Monday, November 30, 2020

அத்தந்தை எழுதிய கடிதம் சிறப்பு

 


எங்கள் கோட்டத்தின் மூத்த தலைவர்கள் தோழர் ஆர்.ஜகதீசன், தோழர் என்.ஏகாம்பரம் ஆகியோர் பல சமயங்களில் பரவசமாக பகிர்ந்து கொண்ட ஒரு பெயர் தோழர் சி.எஸ்.பஞ்சாபகேசன். அஞ்சல் துறை தொழிற்சங்கத்தலைவராக மட்டுமல்லாமல் தொழிற்சங்கக் கூட்டமைப்பை உருவாக்குவதிலும் மார்க்சிய தத்துவங்களை பயிற்றுவிக்கும் ஆசானாக செயல்பட்ட அவர்தான் வேலூர் நகரத்தில் உள்ள பல தொழிற்சங்கப் பொறுப்பாளர்களுக்கும் வழி காட்டியாக இருந்தவர் என்று அவர்கள் கூறுவார்கள்.

தான் 18 வயதை எட்டிய போது அவர் தனக்கு எழுதிய கடிதத்தை தோழர் சி.எஸ்.பி அவர்களின் மகனும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தலைவர்களில் ஒருவருமான தோழர் சி.பி.கிருஷ்ணன் அவர்கள் பகிர்ந்து கொண்டிருந்தார். 

எப்பேற்பட்ட கடிதம் அது!

தோழர் சி.பி.கே அவர்களின் அனுமதியோடு அக்கடிதத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தந்தை மகனுக்கு எழுதிய கடிதம்
”உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன்”
-சி எஸ் பஞ்சாபகேசன்
”எனது தாயார் நினைவு நாளை ஒட்டி நாங்கள் ஒன்று கூடி பழைய கடிதங்களை எடுத்து படிக்கும்போது எனது தந்தையின் இக்கடிதம் எதேச்சையாக கிடைத்தது. 42 ஆண்டுகளுக்கு பிறகு இன்றுதான் இக்கடிதத்தை மீண்டும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இக்கடிதம் எழுதப்பட்ட 1977ஆம் ஆண்டு எனது தந்தை திரு.சி எஸ் பஞ்சாபகேசன் வேலுரில் தபால் அலுவலகத்தில் பணி புரிந்து வந்தார். நான் காரைக்குடியில் பொறியியல் படிப்பு படித்து வந்தேன். மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கடிதம் என்பதால் இதனை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்”
சி பி கிருஷ்ணன்
கடிதத்தின் பிரதி
வேலூர் (வட ஆற்காடு)
4.2.1977
அன்புமிக்க கிருஷ்ணனுக்கு,
அநேக ஆசிகள். நாளையோடு உனக்கு பதினெட்டு ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. நீ ‘major’ ஆகிறாய். சட்ட ரீதியில் உனக்கு இனி பாதுகாப்பு தேவையில்லை. பிரச்சனைகள் அனைத்திலும் நீயாகவே சிந்தித்து சரியான முடிவெடுக்கக்கூடிய பருவம் எய்திவிட்டாய் என்பது பொருள். இன்று இரவு படுத்து உறங்கும்போது நள்ளிரவு 12 மணி 1 நிமிடத்திற்கு அந்த தகுதி உன்னை வந்து அடைந்து விடுகிறதா? இல்லை. கடந்த 10 ஆண்டு காலத்தில் அதிலும் குறிப்பாக கடந்த 3 - 4 ஆண்டு காலத்தில் பெற்ற அனுபவப் பாடம் உன்னை அத்தகுதி உள்ளவனாக ஆக்குகிறதா? பின்னதுதான் உண்மை என்று கூற தேவையில்லை.

உன்னை ஒத்த வயதுடைய தோழர்களுக்கு உலகத்தைப் பற்றி, நாம் வாழும் சமுதாயத்தை பற்றி அதில் உள்ள ஏற்றதாழ்வுகளைப் பற்றி தெரிந்திருப்பதைவிட உனக்கு மிகக் கூடுதலாக தெரியும் என்பது என் நம்பிக்கை. ஆக 18 வயது மேஜர் எதையும் தன்னிச்சையாக தீர்மானிக்க திறமையுண்டு என்று கூறுவதின் பொருள் வெறும் 365X18 என்ற நாட்களின் எண்ணிக்கையை பொறுத்ததல்ல. அவைகள் வெறும் எண்கள். சட்டத்திற்கு அவை போதுமானது. ஆனால் எதார்த்தத்திற்கு அது மட்டும் போதாது. முன் குறிப்பிட்டது போன்று சமுதாயத்தைப் பற்றிய சரியான கண்ணோட்டம்தான் உனக்கு இன்று கிடைத்திருக்கும் majority தகுதிக்கு ஏற்றவனாக்குகிறது.

இன்று கடந்தகால நிகழ்வுகளை சற்று சிந்தித்து, அசை போட்டு பார். அது இன்றைய நிலைகளை புரிந்து கொள்ளவும், (தனிப்பட்ட முறையிலும், குடும்ப அளவிலும், சமுதாய அளவிலும்) ஒரு சரியான கணிப்பு செய்யவும் பயன்படும். தவறுகள் இருப்பின் அவற்றை திருத்திக் கொள்ளலாம். குழப்பம் ஏற்பட்டால் அதுபற்றி மீண்டும் படித்து, கேட்டு, விளக்கம் பெறமுடியும். இனி எதிர்காலத்தில் நமது கடமை எது என்றும், அதை செய்ய தேவையான மனஉறுதியையும் நமக்கு அளிக்கும்.

இன்றைய அரசியல் போக்குகளை பேப்பர் மூலம் விபரம் தெரிந்து வைத்திருப்பாய் என எண்ணுகிறேன். ’நமது’ கணிப்புகள் எவ்வளவு சரியானது, துல்லியமாக தீர்மானிக்கப்பட்டு விளக்கப்பட்டது என்பது புரியும். ‘பாபூஜி’யின் (ஜகஜீவன்ராம்) statement ஒன்றே போதுமானது.

வரவிருக்கும் 3 ஆண்டுகள் உனக்கு மிக முக்கியம். படிப்பிற்கு மட்டுமல்ல, மற்றொரு தகுதியை பெறவும்தான். அதாவது இன்றைய பாராளுமன்ற ஜனநாயகத்தில் ஒரு ‘ஓட்டர்’ ஆகும் தகுதியை பெற 21 ஆண்டு நிரம்ப வேண்டும். ஆக இந்த 3 ஆண்டுகளில் உன் படிப்பில் முழு கவனம் செலுத்துவதுடன் அரசியல், சமுதாய, பொருளாதார விஷயங்களிலும் கவனம் செலுத்தி பாடம் பெற வேண்டும். அதற்கு தேவையான வழிகாட்டல் உன் விடுமுறை நாட்களில் நீ பெற வழி செய்து கொள்வது கடினமல்ல.

உலகில் கோடானுகோடி பேர் தோன்றி மறைந்துள்ளார்கள். ஆனால் ஒரு சிலரை உலகம் இன்றளவும் மறக்கவில்லை. அவர்களை மட்டும் ஏன் உலகம் மறக்க முடியவில்லை? அவர்கள் வாழ்ந்த சமுதாயத்தினின்று அவரக்ள் வேறுபட்டு நின்றார்கள் என்பது மட்டுமல்ல, அந்தந்த காலகட்டத்தில் இருந்த மேடு பள்ளங்களை கண்டு, இனம் கண்டு, அவற்றை போக்க சிறிதளவாவது, அவர்களுக்கு சரி என்று பட்ட வகையில் பாடுபட்டார்கள். அப்பணியில் தங்களையே அர்ப்பணித்துக் கொண்டார்கள். அந்த பாதை சரியா தப்பா என்று இன்று விமர்சிக்கிறோம். ஆனால் இன்று விஞ்ஞானம் மிக அற்புதமாக வளர்ந்துள்ள நிலையில், அந்த சமுதாய மேடு பள்ளங்களை பற்றிய அறிவு- அதற்கான காரணம், அவைகளை போக்கும் மருந்து மிக தெளிவாக கிடைத்துள்ளது. இந்த நிலை அன்று கிடையாது. ஆகவே இன்று நமக்கு ஒரு தெளிவான பார்வை இருக்க முடிகிறது. அதை அமுல் நடத்துவதில் எத்தனையோ இடர்பாடுகள், எதிர்ப்புகள், தாக்குதல்கள். ஆனாலும் இவை அனைத்தையம் சமாளித்து முன்னேற முடிகிறது. இந்த தடங்கல்களை கண்டு சோர்ந்து விடாமல், துவண்டு விடாமல் அவைகளை எதிர்போராடி, வெற்றி கொண்டு மேலும் முன்னேற உத்வேதகத்தோடு செயல்பட வேண்டியுள்ளது. அப்பணியில் நாம் தனித்து நிற்கவில்லை.

நம்மோடு தோளோடு தோள் சேர்ந்து அணிதிரள கோடானுகோடி மக்கள் உள்ளனர். அவர்களை தயார் செய்ய வேண்டிய பெரும் பணியே இன்று நம் முன் உள்ள கடமை. ஓர் இடத்தில் மாமேதை லெனின் கூறுகிறார்:

“ஒரு தனி மனிதன் எந்த அளவுக்கு முக்கியமானவன்?”
“சமுதாயத்தில் உள்ள ஏற்றதாழ்வுகளை (சுரண்டுவதையும் சுரண்டப்படுவதையும்) கணித்து, அதனால் பாதிக்கப்பட்ட மக்களை அணுகி, அந்த அநீதியை எதிர்த்து போராட தயார் செய்து, அந்த போராட்டத்தில் அவர்களை ஈடுபடுத்துவதில் எந்த அளவுக்கு ஒரு மனிதன் வெற்றி பெறுகிறானோ அந்த அளவுக்குதான் அவன் முக்கியமானவன்.”
அதாவது சமுதாய மாற்றம் என்பது ஒரு தனி அவதார புருஷனால் மட்டுமே- அவன் தனிப்பட்ட செயல்கள் மூலமே (உண்ணாவிரதம் etc.) சாதித்துவிட முடியுமென்பது அபத்தமானது.

நமது நாட்டு சுதந்திர போராட்ட வரலாறே அதற்கு ஒரு தெளிவான சான்று.

இந்த நாட்டுக்கு சுதந்திரம் கேட்டது தவறா? ஆனால் இந்த கோரிக்கையை ஆதரித்து பேரியக்கங்கள் நடத்தாதவரை இதை நாம் பெற முடியவில்லை. 1942-1946 நிகழ்ச்சிகள் இதைத்தான் எடுத்துக்காட்டுகின்றன. 1946 - எத்தனை வேலைநிறுத்தங்கள்- எவ்வளவு பேர் பங்கு கொண்டனர். “சுதந்திரம் தா” என்று கேட்பதைவிட்டு “வெள்ளையனே வெளியேறு” என்று அறைகூவலையும் விட்டு, இந்நாட்டு உழைப்பாளி மக்களின் பெரும் பகுதி நேரடி போராட்டத்தில் இறங்கி, மற்றொரு பகுதி ஆயுத படையினர் - கப்பற் படையினர் ஆங்கிலேயரின் Union Jack கொடியை ஒவ்வொரு கப்பலின் கொடி மரத்திலிருந்து இறக்கி, மூவர்ண காங்கிரஸ் கொடி, அரிவாள் சுத்தி தாங்கிய பொதுவுடைமை கட்சி கொடி, முஸ்லீம் லீகின் கொடி ஆகியவற்றை ஒவ்வொரு கப்பலிலும் ஏற்றிய மறுநாள்தான் 21.2.46 (from memory – it must be correct) இந்தியாவுக்கு சுதந்திரம் என்ற முடிவை லண்டனில் இருந்த ஆங்கில ஆட்சி முடிவெடுத்தது.

பின்னர் நடந்தது வேறு கதை. ஆனால் ஒரு பிரச்சனையால், சீர்கேட்டால், அடக்குமுறையால், சுரண்டலால் பாதிக்கப்பட்ட மக்கள் தான் அதை போக்கிக்கொள்ள பாடுபட வேண்டும். தியாகம் செய்ய வேண்டும். எந்த அளவுக்கு Quantity வளருகிறதோ அந்த அளவுக்குதான் கிடைக்கும் பலனின் quality இருக்கும். “அளவு மாற மாற குணம் மாறும்” இந்த குணமாற்றம் மீண்டும் அளவு மாற்றத்தை உண்டாக்கும்.

இவையெல்லாம் நீ முன்பே கூட கேட்டு இருப்பாய். ஆனாலும் இவைகளை இன்று உனது 18 வயது நிறைவு நாளில் கவனப்படுத்த வேண்டியது அவசியம் என நினைத்து எழுதுகிறேன். மேலும் நிறைய எழுத ஆசை. ஆனால் மூன்று நாட்களாக அலுவலகத்தில் மிக அதிகமான எழுத்து வேலை. ஆக கை குடைச்சல். அதிகம் எழுத முடியவில்லை.

முடிவாக பாதகம் செய்வோரை மோதி மிதிக்கும் சமுதாயத்தை உருவாக்குவதில் உனக்கும் ஒரு சிறப்பான பங்கு இருக்க வேண்டும். புறக்கணிக்கப்பட்ட மக்களை ஒன்றுதிரட்டி ஒரு மாபெரும் போராட்டத்தை, புதிய பாரத யுத்தத்தை நடத்த பாடுபடும் இயக்கத்தில் நீயும் ஒருவனாக இருந்து சிறப்புற செயலாற்றி உனக்கென்று ஒரு மறுக்க மறக்க முடியாத இடத்தை பிடிக்க வேண்டுமென்று விழைகிறேன். இப்பெரும் பணியை நிறைவேற்றவல்ல உடல் வலுவும், மனோதிடமும், நீண்டு வாழும் நிலையும் பெறுவாயாக! எனது நல்லாசிகள் உனக்கு உரித்தாகுக.
அன்புள்ள
அப்பா
பி.கு. எங்கள் அனைவரின் அன்பும் ஆதரவும் உனக்கு உறுதுணையாக நிற்குமென மல்லிகா* கூறுகிறாள்.
*சி பி கிருஷ்ணனின் மூத்த சகோதரி"

இக்கடிதத்தை படிக்கும் போது எனக்கு பதினோரு வயது இருக்கும் போதே அனைத்து அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கும் அழைத்துச் சென்று அரசியல் நிலைமைகள் மீது ஆர்வத்தை வரவழைத்த என் அப்பாவின் நினைவுகள் வராமல் இல்லை.

அது போலவே பல இந்திய, உலக வரலாறுகளைப் பற்றி என் மகனுக்கு விவரித்து, சமூகம் மீதான பார்வை எப்படி இருக்க வேண்டும் என்ற சுய சிந்தனையை அவனுக்கு உருவாக்கியுள்ளேன் என்பதையும் சொல்ல வேண்டும் என்று தோன்றியது.

என் இனமடா நீ

 





ஒரு வாட்ஸப் குழுவில் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்த காணொளியை பார்த்ததும் "என் இனமடா நீ" என்று சொல்லத் தோன்றியது. 

தரமான, சூடான ஃபில்டர் காபி இல்லாமல் என் நாள் எப்போதும் துவங்குவது இல்லை. 

Sunday, November 29, 2020

இதுதான் மரியாதை மோடி

 





கீழே உள்ளது மாரடோனாவின் இறுதி ஊர்வலம்.


தங்களின் நாயகனுக்கு இறுதி மரியாதை அளிக்க லட்சக் கணக்கான மக்கள் திரண்டுள்ளனர். நிஜமாகவே இது தானாக சேர்ந்த கூட்டம். ஜாடை காண்பித்து காலில் விழச் செய்யும் மோடி வகையறாக்கள் இதைப் பார்த்தாவது திருந்த வேண்டும்.

கூழைக் கும்பிடு போட்டும் வீர வஜனங்களை பேசியும் ஊரை ஏய்த்து வரும் கூட்டங்கள் என்றும் திருந்த மாட்டார்கள் என்பது வேறு விஷயம்

காலா வில்லனை விட மோடி கேவலமாக

 



காலா படத்தில் வில்லன் நானா படேகர் அனைவரையும் தன் காலில் விழச் சொல்வார். ஆனால் அந்த திரைப்படக் காட்சி இன்று நிஜமாகி உள்ளது. படங்களைப் பாருங்கள்.











மோடி ஹைதராபாத்திற்கு சீன் போட சென்றுள்ளார். அங்கே ஒரு ஆய்வகத்திற்கு போன அவரை கை கூப்பி வரவேற்கிறார்கள். ஜாடை காண்பிக்கிறார். அவர்கள் வணங்குகிறார்கள். மீண்டும் ஜாடை காட்ட அவர்கள் வேறு வழியின்றி  மோடியில் காலில் விழுந்து வணங்குகிறார்கள்.

மரியாதை என்பது தானாக வர வேண்டும் மோடி. இப்படி ஜாடை காண்பித்து காலில் விழச் செய்வது என்பது கேவலத்திலும் படு கேவலம். மனிதன் என்று சொல்வதற்கு அருகதையற்ற ஒரு அற்ப ஜந்து என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துக் கொண்டிருக்கிறார் இந்தியாவின் துயரம். 

இந்த அற்ப ஜந்துதான் இந்தியாவை உய்விக்கும் என்று இன்னும் சில மூடர்கள் நம்புவதும் பரப்புவதுதான் கொடுமை. 



பெருந் தொற்று காலத்திலும் ஏன்?


26, நவம்பர், 2020 வேலை நிறுத்தப் போராட்டம், விவசாயிகளின் டெல்லி சலோ போராட்டம் ஆகியவை இக்காலகட்டத்தில்  அவசியமா என்ற அவசியமற்ற கேள்விகளுக்கு அர்த்தமிக்க பதில்.



 *நாளொரு கேள்வி: 27/11/2020* 

தொடர் எண் *180*

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *க.சுவாமிநாதன்*
####################

*பெருந் தொற்று காலத்திலும் வேலை நிறுத்தம் ஏன்?*

*கேள்வி:* 

நேற்றைய வேலை நிறுத்தம் வெற்றிகரமாக நடந்தேறியுள்ளது. ஆனால் கொரோனா பெருந்தொற்று மற்றும் அதனால் பொருளாதாரம் தேக்க நிலையில் இருக்கும் சூழலில் பொறுப்புணர்வுமிக்க தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா?

*க.சுவாமிநாதன்* 

இந்தக் கேள்வி ஆட்சியாளர்களிடம் எழுப்பப்பட வேண்டிய ஒன்று. பெரும் பொறுப்பு உள்ள அரசாங்கம் அதைக் காப்பாற்றத் தவறுகிற போது எழுந்துள்ள எதிர் வினையே இவ் வேலை நிறுத்தம். *இதைத் தொழிற்சங்கங்கள் செய்யத் தவறியிலிருந்தாலே அவர்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று ஆகியிருக்கும்.* 

இரண்டு விசயங்கள் இந்த கேள்வியில் முன் நிறுத்தப்படுகின்றன. *ஒன்று, பெருந்தொற்றுக் காலம். இரண்டாவது, பொருளாதாரத் தேக்கம்.*

பெருந் தொற்றுக் காலம் எனும் போது அது ஒரு அசாதாரண காலம். எல்லோர் கவனமும் மக்களின் உடல் நலன், தொற்று பரவல் தடுப்பு, மரண விகிதம் குறைப்பு ஆகியவற்றில்தான் இருக்க வேண்டும். ஆனால் அரசாங்கம் *பொதுத்துறை தனியார் மயம், தொழிலாளர் உரிமை பறிப்பு, விவசாயத்தை கார்ப்பரேட்களுக்கு பலியாக்குதல், ஜனநாயக உரிமை பறிப்பு* ஆகியவற்றை மேற்கொள்கிறது. இன்னொரு புறம் தொற்றுப் பரவல் அதிகமாக உள்ளது. தனியார் மருத்துவ மனைகள் கொள்ளை லாபம் அடிக்கின்றன. வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் தனியார் மருத்துவமனைகளைக் கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகளைக் கூட இங்கு அரசாங்கம் செய்யத் தயாராக இல்லை. 

பொதுத்துறை, தொழிலாளர் நலன், ஜனநாயக உரிமைகள் ஆகியனவெல்லாம் நீண்ட நெடிய வரலாறு கொண்டவை. இவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவதாய் இருந்தால் பரந்த விவாதங்களுக்கான சூழல் வேண்டாமா? *நாடாளுமன்றமே முழுமையாக கூடி விவாதிக்க இயலாத நிலை.* நட்சத்திர குறியிட்ட கேள்விகள் கூட கூடிய நாடாளுமன்றத்தில் அனுமதிக்கப்படவில்லை. விவசாயச் சட்டங்கள் மாநிலங்களவையில் அரசுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையிலுங் கூட  ஜனநாயக விரோதமான முறையில் அரசால் நிறைவேற்றப்பட்டன.  

கேந்திரத் தொழில்களில் அரசு நிறுவனங்கள் மேலோங்கிய பங்கை வகிக்க வேண்டுமென்று கராச்சி காங்கிரஸ் 1931 ல் முடிவு செய்ததென்பது *விடுதலை இயக்கத்தில் முகிழ்த்த கனவு.* ஆனால் பெருந் தொற்று காலத்தில் இக் கனவை சிதைக்கலாமா? *பெருந் தொற்றுக்கான நிவாரண அறிவிப்புகளில் ஒன்றாகவே அதை அறிவிப்பது என்ன நியாயம்?* உலகம் முழுக்க கொரானோ உலகமயம் குறித்து மறு சிந்தனை எழுந்திருக்கும் போது இந்தியாவில் உலக மயத்தை அமலாக்க பெருந் தொற்றையே பயன்படுத்திக் கொள்வது *என்ன தார்மீகம்!* இதற்கு எதிர் வினை ஆற்றாமல் தொழிற் சங்கங்கள் இருக்க முடியுமா? அப்படி இருப்பது சரிசெய்ய இயலாத நாசத்தை தேசத்திற்கு இழைப்பதாக ஆகாதா!

*தொழிலாளர் உரிமை பறிப்பு* அநியாயத்திலும் அநியாயம். 8 மணி நேர வேலை என்கிற உரிமை ரத்தம் தோய்ந்தது. உயிர்கள் ஈந்து பெறப்பட்டது. ஆனால் 12 மணி வேலை நாள் என்று மாற்றப்படுவது தொழிலாளர் உரிமை பறிப்பு மட்டுமல்ல. வேலை பறிப்பும் ஆகாதா? பணிப் பாதுகாப்பு, சமுகப் பாதுகாப்பு எல்லாமே கேள்விக் குறியாகவில்லையா? *100 ஆண்டு வரலாற்றை 6 மாத ஊரடங்கைப் பயன்படுத்தி பின்னோக்கி திருப்ப முனைவதை எப்படி அனுமதிக்க முடியும்?*

*பொருளாதார நெருக்கடி* ஒரு  காரணமாக இக் கேள்வியில் சொல்லப்படுகிறது. நெருக்கடி கொரோனாவுக்கு முன்பே ஏற்பட்டுவிட்டது. கொரோனா அதைத் தீவிரமாக்கி இருக்கலாம். இந்த வேலை நிறுத்தம் அதற்கான தீர்வுகளையும் சொல்லி இருக்கிறது. வறிய மக்களுக்கு மாதம் ரூ 7500 + உணவு தானியங்கள் வழங்கு என்ற கோரிக்கை *உற்பத்தி தூண்டுதல்* உருவாக்கக் கூடியது அல்லவா!

*செல்வ வரி போடு, வாரிசு சொத்து வரி போடு, சூப்பர் ரிச் வரி போடு, கார்ப்பரேட் வரி சலுகைகளை ரத்து செய்* என்ற குரல்கள் எல்லாம் நெருக்கடியை தீர்க்க வழி செய்பவை அல்லவா! 

ஆகவே அரசாங்கம் பெருந் தொற்று காலத்தை, பொருளாதார நெருக்கடி என்கிற வாதத்தை தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்துவதே கேள்விக்கு ஆளாக வேண்டும்.

*புயல் அடிக்கும் போது மரங்களைப் பற்றி ஏன் அசைகிறாய் என்று கேட்பது முறையா?*

இவ்வளவு நெருக்கடி மிக்க சூழலில் கூட தொழிலாளர் வீதிகளில் ஆற்றியிருக்கிற எதிர் வினை *பாராட்டப்பட வேண்டிய ஒன்று. கேள்விக்குரியதல்ல.*

இதன் தாக்கம் அரசின் மூர்க்கத்திற்கு பிரேக் போடும் என்பதே உண்மை. எதிர்ப்பில்லா தாக்குதல்கள் எதிர் காலத்தையே கேள்வியாக்கும்.

*****************
*செவ்வானம்*

Saturday, November 28, 2020

அன்று மலர், இன்று நீர்

 தமுஎகச பொதுச்செயலாளர் தோழர் ஆதவன் தீட்சண்யா அவர்களில் பதிவும் அவர் பகிர்ந்து கொண்ட படங்களும்.

இன்னா செய்தாரை ஒறுத்தல்...

போராளிகளின் இயல்பாக இருக்கிறது மனிதாயம். அவர்கள் போராடுவதும் அதனாலேயேதான்.









போராட்டத்தை அடக்குமுறை கொண்டு ஒடுக்க வந்தவர்களுக்கு அன்று மலர் கொடுத்தார்கள். இன்று நீரும் உணவும் அளிக்கிறார்கள். போராளிகள் எப்போதும் மனிதர்களாகத்தான் இருக்கிறார்கள். காவிகளுக்கும் காக்கிச்சட்டைகளுக்கும்தான் மனிதம் என்பது தெரிவதில்லை.

மாலனை தாக்கிட்டாங்க!


 வழக்கறிஞர் தோழர் பிரதாபன் ஜெயராமன் அவர்களின் முக நூல் பக்கத்தில் பார்த்தேன். முரசொலியில் வந்த செய்தி. 




மிகப் பெரிய உத்தமn போல ஊருக்கெல்லாம் அட்வைஸ் செய்து கொண்டு அலையும் மோடியின் பிரச்சார பீரங்கி (துட்டுக்குத்தான்) , இந்தியா டுடே தமிழ் இதழின் ஆசிரியரான கதை அம்பலமாகி விட்டது.

காங்கிரஸ் கட்சி அன்றைக்கு அவருக்கு இனித்தது போல . . .

நிலவும் ஓர் நட்சத்திரமும்

 நேற்று இரவு எடுத்த புகைப்படங்கள்






Friday, November 27, 2020

மாலனின் மனுதர்ம கான்ஸ்டிடியூஷன்

 


அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தின் மீது எந்த மரியாதையோ, மதிப்போ இல்லாதவர்கள்தான் சங்கி கும்பல். 

கடந்த சில வருடங்களாக இவர்கள் அரசியல் சாசன தினம் என்ற ஒன்றை அனுசரிக்கத் தொடங்கியுள்ளார்கள். நாடாளுமன்றத்தில் ஒரு சிறப்பு கூட்டத் தொடர் ஒன்றையும் நடத்தினார்கள்.

அந்த காலகட்டத்தில் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 125 வது பிறந்த நாளை முன்னிட்டு  தலித் மக்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க ஒரு பிரத்யேகமான நாடாளுமன்றக் கூட்டத்தொடரை நடத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியது. இயக்கம் நடத்தியது. அக்கோரிக்கை விவாதப் பொருளாக மாறிய நிலையில் அதனை திசை திருப்ப "அண்ணல் அம்பேத்கரை கௌரவிக்கும் விதமாக அரசியல் சாசன தினம் கொண்டாடப் படும் என்று மடை மாற்றியது மோடி அரசு.

அந்த கூட்டத்தொடரின் முதல் பேச்சாளரான ராஜ்நாத் சிங்கே "மனு தர்மத்தின் அடிப்படையில் இந்திய அரசியல் சாசனம் அமைந்திருக்க வேண்டும்" என்று தன் வருத்தத்தை தெரிவித்தார். அப்போதே அரசியல் சாசனத்திற்கும் அண்ணல் அம்பேத்கருக்கும் இவர்கள் காண்பித்த மரியாதை பல்லிளித்துப் போய் விட்டது.

நேற்றும் அரசியல் சாசன தினம். சங்கிகளின் தமிழ் வார்த்தை வணிகர்களின் மூத்த தரகு எழுத்தாளர் மாலன், அரசியல் சாசனத்தை மாற்ற வேண்டும் என்று எழுத ஆரம்பித்துள்ளார். பழைய சட்டை, ஒட்டு போட்ட சட்டை என்றெல்லாம் சொல்லி வாஜ்பாய் காலத்தில் நடக்காமல் போன அரசியல் சாசன மாற்றத்தை இப்போதாவது மாற்ற வேண்டும் என்று சொல்கிறார்.

இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படை என்ன?


இதுதான் நம் இந்திய அரசியல் சாசனத்தின் முகப்பு. இதனை ஏற்று அமலாக்கத் தொடங்கியதைத்தான் நாம் ஒவ்வொரு வருடமும் குடியரசு தினமாக கொண்டாடிக் கொண்டு இருக்கிறோம்.


அரசியல் சாசனம் அடிப்படையாக சொல்வது என்ன தெரியுமல்லவா?

இந்தியர்களாகிய நாங்கள், இந்தியாவை ஒரு இறையாண்மை உள்ள, சோஷலிஸ, மதச்சார்பற்ற, ஜனநாயகக் குடியரசாக உருவாக்கவும்

இந்திய மக்கள் அனைவருக்கும்

அரசியல், பொருளாதார, சமூக நீதி கிடைக்கவும்

கருத்துரிமை, அதை வெளிப்படுத்தும் உரிமை, நம்பிக்கை மற்றும் வழிபாட்டுரிமை கிட்டவும்

சம வாய்ப்பும் சம மதிப்பும் கிடைக்கவும்

அனைத்து மக்கள் மத்தியிலும் சகோதரத்துவத்தை வளர்த்திடவும்

தனி நபரின் கண்ணியத்தையும்
தேசத்தின் ஒற்றுமையையும்  

பாதுகாப்போம்  என்று 

உளப்பூர்வமாக உறுதியேற்கிறோம். 

மோடி வகையறாக்கள் இந்த அரசியல் சாசனத்தின் அடிப்படையைத்தான் மனுதர்மத்தின் அடிப்படையில் மாற்ற விழைகிறார்கள். அதற்கு முன்னோட்டமாக மாலன் எனும் முதிய குரங்கை (மூத்தவரை குரங்குக் குட்டி என்று சொல்ல முடியுமா?)  விட்டு ஆழம் பார்க்கிறார்கள். 

அப்பன் வெட்டிய கிணறு என்பதற்காக உப்பு நீரைக் குடிக்க முடியுமா என்று கேள்வி கேட்கிறார்.

கோமியத்தை மட்டுமே குடித்துக் கொண்டிருக்கிற மாலன் வகையறாக்களுக்கு சுவையான குடி நீர் கூட உப்பு நீராக தெரிவதில் வியப்பில்லை. ஏனென்றால் அவர்கள் மூளை எப்போதோ விஷமாகி விட்டது. 



முள் வேலிகளும் தண்ணீர் பீரங்கிகளும்

 


அடக்குமுறை கொண்டு தொழிலாளர்களின், விவசாயிகளின்  போராட்டத்தை போராட்டத்தை முறியடித்து விடலாம் என்று மனப்பால் குடித்தவர்களுக்கு தக்க பாடத்தை நேற்று உழைக்கும் வர்க்கம் கற்றுக் கொடுத்துள்ளது. முள் வேலி கொண்டும் தண்ணீரை பீய்ச்சியடித்தும் மிரட்டப் பார்த்தார்கள். தடைகள் தகர்க்கப்பட்டது மட்டுமல்ல, அவை நதிக்கும் இரையாகி விட்டது. 









இனியும் செல்லாது உங்கள் ஆட்டம். 

எடுக்க வேண்டும் நீங்கள் ஓட்டம்.

Thursday, November 26, 2020

பிரியாணி தின்ன நன்றி கூட இல்லாமல்

 கிஷோர் கே சுவாமி என்ற வெறியனைப் பற்றி நேற்று எழுதியிருந்தேன். அந்த அநாகரீகப் பேர்வழி பற்றி எழுத்தாளர் வினாயக முருகன் எழுதியிருந்த முகநூல் பதிவு கீழே.

பிரியாணி ஓசியில் சாப்பிட்ட நன்றி கூட இல்லையே அந்த மனிதனுக்கு!




2015ஆம் வருடம் இதே நவம்பர் மாதம் சென்னை பெருவெள்ளத்தின்போது எங்கள் பகுதி முழுக்க வெள்ளம். மின் இணைப்பு இல்லை. எனது லேப்டாப்பை எடுத்துக்கொண்டு வளசரவாக்கத்திலிருந்து மேற்கு கேகேநகரில் இருக்கும் எனது சகோதரி வீட்டுக்கு நடந்துச் சென்றேன். எனது சகோதரியின் வீடு பாண்டிச்சேரி கெஸ்ட்ஹவுஸ் அதாவது டிஸ்கவரிபுக்பேலஸ் பின்னால் இருக்கிறது. இடுப்பளவு நீரில் நடந்துச்சென்று அங்கே போனேன்.

செல்லும் வழியில் ஓர் இஸ்லாமியர் எல்லாருக்கும் இலவசமாக பிரியாணி கொடுத்துக் கொண்டிருப்பதை பார்த்தேன். ஆச்சரியமாக இருந்தது. நூற்றுக்கும் மேற்பட்டோர்க்கு இலவசமாக பிரியாணி கொடுப்பது சாதாரண வேலை இல்லை. மிகுந்த பொருட்செலவு ஆகும். அந்தக்கடை வாசலில் ஒல்லியாக வெடவெடென கஞ்சா அடிக்ட்போல ஓர் இளைஞன் நின்றிருந்தான். பிரியாணி வாங்க நீண்டவரிசை நின்றிருந்தது. அவனும் வரிசையில் நின்றிருந்தான். அவனை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

பேஸ்புக்கில் நாங்கள் எல்லாரும் கழுவி ஊற்றும் அந்த இளைஞனை அங்கு பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பேஸ்புக்கில் எப்போதும் இஸ்லாமியர்களை திட்டி சங்கிகளுக்கு ஆதரவாக பதிவு எழுதும் அந்த நபர் வசிப்பது கேகேநகரில். ஒருகாலத்தில் அதிமுக சார்பாக களமாடி பிறகு காங்கிரஸ் பக்கம் போனான். ஜோதிமணி அவனை வரவேற்று பதிவிட்டார். பிறகு பிஜேபி பக்கம் போய் சேர்ந்தான். அப்பல்லோ மருத்துவமனையில் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்ட பிறகு அவரது உடல்நிலை நலம் என்று செய்திவந்தகாலத்தில் சாலையில் குத்தாட்டம் போட்டான். இன்று பார்க்கிறேன். அந்த இளைஞன் இப்படி பேஸ்புக்கில் பதிவு எழுதியுள்ளான்.

இந்த புயலை முன்னிட்டு இஸ்லாமியர்கள் உதவி செய்வார்கள். நமது இந்து சகோதரர்கள் ஏமாறவேண்டாம்.

2015- நவம்பரில் ஒரு பாய்கடை முன்பு பிரியாணிக்காக அவன் வரிசையில் நின்ற காட்சி நினைவுக்கு வருகிறது .

மாரடோனாவிற்காக உடைக்கப்பட்ட கதவு

 


கதவை உடை, கால்பந்து பார்ப்போம் (மீள் பதிவு)

 

தொண்ணூறாம்   ஆண்டு  உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் நடைபெற்ற நேரம் நான் எல்.ஐ.சி நெய்வேலி கிளையில் பணியாற்றி வந்தேன். அப்போது எல்.ஐ.சி ஊழியர் குடியிருப்பில் நான்கு பேர் வீட்டில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் இருந்தது. ஒருவர் கிளை மேலாளர்.  அவர் வீட்டிற்குச் சென்று டி.வி   பார்ப்பதில்  சில  சங்கடங்கள் உண்டு.  அடுத்து ஒரு மூத்த பெண் தோழர் வீடு. இன்னொரு தோழர் அப்போதுதான் திருமணமானவர். அங்கே செல்வது அவ்வளவு நாகரிகமாக இருக்காது.

 

எஞ்சியது என் வீடு மட்டும்தான். அப்போது என் பெற்றோரும் டெல்லி, ஹரித்வார், காசி என வெளியூர் சென்றிருந்தால் விளையாட்டு  ரசிகர்களுக்கு என் வீடுதான் சரணாலயம். தோழர்களோடு   நேரத்தை செலவிடுவதை விட ஒரு கிளைச்செயலாளருக்கும் வேறு என்ன மகிழ்ச்சி இருக்க முடியும்!

 

அன்று பிரேசிலுக்கும் அர்ஜென்டினாவுக்கும் இடையே இரண்டாம்   சுற்றுப்போட்டி. அனைவருக்குமே மாரடோனாதான் நாயகன். ஒன்பது  மணிக்குப் போட்டி. அனைவரும் வேகவேகமாக சாப்பிட்டு போட்டியைப் பார்க்க தயாராகிக் கொண்டிருந்தார்கள்.

 

அந்த ஊழியர் குடியிருப்புக்களுக்கு ஆட்டோமேடிக் பூட்டுக்களை   அமைத்திருந்தார்கள்.  சாவியை  கையில்  வைத்துக்  கொள்ளாமல் கதவு மூடிக்கொன்டால்  உள்ளே  ஆட்கள்  இருந்தால்  தப்பிக்கலாம்.  இல்லையென்றால்  சிக்கல்தான். காற்று வேகமாக அடித்தால்  கதவு மூடிக்கொள்ளும் அபாயம் எப்போதும் உண்டு.

 

எட்டரை மணிக்கு அந்த விபரீதம் என் வீட்டிலும் நிகழ்ந்தே விட்டது. கதவை திறந்து  வைத்து  விட்டு  யாருடனோ  வெளியே  நின்று  பேசிக்  கொண்டிருக்கையில் காற்று அடிக்க கதவு மூடிக்கொண்டது. ஒரு பெரிய குச்சி கொண்டு ஜன்னல் வழியாக சாவியை எடுக்க முயல  அது இன்னும் அதிக தூரத்திற்குச்சென்று விட்டது.

 

பூட்டு ரிப்பேர் செய்பவரை அழைத்து வரலாமா என்ற என் குரல்  எனக்கே கேட்பதற்கு முன்பு எங்கிருந்தோ சுத்தியலும் மற்ற உபகரணங்களும் வந்து சேர்ந்தது.பூட்டு உடைக்கப்பட்டது, கதவும்  கூட கொஞ்சம் உடைந்து போனது. எல்லாம் நாளைக்கு சரி செய்து கொள்ளலாம் என்று உள்ளே நுழைந்தார்கள். தொலைக்காட்சியைப் போட்டார்கள். மாரடோனா முகம் திரையில் தோன்றியது. விசில் அடிக்காத குறை மட்டும்தான். மற்றபடி எந்த  ஆரவாரத்திற்கும் குறைவில்லை.

 

அந்தப்போட்டி விறுவிறுப்பாக இருந்ததும் அர்ஜென்டினா ஒரு கோல் அடித்து வெற்றி பெற்றதும் ஒரு சின்ன ஆறுதல். ( கடைசியில் அந்தக்  கதவை சரி செய்ய மூன்று நாட்கள் ஆனது.)

 

 

மாரடோனா - மனங்கவர்ந்த வீரன்

 


டிஜியோ மாரடோனா - 2020 அளித்த இன்னொரு பெருந்துயரம் மாரடோனாவின் மரணம்.

உலகின் தலை சிறந்த கால் பந்து வீரர். லட்சக்கணக்கான ரசிகர்களை  உலகெங்கும் கொண்டவர். குள்ளமான உருவம், கொஞ்சம் குண்டு என்று கூட சொல்லலாம். ஆனால் அவர் வேகமும் எதிரணி வீரர்களை சமாளித்து பந்தை கடத்திக் கொண்டு செல்லும் லாவகமும் அவரை என்றுமே ரசிகர்களின் கண்மணியாகவே வைத்திருந்தது.

அவரது விளையாட்டை முதன் முதலில் தொலைக்காட்சியில் பார்த்தது என்பது 1986ம் வருடம் மெக்சிகோவில் நடைபெற்ற உலகக் கோப்பை இறுதிப் போட்டியின்போதுதான். அது கூட நிர்ப்பந்தத்தின் அடிப்படையில் பார்த்ததுதான்.

நள்ளிரவில் நடைபெற்ற அந்த போட்டியைக் காண என் இரண்டாவது அக்காவின் கணவர் சென்னையிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் பயணத்தை பாதியில் நிறுத்திக் கொண்டு நெய்வேலி வந்தார். ஒரு விளையாட்டுப் போட்டியில் ரசிகர்களின் ஆரவாரம் பெருங்கடலின் பெரும் ஓசையையும் தாண்டியதாக இருக்கும் என்பதை அறிந்து கொண்டதும் அப்போதுதான். 

சரி, எப்படியும் தூங்க முடியாது. போட்டியையாவது பார்ப்போம் என்று சலிப்போடுதான் பார்க்கத்துவங்கினேன். மாரடோனா எனும் காந்தம் மனதில் ஒட்டிக் கொண்டது. உலகக் கோப்பையில் அர்ஜெண்டினா வெற்றி பெற்ற பின்பு, அவர்கள் கடந்து வந்த பாதையை பின்னொரு நாள் தூர்தர்ஷன் ஒளிபரப்பிய போதுதான் "இந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த கோல்" என்று அழைக்கப்படுகிற இந்த பரபரப்பான கோலை பார்த்தேன். 

நீங்களும் பாருங்கள்










ஒரு வேளை காணொளி திறக்காவிடில் இந்த யூட்யூப் இணைப்பு மூலம் அதை ரசியுங்கள். 


மைதானத்தின் பாதியிலிருந்து கிட்டத்தட்ட ஆறு பேரை சமாளித்து அவர் கோலடித்த அந்த திறமை, மாரடோனாவின் மகத்தான தருணம். இங்கிலாந்திற்கு எதிரான அதே போட்டியில்தான் "கடவுளின் கை (Hand of God)" என்ற சர்ச்சைக்குரிய கோலும் இடம் பெற்றது என்பது ஒரு முரண்.

1990 உலகக் கோப்பை போட்டியும் அவரது ஆதிக்கத்தில்தான் இருந்தது. மேற்கு ஜெர்மனிக்கு எதிரான இறுதிப் போட்டியில் அவரை நகர விடாமல் மூன்று வீரர்களை சுற்றி வளைத்து இருந்தார்கள் என்பதே அவர் மீதான அச்சத்திற்கு சான்று. ஒரு சர்ச்சைக்குரிய பெனால்டி முடிவால் உலகக் கோப்பையை அர்ஜெண்டினா இழந்தது உலகெங்கிலும் இருந்த மாரடோனா ரசிகர்களுக்கு துயரமளித்தது. (1990 போட்டிகளின் போது எனக்கு ஏற்பட்ட ஒரு சம்பவம் குறித்து பிறகு மீள் பதிவு செய்கிறேன்) 

1994 உலகக் கோப்பை போட்டியிலிருந்து அவர் போதைப் பொருளை உட்கொண்ட குற்றச்சாட்டினால் வெளியேற நேரிட்டது. ஆனாலும் அவர் ரசிகர்களின் இதயத்திலிருந்து வெளியேறவில்லை.

ஒரு சாமானிய குடும்பத்திலிருந்து வந்தாலும் திறமை மூலம் சரித்திரம் படைக்க முடியும் என்பதற்கு உதாரணமானவர் அவர்.

சோஷலிச நாயகர்களை மதிப்பவர் அவர்.

தன் கையில் "சே" வை பச்சை குத்திக் கொண்டவர்.



க்யூப நாயகன் பிடல் காஸ்ட்ரோவின் மீது மதிப்பு கொண்டவர்.



பொலிவாரிய புரட்சி நாயகன் ஹ்யூகோ சாவேஸிற்கும் நெருக்கமானவர்.



இந்தியா வந்திருந்த போது தோழர் ஜோதி பாசுவை அவர் வீட்டில் சந்தித்தவர். பிடல் காஸ்ட்ரோவின் இந்தியப் பயணத்தின் போது எடுக்கப் பட்ட புகைப்படங்கள் அடங்கிய ஆல்பத்தை தோழர் ஜோதி பாசு, மாரடோனாவிற்கு அளித்துள்ளார்.



நான் மிகவும் மதிக்கும் பிடல் காஸ்ட்ரோவிற்கு மிகவும் நெருக்கமான உங்களையும் நான் மதிக்கிறேன் என்று அப்போது தோழர் ஜோதிபாசுவிடம் சொல்லியுள்ளார்.


மாரடோனாவிற்கு அவரது ரசிகனின் மனமார்ந்த அஞ்சலி. 

Wednesday, November 25, 2020

ஸ்டிக்கர் ஒட்டிங்க புத்தி இதுதான்

 


அதிமுக, பாஜக, அமமுக என மூன்றிலும் இருக்கிற வினோதமான சங்கி கிஷோர்.கே.சுவாமி என்ற அநாகரீகமான பிற்வியின் முகநூல் பதிவு இது.



2015 ல் இஸ்லாமிய அமைப்புக்கள் மேற்கொண்ட நிவாரணப்பணியும் அதன் மூலம் அவர்களுக்குக் கிடைத்த நற்பெயரும் சங்கிகளுக்கு அப்போது மிகுந்த எரிச்சலைக் கொடுத்தது. அந்த எரிச்சல் இன்னும் தொடர்கிறது போல...

இப்போது கூட அவர்களுக்கு பெயர் வந்து விடும் என்ற கவலைதான் இருக்கிறதே தவிர, அரசோ, பாஜகவோ, அதிமுகவோ, அமமுகவோ களத்தில் நின்று மக்களுக்கு உதவுவார்கள் என்று சொல்ல வார்த்தை கூட வரவில்லை பாருங்கள்!

அதெப்படி சொல்வார்கள்?

2015 பெரு வெள்ளத்தின் போது அடுத்தவர் பொருளை வழிப்பறி செய்து  A1 படம் போட்ட ஸ்டிக்கர் ஒட்டி வினியோகித்தார்கள்.

கஜா புயலின் போது மோடி பேனர் போட்ட  காலி லாரியை ரோட்டில் ஓட விட்டு நிவாரணம் செய்தது போல சீன் போட்டவர்கள் பாஜகவினர்.

அவர்கள் என்றைக்கு மக்களுக்கு உதவியுள்ளனர்? இப்போது மட்டும் உதவுவார்களா என்ன?