Monday, June 30, 2014

தொண்டர் மீது உப்பு மூட்டையாய் அமர்ந்த எம்.பி




மேலே உள்ள படத்தைப் பார்த்தீர்களா? இந்த மகானுபாவன் அஸ்ஸாம் மாநிலத்தின் கரிம்கஞ்ச் தொகுதியின் மக்களவை உறுப்பினரான மாண்புமிகு ராதே ஷ்யாம் பிஸ்வாஸ். அஸ்ஸாம் ஜனநாயக ஐக்கியக் கூட்டணி என்ற கட்சியினைச் சேர்ந்தவர்.

தொகுதிக்குள் செல்கையில் சேறு படிந்த ஒரு இடத்தை கடக்கையில் அவரது கால் அழுக்காகி விடக் கூடாது என்று ஒரு தொண்டரின் முதுகில் உப்பு மூட்டை ஏறிச் செல்கிறார்.

தனது கால் அழுக்காகக் கூடாது என்று நினைக்கிற இந்த திருவாளர் பரிசுத்தம் தனது பதவிக்காலம் முடிவதற்குள் தனது தொகுதிக்குள் இருக்கிற சேறு படிந்த சாலைகளையெல்லாம் சரி செய்து விடுகிறாரா பார்ப்போம்.

பாவம் இவருக்கு ஓட்டு போட்டு ஜெயிக்க வைத்த அந்த தொகுதியின் அப்பாவி மக்கள்.

Sunday, June 29, 2014

ஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்



எதிர்க்கட்சி வரிசையில் அமர வேண்டிய நிலை வரும் போதுதான்
ஜெயலலிதாவும் கலைஞரும் சட்டசபைக்கு வருவதை தவிர்ப்பார்கள்.

இதில் ஜெ கூட என்றாவது ஒரு நாள் உள்ளே வந்து ஒரு கலக்கு 
கலக்கி விட்டு போய் விடுவார். லாபியோடு போவது கலைஞரின்
வழக்கம், 

ஆனால் அவர்கள் முதல்வராக இருந்த போதெல்லாம் சட்டசபைக்கு
வந்து விடுவார்கள். 

ஆனால் மேற்கு வங்க மம்தாவோ நான் ஏன் சட்டசபைக்கு வர வேண்டும்
என்று கேட்கிறார்,

அதுசரி எதிர்கட்சியாக இருந்தால் மேஜை, நாற்காலி, மைக் 
எல்லாவற்றையும் உடைக்கலாம். முதல்வராக அது முடியாதே?

சட்டசபைக்கு வராத முதல்வராக இருப்பதுதான் பரிபர்த்தன் போலும்.

இந்த அம்சத்தில் இவருக்கு 

ஜெயலலிதாவும் கலைஞரும் எவ்வளவோ மேல்

Saturday, June 28, 2014

ஒரிஜனலாய் ஒரு ரமணா வர வேண்டியதில்லை

 A view of the site where a multi-storeyed building collapsed at Moulivakkam, in Chennai on Saturday.

சென்னையில் தகர்ந்த கட்டிடம் அதிர்ச்சி அளிக்கிறது. 

விதிமுறைகள் என்பதே மீறப்படுவதாகவே  உருவாக்கப்படுகிறது
என்ற உணர்வை இது போன்ற விபத்துக்கள் உருவாக்குகிறது.

குறுகிய காலத்தில் மிக அதிகமான லாபத்தை சம்பாதிக்க வேண்டும்
என்ற வெறி உலகமயமாக்கல் கொள்கைகளின் விளைவு. அதற்கு
இசைந்து கொடுக்கும் அரசுகள் வர வேண்டும் என்பதே முதலாளித்துவத்தின் எதிர்பார்ப்பு. 

அதிகார வர்க்கமும் ஆட்சியாளர்களுக்கும் முதலாளிகளுக்கும்
வளைந்து கொடுக்கும் தன்மையுடையதாய் மாறி விட்டது. 

தவறிழைத்ததாய் சில அதிகாரிகள் தண்டிக்கப்படலாம். பலர்
தப்பித்து விடலாம்.

ஆனால் இது போன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

ஒரு சில ரமணாக்கள் ஒரிஜனலாக தோன்றினாலும் இந்த
முதலாளித்துவ அமைப்பு முறை தொடர்கிறவரை எந்த ஒரு
மாற்றமும் ஏற்படாது.

அமைப்பில் மாற்றம் வரக்கூடாது என்று விரும்புகிற முதலாளிகள்
தங்களின் ஊடகங்கள் மூலமாக மன்மோகனுக்குப் பதில்
மோடி என்று மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறார்கள்.

இதுதான் வருத்தத்திற்குரிய இன்றைய யதார்த்தம்.  

அவர் குடிகாரன் என்பது தமிழருவி மணியனுக்கு முன்பு தெரியாதா?




தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நடத்தப்படும் போராட்டத்திற்கு மதுவாடையுடன் இருக்கும் தேமுதிக தலைவர் விஜயகாந்தை அழைக்க மாட்டோம்.
- தமிழருவி மணியன்


இது   இன்றைய செய்தி.

ஜாதிவெறிக்கு எதிராக நடத்தப் போகும் போராட்டத்திற்கு 
எப்போதும் ஜாதிய உணர்வோடு இருக்கும் மருத்துவர் ஐயாவை
அழைக்க மாட்டோம் என்று நாளை தரகுப்புயல் கூறுவதற்கான
வாய்ப்பு இருக்கிறது.

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடத்தப் போகும் போராட்டத்தில்
பங்கேற்க மதவெறியோடு செயல்படும் பாஜகவை அழைக்க
மாட்டோம் என்று நாளை மறுநாள் அவர் கூறலாம்.

கல்விக் கட்டணம் என்ற பெயரில் அடிக்கப்படும் கொள்ளைக்கு
எதிரான போராட்டத்திற்கு கல்வி வியாபாரிகள் பச்சைமுத்துவையும்
ஏ.சி.சண்முகத்தையும் அழைக்க மாட்டோம் என்று மற்றொரு நாள்
சொன்னாலும் வியப்பில்லை. 

அன்றன்றைக்கு ஏதாவது சொல்லி தன்னை யோக்கிய சிகாமணியாக
காண்பித்துக் கொள்ள ஆசைப்படுகிறார் தரகுப்புயல் த.அ.ம.


மது விலக்குப் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூட தகுதியில்லாத
விஜயகாந்தின் தலைமையில் மக்களவைத் தேர்தலில் கூட்டணி
வைக்க ஏன் தொங்கிக் கொண்டிருந்தாராம்? இவர்கள் அனைவரையும்
ஒரே கூட்டணியில் இணைக்க ஏன் பிரம்மப் பிரயத்னம் செய்து
கொண்டிருந்தாராம்?

வெட்கம் கெட்ட மனிதர்கள் என்று யாராவது பட்டியல் போட்டால்
அதில் முதலிடம் தரகுப்புயலுக்குத்தான். 

Friday, June 27, 2014

எம்.ஜி.ஆர் முக்கால், சிவாஜி கால் சேர்ந்து செய்த கலவை




கலைஞரின் மகன் மு.க.முத்து நடித்த திரைப்படங்கள் எதையும்
நான் பார்த்ததில்லை. சில தினங்கள் முன்பாக ஏதோ ஒரு சேனலில்
அவரது     முத்துப்பல் சிரிப்பென்னவோ  என்ற  பாடலைப் பார்த்தேன்.

அந்த ஒரு பாடலை வைத்து மட்டும் எந்த ஒரு முடிவிற்கும் வரக்
கூடாது என்று யுடியூபில் தேடிய போது காதலின் பொன்வீதியில் 
என்ற பாடலும்  மூன்று தமிழ் தோன்றியதும் உன்னிடமோ  என்ற
பாடலும் கிடைத்தது.

எம்.ஜி.ஆரில் முக்கால் பங்கும் சிவாஜியில் கால் பங்கும் 
சேர்ந்த கலவையாகத்தான் மு.க.முத்து இருக்கிறார். நடை, நடனம்,
முகபாவம் எல்லாவற்றிலும் தனித்துவம் என்று எதையும் 
காண்பிக்க முயற்சி செய்யாமல் பெரும்பாலும் இமிடேட்டே
செய்திருக்கிறார்.

இதில் பாடல் வரிகளில் வேறு ஏராளமான பில்ட் அப். 

அதனால் கூட எம்.ஜி.ஆர் கடுப்பாகி இருக்கலாம். 

எம்.ஜி.ஆர், சிவாஜியின் நகலைப் பார்ப்பதற்கு அவர்கள்
படத்தையே பார்த்திருக்கலாம் என்று ரசிகர்களும் முடிவு
கட்டியிருப்பார்கள் என்று நினைக்கிறேன். 

எது எப்படியோ எம்.எஸ்.வி யின் இசையில் அந்த மூன்று
பாடல்களுமே சூப்பர். 
 

Thursday, June 26, 2014

போராட்டத்தை மதிக்காத ஜெ, நீதிமன்றத்தையாவது மதிப்பாரா?

நாவலர் நெடுஞ்செழியனின் மருகள் என்ற ஒரே தகுதி மட்டும்
கல்யாணி மதிவாணனை மதுரை காமராஜர் பல்கலைக்கழக
துணை வேந்தராக்கியது.

தகுதியற்ற அவர் ஆடிய ஆட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. தனக்கு
எதிராக போராடிய ஆசிரியர்களை அடியாள் வைத்து தாக்கும்
அளவிற்கு மோசமாகப் போனார். எலும்புத்துண்டுகளை சுவைத்த
சில எடுபிடிகள் அவருக்கு ஆதரவாக பொய்யாக புலம்பின.

தகுதியற்ற துணை வேந்தரை பதவி நீக்கம் செய்ய ஜெ தயாராக
இல்லை. ஆனால் இன்று அவரது பணி நியமனம் செல்லாது
என்று சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை பெஞ்ச் தீர்ப்பு
வழங்கியிருக்கிறது.

தோழர் ஸ்ரீரஸா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட
இந்த பத்திரிக்கைச் செய்தி உங்களுக்கு விபரங்கள் அளிக்கும்.
 




என்ன செய்யப் போகிறார் ஜெ?

யார் பக்கம் நிற்கப் போகிறார்?

அண்ணாமலைப் பல்கழகத்தை பாதுகாக்க எடுத்த நடவடிக்கையை
பாராட்டினோம். 

மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தை என்ன செய்யப் போகிறீர்கள்?

விடை அறிய அனைவரும் ஆவலாய் காத்திருக்கிறோம்.

போராட்டத்தை முன்னெடுத்துச் சென்ற ஆசிரியர்கள், மாணவர்கள்,
மதுரை மாநகர தொழிற்சங்க இயக்கங்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள், பாராட்டுக்கள்.

 

Wednesday, June 25, 2014

வி.பி.சிங்கும் எனது முதல் கைக்கடிகாரமும்





இந்தியப் பிரதமர்களிலேயே சிறிது காலமே பதவியில் இருந்தாலும் அழுத்தமான தடத்தை பதித்தவர் நிச்சயமாக திரு வி.பி.சிங் மட்டுமே.

ஊழலுக்கு எதிராக உண்மையான நடவடிக்கைகள் எடுத்தவர் அவர் மட்டுமே. சமூக நீதியையும் மதச் சார்பின்மையையும் நேர்மையாக கடைபிடித்தவர். அந்த இரு காரணங்களுக்காகவே பதவி இழந்தவர்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை இழிவு படுத்தாதே என்று தேர்தல் நேரத்தில் மாய்மாலம் செய்த மோடியின் கட்சியினர்தான், மண்டல் கமிஷன் பரிந்துரையை அமலாக்கியதால் போராட்டம் நடத்தி வட இந்தியா முழுதும் கலவரம் செய்தார்கள். அத்வானியின் ரத்த யாத்திரையை உறுதியாக தடுத்தவரும் அவர்தான்.

இரண்டு முறை அவரது பேச்சை கேட்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. ஒரு முறை தேர்தல் பிரச்சாரத்திற்கு நெய்வேலி வந்துள்ளார். 

2003 ல் சத்திஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டை அவர்தான் துவக்கி வைத்தார். மக்கள் மீதான அக்கறையும் இந்தியா அன்னிய நாடுகளின் அடிமையாகி விடக்கூடாது என்ற உணர்வும் அந்த இரு உரைகளின்போதும் காண முடிந்தது.

பிரச்சினைகளை சரியாக புரிந்து கொள்கிறவராகவும் உடனடியாக முடிவு எடுக்கிறவராகவும் அவர் இருந்தார் என்பது எல்.ஐ.சி ஊழியர்களின் சொந்த அனுபவம்.

எங்களுடைய ஊதியத்தில் மிகப் பெரிய முரண்பாடு இருந்தது. விலைவாசிப் புள்ளிகளின் அடிப்படையில் பஞ்சப் படி வழங்கப்படும். அதில் நான்காம் பிரிவு ஊழியர்களுக்கு 100 % பஞ்சப்படியும் மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கு 75 % பஞ்சப்படியும் வழங்கப்பட்டது. 

இதனால் ஒரு நான்காம் பிரிவு ஊழியர் மூன்றாம் பிரிவு பணியான பதிவு எழுத்தராக பதவி உயர்வு பெறும்போது அவரது பஞ்சப்படி விகிதம் 75 % ஆக குறைந்து ஊதியமும் குறைந்து விடும். பதவி உயர்வு பெற்றால் ஊதியம் குறைந்து போகும் விசித்திரம் இங்கேதான் நிகழ்ந்தது.

இந்த முரண்பாட்டை களைய எல்.ஐ.சி நிர்வாகம் தயாராக இல்லை. வி.பி.சிங்கிற்கு முந்தைய எந்த ஒரு நிதியமைச்சரும் கூட தயாராக இல்லை. எங்கள் சங்கத் தலைவர்கள் வி.பி.சிங்கை சென்று சந்தித்து இப்பிரச்சினையை விவரித்தவுடன் அதற்கான தீர்வு என்னவென்று கேட்டார்.மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 100 % பஞ்சப்படி வழங்க வேண்டும் என்று கோரினார்கள்.

பதிவு எழுத்தர் பதவியின் அதிகப்பட்ச அடிப்படை ஊதியமான 790 ரூபாய் (இது 1987 நிலவரம்) வரை 100 %  பஞ்சப்படி வழங்குவதற்கான அரசாணையை முதலில் பிறப்பித்தார். பதிவு எழுத்தர் தொடங்கி உயர்நிலை உதவியாளர் வரை அனைத்து மூன்றாம் பிரிவு ஊழியர்களுக்கும் 790 ரூபாய் வரை 100 % பஞ்சப்படி கிடைத்தது.

காலப்போக்கில் அனைவருக்குமே 100 % பஞ்சப்படி என்பது கிடைத்தது. இந்த பஞ்சப்படி உயர்வின் மூலமாக ஒரு ஆறு மாத அரியர்ஸாக 500 ரூபாய் கிடைத்தது. அந்தப் பணம் கொண்டுதான் என்னுடைய முதல் கைக்கடிகாரத்தை வாங்கினேன். அந்த ஆல்வின் கைக்கடிகாரம் ஒரு எட்டு வருடங்கள் வரை நன்றாகவே உழைத்தது. 

 

அவர்களுக்குத்தான் அதிக ஊதியம் அளிக்கப்பட வேண்டும்



கடந்த வாரத்தில் ஒரு நாள் துயர நிகழ்வு. ஒரு அகால மரணம். இறந்தவரின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயம். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சடலம் வைக்கப்பட்டிருந்தது. பிரேதப் பரிசோதனை தொடங்கும் முன்பு சடலத்தை அடையாளம் காட்ட உறவினர்கள் அழைக்கப்பட்ட போது நானும் உடன் சென்றேன்.

முப்பது வினாடிகள் கூட அங்கே இல்லை. மேஜையில் கிடத்தப்பட்ட சடலங்கள், தரையில் கிடத்தப்பட்ட சடலங்கள் என்று அங்கே வீசிக் கொண்டிருந்த துர்நாற்றத்தை அந்த முப்பது நொடிகள் கூட என்னால் சகித்துக் கொள்ள முடியவில்லை என்பதுதான் உண்மை. அன்று முழுதுமே உணவு எடுத்துக் கொள்ள முடியாதபடி அதன் தாக்கம் இருந்தது.

ஆனால் நாள் முழுதுமே இந்த பிணவறையில் இருந்து கொண்டு, பிரேதப் பரிசோதனைக்கு மருத்துவர்களுக்கு உதவுவது, அறுப்பது, தைப்பது, சுமந்து கொண்டு அமரர் ஊர்தியில் ஏற்றுவது போன்ற பணிகளை எல்லாம் மருத்துவமனையின் கடைநிலை ஊழியர்கள்தான் செய்கின்றனர்.

இந்த பணி என்பது மட்டுமல்ல, பொதுவாக துப்புறவுப் பணிகள் அதிலும் குறிப்பாக கழிவறை சுத்தம் ஆகியவற்றை செய்வது ஒடுக்கப்பட்ட மக்களில் அடி மூட்டையாக இருக்கிற அருந்ததிய இன மக்கள்தான். வேறு யாரும் செய்ய முன் வராத, செய்ய தயாராக இல்லாத இந்த வேலைகளை செய்பவர்களுக்கு நியாயமான ஊதியம் கிடைக்கிறதா?

சொல்லப்போனால் நாற்றத்திலும் அசுத்தத்திலும் நாள் முழுதும் உழன்று கொண்டிருக்கிற இந்த உழைப்பாளிகளுக்கு மற்றவர்களுக்கு அளிப்பதை விட கூடுதலான ஊதியம் அளிக்க வேண்டும். ஆனால் மிகக் குறைவாக ஊதியம் பெறுவது என்னமோ இவர்கள்தான். இந்த நிலை மாறிட வேண்டும்.

இவர்களின் வாழ்நிலையை மாற்றிட உள் ஒதுக்கீட்டுக்கான போராட்டத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் மற்ற அருந்ததியர் அமைப்புக்களோடு இணைந்து நடத்தியதால் மட்டுமே 3 % உள் ஒதுக்கீடு என்பது வந்தது. மருத்துவக் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் இந்த சமுதாயத்தினரும் படிப்பதற்கான வாசலை இந்த உள் ஒதுக்கீடே உருவாக்கியது.

கைகளால் மனிதக் கழிவுகளை அகற்றுவதற்கான சட்டம் வந்துள்ளது. அதன் அமலாக்கம் தேவைப்படுகிறது. இந்த தேசத்தின் மிகப் பெரிய திறந்த வெளி கழிவறையாக ரயில்வே பாதைகள் இருப்பது மிகப்பெரிய அவலம். செவ்வாய்க்கு விண்கலம் அனுப்பும் அளவிற்கு முன்னேறிய தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நாட்டில் இன்னும் பாதாள சாக்கடையில் இறங்கிய துப்புறவாளர்கள் இறந்து போகும் கொடுமையும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.

வைர நாற்கர ரயில்பாதையை உருவாக்கும் முன்னம் மத்தியரசு முன்னுரிமை அளிக்க வேண்டிய பிரச்சினை ரயில்பாதையில் உள்ள கழிவுகளை அகற்றுவதுதான்.

ஆனால் துப்புறவுப் பணி கடவுளுக்கு செய்கிற பணி என்று பாறாங்கல் ஐஸ்ஸை தலையில் வைத்து விட்டு பிரச்சினையை திசை திருப்புகிற மோடி போன்றவர்கள் இதிலெல்லாம் அக்கறை செலுத்துவார்களா என்ன?





Tuesday, June 24, 2014

அவமானத்தை மூலதனமாக மாற்றிய கவியரசர் கண்ணதாசன்

கவியரசர் கண்ணதாசன் அவர்களின் பிறந்தநாளை ஒட்டி
ஒரு மீள் பதிவு  


முகநூலில் நான் படித்து ரசித்தது.

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...
.............................................................................................................

செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.

இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.

நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.

நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.

இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.

நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!

எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)..

நன்றி..பி.வினோத்குமார்..

உடுமலை.சு.தண்டபாணி தண்டபாணி

Monday, June 23, 2014

கத்தி விளம்பரம் - ஏமாந்தவர்களில் நானும் ஒருவன்

நேற்று என் மகன் கத்தி படத்தின் விளம்பரத்தைக் காண்பித்த போது
நன்றாக உள்ளதே என்று பாராட்டினேன் ஆனால் கோழி பையன்
என்ற வலைப் பக்கத்தை இப்போது பார்த்த போதே உண்மை தெரிந்தது.

ஏன்யா இப்படி அப்பட்டமா காபி அடிச்சு மாட்டிக்கிறீங்க.

எரிமலையை சுமந்த ராம நாராயணன்

 

இயக்குனர் ராம நாராயணன் மறைந்துள்ளார். அவருக்கு எனது
இதய அஞ்சலி.

மிருகங்களை வைத்து படமெடுத்தவர். அம்மன் படங்களாக
எடுத்தவர் என்ற பெயர் அவருக்கு உண்டு. அதில் உண்மையும்
உண்டு.

ஆனாலும் எனக்கு அவரை பிடிக்கும்.

பிரம்மாண்டமான பட்ஜெட் என்றெல்லாம் தயாரிப்பாளரின்
பணத்தில் பொங்கல் வைக்காதவர்.

நட்சத்திரக் கதாநாயகர்களின் பின் அலையாதவர். 

இரண்டு மூன்று கதாநாயகர்களை வைத்து அதிகமாக தமிழில்
படமெடுத்தவர் அவராகத்தான் இருக்கும்.

அவரது துவக்க காலப் படமான "சுமை" எனக்கு மிகவும்
பிடிக்கும். பொறுப்பற்ற தகப்பன் ஏழெட்டு பிள்ளைகளை
பெற்றுப் போட்டதால் குடும்பப் பாரத்தை சுமக்கும் மூத்த
மகனாக சந்திரசேகர் நன்றாக நடித்திருப்பார். படமும்
நன்றாக இருக்கும். ஆனால் ராம நாராயணன் திசை மாறிப்
போய் விட்டார்.

தமிழக உழைப்பாளி மக்களுக்கு அவர் கொடுத்த பரிசு
சிவப்பு மல்லியில் வரும் எரிமலை எப்படி பொறுக்கும்? 
பாடல். நாடி நரம்புகளை சூடேறச் செய்யும் இப்பாடல்
இல்லாமல் அநேக இடங்களில் மேதினம் அனுசரிக்கப்
படுவதேயில்லை.

ராம நாராயணனுக்கு எனது இதய அஞ்சலி. 

Sunday, June 22, 2014

ரயில் கட்டண உயர்வை கண்டித்துள்ள மோடி- நிசமாத்தாங்க

இன்னும் கொஞ்ச நாட்களில் ரயில்வே பட்ஜெட்டை சமர்ப்பிக்க
உள்ள நிலையில் ரயில் கட்டணத்தை உயர்த்துவது என்பது
நாடாளுமன்றத்தை  புறக்கணிப்பதாகும். இதற்கு எதிராக நான்
பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன்.

இதைச் சொன்னது நரேந்திர மோடி.

ஆமாங்க, நிஜமாத்தான்.

இப்ப இல்லை, ஒரு வருஷம் முன்னாடி.

எதிர்கட்சியா இருக்கும் போது என்னவேனா பேசுவோம்.
ஆளும்கட்சி என்றால் என்னவோ செய்வோம்.

இதுதான் பாஜக, என்ஜாய் மக்களே


 

சர்ச்சைக்கு வாய்ப்பில்லாத டாப் டென் பாடல்கள் பட்டியல்

நேற்று உலக இசை தினம் என்று நேற்றைய தீக்கதிரை இன்று
படித்து அறிந்து கொண்டேன்.  எனக்கு பிடித்த பாடகர்களின்
சிறந்த பாடல் என்று நான் ஒரு பட்டியல் தயாரித்துள்ளேன்.

எனக்கு பிடித்த பாடல்கள்தான். ஆகவே இதிலே நம்பிக்கை
அளிக்கும் நட்சத்திரங்கள், இளம், கிழம் என்றெல்லாம் எந்த
ஒரு சர்ச்சைக்கும் இடமில்லை.

ஐந்து ஆண் பாடகர்கள், ஐந்து பெண் பாடகர்கள் - இதிலே 
எனக்கு பிடித்த ஒரு பாடல். ஆனால் இந்த பட்டியல் தயாரிப்பதே
சிரமமாகி விட்டது. 

சரி இப்போது பட்டியலுக்குள் செல்வோம்.



இசை அரசி எம்.எஸ்.சுப்புலட்சுமியின் காற்றினிலே வரும் கீதம்
இன்னும் காற்றில் தவழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பி.சுசீலா அவர்கள் நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா 
என்று சொன்னாலும் கேட்க மறுத்து பாடலை முழுதாகக் 
கேட்பேன் என அடம் பிடிக்கிறது நிலா.

என் மன்னன் எங்கே என்று எஸ்.ஜானகி கேட்ட கேள்விக்கு
செந்தூரப் பூ பதில் சொல்லவே இல்லை.

ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனைப் பாடல் என்று தொடங்கி
தத்துவங்களை இசையாய் பொழிகிறார் வாணி ஜெயராம்.

பாடறியேன், படிப்பறியேன் என்று அப்பாவியாய் பாடத்
துவங்கும் சித்ரா, தன்னுடைய இசையறிவை நிரூபிக்கிறார்.

இனி ஆண்கள் பக்கம் வருவோம்.

பால முரளி கிருஷ்ணாவின் குரலைக் கேட்டு மகிழ்ந்திட
நமக்கு ஒரு நாள் போதுமா? 

பி.பி.ஸ்ரீனிவாஸ் போல நாமும்  நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்
என்று பாடினால் வந்த கோபமும் மறைந்திடுமல்லவா?

யார் அந்த நிலவு என்று டி.எம்.சௌந்தரராஜன் தேடுகிறாரே,
கொஞ்சம் உதவி செய்யுங்களேன்.

அவரோகணம் இன்றி கே.ஜே.யேசுதாஸ்  கலைவாணியே உனைத்தானே   
என்று அழைத்த போது உள்ளம் உருகி உள்ளேன் ஐயா என்று
வந்தவர்கள் எத்தனை பேர்.

இளைய நிலா பொழிகிறது என்று எஸ்.பி.பாலசுப்ரமணியன் 
பாடுகையில் இசையல்லவா பொழிகிறது!

என்னங்க, இந்த டாப் டென் பட்டியல் சரியா?

Saturday, June 21, 2014

மீண்டு, மீண்டும் வந்த "என்னடி மீனாட்சி"

நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

என்னைப் போன்ற வயதானவர்களுக்கு நிச்சயம் நினைவில்
இருக்கும் என்று நம்புகிறேன்.

எழுபதுகளின் இறுதியில் ரேடியோ சிலோனில் இசைச்செல்வம்
என்று ஒரு நிகழ்ச்சி ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை மதியம்
மூன்று மணி முதல் நான்கு மணி வரை நடைபெறும். கே.எஸ்.ராஜாவா,
இல்லை அப்துல் ஹமீதா , யார் தொகுத்து வழங்கினார் என்பது
நினைவில் இல்லை.

இன்றைய டாப் டென் பாடல்கள் நிகழ்ச்சிகளுக்கு முன்னோடி
அந்த நிகழ்ச்சி.

ஒவ்வொரு வாரமும் பதினொன்று  பாடல்களை ஒலிபரப்புவார்கள்.
போன வார பாட்டு பத்து, புதிய அறிமுகம் ஒன்று.  நேயர்கள் அனுப்பும்
தபால் அட்டையின் அடிப்படையில் தர வரிசை போட்டு ஒலி பரப்புவார்கள்.

இந்நிகழ்ச்சியில் வெகு காலம் முதலிடத்தில் இருந்த பாடல்தான்
என்னடி மீனாட்சி. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக புதிய பாடல்கள் 
வர, அதன் தர வரிசை குறைந்து கொண்டே போய் பத்தாவது இடத்திற்கு
வந்து சேர்ந்தது.

அடுத்த வாரம் வெளியேறிவிடும் என்ற நிலையில் திருச்சியிலிருந்து
ஒரு ரசிகர் 2000 க்கு மேற்பட்ட தபாலட்டைகளை அனுப்ப என்னடி
மீனாட்சி மீண்டும் முதலிடத்திற்கே வந்து விட்டது. அதன் பின்பு
மூன்று மாதங்களுக்கு மேல் அந்த இடத்திலே இருந்தது என்பது
வரலாறு

இதுதான் ஜெயமோகன் வகையறாக்களின் தரம்

ஜெயமோகனின் பாலியல் நிந்தனையைக் கண்டித்து படைப்பாளிகள்
வெளியிட்ட அறிக்கைக்கு வந்த சில பின்னூட்டங்களைப் 
பாருங்கள்.

ஜெய மோகனின் வார்த்தைகளைஅப்படியே வாந்தி எடுப்பதைத் தவிர
வேறு எதுவும் தெரியாதவர்கள், கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்
ஆபாசத்திற்கு மாறி விட்டார்கள்.

  1. பொருட்படுத்தத் தக்க இலக்கியம் படைக்காமல் இது போன்ற வீண் வேலைகளில் ஈடுபட்டு எழுத்தாளர்கள் என்ற லைம் லைட்டுக்குள் நிற்பதையே அவர் நேர்மையாய் எதிர்க்கிறார்..15 வருட இலக்கிய வாசகனான எனக்கு இங்கே பட்டியலில் உள்ள 90 சதம் "எழுத்தாளர்களை" எந்தப் புத்தகம்/பத்திரிக்கை/இலக்கிய சந்திப்பு /இணைய இதழ்கள் வாயிலாகவும் தெரியாது..
    ReplyDelete
  2. ஜெயமோகனின் நிலையையே நீங்களும் எடுக்கிறீர்கள். உங்களுக்கோ அல்லது ஜெயமோகனுக்கோ தெரியாது என்பதாலேயோ அல்லது தெரிந்து கொள்ள விருப்பம்
    கிடையாது என்பதாலாயோ இவர்கள் எல்லாம் படைப்பாளிகள் கிடையாதா? என்ன ஊர் நியாயம் சார் இது? லைம் லைட்
    பிரபலம் என்றால் அது ஜெயமோகன் மட்டுமே
    ReplyDelete
  3. //உங்களுக்கோ அல்லது ஜெயமோகனுக்கோ தெரியாது என்பதாலேயோ அல்லது தெரிந்து கொள்ள விருப்பம்
    கிடையாது என்பதாலாயோ//

    இலக்கிய வாசகன் உயரிய படைப்புக்களை தேடித் தேடி படிப்பவன்..இடையறாது அதற்கான முயற்சிகளில் இருப்பவன்..அவன் கண்களில் ஓரிருவர் தப்பலாம்..ஆனால் இவ்வளவு பேர் தப்ப இயலாது..நீங்கள் நல்ல இலக்கியத்தை இணையத்தில், புத்தகக் கண்காட்சிகளில், எழுத்தாளர்களின் குறிப்புகளில், வலைப்பூக்களில், மற்றவர்களுடனான உரையாடல்களில் தேடித் தேடி படிப்பவரேன்றால் உங்களுக்கு இது புரியும்..

    //லைம் லைட் பிரபலம் என்றால் அது ஜெயமோகன் மட்டுமே

    அது மேம்போக்காக படிப்பவர்களுக்கு..ஜெமோ சந்தேகமேயில்லாமல் தமிழ் மண்ணில் உதித்த ஒரு மாபெரும் கலைஞன்..ஆனால் அவர் எழுத்து அளிக்கும் அதே உணர்வை அளிக்கக்கூடியது கண்பார்வையற்ற தேனீ சீருடையானின் "நிறங்களின் உலகம்". இலக்கிய வாசகனுக்கு தேனீ சீருடையானும் முக்கியம்..நீங்கள் சொல்லும் லைம்லைட் எழுத்தாளர்கள் மட்டுமல்ல...
    ReplyDelete
  4. நான் 15 வருடமாக ஜெயமோகனுக்கு அடிவருடுறேன்..எனக்குத்தான் இலக்கியம்னா என்னனு தெரியும். ஆனா நான் சுனா னு ஒரு அனானி ஐ டி ல தான் வாய்கிழியப் பேசுவேன். என்னுடைய ஒரிஜினல் ஐடி யைக்கொடுத்து என் தகுதியைக் காட்டமுடியாத ஒரு கபோதி நான்னு சொல்லிக்கிட்டு யாராவது வந்தாங்களா?? :)))
    ReplyDelete
    Replies
    1. அப்படி யாரும் வந்த மாதிரி தெரியலையே....................
      ஆனா வின்னி த பூ படம் வச்சிகிட்டு ஒரு கபோதி வந்தான் . அவன் பேரு கூட அருண் இல்லயில்ல வருண் என்று வச்சி இருந்தான் :))
      Delete
  5. பேராசிரியர் எம் ஏ சுசீலா ஜெயமோக‌னின் பிரச்சாரகர். அவர் என்ன சொல்கிறார் என்று எழுதவும். கண்டிப்பாக அவர் இந்த மடல் எழுதியோரிடம் விலகித்தான் இருப்பார்.
    ReplyDelete
  6. இந்த கைஎழுத்திட்டோர் பட்டியலில் உங்களுக்கு பிடித்த 5 படைப்புகள் (தக்க காரணங்களுடன்) சொல்ல முடியுமா? இரு தரப்பையும் அறிந்தீர்களா? ஜெயமோகனின் பாலியல் நிந்தனை எங்கே இருக்கிறது அன்பதற்கு சுட்டி கொடித்தீர்களா?
    ReplyDelete
  7. சுனா மற்றும் சங்கரன், நீங்கள் இருவரும் ஒருவரா அல்லது தனி தனி ஆட்களா? உங்களது பக்கம் மொட்டையாக இருக்கிறதே! இவர்களின் படைப்பின் மீது உங்கள் ஜெமோ விமர்சனம் செய்திருந்தால் அது விவாதம். பெண்கள் எல்லாம் எதுவும் எழுதவில்லை என்று அடாவடியாய் பேசுவது நிந்தனை. அந்த அடாவடியைத்தான் நீங்களும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

    எதற்கு தனியாக சுட்டி வேண்டும். அந்தாள் பக்கத்திலேயே எல்லா எழவும் இருக்கிறதே!

    மேலும் தமிழை ஆங்கில எழுத்துருக்களால் எழுதலாம் என்று
    சொல்லும் போதே ஜெயமோகனின் வக்கிரமும் தமிழ் விரோதப் போக்கும் தெரிந்து விடுகிறது.
    ReplyDelete
  8. //உங்களது பக்கம் மொட்டையாக இருக்கிறதே!

    ஆமா ...நான் சொன்னதெல்லாம் மொட்டை..நீ அப்டியே வெளக்க மயிரா புட்டுப் புட்டு வச்சிட்ட..போடா முட்டாக்.......... ( இதில் உள்ள வார்த்தையை நான் நீக்கி விட்டேன்)..இவ்ளோ விளக்கம் ஒனக்குன்னு நெனச்சியா..ஒன்ன மாதிரி கேனயங்களுக்கு எதுவும் புரியாதுன்னு எனக்குத் தெரியும்..நான் எழுதுறது ஒம் மொட்ட கட்டுரைய ஜெயமோகன் அப்டிங்கற பேருக்காக படிக்கிறாங்களே அவங்களுக்கு..அவங்கள்ள சிலருக்காவது நான் சொல்றது புரியும்..அதுக்காக மட்டுமே நான் பின்னூட்டம் இடுகிறேன்..ஒனக்கு இல்ல...
    ReplyDelete
     
    தலைவனுக்கும் தொண்டனுக்கும்  எந்த வித்தியாசமும் இல்லை.
    ஜெய மோகனும் சரி, அந்த மனிதனின் தொண்டரடிப்பொடிகளும்
    சரி தரங்கெட்டவர்கள் என்பதை நிரூபித்து விட்டார்கள்.
     
    ஆணவ ஜெய மோகன் தமிழிலக்கியத்தின் சாபம்

Friday, June 20, 2014

இந்த பாட்டுதான் சூப்பர், ஆனால் ஹிட்டானதோ?

 http://tamil.oneindia.in/img/2012/10/05-ilayaraja6-300.jpg

ஒரு படத்தின் எல்லா பாட்டுக்களும் ஹிட்டாவது என்பது தமிழ்
திரையுலகில் இளையராஜாவால்தான் அதிகமான முறை
சாத்தியமாகியுள்ளது.

சில சமயங்களில் மிகவும் சூப்பரான பாட்டு என்று நாம் நினைக்கிற
பாடலை விட வேறு ஒரு பாட்டு சூப்பர் ஹிட்டாகி விடும். அதற்காக
அந்த பாட்டு சுமார் என்று அர்த்தமில்லை.அதுவும் நல்ல பாட்டுதான்.

அப்படி சில பாடல்களை பார்ப்போமா?

பொண்ணு ஊருக்குப் புதுசு படத்தில் எனக்கு இந்த  பாட்டுதான்
ரொம்ப பிடிக்கும். ஆனால் சூப்பர் ஹிட்டானது ஓரம் போ பாடல்.

சொல்லத் துடிக்குது மனசு என்ற மொக்கைப் படத்தில் எல்லா
பாடல்களும் அருமை. இந்த பாடலில் இளையராஜாவயலினில் 
அப்படியே இழைத்திருப்பார். பெரிய ஹிட்டானது பூவே செம்பூவே.

தளபதியில் ராக்கம்மா கையை தட்டு பட்டிதொட்டியெங்கும்
பயங்கர ஹிட். ஆனால் ராஜாவின் மேதமையோ இந்த பாடலில் 
இன்னும் சிறப்பாக வெளிப்பட்டிருக்கும்.

இளமை ஊஞ்சலாடுகிறது படத்தில் இனிமை கொஞ்சும்பாடல்
இதுதான் இப்பாடலை விட தண்ணி கருத்துருச்சு வும் என்னடி
மீனாட்சியும் இன்னும் அதிகமாக ஒலித்தது.

இதிலே என்னடி மீனாட்சி பற்றி ஒரு சுவார்ஸ்யமான தகவல்
ஒன்று உண்டு. என்னைப் போன்ற வயதானவர்களுக்கு 
நினைவில் இருக்கலாம். அதை நாளை பார்ப்போம்.
 

இதுதான் பத்திரிக்கை தர்மமாம்



சர்வதேச மகளிர் தினத்தன்று ஒவ்வொரு நாளிதழும் ஒவ்வொரு விதமாக வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருந்த போது ஒரு நாளிதழ் மட்டும் ஒரு படத்தை வெளியிட்டிருந்தது. ஒரு விளிம்பு நிலைப் பெண் ஒருவர் டாஸ்மாக் கடை வாசலில் நின்று குடிப்பது போன்ற படத்தைப் போட்டு “இதற்குத்தானா பெண் விடுதலை?” என்று தலைப்பும் போட்டது. மகளிர் தினத்தையும் பெண்களையும் கொச்சைப்படுத்தி செய்தி வெளியிட்ட அந்த நாளிதழைக் கண்டித்து அனைத்திந்தீய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட மகளிர் அமைப்புக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தின.

பத்திரிக்கை நிர்வாகம் மாதர் அமைப்புக்களோடு பேச்சு வார்த்தை நடத்தியது. வருத்தம் தெரிவித்து செய்தி வெளியிடுவதாக ஒப்புக் கொண்டது. ஆர்ப்பாட்டத்தைப் பற்றி செய்தி சேகரிக்க எல்லா பத்திரிக்கையாளர்களும் வந்திருந்தாலும் எங்களது நாளிதழ் தவிர வேறு யாரும் அச்செய்தியை வெளியிடவில்லை.

ஒரு வாரமான பின்பும் அப்பத்திரிக்கை மறுப்பு தெரிவிக்கவில்லை. மகளிர் அமைப்புக்கள் தொலைபேசியில் பேசிய பின்பு ஒரு வழியாக மறுப்பறிக்கை வெளியிட்டது. அதில் கூட “ஜீன்ஸ், டீ ஷர்ட் அணிந்த, கிராப் தலையோடுள்ள, லிப்ஸ்டிக் பூசிய பெண்கள் வந்து ஆர்ப்பாட்டம் நடத்திய பின்னணியில்” என்ற ரீதியில்தான் செய்தி வெளியிட்டிருந்தார்கள்.

இந்நிகழ்வு நடந்த சில தினங்களுக்குப் பிறகு மனித உரிமை கமிஷன் சார்பாக “மனித உரிமைகளை பாதுகாப்பதில் பத்திரிக்கைகளின் பங்கு” என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடந்த போது இச்சம்பவத்தை குறிப்பிட்டு மனித உரிமைகளை ஊடகங்களிடமிருந்துதான் பாதுகாக்க வேண்டும் என்று பேசினேன். எனக்குப் பிறகு பேசிய ஞானியும் அதை வழிமொழிந்து பேசினார். ஆனால் இறுதியாக பேசிய அந்த பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் எந்த பதிலும் சொல்லாமல் நன்றி வணக்கம் எனக்கூறி முடித்து விட்டார்.

மற்ற பத்திரிக்கைகள் ஏன் செய்தி வெளியிடவில்லை என்றால் “ஒரு பத்திரிக்கைக்கு எதிராக இன்னொரு பத்திரிக்கை எப்படி செய்தி வெளியிடுவது? அது பத்திரிக்கை தர்மத்திற்கு எதிரானது. எனவே செய்தி வெளியிடவில்லை என்று விளக்கம் சொன்னார்கள்.

உண்மைகளை மறைப்பதற்கு பத்திரிக்கை தர்மம் என்று சொல்கிறார்கள்.


17.06.2014 அன்று வேலூரில் நடைபெற்ற தோழர் சரோஜ் நினைவு நாள் சிறப்புக்கருத்தரங்கில் “உண்மைகளை மறைக்கிறதா ஊடக அரசியல்?”என்ற தலைப்பில் தீக்கதிர் பொறுப்பாசிரியர் 
தோழர் அ.குமரேசன் பேசியதிலிருந்து.