Thursday, April 30, 2015

திருமணம் புனிதமானதாக இருக்கலாம், பாலியல் வன் கொடுமையுமா?



கணவனே ஆனாலும் மனைhttp://being-her.com/wp-content/uploads/2015/01/marital-rape-poster.jpgவியின் விருப்பமின்றி கட்டாயம் செய்தால் அதுவும் பாலியல் வன் கொடுமைதான் என்று உலகின் பல நாடுகளின் சட்டம் சொல்கிறது. இந்தியாவும் அது போல சட்டத்தை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் பரிந்துரை செய்துள்ளது. அரசு என்ன செய்யப் போகிறது என்று திமுக எம்.பி திருமதி கனிமொழி கேட்ட கடிதத்திற்கு பாஜக அரசு அனுப்பியுள்ள பதில் வினோதமானது.

இந்தியாவில் அது சாத்தியமில்லை என்பதற்கு மோடி அரசாங்கத்தின் அமைச்சர் ஹரிபாய் பார்த்திபாய் சௌத்ரி “இந்தியாவில் திருமணங்கள் புனிதமாக கருதப்படுகிறது. குறைந்த கல்வியறிவு, அறியாமை, மத நம்பிக்கைகள், ஏராளமான சமூக பழக்கவழக்கங்கள், வறுமை, சமூகத்தின் மனப்பாங்கு ஆகிய காரணங்களால் திருமணத்திற்கு மக்கள் புனிதத்தன்மை அளித்து விட்டனர். ஆகவே திருமண பாலியல் வன் கொடுமைகளுக்கு சட்டத்தில் கொடுக்கப்பட்டுள்ள விலக்கை திரும்பப் பெற முடியாது” என்று தெளிவாக சொல்லி விட்டார்.

மனைவி கணவனின் அடிமை என்ற காவிக்கூட்ட கொள்கையை அவர் வெளிப்படையாக சொல்வதற்குப் பதிலாக பூசி மெழுகுகிறார். இதற்கு ஒரு புனிதப் பூச்சு வேறு. பொதுவாக “நம்பிக்கை” என்ற ஒரு வார்த்தையை மட்டும் வைத்து விளையாடுவார்கள். இப்போது “குறைந்த கல்வியறிவு, அறியாமை, வறுமை” போன்ற வார்த்தைகளை இணைத்துள்ளதன் மூலம் ஏதோ சமூகத்தின் அடித்தட்டு மக்கள் மட்டுமே பெண்களின் உணர்வுகளை மதிக்காமல் திருமண பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கி மேல் தட்டு மக்களுக்கு நற்சான்றிதழ் கொடுக்கும் முயற்சியும் தெரிகிறது.

விருப்பமில்லாத மனைவியை துன்புறுத்தும் கணவர்களுக்கு புனிதம் என்ற போர்வையில் பாதுகாப்புக் கவசம் தருவது நியாயம்தானா?  பெண்களின் உணர்வுகளுக்கு மரியாதையே கிடையாதா? பாலியல் வன் கொடுமை யார் செய்தாலும் தவறுதான். அது கணவன் மனைவியை என்றாலும் கூட.


Wednesday, April 29, 2015

அர்த்தம் மாறிய மருதகாசி பாடல்

 போதையால் வீழும் தமிழகம்

ஓரிரு மாதங்கள் முன்பாக எங்கள் நிறுவனத்தின் ஓய்வு பெற்ற உயரதிகாரி திரு ப. இசக்கி ராஜன், கீழேயுள்ள காணொளியை மிகுந்த கவலையோடு பகிர்ந்து கொண்டார்.


டாஸ்மாக் மூலம் தமிழகத்தின் இளைஞர்களின் வாழ்வை சிதைத்துக் கொண்டிருக்கின்றனர். இதற்கு இரண்டு கழகங்களுமே பொறுப்பு.

இந்த காணொளியை தயாரித்தது யார் என்று தெரியவில்லை. ஆனால் ஒரு இடம் ரொம்பவும் கச்சிதமாக பொருத்தப்பட்டு கோபத்துக்கு இடையிலும் கூட சிரிப்பை வரவழைத்து விடுகிறது.

"மண்ப்பாறை மாடு கட்டி"  பாடலை அறுபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக எழுதிய போது  தன் வரிகள் இப்படியும் பயன்படும் என்பதை மருதகாசி நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்.

ஆச்சார்யா வருகை - அம்மாவிற்கு கிலியா?




இப்படி ஒரு தலைப்போடு எந்த தமிழ் நாளிதழாவது இன்று தலைப்புச் செய்தி வெளியிட்டுள்ளதா என்று தெரியாது.

ஆனால் அப்படி தலைப்பு இருந்தால் அது பொருத்தமாகவே இருக்கும்.

பவானிசிங்கின் நியமனம் செல்லாது என்ற தீர்ப்பு முதல் அடி என்றால் மீண்டும் ஆச்சார்யா வருவது அடி மேல் அடி. இனி புதிய விசாரணை அவசியமில்லை, ஆச்சார்யா வந்தால் என்ன? வராவிட்டால் என்ன என்ற கேள்வி எழலாம்.

ஆனால் கர்னாடக உயர்நீதி மன்றத்தோடு  முடிகிற பிரச்சினை இல்லை. மீண்டும் உச்ச நீதி மன்றம் செல்லும் போது அங்கே ஆச்சார்யாதான் வாதிடப் போகிறார், இந்த முறை மைக்கேல் குன்ஹா  கொடுத்த தீர்ப்பு என்ற பெரும் ஆயுதம் வேறு அவர் கைவசம் இருக்கப் போகிறது.

உச்ச நீதி மன்றத்தில் ஏதாவது "துண்டுக்கு அடியில் விரல்" மூலம் ஏதாவது அதிசயம் நடக்காவிட்டால்???

நினைத்துப் பார்க்கவே பயங்கரமாக இருக்கிறது.

ஓ.பி.எஸ் உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் சடாமுடி சாமியார்களாகவே மாறி விடுவார்களே!

Tuesday, April 28, 2015

பேரழிவின் போது பிதற்றல்கள் வேண்டாம்

 

நில நடுக்கத்தில் நேபாளம் நிலைகுலைந்திருக்கிறது. அழிவின் தடம் எங்கெங்கும் காணப்படுகிறது. சிதைவுகளுக்கிடையே  சிக்கிக் கொண்ட பிரேதங்களை மீட்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

சடலங்களைத் தேடி பிணந்தின்னிக் கழுகுகள் அலைவது போல இந்த துயரமான நேரத்திலும் மத வெறிக் கழுகுகள்  தங்கள் மத வெறி செயல்திட்டத்தை அரங்கேற்றப் பார்க்கின்றனர்.

இதிலே மத வெறியர்கள் தங்களுக்குள் பேதமில்லை என்பதை நிரூபிக்கின்றனர். 

மாட்டுக் கறி சாப்பிட்டதால்தான் இந்த நில நடுக்கம் என்று இந்தியாவின் இந்து மத வெறி சாமியார்கள் சொல்லும் போது பைபிளின் வார்த்தைகள் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்காவின் பாதிரியார் ஒருவர் உளறியுள்ளார்.

உங்கள் மதவெறியை பரப்புவதற்கான நேரம் இதுவல்ல மூடர்களே, விலகியிருங்கள். மனிதம் தேவைப்படும் நேரம் இது.

Monday, April 27, 2015

ஐஸ்வர்யா ராய் மட்டுமல்ல பொறுப்பு



மேலே உள்ள கல்யாண் ஜ்வல்லர்ஸ் விளம்பரத்திற்காக பல தளங்களில் பலரும், குறிப்பாக ஆங்கில தளங்களில் ஐஸ்வர்யா ராயை காய்ச்சி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  

அடிமை மனோபாவத்தையும் நிற வெறியையும் இந்த விளம்பரம் உயர்த்திப் பிடிக்கிற இந்த விளம்பரத்தில் நடித்ததற்காக அவர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று பலர் எழுதிய கடிதத்தை  கீழே தந்துள்ளேன்.

 

Dear Mrs Aishwarya Rai Bachchan,

We write to draw your attention to a full-page advertisement for Kalyan Jewellers in which you feature that appeared in The Hindu (Delhi edition) on April 17, 2015. In the advertisement you appear to be representing aristocracy from a bygone era – bejewelled, poised and relaxing while an obviously underage slave-child, very dark and emaciated, struggles to hold an oversize umbrella over your head.

We wish to convey our dismay at the concept of this advertisement, and that you have, perhaps unthinkingly, associated with such a regressive portrayal of a child to sell a product. While advertisers routinely use fantasy images to sell products, they must surely desist from using images that condone, legitimise, normalise, or build desirable fantasy around slavery or servitude of any kind, including child slavery orchild servitude. Further, the extremely fair colour of your skin (as projected in the advertisement) contrasted with the black skin of the slave-boy is obviously a deliberate “creative” juxtaposition by the advertising agency, and insidiously racist. The genealogy of this image can be traced back to 17th and 18th century colonial European portraits of white aristocracy, depicting women being waited upon by their black “servants”. We have copied some examples of these racist portraits below.

We are fully aware that yours is an advertisement selling jewellery through creating a fantasy/desire, and not a portrayal of reality. Yet, advertisements and visuals are a critical part of our socio-cultural-psychological ecosystem and these ecosystems can either help create conditions in our mind that will foster positive social change or work against it. So, in this context, what is the social change we want? One, racism is a global reality, and we need to fight it. Two, though child labour in many industries is illegal in India, it is still rampant and we all need to work together to change this. Three, the Right to Education Act mandates that all children up to age 14 must be in school, and we need to make sure they are there and learning.

Given that we proclaim commitment to each of these goals, we urge you to look beyond the product itself and examine the fantasy/desire that this particular advertisement seeks to subliminally create. The fantasy here, it seems, is – buying and wearing Kalyan Jewellery will create for a woman the feeling of living in an era where it is OK for dark-skinned little children from poor homes (hence, the malnourished child model) to be enslaved or pressed into servitude to pander to bejewelled women from the nobility; an era where slavery is not only socially acceptable but a slave is something to be flaunted – hence the portraiture style of the advertisement echoing the 17th and 18th century genre, which pointedly has noble ladies along with their child-slaves.
We draw your attention to a similar image (with a more contemporary feel) that was created by Pakistani designer Aamna Aqeel in May 2013 in her “Be My Slave” fashion shoot, depicting white models in high-end clothes being served by a dark child slave. The pictures, which appeared in DIVA, a Pakistani fashion and lifestyle magazine, were called tasteless and racist. One photo from that shoot is a structural mirror of the Kalyan Jewellers advertisement, and serves to illustrate how frighteningly enduring this slave fantasy is.

Today, many national and international movements are struggling to change at least the public culture that normalises child labour, a struggle that the Nobel committee has also recognised. We, therefore, hope you agree that this sort of advertisement – a romaticisation of child servitude to feed into elite fantasies – is extremely objectionable and avoidable.

As an influential member of the Indian film industry and a popular star with a large fan following, we trust that you wish to use your image in a manner that promotes progressive thought and action, and would not knowingly promote regressive images that are racist and go against child rights.

We, therefore, urge you to do the right thing – cease to associate yourself with this offensive image by ensuring that further use of this advertisement is stopped.
We also request that you, as a National Brand Ambassador for Kalyan Jewellers, circulate a considered public retraction, and thereby provide a positive example to others to learn from your reflection and reasoning for withdrawing from such an advertisement.

We would like to use this opportunity to try and create better, more progressive, advertising in the future, and sincerely hope we can continue to engage with you towards this end. We have sent a similar letter to Kalyan Jewellers.

We do look forward to your response and action on this.

Yours sincerely,
Farah Naqvi, Writer and Feminist Activist
Nisha Agrawal, CEO, Oxfam India
Enakshi Ganguly & Bharti Ali, Co-Directors, HAQ: Centre for Child Rights
Madhu Mehra, Executive Director, Partners for Law in Development

வெள்ளையர்கள் காலத்தில் கருப்பினக் குழந்தைகளை அடிமைகளாக நடத்திய மோசமான வரலாற்றை நினைவு படுத்தும் சில ஓவியங்களையும் அக்கடிதத்தில் இணைத்திருந்தார்கள்.
அந்த படங்கள் இங்கே
 
 
 
 

  கடிதத்தில் சொல்லப்பட்ட உணர்வுகளோடு நானும் இணைந்து கொள்கிறேன். 


ஆனால் ஐஸ்வர்யா ராயை விட இந்த விளம்பரத்திற்கு கூடுதல் பொறுப்பேற்க வேண்டியது விளம்பரத்தை வெளியிட்ட "கல்யாண் ஜ்வல்லர்ஸ்" மற்றும் விளம்பரத்தை தயாரித்த விளம்பர நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர்களே.






























Sunday, April 26, 2015

திரு வெங்காய நாயுடு,பொறாமைப் பட்டு என்ன செய்ய?

நேற்றைய தீக்கதிர் நாளித்ழில் தோழர் எஸ்.பி.ராஜ்ந்திரன் எழுதி வெளியான கட்டுரையை இங்கே பகிர்ந்து   கொண்டுள்ளேன். பணிக்காலம்  முடிந்த சி.பி.ஐ(எம்) எம்.பி தோழர் ராஜீவ் அவர்களை பாராட்டுகிற போது அவர் எங்கள் கட்சியில் இல்லையே என்று பொறாமைப்படும் அளவு அவரது செயல்பாடு இருந்தது என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு கூறியுள்ளார்.

அமைச்சர் மனதில் கொள்ளவேண்டியது ஒரே ஒரு விஷயம்தான்.

அவர் மார்க்சிஸ்ட் கட்சியில் இருந்ததால்தான் சிறப்பாக பிரகாசித்தார். உங்கள் கட்சியில் இருந்தால் அவரது திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பே தராமால் மோடி பஜனையில் கோரஸ் பாடுபவராக மாற்றி இருப்பீர்கள்.

அதே போல பொது நலன் விரும்பும் சுய சிந்தனை உடையவர்கள்  போயும் போயும் உங்கள் கட்சியில் சேருவார்களா என்ன?

 


 மூழ்கும் கப்பல் அல்ல ; நீர் மூழ்கிக் கப்பல்!

                                                         எஸ்.பி.ராஜேந்திரன்

 

“நாங்கள் மூழ்கும் கப்பலல்ல; நீர்மூழ்கிக் கப்பல்”.- ஏப்ரல் 19ம் தேதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் வலைப்பக்கத்தில் இப்படி ஒரு வாசகம் பளிச்சிட்டது. அடுத்த சில நிமிடங்களிலேயே இந்த வாசகத்திற்கு ஆயிரக்கணக்கானோர் ஆதரவு தெரிவித்து கருத்து வெளியிட்டார்கள். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மூழ்கும் கப்பல்; அதற்கு சீத்தாராம் யெச்சூரி தலைமையேற்றிருக்கிறார்” என்று சிவசேனா கட்சி ஆத்திரத்தைக் கொட்டி தனது பத்திரிகையான ‘சாம்னா’வில் எழுதியிருந்தது. இந்த வார்த்தைகள் வலைத்தளங்களில் பளிச்சிட்ட அடுத்த நொடியே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சில இளைஞர்கள் டுவிட்டர் பக்கத்தில் இட்ட பதிவுதான் “நாங்கள் நீர்மூழ்கிக் கப்பல்” என்பது.

ஏப்ரல் 23ம் தேதி மாநிலங்களவையின் பட்ஜெட் தொடருக்கான இரண்டாவது அமர்வு துவங்கியது. 

அந்த அவையில் முதல் ஒருமணி நேரம் நடைபெற்ற நிகழ்வுகளை ராஜ்யசபா டிவியில் பார்க்க வாய்ப்பு கிடைக்காதவர்கள் ஒரு அற்புதமான காட்சியைக் காணத் தவறிவிட்டார்கள் என்றே பொருள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர் எதிரான கட்சி பாரதிய ஜனதா கட்சி. ஆனால் அந்தக் கட்சியைச் சேர்ந்த அமைச்சர்களே எழுந்து நின்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக சீத்தாராம் யெச்சூரி தேர்வு செய்யப்பட்டதை உளப்பூர்வமான மகிழ்ச்சியோடு அறிவித்து பாராட்டு மழை பொழிந்தனர். 

அந்த நிகழ்வில் கடைசியாகப் பேசிய பாஜகவின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற அலுவல் துறை அமைச்சருமான வெங்கய்யா நாயுடு, இந்த அவையைச் சேர்ந்த நமது சக தோழரான சீத்தாராம் யெச்சூரி, இந்தியாவின் முக்கியக் கட்சிகளில் ஒன்றான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டு இங்கே அமர்ந்திருப்பது நமக்கெல்லாம் பெருமை; இந்த அவைக்குப் பெருமை என்று புகழாரம் சூட்டினார்.

இந்திய அரசியலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் சக்தி என்பது பற்றி, சிவசேனாவுக்கு நாம் பதிலளிக்க வேண்டியது இல்லை; வெங்கய்யா நாயுடுவின் மேற்கண்ட வார்த்தைகளே போதுமானது. உண்மையில் மாநிலங்களவையில் அன்றைய தினம் நடந்தது இதற்கு முன்பு இல்லாத ஒரு நிகழ்வாகவே இருந்தது என நாடாளுமன்ற பார்வையாளர்கள் கூறுகிறார்கள். மாநிலங்களவையில் கடந்த ஆறு ஆண்டுகாலமாக பணியாற்றி, தனது பணியை வெகு சிறப்பாக நிறைவு செய்த, கேரளத்தைச் சேர்ந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பியான பி.ராஜீவ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் எம்.பி.யாகப் பணியாற்றி நிறைவு செய்த அச்சுதன் ஆகியோருக்கு வழியனுப்பு நிகழ்வாக அந்த அமர்வு நடைபெற்றது.

ராஜீவைப் பற்றியும் அச்சுதனைப் பற்றியும் பேசும்போதுதான் வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் சீத்தாராம் யெச்சூரியைப் பற்றியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும் மேற்கண்டவாறு பேசினார்கள்.அனைத்துக் கட்சித் தலைவர்களும், கட்சி வேறுபாடின்றி மேற்கண்ட இரண்டு இடதுசாரி எம்பிக்களையும் - குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் எம்பியாக செயல்பட்ட பி.ராஜீவின் பங்களிப்பையும் பற்றி புகழ்ந்து தள்ளினார்கள் என்றே கூறலாம்.நாடாளுமன்ற வரலாற்றிலேயே முதல் முறையாக விதி 93 (2)ன் கீழ் திருத்தம் கொண்டு வந்து வரலாறு படைத்தவர் பி.ராஜீவ் என்று அந்த வாழ்த்து அரங்கத்தைத் துவக்கி வைத்து அவரது சக தோழரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மற்றொரு கேரள எம்பியுமான கே.என்.பாலகோபால் கூறினார். 

இதில் மற்ற கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூறியதுதான் இன்னும் ஆர்வத்தைத் தூண்டக்கூடியது.“வேதிப் பொறியியல், சட்டம், பொருளாதாரம் எனப் பல்வேறு படிப்புகளைப் படித்தவர் பி.ராஜீவ். இத்தகைய கலவை என்பது மிகவும் அரிதாகும். வழக்கறிஞர் என்றால் அவருக்கு அனைத்தும் தெரிந்திருக்க வேண்டும். அதுதான் அடிப்படை விதி. அந்த விதியை ராஜீவ் முழுமையாக வரித்துக் கொண்டிருந்தார். அதற்காக அவரை நான் வாழ்த்துகிறேன். எந்த பிரச்சனையாக இருந்தாலும் கடைசி வரை அதில் சட்ட ரீதியாகப் போராடுவார். நாடாளுமன்றத்திலும் சரி, இதர அரசியல் பணி களிலும் சரி, அவர் நிகழ்த்திய சாதனைகள் குறித்துமிகவும் அடக்கத்துடனே குறிப்பிடுவார். நான்தான்மிகவும் அடக்கமானவன் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், ராஜீவை இந்த அவையில் சந்தித்தபிறகு நான் எனது கருத்தை மாற்றிக்கொண்டேன்.

நான் அவரைப் பின் பற்றவே விரும்புகிறேன்” என்று அதிமுக மாநிலங் களவைக்குழுத் தலைவர் வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் கூறியது அனைவரையும் ஈர்த்தது. நாடாளுமன்ற விதிகளை மிகச்சரியாக அமலாக்கியதன் மூலம் இந்த அவையில் முத்திரைப் பதித்தவர் ராஜீவ்; எல்லா உறுப்பினர்களும் பொதுவாக அவையின் விதிகளை உற்றுநோக்குவார்கள்; ஆனால் பி.ராஜீவ்தான் அந்த விதிகளின் உண்மையான பொருளை விளக்கி அனைத்து உறுப்பினர்களையும் ஏற்குமாறு செய்தவர்; அவரை ஒரு ‘டிரெண்ட் செட்டர்’ என்றே சொல்ல வேண்டும் எனப் புகழ்ந்தார் திமுக உறுப்பினர் திருச்சி சிவா. து.ராஜா, மாயாவதி, ராம் கோபால் யாதவ், டெரிக் ஓ பிரையன் உள்பட அனைத்துக் கட்சித் தலைவர்களும் பாராட்டினார்கள். முன்னதாகப் பேசிய அவை முன்னவரும் நிதியமைச்சருமான அருண் ஜெட்லி ஒரு படிமேலே சென்று, “அவை விதிகள் குறித்து நன்கு அறிந்தவர் பி.ராஜீவ், அவரை அவைக்கு மீண்டும் தேர்ந்தெடுத்து அனுப்புமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியை கேட்டுக்கொள்கிறேன்“ என்றார். 

காங்கிரஸ் மூத்த தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான குலாம் நபி ஆசாத்தும் இதே விருப்பத்தை வெளியிட்டார்.அவையில் இதையெல்லாம் ஆர்வத்துடன் ரசித்துக் கேட்டுக்கொண்டிருந்த சீத்தாராம் யெச்சூரி எழுந்து, “எனது அருமைத் தோழன் பி.ராஜீவ் இந்த அவையில் இல்லாதது மிகப்பெரிய இழப்புதான். ராஜீவுக்கு கேரளத்தில் எமது கட்சி முக்கியப்பொறுப்பினை அளித்திருக்கிறது. கேரளத்தில் மிகப்பெரிய மாவட்டமான எர்ணாகுளம் மாவட்டக் கட்சிச் செயலாளராக அவர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையில் நாட்டின் முன்னேற்றத்திற்கு மட்டுமல்ல, நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் எப்படி பங்காற்ற முடியும் என்பதற்கு ராஜீவ் ஒரு எடுத்துக்காட்டு. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் அச்சுதனும் அப்படியே செயல்பட்டார். ராஜீவ் இந்த அவையிலிருந்து விடை பெற்றிருப்பது தனிப்பட்ட முறையில் எனக்கு இரட்டிப்பு இழப்பே. அதே நேரத்தில் அவர், களத்தில் பணியாற்றுவார்” எனக்குறிப்பிட்டார்.

முத்தாய்ப்பாக பேசிய அமைச்சர் வெங்கய்யா நாயுடு, “ராஜீவ் ஒரு சிறந்த அறிவாளி; அவையின் விதிகளை தனது விரல் நுனியில் வைத்திருந்தவர். அப்படிப்பட்ட அறிவுத்திறன் படைத்த நபர் எங்கள் கட்சியில் இல்லாமல் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறாரே என்று பலமுறை நான் பொறாமைப்பட்டது உண்டு” என்றார். அப்போது எழுந்த சீத்தாராம் யெச்சூரி, “அவர் அறிவுத்திறன் படைத்த நபராக இருப்பதால்தான் மார்க்சிஸ்ட் கட்சியில் இருக்கிறார்” என்று குறிப்பிட்ட போது அவையில் சிரிப்பலையும் மகிழ்ச்சியும் பொங்கி வழிந்தது. அந்தத் தருணத்தைச் சமாளித்துக்கொண்ட வெங்கய்யா நாயுடு, “நான் உங்கள் கட்சியைப் பார்த்து பொறாமைப்பட்டேன் என்றுதான் சொன்னேன்“ எனக்குறிப்பிட்டார். 

அதிமுக தலைவரும் சரி, திமுக உறுப்பினரும் சரி, பாஜக அமைச்சரும் சரி எல்லா தரப்பினரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளை, அதன் தலைவர்களை, அதன் எம்.பி.க்களை எந்த அளவிற்கு மதிக்கிறார்கள், எடைபோடுகிறார்கள் என்பதற்கு ஒரு உதாரணமாக இந்த நிகழ்வு இருந்தது. வெங்கய்யா நாயுடு போன்றவர்கள் பொறாமைப்படுவதற்கு இன்னும் பல உதாரணங்கள் இருக்கின்றன. கட்சியின் புதிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியும் சரி, முன்னாள் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத்தும் சரி, அறிவிற் சிறந்த மேதைகள்.சீத்தாராம் யெச்சூரி, சென்னையில்பிறந்தவர். பின்னர் அவரது பெற்றோர் தில்லிக்கு இடமாற்றல் பெற்றபோது அங்கு சென்று குடியரசுத் தலைவரின் எஸ்டேட் பள்ளியில் படித்தவர். பள்ளிக்கல்வியில் சிபிஎஸ்இ தேர்வில் ஒட்டுமொத்த இந்தியாவிலும் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றவர்.

தில்லி செயிண்ட் ஸ்டீபன் கல்லூரியில் பி.ஏ.பொருளாதாரம், தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் எம்.ஏ.பொருளாதாரம் பயின்றவர். 1975ல் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டபோது, பிஎச்டி படிப்பை நிறைவு செய்ய முடியாமல் தலைமறைவு வாழ்க்கை வாழ நேர்ந்தது. இந்திய மாணவர் சங்கத்தின் தலைவராக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு, மத்திய செயற்குழு, அரசியல் தலைமைக்குழு என அடுத்தடுத்து கட்சிப் பொறுப்புகளிலும் அரசியல் பணியிலும் உயர்ந்தவர் யெச்சூரி. பிரகாஷ் காரத்தும், இவரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவர் சங்கத் தலைவர்களாகப் பணியாற்றி அனைத்துத்தரப்பு மாணவர்களையும் ஈர்த்தவர்கள். ஒரு பிரகாஷ் காரத், ஒரு சீத்தாராம் யெச்சூரி மட்டுமல்ல, ஒரு பி.ராஜீவ் மட்டுமல்ல... மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏராளமான அறிவுஜீவிகளைப் பெற்ற கட்சி. இன்றைக்கு உலக முதலாளித்துவம் மீள முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கிறது.

அதை எப்படி மீட்பது என்று ஆலோசனை நடத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை தேர்வு செய்த ஒரு சில தலைசிறந்த பொருளாதார மேதைகளில் ஒருவர் டாக்டர் பிரபாத் பட்நாயக். தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதாரத்துறை பேராசிரியரான பிரபாத் பட்நாயக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்பு மிக்க ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் ஒவ்வொரு அகில இந்திய மாநாட்டிலும் அவர் பிரதிநிதியாக பங்கேற்று வருகிறார். அதேபோல இந்தியாவின் தலைசிறந்த பொருளாதார அறிஞர்களில் ஒருவர் டாக்டர் வெங்கடேஷ் ஆத்ரேயா. திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பொருளதாரத்துறை தலைவராக பணியாற்றிய இந்தப் பேராசிரியர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அர்ப்பணிப்புமிக்க ஊழியர். கேரளத்தில் டி.எம்.தாமஸ் ஐசக், எம்.ஏ.பேபி போன்ற சிறந்த அறிவு ஜீவிகள் இருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் ஏராளமானோரைக் குறிப்பிடலாம். தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் கட்சி செயலாளராக அன்றாடப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார், உலகிலேயே தலைசிறந்த வெகுசில உயிரி மருத்துவப் பொறியாளர்களில் ஒருவரான டாக்டர் சுஜன் சக்ரவர்த்தி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்குவங்க மாநில செயற்குழு உறுப்பினராகப் பணியாற்றி வரும் இவர் தனது வாழ்வையே மக்களுக்காக அர்ப்பணித்திருக்கிறார். நாடே போற்றும்பொருளாதார மேதைகளில் ஒருவரான டாக்டர் அசிம்தாஸ் குப்தா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினராக பணியாற்றி வருகிறார். இவர் கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறை தலைவராக பணியாற்றியவர்.கேரளத்தில், திரிபுராவில் ஆந்திராவில் பல்வேறு பல்கலைக்கழகங்களில், எழுத்துலகில் என அறிவுத்தளத்தில் தலைசிறந்து விளங்கக்கூடிய நபர்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களாக, ஊழியர்களாக, மக்கள் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.இதுதான் வெங்கய்யா நாயுடு வெளிப்படுத்திய பொறாமைக்குக் காரணம்.அந்தப் பொறாமையே, ‘மூழ்கும் கப்பல்’ என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்த சிவசேனா கட்சிக்கு நாம் அளிக்கும் பதில்.

Saturday, April 25, 2015

ஜெயமோகனுக்கு அருகதையே கிடையாது





உயிர்மை இதழ் இந்த ஆண்டு அறிவித்துள்ள சுஜாதா விருதுகள் தொடர்பாக ஜெயமோகன் தெரிவித்த விஷ(ம)த்தனமான கருத்துக்கள் தொடர்பாக இணையத்தில் பெரும் போர் நடந்து கொண்டிருக்கிறது.

தமிழ் எழுத்துருக்களுக்குப் பதிலாக ஆங்கில எழுத்துருக்களை (English Fonts) பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற அரிய ஆலோசனை அளித்து தமிழ் மொழியை சவக்குழிக்கு அனுப்ப ஆசைப்பட்ட ஜெயமோகன் என்ற எழுத்து வணிகருக்கு தமிழ் மொழி பற்றியோ அல்லது தமிழ் இலக்கியம் பற்றியோ அல்லது தமிழில் வழங்கப்படும் விருதுகள் பற்றியோ கவலைப்படவோ அல்லது கருத்து சொல்லவோ எந்த அருகதையும் கிடையாது.

குப்பை போல தூக்கியெறியப் பட வேண்டிய மனிதருக்கு பதில் சொல்லி, விளக்கம் அளித்து மனுஷ்ய புத்திரன் தனது நேரத்தை விரயம் செய்து கொண்டிருக்க வேண்டாம். அடுத்தவர்கள் மீது வயிற்றெரிச்சல் பட்டு வன்மத்தோடு பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டுமே சிலரின் பிழைப்பு ஓடிக் கொண்டிருக்கிறது.

கௌரவ வம்சத்தை அழிக்க வேண்டும் என்ற லட்சியத்தை மனதில் கொண்டே கௌரவர்களோடு பழகி துரியோதனனை வெறியேற்றினான் என்று சகுனி பற்றி சொல்வார்கள். அது போல தமிழில் எழுதிக் கொண்டே தமிழ் இலக்கிய உலகை சீரழிக்க வந்த கோடாரிக் காம்பு என்ற பெருமை ஜெயமோகன் தவிர வேறு யாருக்கு உண்டு?

Friday, April 24, 2015

மோடிஜியால் தன் நண்பர்களை கண்டிக்க முடியுமா?





இந்திய தொழிலகங்கள் வெளிநாட்டில் முதலீடு செய்வது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் பிருந்தா காரத் அவர்கள் எழுதியுள்ள ஒரு சிறப்பான கட்டுரையின் தமிழாக்கத்தை கீழே அளித்துள்ளேன்.

அவர் என்னமோ சூடாகத்தான் கேட்டுள்ளார். ஆனால் இந்த சூட்டை மோடி வகையறாக்கள் உணர்ந்து கொள்வார்களா என்பது சந்தேகமாகத்தான் இருக்கிறது.

பிரதமர் மோடி, இந்த முதலீட்டையாவது திரும்பக் கொண்டு வர முடியுமா?
 http://www.thehindu.com/multimedia/dynamic/00001/IN24_BRINDA_1585f.jpg
                                                               
அடிக்கடி நிகழும் பிரதமர் மோடியின் வெளிநாட்டுப் பயணங்களில் அவரது பயணத்துணையாக இந்தியாவின் சக்தி மிக்க செல்வந்தர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிலதிபர்கள் இடம் பெறுகின்றனர். நமது நாட்டின் மிகச் சிறந்த தூதர்களா அவர்கள்?

இங்கிலாந்தில் உள்ள பதினெட்டாயிரம் எஃகு தொழிலாளர்கள் அவ்வாறு கருத வாய்ப்பில்லை. 2007 ல் அந்த தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருந்த கோரஸ் ஸ்டீல் நிறுவனத்தை டாடா 12 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கினார். முப்பது வருடங்களாக இங்கிலாந்தில் உள்ள எந்த ஒரு ஸ்டீல் துறை முதலாளியும் செய்ய முடியாத ஒரு சாதனையை ஏழே ஆண்டுகளில் டாடா நிகழ்த்தியுள்ளார். வேலை நிறுத்த கருத்துக் கணிப்புத் தேர்தலை நோக்கி தங்கள் தொழிலாளர்களை தள்ளியிருப்பதுதான் அந்த சாதனை. தங்கள் உரிமைகளை முடக்க முயலும் நிர்வாகத்தின் முரட்டுத்தனமான அணுகுமுறைக்கு எதிராக “காலவரையற்ற வேலை நிறுத்தம்” மேற்கொள்ளலாமா என்ற “வேலை நிறுத்த கருத்துக் கணிப்பு தேர்தல்” மே 6 முதல் மே 29 வரை நடக்கப் போகிறது. இதற்கான முறையான தாக்கீது ஏப்ரல் 29 அன்று  நிர்வாகத்திடம் வழங்கப்பட இருக்கிறது.

அங்கே உடனடிப் பிரச்சினையாக பென்ஷன் திட்டம் உள்ளது. இங்கிலாந்தில் ஒட்டு மொத்த ஸ்டீல் துறைக்குமாக பிரிட்டிஷ் ஸ்டீல் பென்ஷன் திட்டம் உள்ளது. அறுபது வயதில் ஓய்வு பெறும் அனைத்து தொழிலாளர்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் எட்டு சதவிகிதமும் முதலாளிகள் கொடுபடாத ஊதியம் (Deferred Wage) என்ற அடிப்படையில்  பனிரெண்டு சதவிகிதமும் அளிப்பார்கள். டாடா தொழிலாளர்கள் 65 வயது வரை வேலை பார்க்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார். அப்படி தொழிலாளர்கள் 60 வயதில் ஓய்வு பெற விரும்பினால் அவர்கள் தங்களுக்கான பென்ஷனின் 25 % வெட்டை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வற்புறுத்துகிறார். அங்கேயுள்ள தொழிலாளர்கள் இதைக் கணக்கிட்டுப் பார்த்து ஒவ்வொரு தொழிலாளிக்கும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பவுண்ட் (இந்திய மதிப்பில் 90 லட்சம் ரூபாய்) வரை இழப்பு நேரிடும் என்று கண்டறிந்துள்ளனர். டாடாவிற்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையேயான பேச்சு வார்த்தை தோல்வியடைந்து விட்டது. ஒட்டு மொத்த பென்ஷன் திட்டத்தையே ரத்து செய்யப்போவதாய் இப்போது டாடா மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

“என் உள்ளம் கேட்கும் இன்னும்” என்ற விளம்பர வாசகத்தின்  மீது மிகுந்த பற்றுள்ள இந்திய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களின் லாபத்தை அதிகரிக்க உழைப்பாளர்களின் ஊதியங்கள், உரிமைகள், சலுகைகளை வெட்ட வழிவகுத்துத் தர வேண்டும் என்ற கோரிக்கைகளை வைப்பதை நிறுத்திக் கொள்ளவே மாட்டார்கள். இந்த தத்துவத்தை உள்ளடக்கியதுதான் மோடியின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம். தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்ற ஆசையைக் காட்டித்தான் மோடி உலகெங்கிலும் அன்னிய முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு வரச் சொல்லி அழைப்பு விடுக்கிறார்.

தொழிலாளர் சட்ட சீர்திருத்தம் என்பது வேறொன்றுமில்லை, காலம் காலமாக போராட்டங்கள் மூலமாக தியாகங்கள் பல புரிந்து உழைக்கும் வர்க்கம் பெற்ற பல உரிமைகளை பறிப்பதற்கு வைத்துள்ள அலங்காரமான பெயர்தான். குறைந்தபட்ச ஊதியத்திற்கான உரிமை, போனஸ் பெறும் உரிமை, பென்ஷனுக்கான உரிமை, பணிப் பாதுகாப்பு உரிமை என அனைத்து உரிமைகளுமே தாக்குதலுக்குள்ளாகியுள்ளது.

இந்த உரிமைகளைப் பறிப்பதற்கான முதல் முயற்சி ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசால் பல தொழிலாளர் சட்டங்களில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் செய்யப்பட்டது. அவர்களது முயற்சி தோற்றுப் போனது. இப்போது மோடி அரசு மக்களவையில் அதற்குள்ள மூர்க்கத்தனமான பெரும்பான்மை மூலமாக சில திருத்தங்களை நிறைவேற்றியுள்ளது.

தன்னிச்சையான பணி நீக்கம், ஊதிய வெட்டு, சலுகை வெட்டு போன்ற அராஜகங்களுக்கு எதிரான சட்டபூர்வமான பாதுகாப்பை எழுபது சதவிகித தொழிலாளர்களிடமிருந்து பாஜக தலைமையிலான ராஜஸ்தான், ஹரியானா, குஜராத் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான ஹிமாச்சல் பிரதேஷ் அரசாங்கங்கள், மிகவும் பிற்போக்குத்தனமான திருத்தங்கள் மூலமாக பறித்திருக்கின்றன.

உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் மிகௌம் குறைவாக உள்ளது. மத்திய தொழிலாளர் ஆணையத்தின் சிறப்பு வெளியீட்டின்படி 2011-12 ம் ஆண்டில் ஒட்டு மொத்த உற்பத்திச் செலவில் தொழிலாளர்களுக்கான செலவு என்பது வெறும் 5.25 % மட்டுமே இருக்கிறது. ஏற்கனவே வேகமாக சுருங்கிக் கொண்டு வரும் இந்த பங்கை, தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் இன்னும் சுருக்கி விடும்.

தொழிலாளர்களை பணியமர்த்தும் முறையில் மாற்றங்கள், பணிகளை வெளியில் கொடுத்து வாங்கிக் கொள்வது, நிரந்தரப் பணிகளில் ஒப்பந்த ஊழியர்களை அமர்த்துவது, நினைத்தால் பணியில் அமர்த்தி அகற்றுவது போன்றவை முதலாளிகளின் முழுமையான உரிமையாக இருக்க வேண்டும் என்றும் இதற்குக் குறுக்கே எந்த விதமான தொழிலாளர் நலச் சட்டமும் இடையூறாக இருக்கக் கூடாது என்பதுதான் உலகம் முழுதிலுமுள்ள முதலாளிகளின் கோரிக்கை. பிரதமரின் “இந்தியாவில் உருவாக்குவோம்” முழக்கம் அவர்களுக்கு இவை அனைத்தையும் மட்டுமல்ல அதற்கு மேலும் கூட உறுதியளிக்கிறது.

வெளிநாடுகளில் முதலீடு செய்யும் இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களோடு இந்த தொழிலாளர் விரோத நடைமுறைகளையும் எடுத்துச் சென்று அந்நாட்டு தொழிலாளர்கள் மீது திணிக்கப் பார்க்கின்றனர். தொழிலாளர்களின் உரிமைகளை துச்சமாக மதிப்பது என்பதுதான் நவீன தாராளமயக் கொள்கைகளின் ஊதுகுழல்களாக இருக்கிற இங்கிலாந்து மற்றும் பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளின் அரசுகளின் புரிதலாக இருக்கிறது. உலகம் முழுதுமே கார்ப்பரேட் நிறுவனங்கள் தாக்குதல் நடத்தும் அரங்கமாக மாறி வருகிறது. இந்த கருத்தோட்டத்திற்கு எதிரான சவாலை இங்கிலாந்தின் ஸ்டீல் தொழிலாளர்கள் விடுத்துள்ளனர். அவர்களின் போராட்டம் வெல்ல வேண்டும் என்று   இந்தியாவில் உள்ள உழைப்பாளி மக்கள், ஏன் உலகெங்கும் உள்ள உழைப்பாளிகள்  விரும்புகின்றனர். ஒவ்வொரு போராட்டமும் இன்னொரு போராட்டத்திற்கு உரமேற்றுகிறது, போராட்டம் நடக்கும் இடம் எதுவாக இருந்தாலும் கூட.

இறுதியாக ஒரு வார்த்தை. இந்தியாவில் உருவான தொழிலகங்கள், வெளிநாடுகளில் முதலீடு செய்வதற்குப் பதிலாக இந்தியாவிலேயே முதலீடு செய்தால்தான்  “இந்தியாவில் உருவாக்குவோம்” என்ற முழக்கத்திற்கு கொஞ்சமாவது நம்பகத்தன்மை கிடைக்கும். முதலாளிகள் கூட்டமைப்பான அசோகம் நவம்பர் 2014 ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி ஏப்ரல் முதல் செப்டம்பர் 2014 வரை (மோடி மே 2014 ல் பிரதமராக பொறுப்பேற்றார்) இந்திய நிறுவனங்கள் 17.6 பில்லியன் டாலர்கள் ( 1,14,400 கோடி ரூபாய்) அன்னிய மண்ணில் முதலீடு செய்துள்ளது. 2013- 2014 நிதியாண்டில் மட்டும் 36 பில்லியன் டாலர்களுக்கும் மேலாக ( 2,34,000 கோடி ரூபாய்) முதலீடு வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த முதலீட்டை இந்தியாவிற்கு மீண்டும் கொண்டு வாருங்கள் பிரதமரே. அது உங்களால் முடியாவிட்டால் “இங்கிலாந்தில் ஸ்டீல் தொழிலாளர்களுக்கு எதிராக டாடா கடைபிடிக்கிற மோசமான அணுகுமுறை” போல நடந்து கொண்டு இந்தியாவிற்கு அவப்பெயர் ஏற்படுவதையாவது நிறுத்திக் கொள்ளுமாறு உங்கள் நண்பர்களை வெளிப்படையாக கண்டிக்கவாவது செய்யுங்கள்.