Wednesday, January 31, 2018

தமிழகத்தை பழிவாங்கவே . . .மோடி

ஆவடி ராணுவ சீருடை தொழிற்சாலைக்கும் பூட்டு





சென்னை, ஜன.30 -
தமிழகத்தில் செயல்பட்டு வரும் மத்தியஅரசின் நிறுவனங்களை மூடும் வேலையில் மோடி அரசு இறங்கியிருப்பது, தொழிலாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

நாட்டு விடுதலைக்கு பின்பு தொழிற்சாலைகள் அனைத்தும் வடமாநிலங்களிலேயே அமைக்கப்பட்ட சூழலில், மிகப் பெரியபோராட்டங்களுக்குப் பின், சில தொழிற் சாலைகள் தமிழகத்திற்கும் வந்தன. திருச்சிபெல், சேலம் உருக்காலை, துப்பாக்கிச் தொழிற்சாலை, ரயில்பெட்டி தொழிற்சாலை, நெய்வேலி நிலக்கரிக் கழகம் என்று கடந்த 50 ஆண்டுகளில் அது வளர்ந்தது.

ஆனால், மத்திய பாஜக அரசு ஆட்சிக்குவந்ததில் இருந்து, தமிழகத்தில் உள்ள மத்தியஅரசின் நிறுவனங்களை ஒவ்வொன்றாக மூடிவருகிறது.ஏற்கெனவே, கோவை கரும்பு ஆராய்ச்சிநிலையம், திருச்சி வாழை ஆராய்ச்சி நிலையம், சென்னை உவர்நீர் மீன் வளர்ப்பு ஆராய்ச்சி நிலையம் ஆகியவற்றையும் மூடப்போவதாக மத்திய அரசு அறிவித்திருந்தது.

இந்த வரிசையில் சென்னையை அடுத்தஆவடியில் 56 ஆண்டுகாலம் இயங்கி வந்த ராணுவ சீருடை தயாரிப்பு ஆலையையும் தற்போது மூட முடிவெடுத்து இருக்கிறது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.மத்திய அரசின் தொழிற்சாலைகளில் வடமாநிலத்தவரை நியமிப்பது அதிகரித்து வருவதாக ஏற்கெனவே குற்றச்சாட்டு உள்ளது.

குறிப்பாக நெய்வேலி நிலக்கரி கழகம், பொதுத்துறை வங்கிகளில் வட மாநிலத்தவர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகதொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.என்எல்சி நிறுவனம் தனது கிளைகளை வடமாநிலங்களில் நிறுவி அங்கிருப்பவர்களுக்கு வேலை அளிப்பதாகவும் புகார் உள்ளது. 

இவ்வாறு தமிழகத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் வேலையில் இறங்கியுள்ள மத்திய அரசின் அடுத்த நடவடிக்கையாகத்தான் ஆவடி ராணுவ சீருடை தயாரிக்கும் தொழிற்சாலையை மூடும் முடிவுஅமைந்திருக்கிறது.

நன்றி - தீக்கதிர் 31.01.2018

மாண்டவர் மீண்டு வர, மோடி வகையறாக்கள் ....


உ.பி. மாநிலத்தில் ‘கொல்லப்பட்ட’ இளைஞர் உயிருடன் வந்தார்
ஆர்எஸ்எஸ் கும்பலின் திட்டமிட்ட சதியே காஸ்கன்ஞ் வன்முறை என்பது அம்பலமானது



லக்னோ, ஜன. 30 -

உத்தரப்பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் ஹிந்துஇளைஞர் ஒருவர் கொல்லப்பட்டதாக கூறி, ஆர்எஸ்எஸ்பரிவாரங்கள் இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டன. இந்தவன்முறையால் பொதுமக்கள் பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் தீ வைத்துக்கொளுத்தப்பட்டன.

இந்நிலையில், கொல்லப்பட்டதாக கூறப்பட்ட ஹிந்து இளைஞர் ராகுல் உபாத்யாய் உயிரோடுவந்துள்ளார். ‘தான் ‘கொல்லப்பட்டது’ தனக்கே தெரியாது; என்றும், வாட்ஸ்-அப் செய்திகள் மூலம் தான் ‘கொல்லப்பட்டதை’ அறிந்ததாகவும் அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் காஸ்கன்ஞ் பகுதியில் குடியரசுத்தினத்தை முன்னிட்டு, ஆர்எஸ்எஸ்-ஸின் மாணவர் பிரிவான அகிலபாரதீய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) அமைப்பைச் சேர்ந்தவர்கள், ஊர்வலம் என்ற பெயரில் 100-க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் இஸ்லாமியர்கள் வசிக்கும் பகுதியில் அணி வகுத்துச் சென்றனர். அப்போது இஸ்லாமியர்கள் மற்றும், பாகிஸ்தானிற்கு எதிராக அவர்கள்முழக்கங்களையும் எழுப்பினர்.

பின்னர் அவர்களாகவே, இஸ்லாமியர்கள் தங்கள் மீது கற்களை வீசித் தாக்குதல் நடத்தியதாகவும், இதில் ராகுல் உபாத்யாய்என்ற ஹிந்து இளைஞர் ஒருவர் இறந்து விட்டதாகவும் செய்தி பரப்பினர்.அதற்கு பதிலடி என்ற பெயரில், காஸ்கன்ஞ் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த இஸ்லாமியர்களின் வாகனங்கள், கடைகளை தீ வைத்துக் கொளுத்தினர். 

காஸ்கன்ஞ் நகரின் மிகப்பெரிய தொழிலதிபரான வாசிம் நஸீம்என்ற இஸ்லாமியரின் வீட்டைச்சூறையாடி, அங்கிருந்த பொருட்களையும் கொள்ளையடித்தனர்.மிகத் தாமதமாக அங்கு வந்தஆதித்யநாத் அரசின் காவல்துறையானது, வன்முறையை கையைக்கட்டி வேடிக்கை பார்க்கும் வகையிலேயே நடந்து கொண்டது. எனினும், ஏபிவிபி கும்பலானது, போலீஸ் வாகனங்களுக்கும் தீ வைத்ததால், நிலைமை மோசமாவதை அறிந்து துப்பாக்கிச் சூடு நடத்தியது. 

இதில், சந்தன் குப்தா (22) என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்தார். எனினும், ஏபிவிபி கூட்டம் நடத்திய வன்முறையால் காஸ்கன்ஞ் பகுதியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் மட்டுமன்றி, அனைத்துத் தரப்பு பொதுமக்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட ஆர்எஸ்எஸ் பரிவாரங்களைச் சேர்ந்த நபர்களை கைது செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.  

இந்நிலையில்தான் திடீர் திருப்பமாக, கலவரத்தில் கொல்லப்பட்டதாக ஏபிவிபி-யால் கூறப்பட்ட ராகுல் உபாத்யாய் உயிருடன் இருப்பது தெரிய வந்தது. போலீசாரும் இதனைத் தற்போது உறுதி செய்துள்ளனர். தான் கொல்லப்பட்டதாக வெளியான செய்தி பற்றி வாக்குமூலம் அளித்துள்ள ராகுல் உபாத்யாய், ஊர்வலம் நடந்த பகுதிக்கே தான் செல்லவில்லை என்று தெரிவித்துள்ளார். தான் கொல்லப்பட்டதாக தனக்கே செய்திகள் அனுப்பப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.இதையடுத்து, காஸ்கன்ஞ் வன்முறையானது, ஆர்எஸ்எஸ் பரிவாரக் கூட்டத்தால் திட்டமிட்டு நடத்தப்பட்டிருப்பது தற்போது அம்பலமாகியுள்ளது.


‘இஸ்லாமியர் பகுதிக்குள் சென்று பாகிஸ்தானுக்கு எதிராக கோஷமிடுவது டிரெண்ட் ஆகிவிட்டது’

பரேலி மாஜிஸ்திரேட் கண்டனம்

உத்தரப்பிரதேசத்தில் காஸ்கன்ஞ் பகுதியில் ஏபிவிபி கும்பல் நடத்திய வன்முறைக்கு பரேலி நீதிமன்ற மாஸ்திரேட் விக்ரம் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முகநூல் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் “இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதியில் வேண்டுமென்ற பேரணியாக செல்வதும், அங்கு பாகிஸ்தானுக்கு எதிரான கோஷங்களை எழுப்புவதுமாக ஒரு புதிய டிரண்ட் உருவாகி இருக்கிறது” என்று கூறியுள்ள விக்ரம் சிங், 

“இது எதற்கு? இஸ்லாமியர்கள் என்ன பாகிஸ்தானியர்களா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.“பரேலி மாவட்டம் காய்லாம் கிராமத்திலும் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றது. பின்னர் கற்கள் வீசப்பட்டது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது,” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - தீக்கதிர் 31.01.2018

Tuesday, January 30, 2018

கலக்கற செல்லம் !!!!

தகவலை பகிர்ந்து கொண்ட தோழர் ஜெயச்சந்திர ஹஷ்மிக்கு நன்றி.

ஒரு வாசகமானாலும் திருவாசகம் என்பது போல பிரகாஷ்ராஜ் எவ்வளவு நச்சென்று சொல்லியுள்ளார்!!!!

சபாஷ் !!!!!!


மத நல்லிணக்கமா? நோ. நோ. நோ.




அண்ணல் காந்தியடிகளின் நினைவு நாளான இன்று மத நல்லிணக்க பாதுகாப்பு உறுதிமொழியேற்பது என்ற நிகழ்வை அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் மாநிலத்தில் பல இடங்களில் நடத்தியுள்ளனர், காவல்துறை தடையை மீறி.

ஆம் காவல்துறை தடையை மீறி

மத நல்லிணக்கத்தை பாதுகாப்பது என்பது எடுபிடி அரசுக்கு எட்டிக்காயாய் கசக்கிறதாம். ஆகவே காவல்துறை இந்நிகழ்விற்கு தடை விதிக்கிறது.

காவிக்குண்டர்கள், கையில் தடியோடும் வாளோடும் வாயில் விஷத்தோடும் ஊர் ஊராய் பேரணி நடத்தவும் மத வெறியை தூண்டும் வாசகங்களை முழக்கவும் முழுமையாய் காவல்துறை பாதுகாப்பு தருகிற மாநிலத்தில்

அசிங்கமான சொந்தப் பிரச்சினை காரணமாக காவிகளாலேயே கொல்லப்பட்ட இன்னொரு காலிக் காவியின் பிணத்தை வைத்துக் கொண்டு பல கிலோ மீட்டர்கள் ஊர்வலம் போய் வழியில் உள்ள இஸ்லாமியர்களின் கடைகளைத் தாக்கவும் மொபைல் போன்களையும் அண்டாவோடு பிரியாணியை திருடுவதையும் வேடிக்கை பார்க்கிற காவல்துறைக்கு  “அமைதியை உருவாக்க மத நல்லிணக்கம் காப்போம்”  என்ற முழக்கம் அலர்ஜியாய் இருக்கிறது.

காந்தியடிகளின் நினைவு நாள் என்றால் அவர் கொல்லப்பட்டது மட்டுமல்ல, காவிகளால்தான் கொல்லப்பட்டார் என்பதும் நினைவுக்கு வருவதால் காவிகள்  வீசிய எலும்புத்துண்டுகள்தான் இன்றைய ஆட்சி என்பதால் வாலைக் குழைத்துக் கொண்டு விசுவாசத்தை காண்பித்துள்ளது எடுபிடி அரசு.

எழுபது ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காந்தியடிகளை கொன்று விட்டீர்களே படுபாவிகளே . . .



இன்னும் வெறியோடு அலையும் தோட்டா



ஒரு முதியவரின்
உடல் துளைத்து
உதிரம் குடித்தும்
இன்னும் வெறியடங்காத
அந்த தோட்டா
ரத்த ருசி சுவைக்க
இந்தியா முழுதும்
அலைந்து கொண்டே
இருக்கிறது.

அயோத்தியில் கடப்பாறையாக,
ஒரிசாவில் பெட்ரோல் கேனாக,
குஜராத்தில் சூலமாக,
முசாபர் நகரில் வீடியோவாக
விதம் விதமாய்
வடிவம் எடுத்தும்
இன்னும் தணியவில்லை
அதன் ரத்த தாகம்.

சவங்களின் மீது
சாம்ராஜ்யம் அமைக்க
தொடர்கிறது
தோட்டாவின் பயணம்.

அண்ணலின் சமாதியில்
மலர் வளையம் தேவையில்லை.
ரோஜா இதழ்களை
தூவிடவும் அவசியமில்லை.
சிலைக்கு மாலையிடும்
சடங்கையும் சற்றே
ஒதுக்கி வைத்து

வெறி கொண்ட தோட்டாவின்
பதவிக்கான பயணத்தை
முறியடித்து
அமைதிப் பூங்காவாய்
தேசத்தை மாற்றி விட்டு
பிறகு செலுத்துவோம்
நம் அஞ்சலியை.

பின் குறிப்பு :

மீள் பதிவுதான். 
2014 ம் ஆண்டு எழுதியது.
இன்னும் இக்கவிதைக்கான
அவசியம் இருப்பது இந்தியாவின் பெருந்துயரம்.

Monday, January 29, 2018

இந்திய வரலாற்றை எங்கே தொடங்க?????

ம்துரையில் நடைபெற்ற தமிழர் உரிமை மாநாட்டில் தமுஎகச அமைப்பின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் பேசிய அற்புத உரையை பகிர்ந்து கொண்டுள்ளேன். 

நன்றி - தீக்கதிர் 29.01.2018


இந்தியாவின் வரலாற்றை வைகை நதிக்கரையிலிருந்தும் எழுத வேண்டும்
சு.வெங்கடேசன் பேச்சு
மதுரை, ஜன.28 -

இந்தியாவின் வரலாற்றை கங்கை நதிக்கரையில் இருந்து மட்டுமல்ல, வைகை நதிக்கரையி லிருந்தும் எழுத வேண்டும் என்று தமுஎகச மாநிலபொதுச் செயலாளர் சு.வெங்கடேசன் குறிப்பிட்டார்.மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர் கூறியதாவது:தமிழர் உரிமை மாநாட்டை தமிழகத்தின் நான்கு மண்டலங்களிலும் நடத்தி நிறைவு செய்யத்தான் தீர்மானித்திருந்தோம். எதிரிகள் மடப்பள்ளிகளில் இருந்து இப்படி சோடாப்பாட்டிலோடு வருவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை. மத்திய அரசு தற்பொழுது வழங்கியுள்ள பத்ம விருதுகள் சாதனையாளர்களுக்கா? அல்லது காவிக்கும்பலுக்கு காவடி தூக்கியவர்களுக்கா? என்ற கேள்வி எழுகிறது. தமிழகம் வேதங்களின் பூமி மற்றும் சமஸ்கிருதத்திலிருந்து பிறந்தது தமிழ் என்ற இரண்டு ஆய்வுகளுக்காகவே நாகசாமி என்ற தொல்லியல் அறிஞருக்கு பத்மஸ்ரீ விருது அளிக்கப்பட்டுள்ளது. அலுவல் மொழியாக ஆங்கிலத்தை அண்ணா சட்டமன்றத்தில் முன்மொழிந்தபோது, ஆங்கிலத்தை மட்டுமே நம்பினால் தமிழைக் காப்பாற்ற முடியாது. ஐந்து ஆண்டுகளுக்குள் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்ற திருத்தத்தை நமது தலைவர் சங்கரய்யா கொண்டுவந்தார். அந்தத் திருத்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்தகைய வரலாற்று மனிதன் இந்த மேடையில் முழங்கினார். இத்தகையபெரும் வரலாற்றின் தொடர்ச்சி நாங்கள்.

ஆய்வைத் திட்டமிட்டு மூடுவதன் மூலம் கீழடியில் கிடைக்கும் புதிய ஆதாரங்களை அழிக்க நினைக்கிறது மத்திய அரசு. அதே நேரத்தில் குஜராத்திலும், ராஜஸ்தானிலும் ஆய்வு தொடர்கிறது. கீழடியில் கிடைக்கும் பொருட்களை இங்கேயே ஆவணப்படுத்தும் விதமாக தமிழக அரசு நிலம் ஒதுக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அந்த உத்தரவை ஏற்று தமிழக அரசும் நிலம் ஒதுக்கிவிட்டது. ஆனால், மத்திய தொல்லியல் துறையோ இந்த நிலத்தை ஏற்றுக்கொண்டோம் என்ற பதில் அறிவிப்பைக்கூட வெளியிட மறுக்கிறது. 

இந்திய வரலாற்றை கங்கைக் கரையில் இருந்து மட்டும்தான் எழுதுவீர்களா? உண்மையின் வரலாற்றை வைகைக்கரையில் இருந்துதான் எழுதவேண்டும். தமிழனின் நாகரிகத்தை மீண்டும் தோண்டி எடுப்போம். எழுத்துக்களின் தாயகமாக தமிழகம் இருந்துள்ளது. இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் கல்வெட்டுக்களில் 65 ஆயிரம் தமிழகத்தில் கிடைத்துள்ளது. இதில் 32 இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ள 98 கல்வெட்டுக்களில் மிகவும் பழமையான பிராமி எழுத்துக்கள் உள்ளன. அதில் 24 இடம் வைகை நதிக்கரையில் உள்ளது. தேனி மாவட்டம் புள்ளிமான் கோம்பையில் 2200 ஆண்டுகளுக்கு முந்தைய கல்தூண் ஒன்று உள்ளது. அதில் அந்துவன் என எழுதப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டு மதுரையில் வீசிய புயல் மழையால் தேனூரில் உள்ள ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. அப்போது, வேர்களுக்கு நடுவில் இருந்த மண்சட்டியை சிறுவர்கள் உருட்டி விளையாடியபோது அது உடைந்துவிட்டது. அதற்குள் நிறையத் தங்கக்கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
அதில், ஏழு தங்கக்கட்டிகளை மட்டும் கைப்பற்றியதாக காவல்துறை தெரிவித்தது. அத்தனை கட்டிகளிலும் 2,100 ஆண்டுகளுக்கு முந்தைய பிராமி எழுத்துக்கள் பொறிக்கப் பட்டிருந்தது. அதில், கோதை என்ற பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. 

2,100 ஆண்டுகளுக்கு முன்பு தெய்வச்சிலைகள் எதுவும் தங்கத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சங்கம் வைத்துதமிழ் வளர்த்த மதுரையில் தங்கம் வைத்தும் பெருமை சேர்த்தது.நதிக்கரை வரலாறு முழுவதும் வற்றாத ஜீவநதிக்கரையில் இருந்துதான் உருவானது. வைகை நதியில் 4, 5 மாதத்திற்கு மேல் நீர்வரத்துஇருக்காது. இந்த நதிக்கரையின் கீழடியில்தான் இவ்வளவு தொன்மையான நகரம் உருவாகி யுள்ளது. அப்படியென்றால் தமிழன் நீர்மேலாண்மை யில் எந்த அளவிற்கு சிறந்து விளங்கினான் என்பது தெளிவாகிறது. இங்கு கிடைத்துள்ள 5,800-க்கும் அதிகமான தொல்பொருட்களில் எந்தவிதமான சாதி, மத அடையாளங்களும் இல்லை. எனவேதான், நாங்கள் இந்த ஆய்வைத் தொடர நினைக்கிறோம். அவர்கள் முடக்க நினைக்கிறார்கள். 

திருக்குறளைப் படிக்கமாட்டோம் என்று மூத்த சங்கராச்சாரியார் சும்மா சொல்லவில்லை. அறம், பொருள், இன்பத்தோடு குறள் முடிந்துவிடுகிறது. அதற்கு அடுத்தபடியாக வீடு என்ற மோட்சநிலையை திருக்குறள் வகுக்கவில்லை என்பதாலேயே அவர்களால் வெறுக்கப்பட்டது. மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ்த்தாய் வணக்கம் என்று எழுதவில்லை. ‘வாழ்த்து’ என்று தான் எழுதினார். எந்த மொழியும்கடவுளால் உருவாக்கப்பட்டது அல்ல. மனித னாலேயே உருவாக்கப்பட்டது என்பதை உணர்த்துவதற்காகவே இவ்வாறு எழுதினார். ‘இப்படை தோற்கின், எப்படை வெல்லும்’ என்ற வாசகத்தைக் கூட அவர்தான் நமக்குத் தந்தார்.

 தில்லியில் நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பு வாகனத்தில் ‘தமிழ்நாடு’ என இந்தி மொழியில் எழுதப்பட்டுள்ள கொடுமை அரங்கேற்றப்பட்டுள்ளது. எந்த அளவுக்கு மத்திய ஆட்சியின் பிடியில் இந்த அரசு இருக்கிறது என்பதற்கு இது உதாரணம்.மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் எல்லாம் சமஸ்கிருத கலப்பு வந்துவிட்டது. சமஸ்கிருதக் கலப்பு இல்லாமல் தனித்து இயங்கும் மொழியாக நமது தமிழ்மொழி திகழ்கிறது. பிராக்கிருதமும், பாலியும் நமது பானை ஓடுகளில் எழுதப்பட்டுள்ளது என்றால் சாதாரண மக்களும் மொழியைப் பயன்படுத்திஇருக்கிறார்கள் என்பதை அறிய முடிகிறது. தமிழன் வடமொழியையும் அறிந்து வைத்திருந்தான் என்பதற்கு சிலப்பதிகாரத்திலேயே சான்று இருக்கிறது. இந்தி மொழிக்கு 9-ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த கல்வெட்டு மட்டுமே கிடைத்திருக்கிறது. அதுவும் வேறு எங்கும் கிடைக்கவில்லை. மகாபலி புரத்தில் தமிழன்தான் அதையும் பத்திரப்படுத்தி வைத்திருந்தான்.

வரலாறு முழுக்கப் போராடி வந்த நமது அடையாளத்தை இழக்கமாட்டோம். இடது சாரிகள், பகுத்தறிவாளர்கள், திராவிட இயக்கச் சிந்தனையாளர்களை ஒருங்கிணைத்து தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம். இவ்வாறு சு.வெங்கடேசன் பேசினார்.

Sunday, January 28, 2018

ராஜா தந்த புத்துணர்ச்சி



ஒரு தோழரின் மகனின் திருமணத்திற்குப் போக வேண்டும் என்று காலையில் சீக்கிரம் எழுந்து கொண்டேன். வேலூரின் கடுமையான குளிர் காய்ச்சலைக் கொண்டு வந்திருந்ததால் அப்படியே படுத்து விட்டேன். 

மாலை கொஞ்சம் சுமாராக ஆன பின்புதான் சிஸ்டமையே ஆன் செய்தேன்.

இரண்டு மூன்று நாட்களாக முக நூலில் சில ராஜா பாடல்கள் பற்றி பலர் எழுதியிருந்தார்கள்.

யூட்யூபில் அவற்றையும் வேறு சில பாடல்களையும் கேட்டேன். இப்போது உடல் நிலை  புத்துணர்வோடே இருக்கிறது.

அவற்றை  நீங்களும் கேட்டு ரசியுங்கள்

நிச்சயம் பிடிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. 












சிறிய இடைவேளைக்குப் பின்பு - சமரசம் . . .

ஒரு சிறிய இடைவேளைக்குப் பின்பு இன்றைய வண்ணக்கதிர் இதழில் வெளியான என்னுடைய சிறுகதை.



சமரசம்

வேலூர் சுரா

கல்யாண மண்டபத்தில்  நுழையும் போதே பெரும் இரைச்சல்களுக்கு மத்தியிலும் கூட  நாகஸ்வர இசை கம்பீரமாக  காதுகளை  வருடிச் சென்றது. இந்த ஊரில் இவ்வளவு சிறப்பாக யாரும் வாசித்ததில்லையே என்ற மனதின் கேள்வியோடு இருக்கையை தேடுகையில் தோடி ராகத்து ஆலாபனையை முடித்துதாயே யசோதாஎன்று பாடலைத் துவக்கி இருந்தார். யார் இந்த வித்வான் என்று நான் கழுத்தைத் திரும்பி நாகஸ்வர கோஷ்டிக்கான தனி மேடையை பார்க்கும் முன்பே

நேத்து ரிசப்ஷனுக்கே எதிர்பார்த்தேன். பரவாயில்லை முகூர்த்தத்துக்கு வந்துட்டமுகூர்த்தத்திற்கு  இன்னும் நேரமிருக்கு, முதலில் டிபனை முடிச்சிடு

என்று என் நண்பன் மூர்த்தி கையைப் பிடித்து மாடியில் இருந்த டைனிங் ஹாலுக்கு அழைத்து சென்று விட்டான்என்னுடைய அலுவலக நண்பனின் ஒரே மகளின் திருமணம்.

செவிக்கு உணவு கிடைக்க வாய்ப்பில்லாத குளிர்சாதன அறையாக இருந்ததால் வயிற்று உணவில் கவனம் செலுத்தினேன்சுவையான உணவை அருந்திய நிறைவோடு படிகளில் இறங்கி வருகையில் ஆபேரி ராகத்தில் நகுமோ ஒலித்துக் கொண்டிருந்தது.

இப்போது அந்த நாகஸ்வரக்காரரை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

அட, நம்ம சிக்கல் சண்முகசுந்தரம்!”

அதுதான் அவர் பெயரா என்று தெரியாதுஒரு சம்பவத்தைப் பார்த்து நானே சூட்டிய பெயர்.

ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு போயிருந்த நேரம். தஞ்சையிலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் செல்லும் ஊர். பெயரைச் சொன்னாலும் ஊரைச் சொல்லாதே என்று சொல்வார்கள் அல்லவா? அதனால் இங்கே எந்த ஊர் என்பது அவசியம் இல்லை.

தைப்பூசத் திருவிழா நடந்து கொண்டிருந்த காலம் அது.  ஊருக்கு வந்து விட்டு கோயிலுக்கு போகாவிட்டால் எப்படி என்று என் அப்பாவின் வற்புறுத்தலால் நானும் சென்றிருந்தேன். கால வெள்ளத்தின் வேகத்தில் என் புரிதல்களும் கொள்கைகளும் மாறி இருந்தாலும் இளமைக் காலத்தின் பெரும் பகுதியை செலவழித்த இடமாயிற்றே என்றுதான் புறப்பட்டேன்.

ஏதோ ஒரு சோழ மன்னனின் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம். ஏதோ தஞ்சை பெரிய கோயில் போல பிரம்மாண்டம் என்றெல்லாம் கற்பனை செய்யாதீர்கள். அவ்வளவு பெரியதெல்லாம் கிடையாது. ஆனால் மதில் சுவருக்கும் ஆலயத்துக்கும் இடைப்பட்ட பகுதி பிரகாரம் என்ற பெயரில் மிகவும் பெரிதாக இருக்கும். மாதத்தில் ஒரிரு நாட்களைத் தவிர மற்ற நாட்களெல்லாம்  பக்தர்கள் வர மாட்டார்கள். அதனால் கோயில்தான் எங்களின் விளையாட்டு மைதானமே. ஒரே சமயத்தில் மூன்று நான்கு கிரிக்கெட் மாட்சுக்கள் கூட நடந்து கொண்டிருக்கும். எப்போதாவது கிடைக்கும் சுண்டலுக்கும் புளியோதரைக்காகவும்  அடித்துக் கொண்டதை நினைத்தால் இப்போது வெட்கமாகக் கூட இருக்கிறது

எதையோ சொல்ல ஆரம்பித்து எங்கேயோ போய்விட்டேன்நீ வயதானவனாக மாறிக் கொண்டிருக்கிறாய் என்று மகன் கிண்டலாகச் சொல்வது சரிதானோ?

கோயில் பிரகாரத்தில் ஒரு பெரிய மேடை போட்டு நாகஸ்வரக் கச்சேரி நடந்து கொண்டிருந்தது. “அபாரமான ஞானஸ்தன்என்று சொல்லும் அளவிற்கு அந்த வித்வான் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தார். ஆனாலும் கூட்டத்தில் சலசலப்புஒரே நிறத்தில் டி.ஷர்ட் அணிந்த வாலிபர்கள் சிலர் ஏதோ குரல் எழுப்பிக் கொண்டிருந்தார்கள். தங்களின் ஜாதியை அடையாளப்படுத்துகிறபடி டி,ஷர்ட் போடுவது, கையில் கயிறு கட்டிக் கொள்வது,  ஒதுக்கப்பட்டோர் பகுதியைச் சேர்ந்த இளைஞர்களை வம்புக்கிழுப்பது என்று ஒரு விபரீதப் போக்கு உருவாகியுள்ளதாக கொஞ்ச நேரம் முன்பாக அப்பா கவலையோடு சொன்னது நினைவுக்கு வந்தது.

ஒரு நடிகரின் பெயரைச் சொல்லி அவர் நடித்த படத்தின் பாடலை வாசிக்குமாறு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார்கள். இன்னொரு கும்பல் இன்னொரு நடிகருக்காக கூப்பாடு போட்டது. பெரியவர்களால் அவர்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

வித்வான் வாசிப்பதை நிறுத்தினார். நாகஸ்வரத்தை கீழே வைத்தார். மைக்கை தன் பக்கம் இழுத்து

இது கோயில். இங்கே என்னால் சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க முடியாதுநான் வாசிக்கிறதை கேட்க பிடிக்கலைனா நீங்க தாராளமா போயிடலாம்

எங்க ஊருக்கு வந்துட்டு எங்களையே வெளியே போக சொல்றியாநாங்க வசூலிச்சு கொடுத்த காசை வாங்கிட்டு எங்க இஷ்டப்படி வாசிக்க மாட்டியா

என்று அந்த கும்பலின் தலைவன் போல இருந்தவன் கத்த

நீங்க என்னத்தை வசூலிச்சீங்க? அதை மட்டும் வச்சுட்டு நாக்கைக் கூட வழிக்க முடியாது. பப்ளிக்கில சீன் போடறீங்களா?”

என்று இன்னொரு கும்பல் எகிற  அது கோஷ்டி மோதலாக மாறும் நிலை.

கோயில் தர்மகர்த்தா கையெடுத்து கும்பிட்டு இரண்டு கோஷ்டியையும் அடக்கி விட்டு

போனா போகுது. ஒரு ரெண்டு பாட்டு பசங்க விருப்பப்படி வாசிச்சுடுங்க தம்பி”  என்று வித்வானிடம் கேட்க

இல்லைங்க. இது கோயில். சரிப்பட்டு வராது  அது மட்டுமில்லை நான்  சினிமா பாட்டுக்கெல்லாம்   வாசிக்கறது  கிடையாது

என்று நிதானமாக அதே நேரம் உறுதியான குரலில் மறுக்க

கூச்சல் குழப்பத்திற்கிடையே தங்கள் வாத்தியங்களை உறையில் போட்டு மேடையிலிருந்து கீழிறங்கி போய்க்கொண்டே இருந்தார்கள்.

அவனுக்கு ஓவர் திமிருப்பா!
நம்ம ஊரு பசங்க நாசமாத்தான் போகப்போறாங்க!

என்று இரண்டு நாட்கள் ஊரெங்கும் இதே போல இரண்டுவிதமான பேச்சுக்கள்தான்.

தில்லானா மோகனாம்பாள் சிக்கல் சண்முக சுந்தரம் மாதிரி  கறாரான பேர்வழியாக  உள்ளாரே என்பதால் நான் அவ்வாறு அவருக்கு பெயர் சூட்டியிருந்தேன்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு இன்றுதான் அவரைப்பார்த்தேன்.

தாலி கட்டுதல், மொய் அளித்து புகைப்படமெடுத்தல் முதலிய சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர் தொலைபேசி அழைப்புக்களுக்காக மண்டபத்திற்கு வெளியே சென்று நிதானமாக பேசி விட்டு உள்ளே வந்தால் எனக்காக ஒரு அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது.

கண்ணோடு காண்பதெல்லாம்”  என்று திரைப்படப்பாடலை வாசித்துக் கொண்டிருந்தார் சிக்கல் சண்முகசுந்தரம். அந்த ஒரு பாட்டோடு நிற்கவில்லை, வரிசையாக புது புது பாட்டாக வாசித்துக் கொண்டே இருந்தார்.

சினிமா பாட்டுக்கு வாசிக்க மாட்டேன்னு அன்னிக்கு பாதிக் கச்சேரியில எழுந்து போனவரா இப்படி என்று நினைக்க நினைக்க கோபமாக வந்தது. அவரிடமே கேட்டு விடுவோம் என்று காத்திருந்தேன். கேட்டும் விட்டேன். அவர் பெயர் சண்முகசுந்தரமில்லை, மீனாட்சி சுந்தரம்.

சார் நீங்க இப்படி வெளிப்படையா பேசினதில சந்தோஷம். அன்னைக்கு தகறாரு செஞ்சது ஏதோ விடலைப் பசங்கன்னுதான் முதல்ல நினைச்சேன். ஆனா அவங்க ஜாதி சங்கத்து ஆளுங்கபெரிய நெட்வொர்க் போல. நான் எந்த கோயில்ல வாசிச்சாலும் அவங்க ஆளுங்க கலாட்டா செஞ்சிக்கிட்டே இருந்தாங்க. அவங்க செய்யற கலாட்டாவை கோயில் நிர்வாகமும் தடுக்கலை. கோயிலுக்குள்ள இருக்கற சாமியும் தடுக்கலை

அதனாலதான் உங்க கொள்கைல சமரசம் செஞ்சுகிட்டு சினிமா பாட்டுக்கெல்லாம் வாசிக்க ஆரம்பிச்சுட்டீங்களா?”

என்று கேட்டேன்.

 “அம்மி கொத்த சிற்பி எதுக்கு”ன்னு நான் சினிமா பாட்டுக்கு வாசிக்காம இருந்தேன்அதை மக்கள் ரசிச்சு கேட்கறபோது எதுக்கு பிடிவாதம் பிடிக்கனும்தான் நான் மாத்திக்கிட்டேன். அதை விட முக்கியமான காரணம் ஒன்னு இருக்கு

அதை தெரிந்து கொள்ள ஆவலோடு இருந்தேன்.

ஒரு தொழிலாளிக்கு வேலை போனா என்ன கஷ்டப்படுவாங்கங்கறது உங்களுக்கு தெரிஞ்சுருக்கும். என் நிலைமையும் அது போலத்தான் ஆச்சு. கோயில் கச்சேரிங்க குறைஞ்சு போச்சி. என் குடும்பம் மட்டுமல்ல, என்னை நம்பி இருக்கிற மத்த கலைஞர்களுக்கும் பிழைப்பு இல்லை. வேற வித்வானோடு வாசிக்க அவங்களும் தயாரா இல்லை. அதனாலதான் கல்யாண கச்சேரிகளுக்கு வாசிக்க ஆரம்பிச்சேன். முகூர்த்தம் முடியவரை என் விருப்பம். அதுக்கப்பறமா மக்கள் விருப்பம். பிழைப்பும் சுமாரா ஓடிக்கிட்டிருக்கு

என்றவர் கடைசியாக ஒன்றைச் சொன்னார்.

என் சுய மரியாதைக்கு பாதுகாப்பே இல்லாத இடத்தில வாசிக்கறதை மட்டும் நிறுத்திட்டேன். ஆமாம் கோயில் கச்சேரி எதையும் ஒத்துக்கறதே இல்லை”