சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Wednesday, August 31, 2022
காவிகளின் கலவர வினாயகர்
இது நடந்தால் அதானி முதலிடம்தான்.
மோடியின் முதலாளி அதானி உலகின் மூன்றாவது பணக்காரர் ஆகி விட்டார் என்பதுதான் நேற்றைய செய்தி. இதில் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. நேற்று வெளியான கார்ட்டூன் ஒன்றும் கீழே உள்ளது.
உங்களது
வங்கியை வாங்க எனக்கு கடன் கொடுங்கள் என்று அதானி கேட்பது போல அமைந்துள்ளது அந்த கார்ட்டூன்.
அப்படி கடன் கொடுத்தால் அதானி முதல் இடத்தை பிடிப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
கடந்த
வாரம் ஒரு ஆய்வறிக்கை வந்தது. அதானிக்கு வரம்பு மீறி இந்திய வங்கிகள் கடன் கொடுத்துக்
கொண்டிருக்கிறார்கள். வாங்கும் கடனை திர்ப்பிச் செலுத்தும் வல்லமை அதானிக்கு கிடையாது
என்பதே அந்த அறிக்கையின் சாராம்சம்.
ஆனால் அந்த அறிக்கையை தயாரித்தவர்களுக்கு ஒரு உண்மை தெரியவில்லை.
அதானி
கடன் வாங்குவது திருப்பி செலுத்துவதற்கல்ல. அவர் வாங்கும் கடனை எல்லாம் தள்ளுபடி செய்வதற்காகத்தான்
அதானி மோடியை பிரதமராக நியமித்துள்ளார் என்பதும் அப்படி தள்ளுபடி செய்யப்பட்ட கடன்
கொண்டுதான் அதானி உலகின் மூன்றாவது பெரும் பணக்காரராக உருவெடுத்துளார்.
அதானியும்
வங்கிகளும் கடன் கொடுப்பது, தள்ளுபடி செய்வது என “செத்து செத்து” விளையாடிக் கொண்டிருக்கிறது.
அதனால்
அதானி வெகு சீக்கிரமாகவே முதலிடத்தை பிடித்தாலும்
அதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை.
Tuesday, August 30, 2022
பொசுக்குன்னு தீர்ப்பே சொல்லிட்டீங்களே ஜட்ஜய்யா
கள்ளக்குறிச்சி
மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் ஜாமீன் கேட்கிறார்கள்.
ஜாமீன்
வழக்கை விசாரித்த நீதிபதியோ
“அந்தப்
பெண் பாலியல் கொடுமைக்கு உள்ளாகவில்லை, கொலை செய்யப் படவில்லை, தற்கொலைதான் செய்து
கொண்டுள்ளார்”
என்று
சொல்லி ஜாமீன் கொடுத்தது மட்டுமல்லாமல்
“உங்களைப்
போன்ற கல்விமான்கள் எல்லாம் 45 நாட்கள் சிறையில் இருக்க வேண்டியதாகி விட்டதே”
என்று
கண்ணீர் வேறு வடித்துள்ளார்.
காவல்துறை
இன்னும் முழுமையான விசாரணையை முடிக்கவில்லை.
குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை.
அதற்குள்ளாக
தீர்ப்பே சொல்லி விட்டீர்களே ஜட்ஜய்யா, இது சரியா?
நாளை
வழக்கு வரும் போது அதன் மீது எப்படிப்பட்ட தாக்கத்தை உருவாக்கும் என்பது தாங்கள் அறியாததா?
ம்.
இதுக்கு மேலே எழுதினால் நீதி மன்ற அவமதிப்பு ஆகிடுமோன்னு யோசிக்க வேண்டியிருக்கு.
அவசரப்பட்டுட்டீங்க.
அவ்வளவுதான் சொல்ல முடியும்.
கிரிமினல்களின் இடம் அதுதானே
Monday, August 29, 2022
புல்புல் சாவர்க்கர் – 2 கேள்விகள்
புல்புல் பறவையின் மீது அமர்ந்து சாவர்க்கர் தன் தாய் நாtட்டைப் பார்க்க வந்த கதை குறித்து எல்லோரும் எழுதி விட்டார்கள். மோடி முதலையை வீட்டிற்கு கூட்டிக் கொண்டு வந்ததை விட மோசமான கதை இது.
எனக்கு இரண்டு கேள்விகள்தான்.
அந்தமான் ஏதாவது வெளி நாடா? அதுவும் இந்தியாவின் ஒரு பகுதிதானே! அப்படியென்றால் அவர் சென்ற தாய் நாடு எது? அவர் மன்னிப்பு கேட்ட மாட்சிமை தாங்கிய எலிசபத் மகாராணியின் இங்கிலாந்தா?
புல்புல் பறவை மீதமர்ந்து அன்றாடம் தாய் நாட்டை பார்வையிடச் சென்ற சாவர்க்கர் ஏன் தினசரி அந்தமான் சிறைக்கே திரும்பி வர வேண்டும்? முதல் முறையாக வெளியே சென்ற போதே தப்பித்து இந்திய விடுதலைக்காக போராடி இருக்கலாமே! அப்படி ஒன்றும் சட்டத்தை மதிக்கும் நல்லவர் கிடையாதே! காந்தியைக் கொல்ல திட்டமிட்டு துப்பாக்கி கொடுத்தனுப்பிய ஆள்தானே!
கதை விடுங்கடா! கொஞ்சம் அளவோட கதை விடுங்கடா!!!
கர்னாடகா மாநில கல்வித்தரம் எவ்வளவு கேவலமாக இருக்கிறது என்பதுதான் இந்த நகைச்சுவையையும் மீறி கவலை அளிக்கிற விஷயம்.
அதே போல சாவர்க்கர் மாதிரியான ஆசாமிகளுக்கு கட்டமைக்கிற பிம்பம் உண்மையிலேயே மிகவும் ஆபத்தானது. ஆம் இன்னொரு கதையையும் பார்த்தேன். அது நாளை.
நீங்க அவ்ளோ நல்லவரா ஜட்ஜய்யா?
புதிதாக பொறுப்பேற்று 72 நாட்கள் மட்டுமே பணியில் இருக்கப் போகும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி இந்த வாரத்தில் விசாரிக்க வேண்டிய முக்கிய வழக்குகளாக நான்கு வழக்குகளை எடுத்துக் கொண்டுள்ளார்.
1) மொட்டைச்சாமியார் ஆட்சியில் ஹாத்ராஸில் நடந்த கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி மற்றும் கொடூரக் கொலை பற்றி விசாரிக்கச் சென்று இரண்டு வருடமாக சிறையில் இருக்கும் சித்திக் காப்பான் வழக்கு.
2) பீமா கொரேகான் வழக்கில் சிறையில் இருக்கும் கௌதம் நவ்லாகா பிணை வழக்கு.
3) குஜராத் கலவரங்களில் பாதிக்கப்பட்டோருக்கு நியாயம் கேட்டு போராடிய செயற்பாட்டாளர் டீஸ்டா செதல்வாட் பிணை வழக்கு.
4) கர்னாடகா ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கு.
முக்கியமான வழக்குகளை உடனே விசாரிக்கும் அளவிற்கு நல்லவரா நீங்களா என்று ஆச்சர்யப்பட வைக்கிறார். இந்த வழக்குகளை விசாரித்து நல்ல தீர்ப்பு கொடுத்தால் மகிழ்ச்சிதான், என்ன அவரது பழைய வரலாறுதான் அச்சமூட்டுகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம். இவர் நீதிபதி சேலமேஸ்வர் வகையறாவா இல்லை தீபக் மிஸ்ரா, ரஞ்சன் கோகாய், பொப்டே வகையறாவா என்று.
Sunday, August 28, 2022
பு.மா ஆஜானின் வழக்கமான அயோக்கியத்தனம்
சிரங்கு வந்தவன் கை சும்மா இருக்காது என்பது போல யுவ பிரஸ்கார் விருது அறிவிக்கப்பட்டவுடன் வழக்கமான வசையாடலை தொடங்கி விட்டார்.
ஜெமோவின் கூக்குரலை ஒரு தோழர் மெனக்கெட்டு அனுப்பி வைத்திருந்தார். அதன் பின்னே அவரது பக்கத்துக்கு சென்றேன்.
அவர் எழுதியது கீழே உள்ளது.
விருதுபெற்றிருக்கும் பி.காளிமுத்து கவிதைகளை இனிமேல்தான் எழுதவேண்டும். அதற்கு முன் அவர் தமிழில் எழுதப்பட்ட புதுக்கவிதைகளை வாசிக்கவேண்டும். கவிதை என்றால் என்ன என்று தெரிந்துகொள்ளவேண்டும். எதிர்காலத்தில் அவ்வண்ணம் நிகழுமென்றால் நன்று.
நடுவர்களாக இருந்த முனைவர் ஆர்.ராஜேந்திரன், டி.பெரிய சாமி, எம்.வான்மதி ஆகியோருக்கு தமிழ் கல்வித்துறையின் மரபின்படி தினத்தந்தி அளவுக்குக் கூட வாசிப்புப்பழக்கம் இருக்க வாய்ப்பில்லை. பயணப்படி, கௌரவஊதியம் தவிர சாகித்ய அக்காதமியில் அவர்களுக்கு அக்கறையேதும் இருக்கவும் நியாயமில்லை. அவர்களை நடுவர் குழுவுக்கு பரிந்துரைத்தவர்கள் ஆணையிட்டதைச் செய்திருப்பார்கள்.
பொள்ளாச்சியில்
இருந்து இன்னும் சில ஆண்டுகளுக்கு இந்த உபாதை இருக்கும் என நினைக்கிறேன்.
இதைத் தவிர இன்னும் இரண்டு பதிவுகள் உள்ளது. ஏன் விருது தவறு என்று எதிலும் ஒரு வரி கூட எழுதவில்லை. விருது பெற்ற படைப்பை ஆய்வு செய்து விளக்கமாக எழுதினால்தானே ஆஜான் சொல்வது சரியா தவறா என்று நாம் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அப்படி எதுவும் இல்லை.
அதனால் ஆஜானின் வார்த்தைகளிலேயே சொல்ல வேண்டுமென்றால் அவர் எழுதியுள்ளது எல்லாமே "மொட்டை வசை"
இன்னொன்று விருதுக்குழுவை எவ்வளவு இழிவு படுத்த முடியுமோ அவ்வளவு தூரம் இழிவு படுத்துகிறார்கள். அவர்களின் வாசிப்புப் பழக்கம் பற்றி இவரே அனுமானிப்பதெல்லாம் அயோக்கியத்தனம். கமலஹாசனைத் தவிர தமிழ்த் திரையுலகில் யாருக்குமே வாசிப்பு கிடையாது என்று சொல்வதிலேயே இவருடைய அறியாமை வெளிப்படுகிறது.
இவரின் காழ்ப்புணர்வுக்கான காரணம் கடைசி வரியில் உள்ளது. பொள்ளாச்சி உபாதை என்று அவர் சொல்வது கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியனை என்று பலரும் பகிர்ந்திருந்தார்கள். ஜெமோவின் அயோக்கியத்தனங்களுக்கு எதிரான ஒரு கண்டன அறிக்கையில் அவர் கையெழுத்திட்டிருந்ததுதான் ஆஜானின் எரிச்சலுக்குக் காரணம்.
எழுத்தாளரும் வழக்கறிஞருமான தோழர் இரா.முருகவேள் எழுதியிருந்ததை பகிர்வது முக்கியம் என்று நினைக்கிறேன்.
பொன்னியின் செல்வன் பட வெளியீட்டை வைத்து தன் மீது ஒளி வெள்ளம் பாய்ச்ச நினைத்த முயற்சி வெற்றி பெறாததால் யுவ புரஸ்காரை வைத்து செய்துள்ள முயற்சி இது.
மொத்தத்தில் இது புளிச்ச மாவு ஆஜானின் வழக்கமான அயோக்கியத்தனம் மட்டுமே.
இதற்கு என்ன பெயர் ஜட்ஜய்யா?
வாழ் நாள் வரை வாகன ஓட்டுனர், வீட்டிற்கு ஒரு பணியாள்,
தலைமை நீதிபதியென்றால் ஐந்து வருடங்களுக்கும், இதர நீதிபதிகளுக்கு மூன்று வருடங்களுக்கும் தனிப்பட்ட பாதுகாவலர்,
தலைமை நீதிபதிக்கு வாழ்நாள் முழுதும் செயலாளர் வசதி.
தொலைபேசி, இணைய வசதிக்காக ஒவ்வொரு மாதமும் ரூபாய் 4,200.
ஓய்வு பெற்று ஆறு மாத காலம் வரை புதுடெல்லியில் பங்களாக்களில் தங்கலாம்.
விமான நிலையங்களில் சொகுசு அறைகளில் முன்னுரிமை.
இவை அனைத்தும் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் நீதிபதிகளுக்கும் ஒன்றிய அரசு அறிவித்துள்ள சலுகைகள்.
இவை அனைத்திற்குமான செலவினத்தை உச்ச நீதிமன்றம் வாயிலாக ஒன்றிய அரசு மேற்கொள்ளும்.
நாளை இவை உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்கு மாநில அரசுகள் விரிவு படுத்த வேண்டிய சூழல் வரும்.
நீதியரசர் என்.வி.ரமணா ஒய்வு பெறும் வேளையில் புதிதாக பொறுப்பேற்க உள்ள நீதியரசர் லலித் இன்னும் 72 நாட்களில் ஓய்வு பெறப்போகும் நேரத்தில் இந்த அறிவிப்புக்களுக்கான காரணம் என்ன?
சரி, எல்லாவற்றையும் அவர்கள் அனுபவிக்கட்டும்.
இதற்கு என்ன பெயர் என்று சொல்லி விட்டு அனுபவிக்கட்டும்.
அவர்கள் சொல்ல மாட்டார்கள்.
"இலவசம்" என்பதுதான் உண்மை.
Saturday, August 27, 2022
ரொம்பவே லேட்டு ஆஸாத்து
Friday, August 26, 2022
ஆட்டுக்காரன் அறிவு அவ்வளவுதான்.
நடந்து முடிந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா நான்காவது இடமும் 61 பதக்கங்களும் பெற்றது மோடியால்தான் என்று பாராட்டி ஆட்டுக்காரன் வெளியிட்ட ஒர் அறிக்கையை பார்த்தேன்.
On behalf of BJP TamilNadu, congratulations to the Indian contingent for the splendid performance in the Birmingham Commonwealth Games, 2022 by finishing in 4th position by winning 61 medals (22 Gold, 16 Silver and 23 Bronze medals).
The Path-breaking initiatives of the Ministry of YA & Sports under Hon Minister
Thiru Anurag Thakur avargal and the 360-degree approach undertaken by our Hon PM
Thiru Narendra Modi avargal for transforming sports in our country have made
these achievements possible!
இதற்கு
முன்பு நடைபெற்ற போட்டிகளில் பெற்றதைக் காட்டிலும் அப்படி ஒன்றும் அதிகமான பதக்கங்களை
விட அப்படி ஒன்று அதிகமாக இப்போது பெற்று விடவில்லையே என்ற சிந்தனையில் இணையத்தில்
தேடிய போது கிடைத்த தகவல்கள் நான் சொன்னது சரி என்பது தெளிவானது.
,
வருடம் |
தங்கம் |
வெள்ளி |
வெண்கலம் |
மொத்த
பதக்கங்கள் |
பதக்கப் பட்டியலில் இந்தியாவின் இடம் |
1998 |
7 |
10 |
8 |
25 |
7 |
2002 |
30 |
22 |
17 |
69 |
4 |
2006 |
22 |
17 |
11 |
50 |
4 |
2010 |
38 |
27 |
36 |
102 |
2 |
2014 |
15 |
30 |
19 |
64 |
5 |
2018 |
26 |
20 |
20 |
66 |
4 |
2022 |
22 |
16 |
23 |
61 |
4 |
பாவம் ஆட்டுக்காரன். அவன் அறிவு அவ்வளவுதான்.
ஆட்டுக்காரன் விட்ட கதையை நம்பியவர்களை என்னவென்று சொல்வது?
வேறென்ன
சொல்ல!
முட்டாள்கள்
பிகு: எழுதி ரொம்ப நாள் ஆனது என்பதற்காக அறிவுத்திலகம் ஆட்டுக்காரன் பெருமையை பாடாமல் விட்டு விட முடியுமா?
போட்ட ஓட்டு வேஸ்டாயிடுச்சே . . .
அதானிக்கு கொடுக்காமல் தனக்கே ஒரு சுரங்கத்தை குத்தகைக்கு எடுத்துக் கொண்டார் என்று சங்கிகள் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரேன் மீது புகார் கொடுக்க தேர்தல் ஆணையம் ஒரு சீலிட்ட கவரில் தன் பரிந்துரையை அம்மாநில ஆட்டுத்தாடிக்கு அனுப்பி உள்ளது.
ஹேமந்த் சோரேனின் பதவியை பறிக்கும் பரிந்துரையைத்தான் தேர்தல் ஆணையம் அனுப்பி உள்ளதாக சங்கிகள் சொல்லி வருகிறார்கள். சீலிட்ட கவருக்குள் என்ன உள்ளது என்ற ரகசியம் அவர்களுக்கு நிச்சயம் தெரியும். தேர்தல் ஆணையமும் மோடியின் ஏவல் நாய்தானே!
ஆனால் பாவம் ஹேமந்த் சோரேன்!
மோடியை முறைத்துக் கொள்ள வேண்டாம் என்பதற்காக "பழங்குடியினப் பெண்மணி ஜனாதிபதியாக வேண்டும்" என்று சொல்லி ஓட்டு போட்ட ராஜ தந்திரம் அநியாயமாக வீணாகி விட்டது.
Thursday, August 25, 2022
தரையில் தோன்றிய அழகு நட்சத்திரங்கள்
ரெய்ப்பூரிலிருந்து சென்னை திரும்புகையிலும் ஜன்னலோர இருக்கையே கிடைத்தது. இரவு நேரத்தில் விமானத்திலிருந்து பார்க்கையில் ரெய்ப்பூர் நகரிலும் சென்னை மாநகரிலும் ஒளி வீசிய மின் விளக்குகள் ஏதோ நட்சத்திரக் கூட்டமே தரையில் தெரிவது போல அவ்வளவு அழகாக அருமையாக இருந்தது.
அந்த
அற்புதக் காட்சிகள் உங்களுக்காக.
முதலில்
பார்க்கும் படங்கள் ரெய்ப்பூர் நகரம்.
அடுத்து பிரம்மாண்டமான நட்சத்திரக் கூட்டமாக தெரிவது சென்னை மாநகரம்.