மிகவும்
துயரமான வேளையில் கொண்டாட்டம் அவசியமா என்ற கேள்வியை எழுப்பியதற்காகவும் மோடியின் ஜனவரி
2018 அபாய அறிவிப்பு பற்றி எழுதியதற்காகவும் ஒரு சங்கி வந்து ஆபாசமாக பேசி விட்டு போயிருக்கிறார்.
இப்போதெல்லாம்
சங்கிகள் தாங்கள் ஏதோ மிகப்பெரிய தேசபக்தர்கள் போல கதை விட்டுக் கொண்டு திரிகிறார்கள். ஏதோ
அவர்கள்தான் இந்தியாவின் பாதுகாவலர்கள் போல ஓவர் பில்ட் அப். இவர்களைப் பார்த்தால்,
இவர்கள் எழுதுவதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
சுதந்திரத்திற்கும்
காவிகளுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது.
சுதந்திரப்போராட்டத்தில்
ஈடுபட்ட பெருமிதம் கம்யூனிஸ்டுகளுக்கு உண்டு.
காங்கிரஸ்காரர்களுக்கும் உண்டு.
கம்யூனிஸ்டுகளை
எடுத்துக் கொண்டால் தோழர் ஹர்கிஷன்சிங் சுர்ஜித், பி.ராமமூர்த்தி, என்.சங்கரய்யா, ஆர்.நல்லக்கண்ணு
என்று மிகப் பெரிய பட்டியலைச் சொல்ல முடியும். அகில இந்திய அளவிலோ, மாநில அளவிலோ மட்டுமல்ல,
மாவட்ட அளவிலும் எண்ணற்ற தியாகிகள் உண்டு. வேலூர் மாவட்டத்தை எடுத்துக் கொண்டால் வரலாறாகவே
வாழ்ந்த தோழர் கே.ஆர்.சுந்தரம் உடனடியாக மக்களின் நினைவுக்கு வருவார்.
இப்படி
பெருமையாக ஒரு பெயர், ஒரே ஒரு பெயரை காவிகளால் சொல்ல முடியுமா?
ஓட்டைச்
சட்டியில் எத்தனை அகப்பை போட்டாலும் என்ன கிடைக்கும்?
ஆனால்
காவிகளுக்கு வேறு ஒரு பெருமை உண்டு.
சுதந்திரப்
போராட்டத்தை காட்டிக் கொடுத்த வரலாறு உண்டு.
வீர
(!) சவர்க்கார், வாஜ்பாயி ஆகியோரின் துரோக வரலாறு அனைவரும் அறிந்ததுதான். சுதந்திரப்போராட்டத்தின்
முன்னணித் தலைவரான அண்ணல் காந்தியைக் கொன்ற ரத்தக்கறை தோய்ந்த உடைகள் இன்றும் நாற்றமடிக்கிறதே.
விடுதலை
பெற்ற பின்பு பல்லாண்டுகள் தேசியக் கொடியை ஏற்றாதவர்கள், ஏற்றுக் கொள்ளாதவர்கள்,
இந்திய
விடுதலை அளித்த அரசியல் சாசனத்தை மறுத்து “மனு தர்மமே” உயர்ந்தது என்றவர்கள்,
இந்திய
அரசியல் சாசனம் கூறும் மதச்சார்பின்மையை இன்று வரை ஏற்றுக் கொள்ளாதவர்கள்.
இதுதான்
காவிகளின் உண்மையான நிலை.
ஆனால்
இந்த காட்டிக் கொடுத்த களவாணிகள், ஏதோ இவர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தை முன் நின்று
நடத்தியது போலவும் பெற்ற சுதந்திரத்தை பாதுகாப்பது போலவும் சீன் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
வாஜ்பாய்
ஆட்சிக்காலத்திலும் சரி, இன்றைய மோடி ஆட்சிக்காலத்திலும் சரி, பெற்ற சுதந்திரத்தை அமெரிக்காவிடமும்
பன்னாட்டுக் கம்பெனிகளிட,மும் உள்நாட்டு பெரு முதலாளிகளிடமும் அடகு வைக்கிற, விற்கிற
வேலையைத்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.
இந்தியா
என்பது வெறும் மண்ணல்ல. மனிதர்களால் ஆனது. அனைத்து உரிமைகளையும் அவர்களுக்கு உறுதி
செய்வதுதான் சுதந்திரத்தின் நோக்கம். அதுதான் அனைத்துக்குமான அடிப்படை.
அதனை
கேள்விக்குறியாக மாற்றியுள்ள மோடி வகையறாக்களுக்கு மூவர்ணக் கொடியை தொடுவதற்கான அருகதை
கூட கிடையாது.
காட்டிக்
கொடுத்த களவாணிக் கூட்டத்தால்தான் இந்திய சுதந்திரம் என்பதே இன்று கேள்விக்குறியாக
மாறியுள்ளது. அவர்களிடமிருந்து விடுவிப்பதே, தேசத்தின் உடனடித்தேவை.
யப்பா,
களவாணிக் கூட்டமே, திருப்பி திருப்பி பொய் பேசிப் பேசி அதையே உண்மைன்னு நம்ப ஆரம்பிச்சுட்டீங்க.
இப்படியே முத்திப் போச்சுன்னா உங்களை மன நல மருத்துவமனையில் கூட சேத்துக்க மாட்டாங்க!
பாண்டி
மடத்துல, பச்சைத்துணி போட்டு சங்கிலில கட்டி வைக்கும் முன்னாடி திருந்திடுங்க ப்ளீஸ்.
பின்
குறிப்பு :
பாண்டி
மடம் = விக்ரம் நடித்த சேது படத்தை நினைவு
படுத்திக் கொள்ளுங்கள்