Monday, May 31, 2021

இதுக்கு மட்டும் கத்துதா மாலன் பல்லி?

 


மூமூமூமூமூமூமூமூமூத்த பத்திரிக்கையாளர் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை கீழே அளித்துள்ளேன்.



இதுக்கு மட்டும் கத்துதா அந்த பல்லி என்ற வடிவேலுவின் பிரசித்தி பெற்ற வசனம் நினைவுக்கு வந்து விட்டது.


அது சுனா சாமி தப்பில்லை

 


தமிழக அரசு சரியான வழியில் செல்கிறது என்பதை சங்கிகளே தங்கள் பதற்றத்தின் மூலமும் வெறிக் கூச்சல்கள் மூலம் நமக்கு உணர்த்தி வருகின்றனர்.  ஆட்சியை கலைக்க வேண்டும் என்று சுனாசாமி, புரோஹித்திற்கு எழுதிய கடிதம் சங்கிகளின் பதற்றத்திற்கு ஒரு சான்று. கற்பனை உலகில் அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். 

சீரியஸான பதிவாக இதை எழுத யோசிக்கவில்லை. ஆனாலும் இவர்களை நினைத்தால் நமக்கு இயல்பாகவே கடுப்பு வருகிறது.

நிற்க

புரோஹித்துக்கு அனுப்பிய கடிதத்தில் சுனாசாமி விலாசமாக "லெமன் ட்ரீ" க்கு எதிராக என்று எழுதியிருந்தார்.

ஏன்யா,

கவர்னர் என்று போட்டால் மட்டுமே போதுமே!

ராஜ்பவன் என்பதுதானே கவர்னர் மாளிகையின் பெயர்!அதைச் சொன்னால் கூட போதுமே, எதற்கு சம்பந்தமே இல்லாமல் எலுமிச்சை மரத்தை சொல்ல வேண்டும் என்று யோசித்தேன்.

ஒரு வேளை கூகிளில் அப்படித்தான் விலாசம் கொடுக்கப்பட்டுள்ளதோ என்று பார்த்தால் அப்படி எல்லாம் இல்லை.

சரி எதற்கும் கூகிள் மேப் ஐ பார்ப்போம் என்று பார்த்தால் அதில் "லெமன் ட்ரீ" க்கு எதிரில்தான் ராஜ் பவன் இருப்பதாக சொல்கிறது.



ஆகவே இது சுனாசாமி தவறில்லை. கூகிள் மேப் லீலை. 

Sunday, May 30, 2021

தமிழகத்தை விட்டு வெளியேறுங்கள் . .

 


சங்கிகளின் மொழியிலேயே அவர்களோடு பேச வேண்டியுள்ளது.

மோடி ஆட்சியின் அவலங்களை விமர்சிப்பவர்களை "பாகிஸ்தானுக்குப் போ" என்றும் "தேச விரோதி" என்றும் வாய் கூசாமல் பேசிய கேடு கெட்டவர்களை அவர்கள் மொழியிலேயே பேசுவது தவறாகவும் தோன்றவில்லை.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்த நாள் முதல் புலம்பிக் கொண்டிருப்பவர்கள் சங்கிகள்தான்.

எப்படி ராகுல் காந்திக்கு பப்பு என்றொரு பிம்பத்தை கட்டமைத்தார்களோ, அதே போல "தத்தி, உளறு வாய், துண்டுச்சீட்டு பேச்சாளர், சுடலை, சின்ன மேளம்" போன்ற பிம்பங்களை இவர்கள் ஸ்டாலினுக்கு கட்டமைத்தார்கள். அது எடுபட்டதோ, எடுபடவில்லையோ, இவர்களாகவே அந்த பிம்பச்சிறைக்குள் சிக்குண்டு திமுக வெல்ல வாய்ப்பில்லை என்று நினைத்துக் கொண்டு மகிழ்ந்து கொண்டிருந்தார்கள். 

ஆனால் தேர்தல் முடிவுகள் மாறாக வந்ததில் சங்கிகளால் அதிலும் உள்ள மேட்டுக்குடிகளால் அதனை தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்று இன்றோடு இருபத்தி நான்கு நாட்கள்தான் ஆகிறது. ஒரு சரியான திசை வழியில்தான் ஆட்சியின் துவக்க நடவடிக்கைகள் அமைந்துள்ளது. அது இவர்களுக்கு பொறுக்கவில்லை. 

அதற்குள்ளாக அவர் பதவி விலக வேண்டும் என்று கூச்சல் போடுகிறார்கள். தமிழர்களை பொறுக்கி என்று சொல்லும் சுனாசாமி ஆட்சியைக் கலைக்க வேண்டும் என்று ஆளுனருக்கு கடிதம் எழுதுகிறார்.

மத்யமர் போன்ற குழுக்களில் வெறி கொண்டு பதிவு எழுதுகிறார்கள். 

இவர்களுக்கெல்லாம் சங்கி பாணியில்தான் பதில் சொல்ல வேண்டியுள்ளது.

"உங்களுக்கு விருப்பமில்லையென்றால் நீங்கள் தமிழகத்தை விட்டு தாராளமாக வெளியேறுங்கள்"

மாட்டிற்கு மரியாதை கொடுக்கும் மொட்டைச் சாமியாரின் உபி உங்களை நிச்சயம் வரவேற்கும்.


கவுண்டமணி, வடிவேலு பாணியில் சமையல்

 


முகநூலில் உலா வந்த நேரத்தில் ஒரு சமையல் சேனல் இடையே வந்து தொந்தரவு செய்து கொண்டிருந்தது. 

அந்த சேனலில் பொட்டுக்கடலை பர்பி என்று இரண்டு செய்முறை இருந்தது.

சரி நாம் மூன்றாவது முறையை கண்டுபிடிப்போம் என்று முயற்சி செய்தேன்.

பொட்டுக்கடலையை வறுத்து மிக்ஸியில் பொடி செய்து, அந்த அளவிற்கு முக்கால் பங்கு சர்க்கரையை வாணலியில் போட்டு அடுப்பில் வைத்து பாகு பொங்கி வந்த வேலையில் பொட்டுக்கடலை பொடியை போட்டு கொஞ்சமாக நெய் சேர்த்து கிளறி பாத்திரத்தில் ஒட்டாமல் வந்த போது தட்டில் கொட்டி



துண்டங்கள் போட நினைத்தால் அதுவும் வரவில்லை. அல்வா பதத்திலும் இல்லை.

ஒரு நொடிதான் யோசனை!

"த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா" என்று வடிவேலு பாணியில் பர்பிக்கு பதிலாக உருண்டையாக பிடித்து விட்டேன்.



"கோழி குருடா இருந்தா என்ன, குழம்பு ருசியா இருக்கறதுதான் முக்கியம்" என்று கவுண்ட மணி சொன்னது போல எந்த வடிவில் இருந்தால் என்ன, சுவைதானே முக்கியம்!

பிகு 1: சர்க்கரை இன்னும் கொஞ்சம் அதிகமாக போட்டிருக்க வேண்டும்.

பிகு 2 : சொதப்பவும் சொதப்பிட்டு சமாளிப்பு வேறயா என்று யாரும் கேட்பதற்கு முன்பாக நானே படம் போட்டு விட்டேன்.

Saturday, May 29, 2021

சிப்பு சேகரும் சீமான் தம்பிகளும் . ..

 


புதிய 2000 ரூபாய் நோட்டில் சிப்பு வைத்திருப்பதாக சொன்ன எஸ்.வி.சேகருக்கு சீமானின் தம்பிகள் சளைத்தவர்கள் அல்ல.

கொரோனா தடுப்பூசி போடுகையில் நம் உடலில் சிப்பு வைத்து விடுகிறார்களாம். காந்தத்தை ஊசி போட்ட இடத்தில் வைத்தால் ஒட்டிக் கொண்டு விடுமாம்.



எல்லா புத்திசாலிகளும் ஒன்று போலவே உளறுகிறார்கள்.


தள்ளிப் போட முடியாது!

 *நாளொரு கேள்வி: 28.05.2021*


தொடர் எண் *362*

இன்று நம்மோடு த.மு.எ.க.ச மதிப்புறு தலைவர் எழுத்தாளர் *ச. தமிழ்ச்செல்வன்*
#######################




*தள்ளிப் போட முடியாது!*

கேள்வி: பேரிடர் காலத்திலும் உழைப்பாளி மக்கள், அவர் தம் உரிமைகள், பண்பாடு எல்லாம் தாக்கப்படுகிறதே! எப்படி எதிர் வினை ஆற்றுவது?

*ச. தமிழ்ச் செல்வன்*

போர்க்களத்தில் நாம் நிற்கிறோம். சக போராளிகள் செத்து விழுவதைப் பார்த்து மனம் கலங்கினால் முன்னேற முடியாது. 

இப்போரில் எதிரி கொரோனா அல்ல. *கொரோனா நம் எதிரியின் கேடயம்.* நாம் ஆக்சிஜன் பற்றிய கவலைகளில் இருக்கையில் அவர்கள் லட்சத்தீவை விழுங்குகிறார்கள்.. என்.ஐ.ஏ அலுவலகத்தை வேளச்சேரியில் திறக்கிறார்கள். மதுரையில் பல கணிணிகளைக் கைப்பற்றுகிறார்கள். சமூக வலைத்தளம் மட்டுமே நமக்கான சிறிய சுதந்திர வெளியைத் தந்தது அதையும் சட்டம் போட்டுக் கையில் எடுக்கிறார்கள். புதிய கல்விக்கொள்கையை கறாராக வேகமாக அமல் படுத்துகிறார்கள். *விவசாயிகளை ஆறு மாதமாகச் சாவுங்கடா..* என்று...பட்டியல் நீள்கிறது. 

அவர்கள்  நிகழ்ச்சிநிரலை தங்குதடையின்றி அடிச்சு நவுத்துகிறார்கள். சில மாநிலத் தேர்தல் வெற்றிகளையுமே  கவனம் திருப்பலுக்கான' ஒன்றாக அவன் மாற்ற்கிறார்கள். சிவில் சமூகத்தைக் கைப்பற்றும் அவர்கள் அஜண்டா தங்கு தடையின்றி முன்னோக்கிச் செல்கிறது. கொரோனோவை போன அலையில் முஸ்லீம் எதிர்ப்புக்கு பயன் படுத்தினார்கள். சட்டங்கள் பலவற்றை நிறைவேற்றப் பயன்படுத்தினார்கள். இப்போது கொரோனா... *கவனம் நமக்கு... கொண்டாட்டம் அவர்களுக்கு....*

லாக் டவுன் முடிந்து, அலை முடிந்து....என்று நம் மனநிலையே  "தள்ளிப்போடும்" மனநிலை ஆகிக் கொண்டிருக்கிறது. கண்ணீரைத் துடைத்துக்கொண்டு முன்னேறும் போர் வீரரைப்போல, நாம் இன்றைய காலத்துக்கான ஒரு போராட்ட வடிவத்தையும் முழக்கங்களையும் உருவாக்க வேண்டும். *பாசிஸ்ட்டுகளின் நயவஞ்சக வலையாக கொரோனா பயம் மாறிவிடக்கூடாது.* அவர்கள் அஜெண்டாவில் அவர்கள் சற்றும் பின் வாங்காதபோது, நாம் அப்புறம் என்று தள்ளிப்போட முடியாது. கொரோனாவுக்கு எதிரான போரை நடத்திக்கொண்டே இப்போதே இதையும் கையிலெடுக்க வேண்டும்.

******************
*செவ்வானம்*

Friday, May 28, 2021

மீண்டதால் வேண்டுகிறேன்.

 


இருபத்தி இரண்டு நாட்களுக்குப் பிறகு நேற்றுதான் அலுவலகம் சென்றேன்.  

ஆம் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வீட்டிலேயே தனிமைப் படுத்தலில் இருந்தேன்.

 06.05.2021 வியாழன்.  ஐம்பது சதவிகித ஊழியர்கள் மட்டுமே அலுவலகம் வர வேண்டும் என்ற ஊரடங்கு கட்டுப்பாடு அன்றுதான் தொடங்கியது. அன்றைக்கு நான் அலுவலகம் செல்ல வேண்டிய முறை கிடையாது. இருப்பினும் சில மாறுதல்கள் தொடர்பாக தொழிலுறவு மேலாளரிடம் பேச வேண்டியிருந்ததால் கொஞ்சம் நிதானமாக பதினோரு மணி போல அலுவலகத்திற்குச் சென்றேன். கடுமையான வெயில். இரண்டு மணி நேரம் கழித்து வீட்டிற்கு திரும்புகையில் இன்னும் கடுமையான வெயில்.  வீட்டுக்கு வந்தால் சோர்வு கூடவே வந்தது. அன்றும் தொடர்ந்தது. மறு நாளும் தொடர்ந்தது, கூடவே காய்ச்சலும் இணைந்து கொண்டது.

 கடும் வெயிலின் பாதிப்பு என்று சமாதானப்படுத்திக் கொண்டாலும் கோவிட் சோதனை செய்து கொள்வது நல்லதென்று தோன்றியதால் 08.05.2021 சனிக்கிழமை காலை சி.எம்.சி மருத்துவமனைக்குச் சென்று மாதிரி கொடுத்து விட்டு வந்தேன். அன்று மாலை ஆறு மணிக்கு மேல் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை மருத்துவமனை இணையத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இரவு ஒன்பது மணிக்கு பரிசோதனை முடிவு “பாஸிட்டிவ்” என்று வந்து விட்டது.

 மறு நாள் காலை மருத்துவமனையிலிருந்து அழைப்பும் வந்து விட்டது. வெப்ப அளவு, ஆக்ஸிஜன் அளவு ஆகியவற்றை சோதனை செய்த பிறகு “அடிப்படைகள் எல்லாம் சரியாகவே உள்ளதால் மருத்துவமனையில் சேர வேண்டிய அவசியம் இல்லை. வீட்டிலேயே தனிமைப் படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்லுங்கள்” என்று சொல்ல மகிழ்ச்சியோடு வீட்டுக்கு வந்து விட்டோம்.

 வீட்டுக்கு வந்த பின்பு வெப்ப அளவு ஒரு நாள் கட்டுக்குள் இருந்தது. மறு நாளில் இருந்து அது மாறிக் கொண்டே இருந்தது.  மருத்துவ மனைக்கு தொலை பேசி செய்து கேட்கையில் மனதை எந்த செய்தியும் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்கள். அப்படி எது நம்மை பாதித்தது என்று யோசித்து அந்த சுமையை மனதிலிருந்து இறக்கி வைத்த பின்பு  பல தோழர்கள் அனுப்பிய செய்திகள் நம்பிக்கையை அளித்ததால்  கொஞ்சம் முன்னேற்றம் இருந்தது.

 ஆனால் அந்த முன்னேற்றம் ஒரு நாள் மட்டுமே நீடித்தது. தனிமைப் படுத்தலின் போது நேரத்தை கடத்தும் கருவியாக சமூக வலைத்தளம்தான் முதலில் இருந்தது. ஆனால் வாட்ஸப்பிலும் முக நூலிலும் ஓயாமல் வந்து கொண்டிருந்த இறப்புச் செய்திகள் நெஞ்சை கொஞ்சம் ஆட்டம் காண வைத்து விட்டது. எந்த மோசமான சம்பவமாக இருந்தாலும் அதனை ஒரு அனுபவம் என்றே கருதுகிற மன நிலை கொண்டவனாக இருந்தாலும் கூட உள்ளத்தில் அச்சம் எட்டிப்பார்த்தது உண்மை.

 மனம் முழுதும் கவலையை சுமந்த படி வீட்டு வேலைகளோடு என்னையும் பராமரித்துக் கொண்டிருக்கும் என் மனைவிக்கு என் மன உணர்வுகள் தெரியாமல் பார்த்துக் கொள்வது மிகவும் சிரமமான பணியாகவே இருந்தது.

 ஒரு புறம் பாரசிட்டமால் மாத்திரைகளை முழுங்கிக் கொண்டிருக்க இன்னொரு புறம் இசைக்கடலில் விழுந்து விட்டேன். செம்பை வைத்தியநாத பாகவதர். எம்.எல்.வசந்தகுமாரி, பால முரளி கிருஷ்ணா, யேசுதாஸ், மதுரை சோமு என்று கர்னாடக இசையிலும் இளையராஜா இசையில் எஸ்.பி,பி, சித்ரா பாடல்களிலும் என்னை மறந்தேன். கிரேசி மோகனும் கொஞ்சம் கை கொடுத்தார்.  சீரியஸான புத்தகங்கள் படிக்க முடியவில்லை.  ஜெயமோகன் பற்றிய புத்தகத்தை புரட்டிப் பார்த்தேனே தவிர உள்ளே செல்லவில்லை. சுகாவின் “தாயார் சன்னதி” கொஞ்சம் இளைப்பாறலை அளித்தது.

 இவையெல்லாம் உடல் நிலையில் மீண்டும் முன்னேற்றத்தை அளித்தது..  19, மே அன்று வந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் உண்மையிலேயே தெம்பை கொடுத்தது.  பாரசிட்டமால் மாத்திரை சாப்பிடுவதை நிறுத்திய பிறகும் வெப்ப அளவு கட்டுக்குள்ளேயே இருந்தது. 22 ம் தேதி தனிமைப்படுத்தல் முடிந்தது. ஊரடங்கு விதிகளின் படி 33 % ஊழியர்கள்தான் பணிக்கு வர வேண்டும் என்பதால் நேற்றுதான் அலுவலகம் சென்றேன்,

 உடலில் ஒரு சோர்வு இருந்த போதிலும் கூட வழக்கமான பணிகள் செய்வதில் எந்த பாதிப்பும் நேரிடவில்லை.  கொஞ்சம் கொஞ்சமாக இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி விடுவேன் என்று நம்பிக்கை உள்ளது.

 கொரோனா வைரஸின் தொற்றுக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டவன் என்ற அடிப்படையில் சில வேண்டுகோள்களை முன் வைக்கிறேன்.

 எந்த ஒரு நோயோ, அல்லது பிரச்சினையோ அதிலிருந்து வெளி வர மன உறுதி என்பது மிகவும் முக்கியம்.

 இரண்டாவது அலையில் உயிரிழப்புக்கள் என்பது அதிகம். தெரிந்தவர்கள், நண்பர்கள், சுற்றத்தினர் என அனைவருமே பலரை இழந்துள்ளோம். அந்த இழப்புக்கள் பற்றிய செய்தியை பொது வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியமா என்று முதலில் ஒரு கணம் சிந்தியுங்கள். அப்படி அவசியம் இல்லையெனில் யாருக்கு தெரிய வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் தெரிவியுங்களேன். பொது வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம் என்றால் கொரோனா பாதிப்பு என்பதையாவது சொல்லாமல் தவிருங்கள்.

 நான் ஏற்கனவே சொன்னது போல மன உறுதி கொண்ட என்னைப் போன்றவர்களையே இச்செய்திகள் அசைத்து விட்டது என்றால் கொரோனா தொற்று வந்து விட்டதே என்று மனதளவில் நொறுங்கிப் போனவர்கள் நிலை என்ன ஆகும்? நாம் பகிர்ந்து கொள்ளும் செய்தியால் அடுத்தவர் உடல் நலன், மன நலன் பாதிக்கப்படும் என்பதை நாம் அறியாமலேயே கூட இருக்கலாம். பாதிக்கப்பட்டவன் கூறுகிறேன். கொஞ்சம் நிதானமாக செய்திகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

 இரண்டாவதாக சொல்ல விரும்புவது

 அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள். அதைத் தவிர வேறு சிறந்த வழி ஏதும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.  முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்டதால் எனக்கான பாதிப்புக்கள் குறைவு என்பதே மருத்துவரின் கருத்தாக இருந்தது. அதனால் அழுத்தமாக சொல்கிறேன்

 அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ளுங்கள்.

கவிஞர்களுக்கு இப்படி ஒரு சோதனையா?

 


வாடகை வீட்டிற்கான விளம்பரம் ஒன்று முக நூலில் உலாவுகிறது.


எந்த கவிஞர் என்ன வெறுப்பேற்றினாரோ? இப்படி கவிஞர்களுக்கெல்லாம் வீடு கிடையாது என்று விளம்பரத்திலேயே சொல்லி விட்டார்களே!

இது என்ன சோதனை!

Thursday, May 27, 2021

மோடி நண்பரால் எம்.பி தற்கொலை . . . .

 


லட்சத்தீவை நாசப்படுத்தி வரும் பிரபுல் கோடா படேல் என்ற சங்கியை மேலும் அம்பலப்படுத்தி குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்கள் எழுதியுள்ள முக நூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன்.

 அவரை விதை போட்டால் துவரையா முளைக்கும் என்பது போல சங்கியாக இருந்தால் அவரது குணாம்சம் அயோக்கியத்தனம் என்றுதானே இருக்கும்!

 கீழே உள்ள படத்தில் உள்ளவர்தான் பிரபுல் கோட்டா பட்டேல்.

 


குஜராத் RSS தலைவர், கோடாபாய் ரஞ்சோத்பாய் பட்டேல் (Khodabhai ranchhodbhai Patel) என்பவரின் மகன்.. 

 பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பர்; 

 மோடி குஜராத் முதல்வராக இருந்தபோது அங்கே சக உள்துறை அமைச்சராக இருந்தவர்; தொடர்ந்து பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் தான் இவர்.. 

 நமது நாட்டில் மத்திய அரசின் நேரடி ஆட்சியின் கீழ் உள்ள பகுதிகளில் (Union Territory) நிர்வாக பொறுப்பில் Administrator என்ற பதவியில் IAS அதிகாரிகளை நியமிப்பது தான் வழக்கம்..

 ஆனால், இந்திய வரலாற்றில் முதன்முறையாக 2016 ம் ஆண்டு, டாமன், டயூ என்ற பகுதிக்கு நிர்வாக அதிகாரி (Administrator) யாக, தனது நண்பரும், பாஜகவை சேர்ந்தவருமான பிரபுல் கோடா பட்டேலை மத்திய அரசு அல்லது மோடி அரசு நியமித்தது...

 இந்த நியமனத்தின் பின் புலத்தில் தெளிவான ஒரு திட்டம் இருந்தது என்பதை உடனடியாக அறிந்து கொள்ள முடிந்தது..

 ஆமாம்...

 டாமன், டயூ பகுதியில் நிர்வாக அதிகாரி (Administrator) என்ற பெயரில், ஒரு கூலிப்படை கும்பலின் தலைவனைப் போல் களமிறங்கினார் பட்டேல்..

 குஜராத்தின் பெரும் பணக்காரர்களின் சொர்க்கமாக, கேளிக்கை மையமாக திகழும் இடங்கள் தான் டாமன், டயூ கடற்கரை..

 சுற்றுலா வணிகத்தின் பொன்னான வாய்ப்புகளை நோட்டமிட்ட ஒரு கார்ப்பரேட் முதலாளிக்காக, ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடியிருப்புகளையும், படகுகளையும், வலைகளையும் அழித்து, அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரை(MP) தற்கொலை செய்யும் அளவுக்கு தள்ளியவர் தான் இந்த பட்டேல்...

 2019ம் ஆண்டு நவம்பர் மாதம், மோட்டி டாமன் கலங்கரை விளக்கம் முதல், ஜாம்பூர் வரை உள்ள கடற்கரையில், பல தலைமுறைகளாக மீன் பிடித் தொழில் செய்து வந்த உள்ளூர் ஆதிவாசி பழங்குடிமக்களை ஈவு இரக்கமின்றி துரத்தி துரத்தி வெளியேற்றினார் பிரபுல் கோடா பட்டேல் என்ற நமது பிரதமரின் நண்பர்..

 இந்த கடற்கரை பகுதியில் இருந்த வீடுகள் அனைத்தும் தகர்த்து எறியப்பட்டன.. எதிர்ப்பை தடுத்து நிறுத்த 144 தடை உத்தரவு அறிவிக்கப்பட்டு தான் இந்த அக்கிரமங்கள் நடந்தேறின.. பள்ளிகள் அனைத்தும் தற்காலிக சிறைச்சாலைகளாக மாற்றப்பட்டு உள்ளூர் மக்கள் அனைவரும் அங்கே அடைக்கப்பட்டனர்..

 இந்த கொடுமைகளுக்கு எதிராக குரல் எழுப்பிய அந்த தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்(MP) மோகன் தேல்கர்; தாத்ரா நாகர் ஹவேலி தொகுதியில், தொடர்ந்து ஏழு முறை நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்...

 இந்திய நாட்டின் கடற்கரை முழுவதையும், நிலப்பரப்புகளையும், பவழப் பாறைகளையும், ஏன் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படும் இயற்கை முழுவதையும், கார்ப்பரேட் முதலாளிகளின் காலடிகளில் வைக்கும் கூலிப்படை கும்பலின் கங்காணி போல் செயல் படும் பிரபுல் கோடா பட்டேல், மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தேல்கர் மீது கண் வைத்தார்....

 தொடர்ந்து வந்த மிரட்டல்களை எதிர் கொள்ள முடியாமல்,  நாடாளுமன்ற உறுப்பினர் மோகன் தேல்கர் மும்பையில் Hotel Sea Green என்ற ஹோட்டல் ஒன்றில்,2021, பிப்ரவரி மாதம் 22ம் தேதி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்;, அவர் தற்கொலை செய்து கொண்ட அறையிலிருந்து அவர் எழுதிய 15 பக்க கடிதம் (Suicide Note) ஒன்று கிடைத்தது.. அந்த கடிதத்தில் குறிப்பாக பிரபுல் கோடா பட்டேலின் பெயரை குறிப்பிட்டு, தனது தற்கொலைக்கு இவர் தான் காரணம் என்று எழுதியுள்ளார்..

 தற்கொலை செய்து கொண்ட மோகன் தேல்கர் மகன் அபினவ் தேல்கர் பிரதமர் நரேந்திர மோடிக்கு படேல் மீது புகார் கடிதம் ஒன்றை அனுப்பினார்..

 தனது தந்தையை பிரபுல் கோடா பட்டேல் மிரட்டி 25 கோடி ரூபாய் கேட்டதாகவும் குற்றம் சுமத்தியுள்ளார் அபினவ் தேல்கர்..

 ஆனால்..

எதுவும் நடக்கவில்லை...

எதுவுமே நடக்காது...

ஏனென்றால் Praful Khoda Patel நமது பிரதமரின் நெருங்கிய நண்பர்...

RSS தலைவர் ஒருவரின் மகன்...

இப்போது பாஜக தலைவர்களில் ஒருவர்..

பொறுக்குமா மத்திய அரசு...

 டாமன், டயூ பகுதிகளின் Administrator பொறுப்பில் இருந்த பட்டேலை, லட்சத்தீவுகளின் நிர்வாக அதிகாரியாக(Administrator) கூடுதல் பொறுப்பை (Additional Charge) யும் ஒப்படைத்துள்ளது மத்திய அரசு..

 இப்போது, லட்சத்தீவு மக்களின் வயிற்றில் அடித்து, அந்த அழகிய தீவுகளை, அதன் பேரழகை, பவழப் பாறைகளை, நிலப்பரப்பை, தங்களது கார்ப்பரேட் எஜமானர்களுக்காக கொள்ளையடிக்க, ஒரு இனப்படுகொலைக்கு தயாராக களமிறக்கப்பட்டுள்ளார் பிரபுல் கோடா பட்டேல்..

 எங்கோ ஒரு மூலையில், எங்கோ ஒரு தீவில் என்ன நடந்தால் என்ன என்று அலட்சியமாக இருந்தால், ஒரு நாள், நாம் கூட ,இது போன்ற ஒரு சூழலை எதிர் கொள்ள வேண்டிய நிலை வரும்....

 


மேலே உள்ள படத்தில் உள்ளது தற்கொலை செய்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் திரு. மோகன் தேல்கர்...

வாய்ப்பில்லை ஆசிரியரே, வாய்ப்பில்லை


தலைமை ஆசிரியர் தோழர் இரா.எட்வின் அவர்களின் முகநூல் பதிவையும் அதற்கு நான் அளித்த பின்னூட்டத்தையும் பகிர்ந்து கொண்டுள்ளேன். 



 பணியில் சேர்ந்த புதிது

+2 பிள்ளைகளுக்கு ’ஸ்ட்ரெஸ்’ நடத்த வேண்டும். எப்படி நடத்துவது என்று பிடிபடவில்லை
சீனியர் கங்காதரன் சாரிடம் என் பிள்ளைகளுக்கும் சேர்த்து நடத்திவிடுமாறு கேட்கிறேன்
இந்த வருஷம் நான் நடத்தி விடுவேன். நான் ஓய்வு பெற்றதும் யார் நடத்துவாங்க. இப்படி உட்கார் என்று பக்கத்தில் அமரவைத்து அதை எப்படி நடத்த வேண்டும் என்று சொல்லித் தருகிறார்
அடுத்த நாள் நான் +2 B பிரிவில் நடத்துகிறேன்
பக்கத்து வகுப்பில் இருந்து எப்படி நடத்துகிறேன் என்று கவனிக்கிறார்
முடிந்து ஸ்டாஃப் ரூம் வந்ததும் கைகளைப் பிடித்துக் கொள்கிறார். செம எட்வின், +2 A கும் நீயே நடத்திடு
அய்யோ சார். எனக்கு ஒன்னும் தெரியாமதான இருந்தேன். நீங்கதானே சொல்லிக் கொடுத்தீங்க
இல்லேனு சொன்னேனா. நேத்து உனக்கு நடத்தத் தெரியல. எப்படி அதைக் கையாள்வதென்று நான்தான் சொல்லிக் கொடுத்தேன்
இல்லன்னு சொல்லல
இன்று நீ என்னைவிட அதை சூப்பரா ஹேண்டில் பண்ற
நடத்தினேன்
எனக்கு முடியாது என்பதை உணர்ந்த தருணத்தில் என்னுடைய சீனியரிடம் பொறுப்பை கொடுக்க நான் எத்தனித்ததும்
அவர் கற்றுத் தந்ததை உள்வாங்கியதும்
அவரைவிட நான் நன்றாக அதை ஹேண்டில் செய்வதாய் அவர் உணார்ந்த தருணத்தில்
அவர் வகுப்பில் என்னை எடுக்க அழைத்ததும்
நம்மால முடியாதப்ப
அல்லது நம்மைவிட சிறப்பாக செய்பவர்கள் நம்மிடம் இருக்கும்போது
மாற்றிக் கொடுப்பது நல்லது
இதை மே 26 உடன் யாரும் பொருத்திக் கொண்டால் நான் பொறுப்பல்ல

என்னுடைய பின்னூட்டம்

அதற்கெல்லாம் வாய்ப்பில்லை ஆசிரியரே! தன்னை விட திறமையானவர்கள் யாருமில்லை என்று ஆணவத்தில் ஆடும் மூடர் கூட்டத்தில் நல்ல ஆலோசனைக்கெல்லாம் வாய்ப்பில்லை தோழரே!

என்ன சரிதானே!

Wednesday, May 26, 2021

மாற்றிச் சொல்லுங்கள் அம்மணி

 

மேலே உள்ளது "தீரன்- அதிகாரம் ஒன்று" படத்தின் ஒரு காட்சியும் வசனமும். 

சங்கிகளையும் அது போலத்தான் "படிங்கடா, படிங்கடா முட்டாப்பசங்களா" என்று சொல்ல வேண்டியுள்ளது.

கொஞ்சமாவது படித்திருந்தால் காயத்ரி ரகுராம் போன்றவர்களின் மூளையில் இப்படிப்பட்ட ஆலோசனைகள் எல்லாம் தோன்றியிருக்குமா?

உண்மையிலேயே இவர்களுக்கெல்லாம் அறிவு இருந்திருந்தால் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று சொல்லி இருப்பார்கள்.

அறிவு இருந்தால் அந்த அம்மணி ஏன் சங்கியாக இருக்கப் போகிறார்கள்!



மோடியே பதவி விலகு

 


இன்று ஏழாவது வருடம். இந்தியாவுக்கு பெரும் விபத்து நேர்ந்த ஏழாவது வருடம்.

மக்கள் மீது அக்கறை இல்லாத, பெரும் செல்வந்தர்களுக்கு தரகு வேலை செய்யவே ஒரு கேவலமான மனிதன் பிரதமரான ஏழாவது வருடம்.

பொருளாதார அறிவு கிடையாது.

வரலாறு தெரியாது.

மக்கள் பிரச்சினைகளும் புரியாது.

ஆடம்பரம், வெற்றுக் கூச்சல், வெறித்தனம் மட்டுமே தெரிந்த மோசமான மனிதன் இந்தியாவை காட்டு மிராண்டிக் காலத்திற்கு அழைத்துச் சென்று விட்டார்.

பொய்களை நம்பிய மூடர்களும் பொய்களை வடிவமைத்த அயோக்கியர்களுமே இந்தியாவின் அவல நிலைக்கு காரணம்.

மனிதன் என்றே மதிக்கப்பட அருகதையற்றவ்ர்கள் ஆட்சிக்கு வந்த ஏழாவது வருடத்தை கறுப்பு தினமாக அனுசரிப்போம்.

மோடியே பதவி விலகு என குரல் கொடுப்போம்.

#BlackdayagainstGovt

என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி முக நூலிலும் ட்விட்டரிலும் நம் எதிர்ப்பை பதிவு செய்வோம்.

Tuesday, May 25, 2021

சங்கி புகுந்த லட்சத் தீவை பாதுகாக்க . . .

 



குமரி மாவட்ட மூத்த தோழர் ஷாகுல் ஹமீது அவர்களின் முக்கியமான, விரிவான பதிவு. 

ஆமை புகுந்த இடம் உருப்படாது என்பதற்கு ஆதாரமில்லை. ஆனால் சங்கி புகுந்த இடம் உருப்படாது என்பதற்கு இன்னும் ஒரு புதிய சான்று லட்சத்தீவு.

2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் வரை லட்சத்தீவு மக்கள் நிம்மதியாக வாழ்ந்தார்கள்...32சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட தீவு...
2011மக்கள் தொகை கணக்கெடுப்பு படி,மக்கள் தொகை 64,473பேர்.. இப்போது2021ம் ஆண்டு அதிக பட்சம் 70000பேர் இருக்கக்கூடும்; இவர்களில் 99%பேரும் பட்டியல் இன மக்கள்(SC Tribes)என்பது பலருக்கும் தெரியாது; ஆனால் அவர்கள் அனைவரும் இஸ்லாமியர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்..

லட்சத்தீவில் சொத்துக்களை வேறு யாரும் வாங்க முடியாது என்பது கூட பலருக்கும் தெரியாது...

மிகவும் அழகான தீவு....
அழகான மக்கள் கூட்டம்...
சிறைச்சாலைகளும், காவல் நிலையங்களும் காலியாகவே கிடந்தன...
மது விலக்கு அமுலில் இருந்தது...
குற்றம் புரிவோர் இல்லை என்றே கூறலாம்..'

இந்தியாவிலேயே Crime Rate இல்லை என்ற சூழல் நிலவியது லட்சத்தீவில்...
மீன் பிடித்தலும்,தேங்காய் வியாபாரமும் தான் முக்கியமான தொழில்...

விவசாயம் செய்ய முடியாத நிலப்பரப்பு என்பதால் இயற்கையாகவே முக்கிய உணவு மீனும், மாட்டுக்கறியும் தான்..

2020டிசம்பர் மாதம் வரை கொரோனா நோயாளி ஒருவர் கூட இல்லை....
லட்சத்தீவு ஒரு Union Territory என்பதால் அதன் நிர்வாகப் பொறுப்பு, Administrator என்ற நிர்வாகிக்கு...

தினேஷ் ஷர்மா என்ற Administrator கடந்த டிசம்பர் மாதம் மரணமடையும் வரை எல்லாம் நன்றாகவே நடந்தது...

தொடர்ந்து, பிரபுல் கோடா பட்டேல் என்ற பாஜக நபர் இங்கே பொறுப்பேற்ற உடனே லட்சத்தீவில் அனைத்தும் தலை கீழாகிப் போனது...

இந்த Praful Khoda Patel என்பவர், நமது பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நெருங்கிய நண்பர் என்பது மட்டுமல்ல, மோடி அவர்கள் குஜராத் முதல்வராக இருந்தபோது இந்த பட்டேல், உதவி உள்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர், என்ற செய்தியே லட்சத்தீவில் என்னென்ன நடந்திருக்கும் என்பதை ஊகிக்க முடியும்...

வந்த உடனே, பிரபுல் கோடா பட்டேல், SOP (Standard Operating Procedure)என்ற கோவிட் நடைமுறைகளை ரத்து செய்தார்; இப்போது கொரோனா தொற்று லட்சத்தீவை மிரட்டி வருகிறது..

LDAR (Lakshadweep Development Authority Regulations)என்ற சட்டத்தை கொண்டு வந்துள்ளார்.. இந்த சட்டத்தின் படி, லட்சத்தீவில் வசிக்கும் எவரையும் எந்த காரணமும் கூறாமல், நிலத்திலிருந்து வெளியேற்றவோ அல்லது மாற்று இடத்தில் வசிக்கவோ உத்தரவிடலாம்..

குற்றம் புரிவோர் இல்லாத லட்சத்தீவில்,PASA(Lakdhadweep Anti-Social Activity)என்ற Regulations)என்ற சட்டத்தின் கீழ், எவரையும் காரணம் எதுவுமே இல்லாமல் கைது செய்து, ஒரு வருடம் வரை சிறையில் அடைக்கலாம்..

Draft Panchayat Notification என்ற பெயரில், இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருப்பவர்கள் பஞ்சாயத்து தேர்தலில் போட்டியிட முடியாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Lakshadweep Animal Preservation Regulations என்ற பெயரில் கால்நடைகள் பாதுகாப்பு சட்டம் என்ற சட்டத்தின் திரை மறைவில்,

நேரடியாகவோ, மறைமுகமாகவோ, மாட்டுக்கறி வைத்திருக்கவோ, பாதுகாக்கவே, கொண்டு செல்லவோ கூடாது...
மீறினால் மாட்டுக்கறி பறிமுதல் செய்யப்படுவதோடு, கைது செய்யப்பட்டு,10ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்..
1லட்சம் ரூபாயிலிருந்து 5லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படலாம்...

பள்ளிக்கூடங்களில் மதிய உணவு வேளையில் மாட்டுக்கறி வழங்கப்பட்டு வந்தது, இப்போது ரத்து செய்யப்பட்டுள்ளது..

38க்கு மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டு விட்டன..

சுற்றுலா என்ற பெயரில் சாராயக்கடைகளை திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது..
190க்கு மேற்பட்ட சுற்றுலா துறை ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்..
பள்ளிகளில் மதிய உணவு தயாரிக்கும் ஊழியர்களையும், உடற்பயிற்சி ஆசிரியர்களையும் பணி நீக்கம் செய்துள்ளது புதிய நிர்வாகம்..

கடற்கரையின் அழகு கெட்டுப்போகிறது என்ற பெயரில்,மீனவர்கள் தங்களது வலைகள் உட்பட மீன் பிடி கருவிகளை பாதுகாக்கும் கூடங்கள்(Sheds)அனைத்தையும் பிய்த்து வீசிவிட்டது புதிய நிர்வாகம்.....

பவழப் பாறைகளையும், இயற்கையின் பேரழகையும் கொண்ட லட்சத்தீவின் கடற்கரையையும், நிலப்பரப்பையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தங்கத்தட்டில் வைத்து தாரை வார்த்து கொடுக்க அனுப்பப்பட்ட நபர் தான் இந்த Praful Khoda Page என்ற Administrator..

நீண்ட நெடுங்காலமாக, லட்சத்தீவு மக்கள் தங்களது வணிகம் அனைத்தையும் கேரள மாநிலம் பேப்பூர் துறைமுகம் வழியாகவே செய்து வருகின்றனர்; இனி மேல், இப்போது அனைத்தும் மங்கலாபுரம் துறைமுகம் வழியே தான் நடக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டுள்ளது புதிய நிர்வாகம்..வணிகம் அனைத்தையும் கேரளாவிலிருந்து அப்படியே கர்நாடகாவுக்கு கொண்டு சென்று விட வேண்டும் என்பது தான் இவரது நோக்கம்...பண்பாட்டு ரீதியாக லட்சத்தீவு மக்களின் கேரள உறவையும் தொடர்புகளையும் துண்டித்து விடுவதும் கூட இவர்கள் நோக்கம்...

லட்சத்தீவு மக்கள் எதை உண்ண வேண்டும் என்பதை இப்போது லட்சத்தீவு நிர்வாகம் தான் முடிவு செய்கிறது...

லட்சத்தீவுமக்களின் அடிப்படை உரிமைகளில் கை வைக்கும் Administrator ன் நடவடிக்கைகளை மிகக்கடுமையாக கண்டித்து கேரளாவில் முதல்வர் தோழர்:பிணறாயி விஜயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்;

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தோழர்:எளமரம் கரீம், தோழர்:A.M.ஆரிஃப் ஆகியோர்,பிரபுல் கோடா பட்டேலின் நடவடிக்கைகளை கண்டித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.

இந்த மனிதர் திரும்பி அழைக்கப்பட வேண்டும் என்று தங்களது கடிதங்களில் குறிப்பிட்டுள்ளனர்...

வளர்ச்சி என்ற பெயரில் லட்சத்தீவை தனியார் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு அப்படியே தூக்கி கொடுத்து விட துடிக்கும் பட்டேலின்பேராசையை முறியடிக்க வேண்டும்..

மீண்டும் ஒரு காஷ்மீர் தெற்கே வேண்டும் என்ற நப்பாசையுடன் நாக்கை நீட்டிக்கொண்டு வரும் கயமைத்தனத்தை எதிர்க்கவில்லை என்றால், மற்றொரு நாளில்,இவர்கள், நமது வீட்டு வாசலில் வந்து நிற்பார்கள்....

உடனடியாக லட்சத்தீவிலிருந்து, இந்த Proful Khoda Patel என்ற நிர்வாகியைமத்திய அரசு திரும்ப அழைக்க வேண்டும் ..

*Praful Khoda Patel என்ற இவர் சாதாரணமான நபர் அல்ல.. டயூ டாமன் போன்ற இடங்களில் என்னென்ன செய்தார் என்பதை நாளை பார்ப்போம்..#ShahulHameed

ரஜினி சகலையிடம் சொன்னதென்ன?

 


பள்ளிக் கட்டிடத்திற்கு வாடகை தராத, ஆசிரியர்களுக்கு சம்பளம் தராத ரஜினிகாந்த், தன் சகலை நடத்தும் பத்மா சேஷாத்ரி பால பவன் பள்ளி ஆசிரியர் மீது பாலியல் குற்றச்சாட்டு வந்ததும் என்ன சொல்லி இருப்பார் என்ற கற்பனையே மேலே உள்ள படம்.

ஆனால் இது காமெடியாக பார்க்க வேண்டிய செய்தி அல்ல. இந்த பள்ளி மீது கடந்த காலங்களிலும் கூட மாணவர்கள் இறப்புக்கள்     மறைக்கப் பட்டுள்ளதாக தீவிரமான குற்றச்சாட்டுக்கள் வந்துள்ளது.  கோவை கிளை மீது கடந்த ஆண்டு சில குற்றச்சாட்டுக்கள் எழுந்தன.

அதிகாரத்திற்கு நெருக்கமாக இருந்தால் என்ன வேண்டுமானால் செய்யலாம் என்ற ஆணவத்திற்கு முடிவுரை எழுத வேண்டிய நேரம் வந்து விட்டது.

பி.எஸ்.பி.பி துரோணாச்சார்யர்கள் என்ற வாட்ஸப் குழுவில் பரிமாறப் பட்டதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.



இது உண்மையென்றால் நிலைமை ரொம்பவும் மோசம் என்றே அர்த்தம். தங்களைப் பாதுகாக்க, தங்கள் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள இந்த நவீன துரோணாச்சார்யர்கள் கட்டை விரலோடு நிறுத்திக் கொள்ள மாட்டார்கள், தலையையே காவு கேட்பார்கள். 

Monday, May 24, 2021

மாலன் மீசையில மண்ணு ஒட்டலையாம்

 


மூமூமூமூமூத்த்த்த்த்த்த எழுத்தாளர் மாநில ஆட்சியாளர்களை நோக்கி முதல் அடி எடுத்து வைத்துள்ளார்.



ஆனாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல தலைமைச் செயலாளரை மட்டும் இப்பதிவில் பாராட்டியுள்ளார்.

சரி, சரி, கொஞ்சம் கொஞ்சமாகத்தானே காலில் விழ பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்! 

கூடிய விரைவில் முழு சரணாகதி அடைந்து விடுவார்.