உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரிய அணிக்கு வாழ்த்துக்கள். வெற்றிக்காக போராடிய இந்திய கிரிக்கெட் வாரிய அணிக்கு அடுத்த முறை வெற்றி பெற வாழ்த்துக்கள்.
போட்டி நடைபெறும் நாளன்று யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ, அவர்கள்தான் வெற்றி பெறுவார்கள் என்பது நிரூபணமாகி உள்ளது. இந்திய அணி வெற்றி பெறும் வாய்ப்பு ஆஸ்திரேலியாவின் முதல் மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்ட பிறகு இருந்தது. அந்த நிலைமை தொடராத காரணத்தால் இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெற்றியை இழந்தது. டிமோவின் வருகையும் அவர் கையால் கோப்பை பெற வேண்டும் என்பதெல்லாம் அநியாய மன அழுத்தத்தை கொடுத்திருக்கும்.
சரி. இந்தியா வேறென்ன இழந்தது?
வெற்றி பெற்ற வீரர்களுக்கு ஒன்றிய அரசும் பல மாநில அரசுகளும் போட்டி போட்டு அறிவித்து தங்களின் வள்ளல்தன்மையை காண்பித்து இருப்பார்கள். அதனை இழந்தது.
பல் முழுக்க வாயாக. மன்னிக்கவும், வாய் முழுக்க பல்லாக டிமோ உற்சாகமாக காட்சியளித்து கையில் கோப்பையோடு போட்டோ ஷூட் நடத்தியிருப்பார். இப்படி முகத்தை இறுக்கமாக வைத்துக்கொண்டு நடிக்கக் கூட செய்யாமல் எரிச்சலை வெளிப்படித்திய காட்சியை நாம் பார்க்காமல் இருந்திருப்போம்.
ஜெய்ஸ்ரீராம் முழக்கத்தால்தான் வெற்றி என்று இந்திய வீரர்களின் முயற்சிகள் பின்னுக்கு போய் கலவர பாய்ஸ் கத்தியதே காரணம் என்று வரலாற்றில் பதிவாகி இருக்கும்.
அதை விட முக்கியமாக
"மழை பெய்யும் போது போனால்தான் ரேடாரில் விமானம் தெரியாத்" என்று விமானப்படை வீரர்களுக்கு ஐடியா கொடுத்தேன்" என்று சொன்ன டுபாக்கூர், கேரி சோபர்ஸ் கணக்காக ரோஹித் சர்மாவுக்கு கொடுத்த ஆலோசனைகளை அறியும் வாய்ப்பையும் இந்தியா இழந்து விட்டது.
No comments:
Post a Comment