சூர்யா நடித்த கஜினி படத்தின் “சுட்டும் விழிச்சுடரே” பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
சூர்யா நடித்த கஜினி படத்தின் “சுட்டும் விழிச்சுடரே” பாடலின் வயலின் வடிவம் என் மகனின் கை வண்ணத்தில்.
ஸ்வீட் கொடுத்து கொள்ளையா அண்ணாமலை?
மூன்று
நாட்களுக்குப் பின் மீண்டும்
இணைய
தள இணைப்பில் பிரச்சினை. அதனால் மூன்று நாட்களாக பதிவிட முடியவில்லை. இன்றுதான் சரியானது.
இந்த
மூன்று நாட்களில் எழுதியிருக்க வேண்டிய பல விஷயங்களை எழுத முடியவில்லை.
ஆட்டுக்காரர்
ஊடகவியலாளர்களிடமெல்லாம் ஏலம் போட்டதெல்லாம் பழங்கஞ்சி ஆகி விட்டது. அதனால் அதை இப்போது
எழுதப் போவதில்லை.
ஆனாலும்
ஆட்டுக்காரரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உண்டு.
திருவாச்சூர்
மதுரகாளியம்மன் புனரமைப்பு என்ற பெயரில் ஐம்பது லட்சம் ரூபாய் ஆட்டைய போட்ட உங்கள்
கட்சிக்காரன் கார்த்திக் கோபிநாத் உங்களுக்கு கொடுத்த இனிப்பு நன்றாக இருந்ததா?
எந்த
திருட்டையும் ஸ்வீட் கொடுத்துதான் ஆரம்பிக்க வேண்டும் என்றுதான் உங்களுக்கு அவன் ஸ்வீட்
பாக்ஸ் கொடுத்தானா?
இந்த
ஊழலில் உங்கள் பங்கு எவ்வளவு ரூபாய்?
தீக்கதிர்
ஆசிரியர் தோழர் மதுக்கூர் ராமலிங்கம் மிகச்சரியாகத்தான் சொன்னார்.
ஆனால்
எனக்கென்னவோ ஐ.பி.எஸ் ஆக இருந்த போது கூட காசு வாங்கிக் கொண்டு கிரிமினல்களை தப்ப விட்டிருப்பீர்கள்
என்றுதான் தோன்றுகிறது.
நேற்று முன் தினம் இந்திய அளவில் #GoBackModi ட்ரெண்டிங் ஆன சமயத்தில் அதனை வரவேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணன் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
இதை அதிக அளவில் பரப்பியது நாம் டம்ப்ளர் வகையறாக்களும் கணிணிப் புரட்சியாளர்களும்தான். மோடிக்கு மேடையில் முதல்வர் பாடம் புகட்டும் வரை பதுங்கியிருந்த சில இணைய உபிக்களும் கூட.
மார்க்சிஸ்ட் கட்சி மீதான ஒவ்வாமையை அவ்ர்கள் அம்பலப்படுத்திக் கொண்டார்களே தவிர, தோழர் ஜி.ஆர். இப்படியெல்லாம் சொல்லியிருப்பாரா என்று கொஞ்சம் கூட சிந்திக்க முடியாத அளவுக்கு அலர்ஜி நோயால் பாதிக்கப் பட்டிருந்தார்கள்.
தோழர் ஜி.ஆரின் ட்விட்டர் பதிவை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட்ட பின்பு மனசாட்சியுள்ள சிலர் பதிவை நீக்கி விட்டனர். அலர்ஜி நோய் உச்சத்துக்குப் போனவர்கள் தாங்கள் பிடித்த முயலின் காலை ஒடித்து விட்டு மூன்று கால்தான் என்று சாதித்துக் கொண்டிருந்தனர்.
அற்பத்தனமாவர்கள் என்பதைத் தவிரவேறென்ன சொல்ல?
பாஜகவின்
ரௌடி அணியைச் சேர்ந்த ஒருவர் நேற்று தன் முன்னாள் ரௌடிக் கூட்டாளிகளால் கொல்லப்பட்டுள்ளார்.
பாலச்சந்திரன்
என்ற நம்பர் மீது ஏழு கொலை வழக்குகள் உட்பட ஏராளமான வழக்குகள் உள்ளது. போலீஸின் கேடி
லிஸ்டில் இருந்த அவர் பெயர், பாஜகவில் இணைந்து புனிதராக மாறிய பின்பு நீக்கப்பட்டு
தன் தொழில் விரோதிகளிடமிருந்து காத்துக் கொள்ள போலீஸ் பாதுகாப்பு வேறு தரப்பட்டிருக்கிருக்கிறது.
பழைய
டீலிங் படி தர வேண்டிய பணத்தை தராமல் ஏமாற்றியதற்காகவும் எதிரிகளை போலீஸில் போட்டுக்
கொடுத்ததற்காகவும் அவர்கள் இந்த மனிதனை போட்டுத் தள்ளி விட்டார்கள்.
நடந்தது
முழுக்க முழுக்க ரௌடிகளின் கேங் வார் கொலை. கொல்லப்பட்டதும் ஒரு ரௌடி.
இறந்தது
பாஜககாரன் என்பதற்காக அவனை தியாகியாக்கினாலோ அல்லது மதச்சாயம் பூசினாலோ, கடைசியில்
நீதான் அசிங்கப்படுவாய் அண்ணாமலை.
அதனால்
வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும்.
பாவம், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் மோடி ரொம்ப கடுப்பாயிட்டார் போல. அந்த கடுப்பை ஆட்டுக்காரர் கிட்ட காண்பிச்சிட்டாரு போல.
அதனால நேற்று ஒரே அழுவாச்சி ட்வீட்தான். டிவிக்காரங்க கிட்டயும் ஒரே புலம்பல்.
நேற்று தமிழக முதல்வர் மோடியை பதில் சொல்ல முடியாத கேள்விகள் கேட்டதற்காக தயவு செய்து ஆட்டுக்காரரை அறுத்து பிரியாணி செய்து விடாதீர்கள். அதாங்க மாநிலத் தலைவர் பதவியில இருந்து நீக்கிடாதீங்க.
உனக்கு ஏன் இவ்வளவு அக்கறைன்னு கேட்கறீங்களா?
அண்ணாமலை மாதிரி முட்டாள் இருந்தால்தான் போட்டு அடிக்க வசதியா இருக்கும்.
மோடி கட்சியில எல்லாருமே முட்டாள்தான்னு சொல்றீங்களா?
அதுவும் சரிதான்.
#GoBackModi
என்ற ஹேஷ்டேக்கிற்குப் பின்னால் தேச விரோதிகள் இருப்பதாக தேர்தலில் தோற்றுப் போனாலும்
அமைச்சரான, வீட்டின் பின்புறம் தட்டு முட்டு சாமான்கள் உள்ள இடத்தில் அமரவைக்கப்பட்டாலும்
பெருமையோடு விஜயேந்திர சரஸ்வதி முன்பாக கை கட்டி அமர்ந்த எல்.முருகன் சொல்கிறார்.
அவர் கூற்றின்படி முக நூலிலும் ட்விட்டரிலும் நான்கு பதிவுகளை (நேரமில்லாத காரணத்தால் அதற்கு மேல் முடியவில்லை) #GoBackModi என்ற ஹேஷ்டேகோடு பதிவு செய்த நானும் தேச விரோதிதான்.
ஆம். நான் தேச விரோதிதான்.
மக்களை மதத்தின் பெயரால் பிளவு படுத்துவதுதான் இந்த தேசமென்றால்,
மதத்தின் பெயரால், மாட்டுக்கறியின் பெயரால் கொலைகள் செய்வதுதான் இந்த தேசமென்றால்
பிற மதங்களின் வழிபாட்டுத் தளங்களை கிரிமினல்தனமாக கைப்பற்றுவதுதான் இந்த தேசமென்றால்,
இந்திய மக்களின் உழைப்பால் உருவான பொதுத்துறை நிறுவனங்களை பெரும் செல்வந்தர்களுக்கு விற்பதுதான் இந்த தேசமென்றால்,
இந்தியப் பொருளாதாரத்தை தாங்கி நிற்கும் எல்.ஐ.சியின் பங்குகளை விற்பதுதான் இந்திய தேசமென்றால்,
பன்முகத்தன்மையை சிதைத்து ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரத்தை திணிப்பதுதான் இந்த தேசமென்றால்
அரசியல் சாசனத்தை, அதன் விழுமியங்களை அழிப்பதுதான் இந்த தேசமென்றால்,
நாடாளுமன்ற ஜனநாயகத்தை சீரழிப்பதுதான் இந்த தேசமென்றால்,
நீதிமன்றம், சி.பி.ஐ, தேர்தல் ஆணையம் போன்ற சுயேட்சையான அமைப்புக்களின் சுதந்திரத்தைப் பறிப்பதுதான் இந்த தேசமென்றால்
மக்களைப்
பற்றி கொஞ்சமும் கவலைப்படாத, அவர்களிடமிருந்து பறித்து அம்பானி, அதானிகளின் செல்வத்தைப்
பெருக்குவதுதான் இந்த தேசமென்றால்,
அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் காலடியில் வீழ்ந்து கிடப்பதுதான் இந்த தேசமென்றால்
பொய்களை மட்டுமே பேசுபவர்களை ஆட்சியாளராகக் கொண்டது இந்த தேசமென்றால்,
இது என் தேசமல்ல,
காந்தி
கனவு கண்ட தேசமல்ல,
உழைப்பாளி
மக்களின் தேசமல்ல,
மக்கள்
ஒற்றுமையை விரும்புபவர்களின் தேசமல்ல,
இது மோடியின் தேசம், ஆர்.எஸ்.எஸ் ஸின் தேசம். தரகர்களின் தேசம், போலிச்சாமியார்களின் தேசம்.
இப்படிப்பட்ட மோடியின் தேசத்திற்கு நாங்கள் விரோதிகள்தான்.
உண்மையான
தேச பக்தர்கள்.
எங்களைப்
பழிக்கும் நீங்கள்தான் நிஜமான தேச விரோதிகள் மிஸ்டர் முருகன்.
பின் குறிப்பு: முருகன் சொன்னது போன வருடம்தான். ஆனால் சங்கிகள் இன்றைக்கு அதனை மீண்டும் சுற்றில் விட்டதால்தான் இந்த பதிவு.
#GoBackModi.
பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக்கியமான பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.
மோடியின் அமைச்சரவையில் இடம் பெற பொய்யனாய் இருக்க வேண்டியதுதான் முதல் தகுதி போல.
*நாளொரு கேள்வி: 24.05.2022*
தொடர் எண்: *723*
இன்று நம்மோடு மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் *சு.வெங்கடேசன்*
#######################
*முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கலாமா?*
கேள்வி: ரயில்வே துறையில் தனியார் மயம் இருக்காது என அத்துறை அமைச்சர் கூறி இருக்கிறாரே?
*சு. வெங்கடேசன்*
சென்னை வருகை தந்த
அமைச்சர் ரயில்வேயில் தனியார்மயம் கிடையாது என்று அறிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பதுஆகும்.
*தேசிய ரயில் திட்டம்* என்ற ஒன்றை இந்திய ரயில்வே அறிவித்திருக்கிறது. வெளியிட்டிருக்கிறது. இதனை நிதியமைச்சர் தனது நிதிநிலை அறிக்கையில் அறிவித்தார். அந்தத் திட்டத்தில் கூறப்பட்டு இருப்பது என்ன?
* 2031 க்குள் அனைத்து சரக்கு ரயில்களும் தனியார்மயம் ஆகிவிடும்.
* இந்திய ரயில்வே வேகன் வாங்கவேண்டிய அவசியம் இருக்காது.
* அதேபோல லாபம் வரக்கூடிய குளிர்சாதன இருக்கை மற்றும் 3 அடுக்குபடுக்கை வசதி கொண்ட ரயில் பெட்டிகளை மட்டும் கொண்ட விரைவு வண்டிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
இப்படி அந்த திட்டத்தில் கூறப்பட்டுள்ளதா இல்லையா?
*லாபம் வரும் வண்டிகள் அனைத்தும் தனியாருக்கு. இழப்பு ஏற்படும் வண்டிகள் மட்டும் அரசுக்கு* என்ற கொள்கையை அறிவித்துவிட்டு ரயில்வேயில் தனியார்மயம் இல்லை என்று கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது இல்லாமல் வேற என்ன?
அனைத்து வண்டிகளும் தனியார்மயமானால்
*பயணக் கட்டணம் உயரும். பயணிகள் பாதிக்கப்படுவார்கள். அத்துடன் ரயில்வேயின் நிரந்தர வேலை வாய்ப்புகள் பறிமுதலாகும் .சமூக நீதி பாதிக்கப்படும்.*
பொதுமக்கள் கட்டுப்படியான ரயில் பயண வசதி இன்றி பாதிக்கப்படுவார்கள்.
*செவ்வானம்*