Friday, May 31, 2024

மோடியால் சங்கிகளுக்கு துயரம்


 சங்கிகள் ஒரு விதத்தில் பரிதாபத்துக்கு உரியவர்கள். தெய்வக்குழந்தை செய்யும் எல்லா அபத்தங்கள், மூடத்தனங்கள், முட்டாள்தனங்கள், அயோக்கியத்தனங்கள் என அனைத்துக்கும் முட்டு கொடுக்க வேண்டிய சுமை அவர்களுடையது.

சரியான முட்டும் கிடைக்காமல் மோடியை விட்டுக் கொடுக்கவும் முடியாமல் அவர்கள் தடுமாறுவதைப் பார்த்தால் நமக்கே பரிதாபமாக இருக்கும்.

நேற்று அப்படித்தான் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு பதவில் புகைப்படக்காரர்கள்தான்  மோடியை துரத்துகிறார்கள், அவர்களுக்கெல்லாம் அனுமதி கிடையாது என்றொரு சங்கி சொல்ல, அதன் பின் நடந்த உரையாடலைப் பாருங்கள்.




மோடியும் தன் முட்டாள்தனங்களை நிறுத்திக் கொள்ளப் போவதில்லை. சங்கிகளின் துயரங்களும் குறையப் போவதில்லை. 

Thursday, May 30, 2024

பு.மா ஆஜானை காப்பியடித்த மோடி

 


யார் சொன்னார் என்ற தகவல் இல்லாமல் “திரைப்படம் வந்த பின்னரே காந்தியை உலகுக்கு தெரியும்” என்ற அற்புதமான கருத்தைத்தான் முதலில் பார்த்தேன்.

இது போன்ற அரிய கருத்துக்களை வெளியிடும் ஆற்றல் நம் புளிச்ச மாவு ஆஜான் ஜெயமோகனுக்கு மட்டுமே உரியதல்லவா என்று அவர் பக்கம் போய் உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். பிறகு இன்னொன்றும் தோன்றியது. ஜெமோ அப்படியெல்லாம் தன்னைத் தவிர இன்னொருவருக்கு அதிலும் வெளிநாட்டு கிறித்துவர் ரிச்சர்ட் அட்டன்பரோவுக்கெல்லாம் பெருமை தர மாட்டாரே என்பது நினைவுக்கு வந்தது. பிறகுதான் தெரிந்தது அது மோடி சொன்னது என்று.

மோடியின் கருத்து பற்றி என்ன சொல்ல? அந்த முட்டாளுக்கு தெரிந்தது அவ்வளவுதான் என்று சென்று விட முடியுமா? கோட்சேவை கும்பிடும் மோடி எனும் ஜந்து மகாத்மா காந்தியினை இழிவு படுத்துவது இது முதல் முறையல்ல. மகாத்மா காந்திடின் சிறப்பு என்று ஏராளமாக இருக்க, தூய்மை என்ற ஒன்றை மட்டும் வைத்து சொச்ச பாரத் என்று விளக்குமாறோடு ஒரு நாள் போட்டோஷூட் முடித்த ஆள்தானே இது!

இந்த முறை மகாத்மாவை இழிவு படுத்த மோடி கையாண்ட டெக்னிக் காப்பியடித்தது. புளிச்ச மாவு ஜெயமோகனிடம் காப்பியடித்தது.

“பின் தொடரும் நிழலின் குரல்” என்ற அந்தாளின் கம்யூனிசத்தின் மீது வெறுப்பை கக்கும் நாவலைப் படித்த பின்பே “லெனின் என்று ஒருவர் இருந்தார்” என்று தனது வாசகர்கள் அறிந்து கொண்டார்கள் என தடம் இதழிற்கு அளித்த நேர்காணலில் பெருமையாக சொல்லிக் கொண்டார்.

லெனின் யாரென்று தெரியாத கூமுட்டைகள்தான் அவரது வாசகர்கள் என்பது வெட்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஆஜோனுக்கோ அப்படிப்பட்ட கூமுட்டைகள் வாசகர்களாக இருப்பதுதான் பெருமை.

மோடி தன் பாணியை காப்பியடித்து விட்டார் என்று ஆஜான் எப்போது எண்பது பக்க கட்டுரை எழுதப் போகிறாரோ?

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம்…

மோடி, ஜெயமோகன் போன்ற சில்லறைகளால் மகாத்மா காந்தியின் புகழையோ, புரட்சித்தலைவர் தோழர் லெனினின் புகழையோ சிறுமைப் படுத்திட முடியாது. இந்த சில்லறைகள் நெருங்க முடியாத சிகரத்தின் உச்சியில் இருப்பவர்கள் அந்த மகத்தான இரு தலைவர்களும் . . .

 

Wednesday, May 29, 2024

கோமாளித்தனத்துக்கு அளவில்லையா மோடி?



இப்போ கன்னியாகுமரியில் விவேகானந்தா பாறையில் அமர்ந்து தியானம் செய்து என்ன கிழிக்கப் போகிறார் மோடி?

அவர் மனிதனாக இருந்தால் தியானம் செய்வதால் எந்த பலனும் அவருக்குக் கிடைக்காது.

ஏனென்றால்

 மூளை, இதயம், புத்தி என எல்லாவற்றிலும் விஷம் கலந்து  விட்டது. விஷ முறிவு மருந்துகளால் கூட சரி செய்ய முடியாத ஜந்து அது.

தெய்வப்பிறவிக்கெல்லாம் தியானம் தேவைப்படாது.

பின்?

மோடியின் அடுத்த போட்டோ ஷூட் கன்னியாகுமரியில், கடல் பேக் க்ரௌண்டில் நடைபெறுகிறது. வித்தியாசமான காஸ்ட்யூமில் கண்ணை மூடிக் கொண்டு போட்டோக்கள் எடுத்துக் கொள்ளப் போகிறார்.

அவ்வளவுதான்.

பாவம் குமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை! என்னென்ன கண்றாவிகளை, கோமாளித்தனங்களை பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்குமோ!!

கிரிமினல்கள் பில்லா, ரங்கா வழியில் ஸ்மிர்தியும் . . .

 




தமிழ்நாட்டுக்கு எதிராக ஸ்மிர்தி இராணியும் …

தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக ஒடிஷாவில் முதலில் விஷம் கக்கியது “தாய் மூலம் பிறக்காத” மோடி.

 தமிழ்நாட்டுக்காரன் ஒடிஷா முதல்வராகலாமா என்று அடுத்த விஷத்தை அளித்தது கிரிமினல் ஷா.

 இப்போது மூன்றாவது பாட்டில் விஷத்தை கையிலெடுத்திருப்பது முன்னாளில் தொலைக்காட்சியில் சீதையாக நடித்த ஸ்மிர்தி இராணி அம்மையார்.

 “ ஒடிஷா மாநிலத்தின் அரசுப்பணிகளை எல்லாம் தமிழ்நாட்டு ஒப்பந்ததாரர்கள்தான் (இது தவறான தகவலாம்) செய்கிறார்கள். ஒடிஷாவின் ரிமோட் தமிழ்நாட்டின் கையில் இருக்கிறது. அதனால்தான் பேரிடர்/இயற்கைச் சீற்றம் வந்தால் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தவிர்க்கிறார்கள்”

 ஏம்மா! உங்களுக்கு கொஞ்சமாவது மனசாட்சி இருக்கா? இந்தியாவிலேயே பேரிடர்களை சிறப்பாக கையாளும் மாநிலம் என்ற பெருமை ஒடிஷா மாநிலத்திற்கு இருக்கிறது. அதற்கான கட்டமைப்பை உருவாக்கிய இருவரும் தமிழர்கள்தான். அம்மாநிலத்தின் தலைமைச்செயலாளராக இருந்து இப்போது முதல்வரின் ஆலோசகராக இருக்கிற திரு ஆர்.பாலகிருஷ்ணன், ஐ.ஏ.எஸ் அவர்களும் இப்போது சங்கிகள் வெறுப்பை உமிழும் வி.கே.பாண்டியன், ஐ.ஏ.எஸ் அவர்களும்தான்.

 உண்மைகளுக்கு புறம்பாக ஒடிஷா மக்களை தமிழ்நாட்டுக்கு எதிராக திருப்பும் வேலையை  கிரிமினல் கூட்டாளிகளுக்குப் பிறகு ஸ்,இர்தி அம்மையார் துவக்கியுள்ளார். இப்படிப்பட்ட பிரிவினைவாதிகளை சும்மா விடலமா? தமிழ் நாட்டு மக்களுக்கு எதிரானவர்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கலாமா?

 மனசாட்சியுள்ளவர்கள் என் கருத்தை ஒப்புக் கொள்வார்கள்.

Tuesday, May 28, 2024

பொய் சொல்வதில் டாக்டர் வாங்கியிருப்பானோ?

 


பாஜக கட்சியின் செய்தித் தொடர்பாளர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா. ஆமாம், அவன்தான். தோழர் சு.வெங்கடேசன் மீது அவதூறு பரப்பி கைது செய்யப்பட்டவன். அவதூறு பரப்பும் வேறு சிலர் சகல சௌகர்யங்களோடு பாதுகாப்போடு இருக்கிறார்கள். நான் தெய்வக்குழந்தையை சொல்கிறேன். 

அவன் தன் ட்விட்டர் பக்கத்தில் ஏதோ மிகப் பெரிய கருத்தை சொல்லி விட்டதாக பீற்றிக் கொண்டிருக்கிறான்.


காங்கிரஸ் கட்சியும் ஆம் ஆத்மி கட்சியும் டெல்லியில் கூட்டணி வைத்துக் கொண்டுள்ளனர். சோனியா காந்தி வீடு உள்ள தொகுதி ஆம் ஆத்மி கட்சிக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி. அதனால் அவர் அங்கே கை சின்னத்துக்கு வாக்களிக்கவில்லை. கூட்டணி கட்சி சின்னத்திற்கு வாக்களித்திருப்பார்.

இதுதான் விஷயம். இதை ஏதோ பிரம்மாண்டமான அரசியல் நிகழ்வு போல பில்ட் அப் செய்வதெல்லாம் சங்கிகளின் கீழ்த்தர உத்தி. இவர்களே ஒரு கருத்தை உருவாக்கி பொதுப்புத்தியில் படிய வைப்பது. ஆட்டுக்காரனை பற்றி, அபூர்வ பிறவி பற்றி, வேலூரில் ஏ.சி.எஸ்தான் ஜெயிப்பார் போன்ற மாய பிம்பங்களை உருவாக்குகிறார்கள். 

சூர்யா கொடுத்த பில்ட் அப்பில் இன்னொரு அபத்தமும் உள்ளது. 

50 ஆண்டுகளில் முதல் முறையாக கை சின்னத்துக்கு வாக்களிக்க முடியாமல் பரிதவித்ததாக சொல்லியுள்ளதுதான் உடான்ஸ்.

1977 பொதுத்தேர்தல் வரை இந்திரா காங்கிரஸ் கட்சியின் சின்னம் "பசுவும் கன்றும்" அத்தேர்தலில் தோற்று 1978 ல் கர்னாடக மாநிலம் சிக்மகளூர் தொகுதியில் இந்திரா அம்மையார் போட்டியிட்ட போதுதான் காங்கிரஸ் கட்சி முதல் முறையாக "கை" சின்னத்தில் போட்டியிட்டது. அப்போது நடந்த தஞ்சாவூர் இடைத்தேர்தலின் போது எம்.ஜி.ஆர் பாடலான "இது நாட்டைக்காக்கும் கை" பாடல்தான் அப்போது நான் படித்த ஊரான திருக்காட்டுப்பள்ளியில் சாலைகளில் ஒலித்துக் கொண்டே இருந்தது.

சோனியா காந்தி முதல் முறையாக 1980 பொதுத்தேர்தலில்தான் கைச்சின்னத்தில் வாக்களித்திருப்பார். அப்படிப்பார்த்தால் 44 வருடங்கள்தான்.

50 என்பது தாக்கம் அதிகமாக இருக்க வேண்டும் என்பதற்காக  சொல்லப்பட்ட பொய்.

இப்படி சொல்லப்படும் பொய்களை சிலர் நம்பவும் செய்கிறார்கள் என்பதுதான் கொடுமை.

இவனுக்கெல்லாம் எந்த பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் கொடுத்தது என்று தெரியவில்லை. கூசாமல் எப்படி பொய் சொல்வது என்று ஆராய்ச்சி செய்து டாகடரேட் வாங்கியிருப்பானோ? விபரம் தெரிந்தால் வேறு சில பொய்யர்கள் கூட டாக்டராகி விடுவார்கள்.

Monday, May 27, 2024

தெய்வக்குழந்தையிடமே பாக்கியை கேட்பீர்களா?

 


தெய்வக்குழந்தை மைசூரில் ரேடிஸன் ப்ளூ  எனும் ஐந்து நட்சத்திர விடுதியில் தன் பரிவாரத்துடன்  தங்கியதற்கான தொகையை செலுத்தவில்லை. அந்த பாக்கி  ஒன்றும் பெரிய தொகையில்லை. 

ஜஸ்ட் எண்பது லட்ச, ரூபாய்தான். அந்த தொகையை கட்டச்சொல்லி ஹோட்டல் நிர்வாகம்,                                               அவர் தங்குவதற்கு ஏற்பாடு செய்த வனத்துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

 என்ன தைரியம் அந்த ஹோட்டல் நிர்வாகத்திற்கு?

 தங்கியது என்ன மனிதப் பிறவியா?

 ஒரு அவதாரம் தன்னுடைய ஹோட்டலில் தங்கியதற்கு பெருமிதப்பட்டு அந்த அறையை அப்படியே கோயிலாக மாற்றி  அந்த பிறவியின் சிலையை பிராண பிரதிஷ்டான் செய்து முட்டாள் சங்கிகளை தரிசனம் செய்ய வைத்திருந்தால் எண்பது லட்சத்தை விட பல மடங்கு ரூபாய் கல்லா கட்டியிருக்கலாம்! அதை விடுத்து பணம் செலுத்த சொல்லி கடிதம் அனுப்பியுள்ளனர்.

 இதனால் என்ன ஆகும் தெரியுமா?

 மனிதப் பிறவியாக இருந்திருந்தால் அமலாக்கப்பிரிவு, வருமான வரித்துறை, சி.பி.ஐ ஆகியவற்றை அனுப்பியிருப்பார். இவருக்கு ஆதரவாக மொட்டைச் சாமியார் யோகியார் புல்டோசரை அனுப்பியிருப்பார்.

 தெய்வப்பிறவி என்பதால்

 திருவிளையாடல் படத்து சிவாஜி போல அவர் கை அசைத்தால் . . . .

 ஹோட்டல் மீது  புயல் வரும், நில நடுக்கம் வரும், இடி மின்னல் தாக்கும், ஏன் கடலே இல்லாத மைசூரில் ஹோட்டலை மட்டும் சுனாமி வந்து தாக்கும்.

 தப்பு பண்ணிட்டாங்களே, இனிமே என்ன ஆகப்போகுதோ?

அது மோடியின் ஆபாச நடனம்

 




தோல்வி பயத்தால் வாய் திறந்தாலே அது பிதற்றல் என்றாகி விட்டது.

முகலாயர் காலத்தில் பாலியல் தொழில் செய்பவர்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் முன்பு குறைந்த ஆடைகளுடன் ஆடும் முஜ்ரா நடனத்தை இஸ்லாமியர்கள் முன்பு எதிர்க்கட்சியினர் ஆடிக் கொண்டுள்ளனர் என்று தெய்வக்குழந்தை சொல்லியுள்ளது.

சொல்லப்போனால் அந்த வேலையை அந்த அவதாரம்தான் செய்து கொண்டிருக்கிறது.

சொகுசான வாழ்விற்காக அதானி, அம்பானி போன்ற முதலாளிகள் முன்பாக,

அதிகாரம் நீடிக்க ஆர்.எஸ்.எஸ் மோகன் பகவத் முன்பாக,

பெரியாள் என்று காட்டிக்கொள்ள உதவ அமெரிக்கா முன்பாக

உளவு பார்க்க உதவி செய்ய இஸ்ரேல் முன்பாக,

பிறவி கோழைத்தனம் காரணமாக சீனா முன்பாக

இப்படி பல பேர் முன்பு சமரச, சரணாகதி நடனம் ஆடும் பரமாத்மா அனுப்பிய ஜந்துவின் நடனத்தை எப்படி அழைப்பது!

தரங்கெட்ட மோடியை ஆதரிக்கிற, ஆதரித்த, ஓட்டு போட்ட, 

ஆட்டுக்காரன் ஜெயிப்பான், ஏ.சி.சண்முகத்துக்குத்தான் வெற்றி என்றெல்லாம் ஆரூடம் சொல்லும் சங்கிகள், ஸ்லீப்பர் செல்கள் என அனைவரையும்கூட  இனிமேல் மனிதர்களாக கருத முடியாது.மோடியின் ஆபாச நடனத்தில் இணைந்திருக்கும் துணை நடன மங்கைகள் என்றுதான் கருத முடியும். 

Saturday, May 25, 2024

ஜட்ஜய்யா சொன்னது நிசமா?

 


நேற்று எந்த ஜட்ஜய்யா பற்றி எழுதினேனோ, அதே ஜட்ஜய்யா பற்றியே இன்றும் எழுத வேண்டியுள்ளது.

அரசியல் புரோக்கர் சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் வழக்கை ரத்து செய்த  ஜட்ஜய்யா அதற்கு சொன்ன காரணம்தான் ரொம்பவும் இடிக்குது.

அவரின் அறையில் இரண்டு அரசியல் முக்கியஸ்தர்கள் சந்தித்து சவுக்கு சங்கர் வழக்கை இன்று எடுத்துக் கொள்ளாமல் ஒத்தி வைக்குமாறு கேட்டுக் கொண்டதாலேயே அவர் இந்த வழக்கை எடுத்துக் கொண்டு குண்டாஸை ரத்து செய்துள்ளதாக சொல்லியுள்ளார்.

சட்டப்படி அவர் என்ன செய்திருக்க வேண்டும்?

என்னுடைய பணியில் இடையூறு செய்கிறார்கள், எனக்கு அழுத்தம் அளிக்கிறார்கள் என்று காவல்துறையில் புகார் அளித்து கைது செய்ய வைத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் இவரே சுமோட்டாவாக வழக்கை பதிவு செய்து கைதுக்கான ஆணையை போட்டிருக்க வேண்டும்.

அதை விடுத்து சீமான் போல கதையளப்பது ஒரு நீதிபதிக்கு அழகல்ல.

இவருடைய ஆர்.எஸ்.எஸ் பூர்வாசிரமம் அறிந்தும் ஆளுங்கட்சி முக்கியஸ்தர்கள் இவரை அணுகினார்கள் என்று சொல்வதெல்லாம் காதில் பூ சுற்றும் வேலை. நீங்கள் சொன்னது நிஜமில்லை யுவர் ஆனர். 

Friday, May 24, 2024

எச்சில் இலையில் ஜட்ஜய்யா முதலில் உருளட்டும்

 


கர்னாடகாவில் உள்ள குக்கே என்ற இடத்தில் உள்ள சுப்ரமணியா  கோவிலில் (இந்திய வங்கிகளை ஏமாற்றி விட்டு லண்டன் ஓடிப் போன விஜய் மல்லய்யா இந்த கோவில் கருவறைக்கு 12 வருடத்திற்கு முன்பு 80 லட்சம் ரூபாய் செலவில் தங்கக்கதவுகள் செய்து அளித்தான் என்பது ஒரு உபரித்தகவல்) ஒரு வினோதமான, பிற்போக்குத்தனமான, அநாகரீகமான பழக்கம் ஒன்று உண்டு. மேட்டுக்குடி ஜாதியினர் சாப்பிட்ட பின்பு அந்த எச்சிலைகள் மீது மற்ற ஜாதியினர் படுத்து உருளுவார்களாம். சரும நோய்கள், குழந்தைப் பேறின்மை ஆகியவை விலகுமாம்.

 


நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்பு அந்த வழக்கத்திற்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.

 இப்போது தமிழ்நாட்டில் அதே பழக்கத்தை கொண்டு வரப்பார்க்கிறார்கள். கரூர் பக்கத்தில் உள்ள நேரூர் என்ற ஒரு ஊரில் சதாசில பிரம்மேந்திரர் ஆஸ்ரமத்தில் இதே எச்சிலைஉருளல் சடங்கை கொண்டு வர, பிரச்சினை உயர் நீதிமன்றம் செல்கிறது. உயர் நீதிமன்ற நீதிபதியானாலும் தன் பூர்வாசிரமான ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் கூட்டங்களில் பங்கேற்கும் அந்த நீதிபதி எச்சிலை உருளலை அனுமதித்துள்ளார்.

 உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் பெஞ்ச், உச்ச நீதிமன்றம் ஆசியோர் வழங்கிய தீர்ப்புக்களுக்கு எதிராக அமைந்துள்ளது இத்தீர்ப்பு. காலம் காலமாக பின்பற்றப்பட்டு வரும் வழக்கங்களை எல்லாம் மாற்ற முயற்சிக்கக் கூடாது என்ற உபதேசத்தையும்  அளித்துள்ளார்.

 தீர்ப்பளித்ததோடு நிறுத்திக் கொள்ளாமல் அவரே முதல் ஆளாக எச்சிலையில் உருள வேண்டும்.

 செய்வாரா?

 பந்தியில் உட்கார்ந்து சாப்பிட வேண்டுமானால் செல்வார், மற்றவர்கள் அவர் சாப்பிட்ட எச்சில் இலையில் உருள . . .

மோடியைக் கேள் முட்டாளே!

 


முதலில் மோடிக்கு நன்றி. இந்த பதிவை எழுத விடாமல் வேறு புதிய கண்டென்ட் எதையும் நேற்று கொடுக்காமல் இருந்தமைக்காக.

மோடி பேசியதை முதல்வர் ஸ்டாலின் திரித்து தமிழக மக்களை குழப்புகிறார் என்று ஆட்டுக்காரன் குற்றச்சாட்டு வைக்க, அனைத்து காவிக்கயவர்களும் அதை வழிமொழிகிறார்கள்.

மோடி சொன்னது என்ன?

பூரி ஜெகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி ஆறு வருடங்களுக்கு முன்பு களவாடப்பட்டு விட்டது. அந்த சாவி தமிழ்நாட்டுக்கு சென்று விட்டது.

இதற்கு என்ன அர்த்தம்?

அந்த பொக்கிஷ அறையின் சாவியை களவாடியது தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அல்லது சாவியை களவாடியர்களுக்கு தமிழ்நாடு அடைக்கலம் கொடுத்துள்ளது.

இதைச் சொன்ன மோடியை கண்டிக்காமல் கொஞ்சவா செய்வார்கள்?

வி.கே.பாண்டியனை மனதில் வைத்து பேசியதாக சங்கிகள் கொடுக்கும் விளக்கம் எல்லாம் அயோக்கியத்தனம். அதை நேரடியாக சொன்னால் மோடி வாயில் அடக்கி வைத்திருக்கும் கொழுக்கட்டை கீழே விழுந்து விடுமா?

சங்கிகள் எல்லாம் முதல்வரை கண்டிப்பதற்கு பதிலாக மோடியின் சட்டையை பிடித்து "ஏன்டா ..........! தமிழ்நாட்டை இழிவு படுத்தினாய்?" என்று கேள்வி கேட்கட்டும்.


Thursday, May 23, 2024

என்ன மோடி செட்டிங்கா????

 


ஒடிஷா தேர்தல் பிரச்சாரத்தின் போது பாஜக பொய்ப்பிரச்சார அணியின் தலைவர் சம்பித் பத்ரா "பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்" என்று வர்ணித்தார். மோடியும் அதனை புன்னகையுடன் பூரிப்புடன் ஏற்றுக் கொண்டார்.

கடுமையான விமர்சனம் எழுந்ததும் சம்பித் பத்ரா அதை" ட்ங் சிலிப்" என்று சமாளிக்கப்பார்த்தார்.

மோடிக்கு ஒடிஷாவில் பெரிய பில்ட் அப் கொடுத்து தனக்கும் மோடியிடம் நல்ல பெயர் வாங்க சம்பித் பத்ரா செய்த நாடகம் என்றுதான் முதலில் நினைத்தேன்.

"நான் இயற்கையாக பிறக்கவில்லை. பரமாத்மாவால் ஏதோ ஒரு காரியத்துக்காக (இந்தியாவுக்கே காரியம் செய்யும் வேலையைத்தான் மோடி பத்தாண்டுகளாக செய்தார் என்பதுதான் உண்மை) பூமிக்கு அனுப்பினார்" என்று மிகப் பெரிய உடான்ஸை மோடி அவிழ்த்து விட்டவுடன்தான்  சம்பித் பத்ரா செய்தது மோடியின் பில்ட் அப் என்பது புரிந்தது.

அடுத்த நாள் மோடி அளக்கப்போகும் மிகப் பெரிய உடான்ஸிற்கு மக்களை மனதளவில் தயார் செய்ய நடத்திய செட்டிங்தான் "பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்" என்ற முன்னோட்டம்.

சம்பித் பத்ராவின் அளப்பும் எடுபடவில்லை. மோடியின் உடான்ஸோ அவரை "தாயை பழித்த தனயன்" என்றாக்கி விட்டது.

அணையப் போகும் நெருப்பு இன்னும் என்னவெல்லாம் சீன் போடுமோ?

Wednesday, May 22, 2024

கமல் கரீக்டாதான் சொன்னாரு மோடி

 


“கடவுள் இருக்காருன்னு சொல்றவங்களை நம்பலாம், கடவுள் இல்லைன்னு சொல்வறங்களையும் நம்பலாம், ஆனா நாந்தான் கடவுள்னு சொல்றவனை மட்டும் நம்பவே நம்பாதே”

இது கமலஹாசனின் வசூல்ராஜா, எம்.பி.பி.எஸ் படத்தின் வசனம்.

“நான் இயற்கையாக பிறக்கவில்லை. ஏதோ காரணத்திற்காக கடவுள் என்னை பூமிக்கு அனுப்பி வைத்துள்ளார்”

என்பது மோடி லேட்டஸ்டாக உதிர்த்த முத்து.

இதன் மூலம் தன்னை ஒரு தெய்வப்பிறவி, அவதாரம் என்று மோடி சொல்லிக் கொள்கிறார். கொஞ்சம் கூட நம்புவதற்கு அருகதையே அற்ற ஜந்து என்பதற்கு மோடியின் இந்த வஜனமே போதும்.

இந்த ஜந்துவை ஏதோ காரணத்துக்காக பூமிக்கு அனுப்பி வைத்த பரமாத்மாவையும் நாம் எப்படி நம்புவது? இறை மறுப்புப் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்கிறார் மோடி.

உண்மையில் பாவம் ஹீரா பென் என்ற அந்த இறந்து போன மூதாட்டியே. ஏழைத்தாயின் மகன் என்ற வஜனத்துக்கு பயன்படுத்தப்பட்டார். பின்பு மோடியின் போட்டோ ஷூட்களுக்கு செட் பராபர்டியாக பயன்படுத்தப்பட்டார். நேற்று வரை கூட அவர் பெயரை தேர்தல் பிரச்சார ட்யலாக்குகளில் இணைத்துள்ளார். இப்போது அவருக்கு பிறக்கவில்லை என்று சொல்கிறார்.

எந்த ஒரு தாய்க்கும் இறப்புக்குப் பிறகு இப்படி ஒரு இழிவு வந்திருக்க வேண்டாம். அவர் அன்று கருக்கொலை செய்திருந்தால் இந்தியாவும் தப்பித்திருக்கும், அவரும் இழிவை தவிர்த்திருக்ககாம்.

அவகாசம் கொடுய்யா மோடி

 


மாலை பதிவாய் எதை எழுத?

சங்கி பொய்ப் பிரச்சார அணியின் தலைவன் சம்பித் பத்ரா, “பூரி ஜெகன்னாதர் மோடியின் பக்தர்” என்று பேசியதை எழுதலாம் என்று நினைத்திருந்தேன்.

அதற்குள்ளாக “பூரி ஜகன்னாதர் கோயில் பொக்கிஷ அறையின் சாவி தமிழ்நாட்டிற்கு போய் விட்டது” என்று மோடி பேசியது பற்றிய தகவலும் அதற்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்வினையாற்றிய தகவலும் கிடைத்தது.

அதை எழுத நினைத்தால் “நான் இயற்கையாக பிறக்கவில்லை, பரமாத்மாவால் அனுப்பி வைக்கப்பட்டவன்” என்று தன்னைப் பற்றி பேசிக் கொண்டது தெரிய வந்தது.

நான் எதைப்பற்றி எழுத மோடி?

ஒரு நாளைக்கு ஒரு கண்டென்ட் போதும். நீர் வேலை வெட்டி இல்லாமல், இருந்தாலும் செய்யாமல் வாய்க்கு வந்ததையெல்லாம் வாந்தி எடுப்பது போல உளறிக் கொண்டிருப்பீர்கள். நாங்கள் என்ன உம்மை மாதிரி வெட்டி ஆபிசரா?

கொஞ்சம் அவகாசம் கொடுத்து பேசுமய்யா . . .

அப்பறம் மோடி, ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு பரமாத்மா அனுப்பிய ஆள் நானென்று ஆன்மீகத்தை பரப்ப போயிடாதய்யா. வலைப்பதிவு எழுத உம்மை மாதிரி யார் கண்டென்ட் கொடுப்பாங்க! எதிர்க்கட்சி தலைவராக சீன் போடுமய்யா!

பிகு: மேலே சொல்லப்பட்ட மூன்று செய்திகளும் தனித்தனி பதிவாக வந்தே தீரும்.

முன்னாள் ஜட்ஜ் அப்படி என்ன சொன்னார்?


 கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்து பாஜகவிற்கு ஜால்ரா அடித்த காரணத்தால் விமர்சனத்துக்கு உள்ளாகி பதவியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து இப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடும் முன்னாள் ஜத் அபிஜித் கங்கோபாத்யாவை மம்தா பானர்ஜியை தரக்குறைவாக பேசியதற்காக தேர்தல் கமிஷன் கண்டித்து ஒரு நாள் பிரச்சாரத்திற்கு தடை விதித்துள்ளது.

"அவரது ஒவ்வொரு வார்த்தையும் நாகரீகத்திற்கு அப்பாற்பட்டது, மட்டமான தன்மையுடையது, கீழ்த்தரமானது, நடத்தை விதிகளுக்கு முற்றிலும் முரணானது"

மோடியின் எடுபிடியான தேர்தல் ஆணையமே ஒரு பாஜக வேட்பாளரைக் கண்டிக்கிறது என்றால் அந்தாள் எவ்வளவு கேவலமாக பேசியிருக்க வேண்டும்!

மோடியின் மொழியில் பேசியிருக்க வேண்டும். அதுதான் எப்போதும் அசிங்கமானது.

இவ்வளவு வக்கிரமான ஒரு ஆள் கொடுத்த தீர்ப்புக்கள் எப்படி இருந்திருக்கும்!

வக்கிர சிந்தனை கொண்ட அயோக்கியர்கள் கூட்டணி சேர்ந்தால் நாம்தாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

Tuesday, May 21, 2024

நாக்கு அழுகிடும் மோடி

 


மோடி இப்போது உதிர்த்த முத்து கீழே உள்ளது.



மோடி சிறுபான்மையினருக்கு எதிராக பேசியதே கிடையாதா?

குஜராத் முதல்வராக இருந்த போது

கலவரத்தில் கொல்லப்பட்டவர்களை “காரின் சக்கரத்தில் அடிபட்ட நாயின் மகன்கள்”  என்றார்

அகதிகள் முகாம்களை “குழந்தைகள் உற்பத்தி தொழிற்சாலை” என்றார்.

பிரதமரான பின்பு

உத்தரப்பிரதேசத் தேர்தலின் போது . . .

“கபர்ஸ்தான்கள் (இஸ்லாமியர்களின் சடலங்களை அடக்கம் செய்யும் இடம்) மின் வசதியோடு ஒளி வெள்ளத்தில் மிதக்கிறது, ஆனால் நம் கோயில்களில் இருள்தான் இருக்கிறது” என்றும்

“இந்த ரயில் விபத்தை எல்லைக்கு அப்பால் உள்ளவர்கள் திட்டமிட்டு இங்கே உள்ளவர்கள் செய்தார்கள்” என்றும் பேசினார்.

இதோ இந்த தேர்தலில்

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                      

 காங்கிரஸ் கட்சி உங்களின் தாலி உட்பட அனைத்து சொத்துக்களையும் பறித்து முஸ்லீம்களுக்கு கொடுத்து விடுவார்கள்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குழந்தை ராமர் கோயிலுக்கு பாப்ரி மசூதி பூட்டு போட்டு பூட்டி விடுவார்கள். 

 காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடித்து விடுவார்கள். குழந்தை ராமர் மீண்டும் கூடாரத்துக்கு போய் விடுவார்.

 முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு கொண்டு வர எஸ்.சி/எஸ்.டி, ஓபிசி இட ஒதுக்கீடுகளை ரத்து செய்ய காங்கிரஸ் திட்டமிடுகிறது.

 காங்கிரஸை முன் வைத்து மோடி விஷம் கக்கியதெல்லாம் இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.

 மோடி கொண்டு வந்துள்ள குடியுரிமைச்சட்டமே இஸ்லாமியர்களுக்கு எதிராகத்தான்.

 இந்த லட்சணத்தில் சிறுபான்மையினருக்கு எதிராக தான் பேசியதில்லை என்று மோடி சொல்வது பொய், பொய்யைத்தவிர வேறில்லை.

 “பொய் சொன்னால் நாக்கு அழுகித்தான் போகும்” என்று அக்காலத்தில் சொல்வார்கள்.

 மோடியின் நாக்கு அழுகும் நாள் இந்தியாவிற்கு நல்ல நாள்.

மோடியின் நாக்கு மட்டுமல்ல, அழுக வேண்டிய அயோக்கியர்களின் நாக்குகள் இன்னும் நிறையவே இருக்கிறது.

Monday, May 20, 2024

பழைய வஜனம் அமித்து

 



காஷ்மீரில் வாக்குப் பதிவு 28 % லிருந்து 34 % ஆக உயர்ந்திருப்பது அங்கே அரசியல் சாசனப் பிரிவு 370 நீக்கப்பட்டதற்கு கிடைத்த அங்கீகாரம் என்று பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித்ஷா கூறியுள்ளார்.

 என்னமோ வாக்குப்பதிவு 100 % வந்து விட்டது போல அமித்ஷா  சீன் போடுகிறார். வெறும் ஆறு சதவிகித உயர்வு, அதுவும் நாற்பது சதவிகிதத்தைக் கூட எட்டவில்லை.

 அதிக வாக்குப்பதிவு தங்கள் ஆட்சிக்குக் கிடைத்த வெற்றி என்று அமித் சொல்லும் போது எனக்கு வேறு ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது. எண்பதுகளின் இறுதியி;ல் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நீண்ட காலத்திற்குப் பிறகு தேர்தல் நடக்கிறது. அத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போய் தேசிய மாநாட்டுக் கட்சி ஜெயித்தது.

 காங்கிரஸ் என் வெற்றிபெறவில்லை என்று அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த கருப்பையா மூப்பனாரிடம் பத்திரிக்கையாளர்கள் கேட்கிறார். “யார் சொன்னது காங்கிரஸ் வெற்றி பெறவில்லை என்று? தீவிரவாதப் பிரச்சினை உள்ள காஷ்மீரில் தேர்தலை நடத்தியதே  காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வெற்றிதான் தெரியுமா?” என்று திருப்பிக் கேட்டார்.

 அதே வஜனத்தைத்தான் அமித்து பட்டி டிங்கரிங் பார்த்து பேசியுள்ளார். காஷ்மீர் மக்கள் 370 பிரிவு நீக்கப்பட்டத்தை ஆதரிக்கிறார்களா இல்லையா என்பதெல்லாம் இப்போது தெரியாது. இன்னும் சொல்லப் போனால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நின்றால் மக்கள் தோற்கடித்து விடுவார்கள் என்று அஞ்சி பாஜக அங்கே போட்டியிடவே இல்லை.

 ஜம்மு பகுதியில் பாஜக நிற்பதை கணக்கில் கொள்ள முடியாது.  பாஜக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் நின்று வெற்றி பெற்றிருந்தால் காஷ்மீர் மக்கள் 370 நீக்கத்தை ஆதரிக்கிறார்கள் என்று சொல்ல முடியும்.  அவர்கள் அங்கே போட்டியிட பயந்து நடுங்கி ஓடியதே அம்மக்கள் 370 பிரிவு நீக்கத்தை எதிர்க்கிறார்கள் என்பதை பாஜக உணர்ந்து கொண்டதால்தான் . . .

 ஆக அமித்து காப்பியடித்த வஜனம் கூட ஜூம்லாதான் . . .

 

இரான் ஜனாதிபதி மரணம் சதியா?

 


இரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைஸி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்து விட்டார்.

ஹெலிகாப்டர் விபத்து என்ற செய்தி கிடைத்த போது அவர் நலமுடன் திரும்ப வாய்ப்பு குறைவு என்றே நினைத்தேன். ராஜசேகர் ரெட்டி, பிபின் ராவத் ஆகியோர் கண் முன்னே வந்து போனார்கள்.

நடந்தது விபத்துதானா?

அவர் மீது இரண்டு நாடுகளுக்கு கோபம் உண்டு.

அமெரிக்கா நிரந்தர பகை நாடு. போதாக்குறைக்கு உக்ரைன் மண்ணிலிருந்து ரஷ்யா மீது அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கும் போரில் அவர் ரஷ்யாவிற்கு ஆதரவாக இருந்துள்ளார். ஆயுதங்கள் வேறு அனுப்பியுள்ளார். அணுசக்தி சோதனையும் முடியும் தருவாயில் உள்ளது. இரானுடன் உறவு கொண்டு ஒரு ஒப்பந்தத்தை நிறைவு செய்தமைக்கு இந்தியாவை வேறு அமெரிக்கா மிரட்டியுள்ளது.

பாலஸ்தீனத்தின் மீது அராஜகத் தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கும் இஸ்ரேலின் மீது சில நாட்கள் முன்பாகத்தான் இரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

மூன்று ஹெலிகாப்டர்கள் சென்றுள்ள போது இவர் சென்ற ஹெலிகாப்டர் மட்டும் விபத்துக்குள்ளானது அது சதியோ என்ற சந்தேகத்தை தருகிறது.

இஸ்ரேலா? அமெரிக்காவா? அல்லது இருவரும் இணைந்தா?

பதில் கிடைக்காத மர்ம மரணங்களில் ஒன்று கூடுகிறது என்பதுதான் உண்மை.

ஒரு சங்கியின் வடிவேல் வாய்

 


கீழே உள்ளது ஒரு சங்கியின் ட்விட்டர் பக்கத்திலிருந்து எடுத்தது. சங்கி பிரின்ஸ் என்று பெருமையாக தன்னை அழைத்துக் கொள்ளும் பிரவீணாஜ் எனும்  இந்த பையன் பாஜக மாநில ஐ.டி செல்லின் பொறுப்பாளராம்.


மோடியின் வேடத்தில் சத்யராஜ் நடிப்பதான தகவல் வந்ததும் அவரை திட்டினாலும் "நடிக்கிறார்" என்று கொடுக்கப்பட்ட மரியாதை, அதெல்லாம் வதந்தி, நான் அப்படியெல்லாம் நடிக்க மாட்டேன் என்று சத்யராஜ் மறுத்ததும் எப்படி மாறுகிறது பாருங்கள்.


"சொல்லி விட்டான்" என்று மாறி விட்டது.

இந்த பையனுக்கு  வெறும் 27 வயது. அதற்குள்ளாக எவ்வளவு கேவலமான மொழி பாருங்கள். இதுதான் பாஜக இளைஞர்களை தரக்குறைவாக வளர்த்தெடுத்துள்ள லட்சணம். வயது அதிகமாக அதிகமாக இந்த பையன் மொழி எவ்வளவு அசிங்கமாக, ஆபாசமாக மாறும் என்று நினைத்தால் எதிர்கால சமூகத்தை நினைத்தால் அச்சமாக இருக்கிறது.

அதென்ன வடிவேல் வாய் என்று கேட்கிறீர்களா? அந்த கருமத்தை என் வாயால் சொல்ல வேண்டுமா? மேலே உள்ள படத்தை பார்த்தால் உங்களுக்கே தெரியும்!

Sunday, May 19, 2024

மோடி மீது எப்போது ஈ.சி?

 


இன்றைய ஆங்கில இந்து நாளிதழ் செய்தி கீழே.

மத ரீதியில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் ஹூமாயுன் கபீர் மீது நடவடிக்கை எடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

ஓகே.

சபாஷ்.

பாராட்டுக்கள்.

பட்,

இதையெல்லாம் அன்றாடம் மத வெறியை தூண்டி விஷத்தை கக்கி எழவு கொட்டிக்கொண்டிருக்கும் மோடி மீதும் நடவடிக்கை எடுத்தால்தான் பொருந்தும்.

அது எப்போது (விலைக்கு வாங்கப்பட்ட( தேர்தல் ஆணையர்களே?

Saturday, May 18, 2024

அமித்தை கவனியுங்கள் ஜட்ஜய்யா

 


அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பிணை கொடுத்ததை விமர்சித்துள்ளார் பில்லா ரங்கா கிரிமினல் கூட்டாளிகளில் இளைய கூட்டாளியான அமித்ஷா.

என்னவென்று தெரியுமா?

கேஜ்ரிவாலுக்கு மட்டும் சிறப்புச் சலுகை கொடுத்துள்ளார்கள் (Special Treatment) .தேர்தல் பிரச்சாரம் செய்வதற்கெல்லாம் பிணை கொடுப்பது என்பது ரொம்ப ஓவர். நீதிபதிகள் அவருக்கு பிணை கொடுத்தது இதுவரை நீதித்துறையில் காணாத ஒன்று. 

நீதிபதிகளின் தீர்ப்பிற்கு உள்ளர்த்தம் கற்பிப்பது நீதிமன்ற அவமதிப்பில் வராதா ஜட்ஜய்யாக்களே?

கொஞ்சம் சுமோட்டாவாக அமித்ஷாவை கவனியுங்களேன்.

ஞாபக மறதி - வரமா? சாபமா?

 


நேற்று முகநூலில் ஒரு தோழர் தன்னுடைய ஞாபக மறதி அனுபவங்களை ஞாபகமாக பகிர்ந்து கொண்டிருந்தார். அதைப் படித்ததும் ஞாபக மறதியின் விளைவால் நடந்த ஒரு நிகழ்வு ஞாபகத்துக்கு வந்து விட்டது.

நான் நெய்வேலியில் பணியில் சேர்ந்த காலம். ஒரு சக ஊழியர் டீக்கடைக்குச் செல்ல என்னுடைய சைக்கிளை வாங்கிச் சென்றார். டீ குடித்து விட்டு வந்து சைக்கிள் சாவியை ஞாபகமாக கொடுத்து விட்டே அவரது இருக்கைக்குச் சென்றார்.

மாலை அலுவலகம் முடிந்து வீடு திரும்ப வாசலுக்கு வந்தால் சைக்கிளைக் காணவில்லை. அலுவலகத்தின் நான்கு புறங்களைத் தேடியும் கிடைக்கவில்லை. 

போலீசில் புகார் கொடுக்கலாம், கொடுத்தால் பயனிருக்காது, சைக்கிள் அட்வாஸ் போட்டு புதிய சைக்கிள் வாங்கலாம்  என்று ஆலோசனை மழையில் நனைந்து கொண்டிருந்தேன்.

அப்போது வெளியிலிருந்து உள்ளே நுழைந்த இன்னொரு ஊழியர், "ஜி.ஹெச் எதிரில் உள்ள டீக்கடையில் உன் சைக்கிள் உள்ளது" என்று சொல்லி வயிற்றில் பாலை வார்த்தார். அவசரம் அவசரமாக போய் சைக்கிளை எடுத்துக் கொண்டேன்.

சைக்கிளில் டீக்கடைக்குச் சென்றவர் அதை மறந்து நடந்து திரும்பி வந்தவர், சாவியை மட்டும் ஞாபகமாக கொடுத்து விட்டார்.

என்னுடைய வரமும் சாபமும் ஞாபக சக்திதான்.

ஒரு தொழிற்ச்சங்கப் பொறுப்பாளராக ஞாபக சக்தி மிகப் பெரிய வரம். அதுவும் மாறுதல்கள் போன்றவை எந்தெந்த காலத்தில் எந்த சூழலில் நடந்தது என்பதெல்லாம் நினைவுகளின் அடுக்கில் இருப்பது எப்போதுமே ஊழியர்களுக்கு பலன்களை பெற்றுத்தர உதவிகரமாக இருக்கும். சங்கத்தின் வரலாற்றினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லவும் உதவும்.

சமீபத்தில் இரண்டு நூல்களை கொண்டு வந்தோம். ஐம்பதாண்டுகள் முன்பு நடந்த லாக் அவுட் போராட்டம் குறித்து ஒரு நூல், எங்கள் கோட்டத்து மகளிர் இயக்க நடவடிக்கைகள் குறித்து இன்னொரு நூல். இரண்டு நூல்களை தொகுக்கவும் ஞாபக சக்திதான் கை கொடுத்தது. 

அந்த வகையில் ஞாபக சக்தி வரமே . . .

அதே நேரம் சில நிகழ்வுகள் நினைவில் நிற்பது சாபமே. அது பிரச்சினையில்லை. நாகரீகம் கருதி போலித்தனங்களை பேச முடியாது வாயை மூடிக்கொண்டிருக்கும் சூழல்தான் சாபம். 

நான் சிலவற்றை, சிலரை மன்னித்து விடுவேன். ஆனால் எந்நாளும் மறக்க மாட்டேன். 



Friday, May 17, 2024

பொய்யன், வெறியனை துரத்தியடியுங்கள்

 


பதவி மோகத்தில் பொய் பேசி மத வெறியை கிளப்பும் மோடியை அரசியல் அரங்கத்திலிருந்து துரத்தியடிக்க வேண்டும் என்பதற்கு இந்த ஒரு பேச்சு போதும்.

இந்திய மக்களே, பொய்யனை நம்பால் உண்மையின் பக்கம் நில்லுங்கள். மோடிக்கு விழும் அடி பதவி மோகத்தில் பொய்களை பேசி பிரிவினையை தூண்டும் அனைத்து அயோக்கியர்களுக்கும் பாடமாக அமைய வேண்டும். இவர்களுக்கு முட்டு கொடுப்பவர்கள் வெட்கி தலை குனிய வேண்டும். 

Thursday, May 16, 2024

நடிகர் திலகம் என்னை மன்னிப்பாராக . . .

 


திரையில் கோமாளியாய் நடித்த நடிகர் திலகத்தின் படத்தோடு அரசியல் கோமாளி மோடியின் படத்தை இணைத்தமைக்கு நடிகர் திலகம் என்னை மன்னிப்பாராக! 

மோடி அணிந்துள்ள கோமாளி தொப்பி  எனக்கு "ஜின்னுக்கான் சிக்கான் சிக்கான்"  பாடலைத்தானே நினைவு படுத்தியது! நான் என்ன செய்ய?

இஸ்ரேல்னா கொயட்டா மோடி?

 


இஸ்ரேல் ராணுவத்துக்கு தகவல் கொடுத்து விட்டு பாலஸ்தீன நகர் ராஃபாவில் மருத்துவமனை நோக்கி சென்று கொண்டிருந்த ஐ.நா.சபை வாகனங்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அதிலே பலர் இறந்து போயுள்ளனர்.  இந்திய ராணுவ அதிகாரியாக இருந்து ஐ.நா பாதுகாப்புப் படையில் இணைந்த அனில் காலே என்ற இந்திய குடிமகனும் கொல்லப்படவர்களில் ஒருவர்.

ஐ.நா மீது நடத்தப்பட்ட தாக்குதலையோ அதிலே இந்தியர் கொல்லப் பட்டதையோ கண்டித்தோ

இந்தியர் ஒருவர் கொல்லப்பட்டதற்கு வருத்தம் தெரிவித்தோ

இந்தியப் பிரதமரோ புத்திசாலி மந்திரி என்று முட்டாள் சங்கிகள் அளந்து கொண்டிருக்கிற ஜெய்சங்கரோ வாய் திறக்கவே இல்லை.

"எங்க உதவியோடதான் எதிர்க்கட்சி தலைவர்களை, ஊடகவியலாளர்களை உளவு பார்த்தாய், ஏதாவது பேசினால் நடப்பதே வேறு. கொயட்டா இருக்கனும்"

என்று இஸ்ரேல் அந்த 56 இஞ்ச் மாகோழையை (மாவீரனுக்கு எதிர்ப்பதம் மாகோழை. இதை நான்தான் கண்டுபிடித்தேன் என்று ஜெயமோகன் மாதிரி உரிமை கொண்டாட மாட்டேன்) மிரட்டி விட்டது போல.

அதனால்தான் அனைவரும் கொயட்டா இருக்காங்க . . .


Wednesday, May 15, 2024

அசிங்கப்படுத்திட்டாங்களே மோடி

 


இன்று நான் பார்த்து ரசித்த மீம் நீங்களும் ரசித்து சிரிக்க . . .

பிரதமர் வேலையைத் தவிர மற்ற வெட்டி வேலைகளைப் பார்த்தால் மோடி அசிங்கப்படுவது தொடர்ந்து கொண்டே இருக்கும்.

பிகு:   சங்கிகளின் வன்மத்திலிருந்து பாதுகாக்க  ஒரிஜினலாக எழுதியவர் பெயரை நான் மறைத்து விட்டேன்.

தமிழ் சினிமாவை யார் அழிக்கிறார்கள்?

 


சியல்லோ கார்களை எல்லாம் பள்ளத்தாக்கில் கவிழ்த்து அழிப்பதுதான் பிரம்மாண்டம் என்று நினைத்து கே.டி.குஞ்சுமோனை கடனாளியாக்கி திரை உலகத்திலிருந்து துரத்திய பிரவீண் காந்த் என்ற இயக்குனர் பேசிய ஒரு காணொளியையும் கவுண்டன்பாளையம்  என்ற படத்தின் ட்ரெய்லரையும் பார்க்க     நேரிட்டது.

இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமா ரொம்பவும் சூப்பரா சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளதாக, மக்களின் பிரச்சினைகள பேசி விவாதித்தது போலவும் வெற்றி மாறன், பா.ரஞ்சித் ஆகியோர் படமெடுக்க ஆரம்பித்த பின்புதான் தமிழ் சினிமா அழிந்து கொண்டிருப்பதாக அந்த மனிதனின் பேச்சு அமைந்திருந்தது.

விஜயினுடைய மொக்கைப்படங்களாக பலரும் சுறா, வில்லு, குருவி என்று சொல்வார்கள். என்னைப் பொருத்தவரை அப்படங்களை விட மிகவும் மொக்கையான படங்கள் திருப்பாச்சியும் சிவகாசியும். அதே மாதிரி அஜித்தின் திருப்பதி இன்னொரு கொடுமை. இந்த படங்களை எல்லாம் எடுத்த பேரரசு இயக்கிய கவுண்டன் பாளையம் படம் தொடர்பான நிகழ்ச்சியில்தான் பிரவீன் காந்தி பேசியுள்ளார்.

அப்போ அந்த படம் என்ன தமிழ் சினிமாவை அழிவிலிருந்து காப்பாற்ற வந்த அபூர்வ தேவதையா?

மருத்துவர் ஐயாக்களின் அபாண்டமான குற்றச்சாட்டுக்களுக்கான நாடகக் காதல் என்பதை மொக்கையாக சொல்கிறது ட்ரெய்லர். ஓசிகே கட்சி என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை வம்புக்கு இழுக்கிறது. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களை காம வெறியர்களாக சித்தரித்து பாலியல் வன்புணர்ச்சி செய்பவர்களாக காண்பிக்கிறது.

இரண்டு நிமிட ட்ரெய்லரிலேயே இரண்டு லாரி விஷத்தை கக்குகிறார்கள். அப்பட்டமாக தலித் மக்கள் மீது மற்றவர்கள் வெறுப்படைவது போல ஆதிக்க ஜாதி வெறியை ஊட்டுகிறார்கள்.

பேரரசு ஒரு பாஜக உறுப்பினர். பிரவீன் காந்த் ரஜினி கட்சி ஆரம்பித்திருந்தால் அதன் கொபசெ ஆகியிருப்பார். இத்திரைப்படத்தில் நடிக்கும் ரஞ்சித் வாயைத் திறந்தாலே பிற்போக்குத்தனத்தை வாந்தி எடுப்பார்.

இவர்கள் யாரை குறை சொல்லுகிறார்கள்?

பஞ்சமி நிலத்தை ஆக்கிரமிப்பு செய்த ஆண்டைகளையும் வெண்மணி தீயில் விவசாயத்தொழிலாளர்களை கொளுத்திய பண்ணையார்களையும் இருக்கும் சொற்ப நிலத்தையும் பறிக்க துடிக்கும் எஜமானர்களை அசுரன் என்ற அற்புதமான படத்தில் அம்பலப்படுத்திய வெற்றிமாறனை. ஒடுக்கப்பட்ட மக்களின் வலியை திரையில் வெளிப்படுத்துவர்களை.

இது இவர்களின் குரல் மட்டுமல்ல. ஒட்டு மொத்த சங்கிகளின் குரல், சனாதனவாதிகளின் குரல், ஜாதிய மேலாதிக்கத்தை நிலை நிறுத்த வெறி கொண்டலையும் ஆதிக்க சக்திகளின் குரல். பொது வெளியில் உரக்க ஒலிக்கும்  ஒடுக்கப்பட்டோரின் உரிமைக்குரல்  திரையில் ஒலிக்க்க் கூடாது என்று விரும்புகிற பிற்போக்குத்தனமாவர்கள்.

தமிழ் சினிமா இது போன்ற கூட்டணிகளால்தான் நாளை நிச்சயம் அழிவும். ஆனால் இந்த கூட்டணியும் கட்டாயம் அழிந்து போகும், இந்த கூட்டணி மட்டுமல்ல எல்லா கிரிமினல் கூட்டங்களும் கூட்டுக் களவாணிகளும்  நிச்சயம் அழிந்து போவார்கள்.

Tuesday, May 14, 2024

தசாவதாரச் சண்டை இப்போது கோர்ட்டில்

 


கமலஹாசன் நடித்த தசாவதாரம் படம் நினைவில் உள்ளதா?  துவக்கக் காட்சிகள்?

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஒரு பகுதியாக இருக்கிற கோவிந்தராஜர் கோயிலின் மூலவரை சைவர்கள் சோழ மன்னனின் ஆதரவோடு அங்கேயிருந்து அகற்றி கடலில் எறிவார்கள். போனசாக ஓம் நமச்சிவாய என்று சொல்ல மறுக்கும் ரங்கராஜன்நம்பியையும் சேர்த்து எறிவார்கள்.

திரைப்படம் சொன்ன காலத்திலிருந்த  சைவ – வைஷ்ணவர்கள் இன்னும் ஓயவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்தான் கோவிந்தராஜர்   கோயில் இப்போதும்

உள்ளது.

நடராஜர்  கோயில்    பொது தீட்சதர்கள்        கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்போது என்ன பிரச்சினை?

கோவிந்தராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த வேண்டும் என்று காலம் காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடராஜர்தான் இங்கே பெரும் கடவுள், கோவிந்தராஜர் துணைக்கடவுள்தான். துணைக்கடவுளுக்கெல்லாம் பிரம்மோத்ஸவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் மறுக்கிறார்கள்.

பிரச்சினை உயர் நீதிமன்றத்துக்கு போய் விட்டது.  நடராஜர் கோயில் வளாகத்திற்குள் இருப்பதால் கோவிந்தராஜர் ஒன்றும் துணைக்கடவுள் அல்ல, அவரு வேற, இவரு வேற. கோவிந்தராஜருக்க்கே கட்டுப்பட்ட துணைக் கடவுள்கள் உண்டு. அந்த கோயில்கள் எல்லாம் தனியாக வேறு இடங்களில் உள்ளதென்று கோவிந்தராஜருக்கு ஆதரவான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லியுள்ளது?

பொது தீட்சிதர்களோடு பேசி சமாதானத்திற்கு  முயற்சிக்குமாறு இந்து அறநிலையத் துறைக்கு அறிவித்துள்ளது.

அப்படியெல்லாம் சமாதானத்துக்கு வருபவர்களா அவர்கள்! ராஜராஜ சோழனுக்கே தண்ணி காட்டியவர்கள் அல்லவா!

இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கென்றே அவதாரமெடுத்துள்ளதாக பீற்றிக் கொள்ளும் பாஜகவினர் யார் பக்கம்? சைவ-வைஷ்ணவ ஒற்றுமை அவர்களால் சாத்தியமாகுமா?

வாயை மூடிக் கொண்டு ஓடி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தம்.  நடராஜர் கோயில் அதிகாரத்தை தீட்சிதர்களிடமிருந்து பறித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது இன்னொரு யதார்த்தம்.

 

சப்ஜெக்ட்(ஆரென்.ரெவி) உயிரோடதான் இருக்கு

 


தேர்தல் அறிவிப்பு வந்த காலத்தில் இருந்து ஆட்டுத்தாடி ரெவியின் சத்தம் கேட்கவேயில்லை. நீ ஏதாவது கன்னாபின்னா என்று பேசினால் இருக்கும் அல்ப ஓட்டு கூட விழாது  என்று ரெவியின் கையைப் பிடித்துக் கொண்டு இதை காலாக நினைத்துக் கொள் என்று கெஞ்சியிருப்பார் என்று நினைத்திருந்தேன்.

அப்படியெல்லாம் நான் காணாமல் போகவில்லை. சக சங்கிக்காக வர வேண்டிய நேரத்தில சரியா வருவேன் என்பது போல "நானா ஆட்டுக்காரன் மேல வழக்கு தொடுக்க அனுமதி கொடுப்பேன்" என்று பதறிப் போய் அறிக்கை கொடுத்து விட்டார்.



ஆமாம், யாரு இந்த ஆட்டுக்காரன்?

முதல்வரா? மந்திரியா? எம்.பி யா? எம்.எல்.ஏ வா? கவுன்சிலரா?

ஒரு எழவும் கிடையாது.

ஐ.பிஎஸ் பதவியை பாதியில் ராஜினா செய்து விட்டு ஓடி வந்த கிரிமினல்.

இந்தாள் மீது வழக்கு பதிவு செய்ய எதுக்கு கவர்னர் அனுமதி கொடுக்கனும்? அவசியமே கிடையாதே! உங்க அதிகாரிகளில் காவி ஊடுறவல் நடந்துள்ளது. அதனால்தான் இப்படி செய்திகளை வெளியிட்டு கோமாவில் இருந்த சப்ஜெக்டை எழுப்பி விட்டுட்டாங்க. 

இப்படித்தான் கோமாவில் பல சப்ஜெக்டுங்க நாட்டில் கிடக்குது. தப்பான நேரத்துலதான் அதுக்கெல்லாம் உணர்வு வரும், முழிப்பு வரும்.  அதையெல்லாம் எதுக்கு நான் என் வாயால சொல்லிக்கிட்டு. 

Monday, May 13, 2024

அய்யோ! மாலனுக்கு எம்பூட்டு அறிவு?

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் பக்கத்தில்தான் கீழேயுள்ள படத்தைப் பார்த்தேன். மூத்த்த்த்த்த்த்த வார்த்தை வணிகர் மாலன் அதற்காற்றிய எதிர்வினையையும் பற்றியும் படித்தேன். அதனால் தோழர் விஜயசங்கர் குறிப்பிட்டிருந்த திரு அகிலன் கண்ணன் அவர்களின் பக்கத்திற்கே சென்றால் மாலனின் அறிவைக் கண்டு அப்படியே அசந்து போய் விட்டேன்.

 


நான் பெற்ற இன்பம், பெறுக இவ்வையகமும் என்ற நல்லெண்ணத்தில் அந்த படம் தொடர்பாக  நடந்த உரையாடலும் கீழே.

 




மாலன் அறிவாளி என்று நிஜமாகவே வியக்கிறேன். அறிவு இருப்பதால்தான் படம் சொல்லும் செய்தி மத வெறியை உசுப்பேற்றி கீழ்த்தரமாக பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிற மோடியைத்தான் இந்த படம் நக்கலடிக்கிறது என்பதை  புரிந்து கொண்டுள்ளார். அவரைப் போலவே மற்றவர்களும் புரிந்து கொள்வார்கள் என்பதையும் அவர் அறிந்து கொண்டு விட்டார். அதனால்தான் அதை திசை திருப்ப பிரெட் ஆம்லட் என்று ஒரு முட்டாள்தனமான கேள்வியோடு வந்து விட்டார்.

 

கொடுத்த காசுக்கு மேல் கூவுகிறார் மாலன்.