு, அந்த பொண்ணு பொட்டு வச்சிருந்தா மட்டும் நூறு பவுன் நகை வாங்கியிருப்பியா? இல்லை நடிகர் திலகம் மாதிரி "பொட்டு வைத்த முகமோ?" ன்னு பாட்டு பாடியிருப்பியா?

சங்கிகளுக்கு வேற பிழைப்பே இல்லைன்னு திட்டுதான்யா வாங்கிக்கிட்டு இருக்க!

நீ வணிகம் கிடையாது சொன்னதாலேயே நிறைய பேர் அங்கேதான் வாங்கப் போறாங்களாம். . .

டிமோவுக்கு சைன்டிஸ்டுன்னு நெனப்பு

 


நேற்று இரவு மகனை ரயிலேற்றி விட காட்பாடி ரயில் நிலையம் சென்றிருந்தேன்.

அப்போது பார்த்த கூத்து கீழே . . .



என்னமோ சந்திராயனை கண்டுபிடிச்ச சைன்டிஸ்டே இவர்தான் என்ற நெனப்பில் கட் அவுட் வைத்திருக்கிறார்கள். அநேகமா இது போன்ற கேலிக்கூத்து எல்லா ரயில் நிலையத்திலும் இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் யாரும் எழுதி நான் பார்க்கவில்லை.

எழவு, எல்லா எழவும் நம்ம கண்ணிலதான் தெரியுது. எந்த எழவையும் "ஜஸ்ட் லைக் தட்" விட்டுப் போகவும் முடியவில்லை. அது சரி, நாம என்ன தப்பா செய்யறோம்? அடுத்தவன் செய்யற தப்பை சுட்டிக் காட்டறோம்! இது கூட செய்யாம எல்லாத்திலயும் சமரசம் செஞ்சிக்கிட்டு வாழற வாழ்க்கையெல்லாம் ஒரு வாழ்க்கையா என்ன?

கள்ளக்குறிச்சியில நடந்த கோட்ட மாநாட்டு கலை இரவில் "சந்திரனில் மகாராஜா" என்று ஒரு நாடகம் போட்டோம். அந்த நாடகம் போட்டது எவ்வளவு சரி என்பதைத்தான் இந்த சந்திரன் செட்டப் நியாயப் படுத்தியுள்ளது. 

பிகு: மேலே எதற்கு சிங்காரவேலன் வடிவேலு படம் என்று யோசிப்போருக்கு.

"இந்த வீட்டில எல்லா வாத்தியங்களையும் கையில எடுக்கிற ஒரே ஆளு இவந்தான். வாசிக்க இல்லை, துடைச்சு வைக்க, மூஞ்சியப் பாரு, மைக்கேல் ஜாக்சன் தங்கச்சின்னு நெனப்பு" என்ற வசனத்தை நினைவு படுத்துகிறேன்.


Sunday, October 15, 2023

போட்டிதானடா, போர் இல்லை

 


பீகாரிலிருந்து தமிழ்நாட்டுக்கு பிழைக்க வந்த பாண்டே போட்ட ட்வீட் கீழே


வன்மமே வாழ்வாய் கொண்ட எச்.ராசா, அப்பல்லோ ஹாஸ்பிடலில் படுத்த படி போட்ட ட்வீட் கீழே ...


என் மகனோடு அமர்ந்து நேற்று அந்த போட்டியை கொஞ்ச நேரம் பார்த்தேன். அகமதாபாத்தில் இருந்த அந்த பார்வையாளர்களின் உடல்மொழியும் கோஷங்களும் அருவெருப்பாகவே இருந்தது. 

சங்கிக்கயவர்கள் இத்தனை நாளாக ஊட்டி வளர்த்துள்ள வெறுப்புணர்வு நன்றாகவே வெளிப்பட்டது.

அதெல்லாம் நியாயம்தான் என்று மத்யமர் சங்கிகள் நியாயப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களிடம் சொல்ல வேண்டியுள்ளது.

நடைபெற்றது வெறும் போட்டிதான், போர் இல்லை.

கிரிக்கெட்டில் தேச பக்தியை தேடும் இன்னும் சில போலிகள் கூட உள்ளுக்குள் மகிழ்ந்திருக்கும் என்றே நினைக்கிறேன். இப்போதெல்லாம் யாரையுமே நம்ப முடிவதில்லை. . . .



ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே

 


பாரதிராஜா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான "கிழக்குச் சீமையிலே" திரைப்படத்தில் வரும் "ஆத்தங்கரை மரமே, அரசமர இலையே" பாடலின் வயலின் வடிவம் என் மகனின் முயற்சியில் . . .

யூட்யூப்  இணைப்பு இங்கே . . .

Saturday, October 14, 2023

மானங்கெட்டவர்கள் . . .

 


புதிதாய் என்ன சொல்ல?

வெட்கம், மானம், ரோஷம், சூடு, சொரணை எதுவுமற்ற சோற்றாலடித்த பிண்டங்கள் . . .

Friday, October 13, 2023

ஆட்டுக்காரா, மரண பயத்தை காண்பிச்சிட்டாங்களா?

 


கீழேயுள்ள காணொளியை பாருங்கள். நீங்கள் ஏற்கனவே பார்த்திருக்கும் வாய்ப்பு கூட உண்டு.

டி.ஆர்.எஸ் கட்சியின் தலைவர் கே.சந்திரசேகர்ராவின் மகள் கவிதா பேசுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள், பாஜக வை அவர் கிழி கிழி என்று கிழிப்பதை ரசித்திருப்பீர்கள்.


 

ஆனாலும் பரவாயில்லை. இன்னொரு முறை பாருங்கள். ஆட்டுக்காரனை மட்டும் கவனியுங்கள்.

 “மரண பயத்தை காண்பிச்சுட்டாங்க பரமா?” என்று சுப்ரமணியபுரத்தில் ஜெய், சசிகுமாரிடம் கதறுவது போலவே ஆட்டுக்காரனின் முகமும் கண்களும் நடுங்குவது தெரிகிறது அல்லவா!

 நீங்கள் ரசித்ததை மற்றவர்களுக்கு அனுப்பி வையுங்கள். . .

 

Thursday, October 12, 2023

உங்களுக்கு நீங்களாகவே டிமோ?

 


மேலே உள்ள படத்தை பார்த்ததும்

“தனது ஆட்சியின் வீழ்ச்சிக்கு டிமோ அவரே  சங்கு ஊதிக் கொள்கிறாரோ?” என்றுதான் தோன்றியது.

இதெல்லாம் தேவையா எச்.ராசா

 


ஐயா எச்.ராசா, என்ன உங்க ஹெச்.ஆர். டீம் இவ்வளவு மோசமா இருக்காங்க? பாவம் உங்களுக்கு உடம்பு சரியில்லை, ஆஸ்பத்திரியில சேர்த்திருக்காங்க, அந்த தகவலை மட்டும் உங்க ட்வீட்டுல சொன்னா போதும்ல! எதுக்கு உங்க பேருக்கு பின்னாடி பெரிய வால் மாதிரி B.COM, B.L, FCA இதெல்லாம்? ரொம்ப முக்கியமா?

 


இதை டிமோவும் அழுக்கு ஷாவும் பார்த்தா என்னாகும்?

 தங்களை விட  இவன் அதிகமாக படித்ததாக பீற்றிக் கொள்கிறான் என்று அவர்கள் நினைத்துக் கொண்டால் உங்கள் நிலைமை என்ன ஆகும்?

 உங்க அட்மினையும் அந்த ஹெச்.ஆர் டீமில் உள்ளவங்க அத்தனை பேரையும் நீங்களே மாத்திடுங்க.

 நீங்க வாய் திறந்து அசிங்கப்படறது போதாதுன்னு இவனுங்க வேற அடி வாங்கித்தரானுங்க!

விளக்கம் சொல்வீங்களா தமிழிசை?

 


புதுவை அரசின் ஒரே பெண் அமைச்சர் சந்திரா பிரியங்கா தன் அமைச்சர் பதவியை தம் மீது நிகழ்த்தப்படும் ஜாதிய, பாலின பாகுபாடு காரணமாக ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ளார்.

அக்கடிதம் கீழே


இதற்கு தமிழிசை எதற்கு விளக்கம் சொல்ல வேண்டும் என்று கேட்பீர்கள்!

புதுவையில் முதல்வர், சபாநாயகர், துணை நிலை ஆளுனர் என்று மூன்று அதிகார மையங்கள் உண்டு என்றும் அதிலே சக்தி மிக்கவர் தமிழிசைதான் என்று எங்கள் புதுவை தோழர்கள் சொல்வார்கள்.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டில் ஆட்டுக்காரன் பதில் சொல்ல வேண்டிய விஷயங்களில் கூட இவர் ஆளுனர் என்ற பொறுப்பை மறந்து பேசுவார்.

அதனால் தலித் என்ற காரணத்தாலும் பெண் என்ற காரணத்தாலும் தனக்கு பிரச்சினை வந்தது என்று அமைச்சர் சொன்னதற்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு தமிழிசை அம்மையாருக்கே அதிகம் உண்டு,

சொல்வீர்களா? 

Wednesday, October 11, 2023

இந்தியாவின் பெருமிதங்களும் அவமானமும்

 




இன்று காலையில் ஆங்கில இந்து நாளிதழை கையில் எடுத்தவுடன் கண்ணில் பட்ட புகைப்படம் மேலே உள்ளது. 

இந்தியாவை பெருமிதப்படுத்தியவர்கள் என்று தலைப்பு கொடுத்திருந்தார்கள். 

ஆம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெற்றி பெற்றவர்கள் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தவர்கள்.

என்ன கூடவே ஒரு அசிங்கமும் நிற்கிறது.

ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக போராடிய போது பாலியல் குற்றவாளிக்கு ஆதரவாக இருந்த அவமானச்சின்னம் டிமோ, கொஞ்சம் கூட வெட்கம், மானம், ரோஷமே இல்லாமல் போஸ் கொடுத்துக் கொண்டு நிற்பதுதான் படத்தை அசிங்கப்படுத்துகிறது. அதனால்தான் அந்த மூஞ்சியை மட்டும் மறைத்து விட்டேன்.