சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Saturday, July 31, 2021
வேலத்து லட்சுமிக்குட்டி அம்மா
Friday, July 30, 2021
சார்பட்டா பரம்பரை – சர்ச்சைகளையும் தாண்டி.
சார்பட்டா பரம்பரை படத்தை சனிக்கிழமையன்று பார்த்தோம். இரவு உணவுக்காக எடுத்துக் கொண்ட இடைவேளை மட்டும்தான். இதற்கு முன்பு ஓ.டி.டி யில் பார்த்த திரைப்படங்கள் த்ரிஷ்யம் 2 மற்றும் மூக்குத்தி அம்மன். த்ரிஷ்யம் 2 நாள் முழுதும் பார்த்தால் மூக்குத்தி அம்மனை நாலு நாள் பார்த்தேன். படம் சுவாரஸ்யமாக இருந்ததால்தான் இது சாத்தியமானது.
அப்படியே வந்தாலும் கூட, இது போன்ற எதிர்மறை கருத்துக்களை
இவர்களே திட்டமிட்டு உருவாக்கி அந்த படைப்பை முடக்கி விடும் ஆபத்து உள்ளது.
அதற்காகவேதான் திரைப்பட தணிக்கைச் சட்டங்களில் மாற்றங்களை
உருவாக்கவும் முயற்சிக்கிறார்கள்.
அவை பற்றிய ஒரு விரிவான பதிவை நாளை பகிர்ந்து கொள்கிறேன்..
Thursday, July 29, 2021
வடிவேலு இன் சார்பட்டா பரம்பரை
முகநூலில் இருந்து
எடுத்தது. நான் யாரிடமிருந்து சுட்டேனோ,, அவர் இன்னொருவரிடமிருந்து சுட்டதாக குறிப்பிட
அவரும் தன் பதிவே சுடப்பட்டது என்று சொல்லியிருந்தார். அதனால் முகமறியாத அந்த படைப்பாளிக்கு
வாழ்த்துக்கள்.
நம் அடுத்த வெளியீடு
சார்பட்டா பரம்பரை
– சர்ச்சைகளையும் தாண்டி . . .
துக்ளக் துர்வாசரின் துர்நாற்றக் கட்டுரை
கீழடி போன்ற தொல்பொருள் ஆய்வுகள் தண்டச் செலவு என்றும் அதனால் தமிழர்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்று துர்வாசர் என்ற பெயரில் யாரோ ஒரு கிறுக்கர் துக்ளக்கில் கட்டுரை எழுதியுள்ளார்.
சமீபத்தில் கி.ரா இறந்து போன போது அற்பத்தனமாக எழுதிய வண்ண நிலவன் முன்பு துர்வாசர் என்ற பெயரில் துக்ளக்கில் மக்கள் விரோத கட்டுரைகளை எழுதிக் கொண்டிருந்தார்.
இந்த துர்வாசர் அவரா இல்லை வேறு புதியவரா என்று தெரியவில்லை. யாராக
Wednesday, July 28, 2021
ஜாதிச் சாக்கடையில் புரளும் ஜெமோ
கீழே
உள்ளது புளிச்ச
மாவு ஆஜானின்
இணையப் பக்கத்தில்
ஆ.பாரி
என்ற பெயரில்
பதிவாகியுள்ள ஒரு
செல்ஃபி கேள்வி.
மொட்டைக்கடிதாசி போல தானே
கேள்வி எழுதும்
கேவலமான பழக்கத்தை
ஜெமோ என்று
கைவிடப் போகிறாரோ?
-------------------------------------------------------------------------------------
ஆனால் அவர்களை இன்று இடைநிலைச் சாதியைச் சேர்ந்த குஞ்சுகுளுவான்களெல்லாம் அலட்சியமாக விமர்சனம் செய்கிறார்கள். அவர்களின் தகுதியை மட்டம் தட்டுகிறார்கள். அவர்களுக்கு ஆலோசனை சொல்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு வழிகாட்டி அழைத்துச்செல்லவேண்டுமென நினைக்கிறார்கள். அது வேண்டுமென்றே செய்வது இல்லை. உண்மையிலேயே அவர்களுக்கு அந்த தெனாவெட்டு இருக்கிறது. நம்பித்தான் செய்கிறார்கள்.
அந்த தோரணையுடன் பேசுபவர்கள் யாரெல்லாம் என்று பார்த்தால் நீங்கள் குறிப்பிட்ட புலியூர் முருகேசன், யமுனா ராஜேந்திரன், யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டுடியோ அருண் போன்றவர்கள் அவர்களெல்லாம் என்ன எழுதியிருக்கிறார்கள்? என்ன ஆய்வுசெய்திருக்கிறார்கள்? என்ன வாசித்திருக்கிறார்கள்? வெறும் முகநூல்வம்பாளர்கள். பழங்காலத்தில் ஐம்பது வயதான தலித் முதியவரை பத்துவயதான ஊர்க்காரப் பையன் அடா புடா என அழைப்பான். அதே மனநிலைதான் இது.
------------------------------------------------------------------------------------
அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிறார் ஜெயமோகன். உண்மையில் அவர் எழுத்திலும் செயலிலும்தான் ஜாதி வெறி மேலோங்கி இருக்கும். ஆனால் அவர் தோழர் யமுனா ராஜேந்திரன், தோழர் புலியூர் முருகேசன் மற்றும் யுவகிருஷ்ணா, தமிழ் ஸ்டூடியோ அருண் ஆகியோர் மீது ஜாதி வெறி பிடித்தவர்கள், தலித் எதிரிகள் என்று சகதியை அள்ளி வீசுகிறார்.
சீமானைப் போல, நாம் தமிழர் தம்பிகளைப் போல இவரும் அவர்களுடைய ஜாதி என்னவென்று டி.என்.ஏ ஆராய்ச்சி செய்வார் போல இருக்கிறது. இவரை தோலுரித்த நூலின் மையப்புள்ளி தோழர் யமுனா ராஜேந்திரன், அதிலே ஒரு கட்டுரை எழுதியுள்ள தோழர் புலியூர் முருகேசன் ஆகியோர் மீது இவர் வெறுப்பாக இருக்க அனைத்து காரணங்களும் உண்டு. இதிலே தோழர் புலியூர் வேறு இவரது குண்டர் படை லட்சுமி, வெண்பா ஆகியோர் பதிவுகளில் அவ்வப்போது நக்கலாய் பின்னூட்டம் போடுவார். யுவகிருஷ்ணா இவரை சமீப காலத்தில் சீண்டியதாக நினைவில்லை. அருணுக்கும் இவருக்கும் என்ன பஞ்சாயத்தோ?
கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் இப்படி ஜாதி மோதலுக்கு அடித்தளமிடும் இந்த அற்பப் பதர்தான் எப்போதும் "அறம், அறம்" என்று கூச்சலிடுவது எவ்வளவு பெரிய நகை முரண்!