சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
Monday, March 31, 2025
மோடியை துரத்துதா RSS?
Sunday, March 30, 2025
சங்கிகளுக்கு மன்னிப்பெல்லாம் சாதாரணமப்பா . . .
கீழேயுள்ள செய்தியை படியுங்கள்.
கோழை சாவர்க்கர் காலம் தொடங்கி இன்றைய நாள் வரை மன்னிப்பு கேட்பதெல்லாம் சங்கிகளுக்கு சாதாரணமான விஷயம். சொல்லப் போனால் மன்னிப்பு கேட்பது என்பதுதான் சங்கிகளின் பாரம்பரியம் . . .
ஆட்டுக்காரன் சொன்னது கரீக்டுதான் . . .
இந்தியாவின் முதல் குடியரசு தின விழாவிற்கு மகாத்மா காந்திக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது சரியான தகவல்தான்.
என்ன!
இந்தியாவின் முதல் குடியரசு தினம் கொண்டாடப்பட்ட 26,ஜனவரி, 1950 க்கு இரண்டு ஆண்டுகள் முன்மே ஆட்டுக்காரனின் முன்னோர்களான கோழை சாவர்க்கர் போட்டுக் கொடுத்த ஸ்கெட்சின் படி கோட்சே 30,ஜனவரி,1948 அன்று மகாத்மாவை கொன்று விட்டான் என்ற தகவலை மட்டும் 20,000 புக் படித்த ஆட்டுக்காரன் மறந்து விட்டான்.
எப்படி இருந்தாலும்
மகாத்மா காந்திக்கு முதல் குடியரசு தின விழாவிற்கான அழைப்பிதழ் அளிக்கப்படவில்லை என்று ஆட்டுக்காரன் சொன்னது கரீக்ட்தானே!
Saturday, March 29, 2025
அந்த 36 % எங்கடா?
அடுத்த முதலமைச்சர் யார் என்றொரு கருத்துக் கணிப்பு நடந்ததாக ஒரு தகவலை புதிய தலைமுறை வெளியிட்டுள்ளது.
இதுதான் ஊடக தந்திரம்.
நால்வருடைய வாக்குகளை கூட்டிப்பார்த்தால் 64 % தான் வருகிறது. மீதமுள்ள 36 % எங்கே போனது? இறுதி முடிவு முன்னே பின்னே வந்தால் அதை சமாளிப்பதற்காக இவர்கள் விட்டு வைத்துள்ளதுதான் அந்த 36 %.
இந்த கருத்து கணிப்பை மட்டும் ஆட்டுக்காரன் கண்களில் காண்பித்து விடாதீர்கள். முதல்வர் கனவில் மிதப்பவனின் இதயம் நொறுங்கி விடப் போகிறது.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவின் சிகண்டிகள், புதிய தலைமுறைக்கு (பாஜக கூட்டணியில் பச்சைமுத்து எனும் பாரிவேந்தர் இருந்த போதிலும் கூட) என்ன முத்திரை குத்தப் போகிறார்களோ!
Friday, March 28, 2025
விஜய் அழிவு சக்தியா?
அமெரிக்கா ஜப்பான் மீது வீசிய அணுகுண்டைப் போன்றவர் விஜய் .
இதை நான் சொல்லவில்லை. விசிக விலிருந்து தவெக விற்கு தாவிய லாட்டரி மார்ட்டின் மருமகன் ஆதவ் அர்ஜூனா, அக்கட்சி பொதுக்குழுவில் பேசியது.
சந்தேகமாக இருக்கிறதா?
இதோ காணொளியை பாருங்கள்.
இந்த முட்டாள்களை வைத்துக் கொண்டு அவர் என்னத்த கட்சி நடத்தி என்னத்த தேர்தலில் போட்டியிட்டு 😅😅😅😅😅😅
பிகு : மேலே உள்ளது அமெரிக்கா ஹிரோஷிமா மீது வீசிய "ஃபேட் மேன் (FAT MAN) என்று பெயரிடப்பட்ட அணுகுண்டு. உள்ளே ஆதவ் அர்ஜூனா பேச்சை கேட்டு அசந்து போன விஜய் . .
Thursday, March 27, 2025
பைக், விஸ்கி இப்போ பேட்டரி . . .
சாம்சங்கிற்கு சுங்க வரி மோசடிக்காக 5000 கோடி அபராதம் விதிக்கப்பட்டது தொடர்பாக நேற்று எழுதினேன். அது அமலாகுமா என்ற ஐயத்தையும் தெரிவித்திருந்தேன்.
ஏன்?
அபராத செய்தி வந்த அதே நாள் நிர்மலா அம்மையார் தயாள குணத்தோடு அறிவித்த சலுகைகள் பற்றிய அறிவிப்பும் வந்திருந்தது.
மோடி அமெரிக்கா செல்லும் முன்பு ட்ரம்பிற்கான பரிசாக "ஹார்லி டேவிட்சன்" பைக்கிற்கும் போர்பன் விஸ்கிக்கும் (இந்த போர்பன் விஸ்கி குறித்து சமீபத்தில் கேட்ட ஒரு தகவலை தனி பதிவாக எழுதுகிறேன்) இறக்குமதி வரியை குறைத்தார்.
ட்ரம்பிற்கு இதெல்லாம் திருப்தியளிக்கவில்லை.
அதனால் எலக்ட்ரிக் வாகனத்திற்கான பேட்டரி, மொபைல் பேட்டரி ஆகையவை உற்பத்தி செய்வதற்கான மூலப்பொருள் உட்பட 35 பொருட்களின் சுங்க வரியை குறைத்துள்ளார் நிர்மலா அம்மையார். அவர் நேற்று முன் தினம் அறிவித்தார். நாளை அமெரிக்காவிலிருந்து ஒரு குழு சுங்கவரி குறித்து விவாதிக்க வருகிறது. அம்மையார் அறிவிப்பிற்கும் அமெரிக்க குழு வருவதற்கும் சம்பந்தமில்லையாம்.
35 பொருட்களின் சுங்க வரியை குறைத்த நிர்மலா அம்மையார், சாம்சங்கும் அம்பானியும் அபராதம் கட்ட விடுவாரா? எந்த பொருட்களை இறக்குமதி செய்ததில் பிரச்சினையோ அவற்றுக்கான சுங்கவரியை முன் தேதியிட்டு அகற்றி விட மாட்டாரா!
அப்படி செய்தால் என்ன செய்யும் சுங்கத் துறை?
அப்படி நடக்காது என்று உங்களால் உறுதியாக சொல்ல முடியுமா?
சாம்சங்- ஜியோ மோசடி - 5000 கோடி அபராதம்
இந்திய சுங்கத்துறை சாம்சங் நிறுவனத்தின் மீது 601 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் 5000 கோடி ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.
அலைபேசிகளுக்கான பாகங்களை இறக்குமதி செய்து ரிலையன்ஸ் ஜியோ விற்கு விற்றதில் வரி விலக்கு கொடுக்கப்பட்டுள்ள பொருட்கள் என்று பொய் சொன்னதற்காக இந்த அபராதத்தை விதித்துள்ளது.
சாம்சங் இந்த அபராதத்தை கட்டுமா? கட்ட மத்தியரசு அனுமதிக்குமா?
கார்ப்பரேட் நிறுவனத்திற்கும் தன் முதலாளி அம்பானிக்கும் எதிராக மோடியால் செயல்பட முடியுமா?
இன்னொரு தகவலும் உள்ளது. அது நாளை . . .
மோடிக்கு போட்டியாகும் முனைவர் முனிவர். . .
நேற்று முகநூலில் பல நண்பர்களின் பக்கத்தில் பார்த்த பதிவு கீழே உள்ளது.
இந்த பதிவை படிக்கும் போது சிரிப்பாகவும் எரிச்சலாகவும் அதே நேரம் பரிதாபமாகவும் இருந்தது.
ஒரு வேளை நக்கல் பதிவோ என்ற சந்தேகத்தில் அவர் பக்கத்திற்கு சென்றால், இந்த குறிப்பிட்ட பதிவை காணவில்லை. ஆனால் அது பற்றி அவரின் நண்பர்கள் குறிப்பிட்டிருந்தனர். அப்படியே அவரின் மற்ற பதிவுகளை பார்த்தால் தலை சுற்றியது. நவீன ஜோதிடரான அவரது விளக்கங்கள் எல்லாம் சராசரியான எனக்கு புரியவே இல்லை. அவர் மனநிலை குறித்து அறிய உதவிய பதிவு கீழே உள்ளது.
தன்னை முனைவர் முனிவர் என்றழைத்துக் கொள்ளும் இந்நபரை அவரது நண்பர்கள் மருத்துவரிடம் அழைத்துச் செல்வது நல்லது. மன நோய் முற்றுவதற்குள் சிகிச்சையை துவங்குங்கள்.இப்படித்தான் இந்த பதிவை முடிக்க நினைத்திருந்தேன். "முனைவர் முனிவரே, மருத்துவரிடம் செல்லுங்கள் " என்றுதான் தலைப்பும் வைத்திருந்தேன்.
பிறகுதான் ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது.
தான் இயற்கையாக ஒரு தாய் மூலமாக பிறக்காத தெய்வக்குழந்தை என்று மோடி தன்னை சொல்லிக் கொள்ளும் போது இந்த ஜோசியர் மட்டும் தன்னை தெய்வம் என்று சொல்லிக் கொள்ளக்கூடாதா?
அடிச்சு விடுங்க முனைவர் முனிவரே! மோடியை விட அதிகமாக உங்களால் கதை விட முடியாது என்ற போதிலும் முயற்சியை கைவிடாதீர்கள். குறைந்த பட்சம் ஆட்டுக்காரனுக்கு பதிலாக தமிழக பாஜக தலைவராக நியமிக்கப்படுவீர்கள். வாழ்த்துக்கள் . . .
Wednesday, March 26, 2025
ஆட்டுக்காரன் நிலைமை பரிதாபம் . . .
நேற்று எடப்பாடி - அமித்ஷா சந்திப்பு நடந்துள்ளது. மோசடி வழக்கில் சிக்கிக்கொண்ட உறவினரை பாதுகாக்கவே இந்த சந்திப்பு என்று ஊடகங்கள் சொன்னாலும் கூட்டணி பேச்சுவார்த்தை பற்றியும் பேசப் பட்டுள்ளதாக சங்கிகள் நம்புகிறார்கள்.
மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஒரு சிகண்டி போட்டுள்ள பதிவு கீழே.
அதிமுக கூட்டணிக்காக சங்கிகள் ஏங்குவது நன்றாக தெரிகிறது. அப்படி ஒரு கூட்டணி நிகழாது என்றும் நாம் சொல்ல முடியாது.
அதிமுக- பாஜ்க கூட்டணி உருவானால்
முன்பு அந்த கூட்டணி முறிய காரணமாக இருந்த ஆட்டுக்காரன் நிலைமை என்னாகும்?
அழகி படத்தில் மந்திரி பதவியையும் இழந்து ஆடைகள் கிழியும் அளவிற்கு அடி வாங்கிய பாண்டுவின் கதிதான் ஏற்படும்.
பாவம் ஆட்டுக்காரன் . . .
Tuesday, March 25, 2025
பூசணித்தோட்டத்தை கவளம் சோற்றில் மறைக்காதீர் சபாநாயகரே . . .
இவனைப் போல் நன்றாக படியுங்கள் என்று ஆசிரியர் சொன்னதால் வெட்டப்பட்டான் ஒரு மாணவன்.
புல்லட் வாங்கியதனால் வெட்டப்பட்டான் இன்னொரு வாலிபன்.
கபடி போட்டியில் வெற்றி பெற்ற காரணத்தால் சில வாலிபர்கள் வெட்டப்பட்டார்கள்.
இவை அனைத்தும் நடந்தது நெல்லைச் சீமையில். அங்கே ஊறிப் போயிருக்கிற ஜாதி வெறியால்.
ஆட்டுத்தாடி ஆரெஸெஸ் ரெவியை நன்றாகவே டீல் செய்கிறீர்கள். அதற்காக உங்களை பாராட்டுகிறேன். அதனால் ஒரு கவளம் சோற்றில் பூசணித் தோட்டத்தை மறைக்க நினைப்பதை எப்படி ஏற்க முடியும்?
தனியார் பள்ளிகளோடு நிறுத்தாதே ஆட்டுக்காரா
அநாகரீகம்-அசிங்கம்-அராஜகம்
சவுக்கு சங்கர் ஒரு அரசியல் தரகன், பிளாக் மெயிலர், பணத்திற்காக பொய்ப் பிரச்சாரம் செய்யும் கீழ்த்தரமான நபர்.
துப்புறவுத் தொழிலாளர்களைப் பற்றி அந்தாள் பேசியது கேவலமானது.
அதற்கான எதிர்வினையாக அந்தாள் வீட்டில் கழிவு நீரையும் மனிதக் கழிவுகளையும் வீசியது என்பது மிகவும் அநாகரீகமான செயல்.
இதுதான் சரியான எதிர்வினை என்று சிலர் பாராட்டுவது அசிங்கமாக இருக்கிறது. சொல்லப்போனால் துப்புறவுத் தொழிலாளர்கள் மீது இந்த சம்பவம் ஏற்படுத்திய களங்கத்தை இவர்கள் அதிகமாக்குகிறார்கள்.
இந்த சம்பவத்தை கண்டித்தால் நீங்கள் சவுக்கு சங்கருக்கு நீங்களும் ஆதரவாக செயல்படும் தரகர்தான் என்று சில உ.பி க்கள் சொல்வது அராஜகமானது.
உங்கள் அராஜகத்தால் பாதிக்கப்படப் போவது திமுக மட்டுமே. இது கூட புரியாத முட்டாள்களா அவர்கள்! அல்லது அவர்கள் திமுகவில் உள்ள பாஜக ஸ்லீப்பர் செல்களா?
Monday, March 24, 2025
அதை மட்டும் மன்னிக்க முடியாது டமில்மூசிக் மேடம்
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் உங்கள் அரசின் இந்தி திணிப்பு முயற்சிகளுக்கு முட்டு கொடுக்கும் உங்கள் தமிழ்த்துரோகத்தைக் கூட மன்னிப்பேன், டமில் மூசிக் மேடம் . . .
மோடி தமிழை அதிகம் பயன்படுத்தினார் என்று சொல்லியுள்ளீர்களே, அதை மட்டும் மன்னிக்க முடியாது.
ஏனென்றால் மோடி செய்தது.
தமிழ்க் கொலை.
பாஜக வில் சேர்ந்தாலே இப்படித்தான் மனசாட்சி இல்லாமல் அபாண்டமாக பொய் பேசனும் போல . . .
நீங்களும் ஒன்றும் செய்யவில்லையே யுவர் ஆனர்
நேற்று ஆங்கில இந்துவில் படித்த செய்தி கீழே . . .
"இந்திய குடிமக்கள் நீதித்துறையின் மீது நம்பிக்கை இழந்து வருகிறார்கள். ஏராளமான வழ்க்குகள் காலம்காலமாக நிலுவையில் உள்ளது. அதை சரி செய்ய முயற்சிகள் எடுக்கப்படுவதில்லை. நீதித்துறை இந்தியமயமாக்கப் பட வேண்டும். சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க வேண்டும். நீதிமன்றத்தின் மொழி அந்தந்த பகுதிகளின் மொழியாக இருக்க வேண்டும், வழக்காடிகளுக்கு தங்கள் வழக்கில் என்ன நடக்கிறது என்பதே தெரியவில்லை. முக்கியமான பல வழக்குகள் எடுக்கப்படுவதே இல்லை."
இவற்றைச் சொன்னது 24,பிப்ரவரி 2021 முதல் 26 ஆகஸ்ட், 2022 வரை உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த திரு என்.வி.ரமணா. 17.02.2014 லில் இருந்தே அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்துள்ளார். அதனால் நீதிபதிகளை தேர்ந்தெடுக்கும் "கோலோஜியம்" உறுப்பினராகவும் நீண்ட காலம் இருந்திருப்பார்.
எனது கேள்வி எளிமையானது.
நீதித்துறையின் குறைகள் என்று பட்டியல் போடுகிற பிரச்சினைகளை தீர்க்க நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?
வழக்கு மொழி தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரம் உங்களிடம் இருந்தும் ஏன் அதனை பயன்படுத்தவில்லை?
சமூகத்தின் அனைத்து பிரிவுகளிலிருந்தும் நீதிபதிகளை நியமிக்க கொலோஜிய உறுப்பினராக என்ன செய்தீர்கள்?
தேங்கிக் கிடக்கும் வழக்குகளை பட்டுவாடா செய்ய எந்த நடவடிக்கையும் உங்களால் எடுக்கப்படவில்லையே, ஏன்?
தேர்தல் பத்திரம், காஷ்மீர் சிறப்புப்பிரிவு 370, உள்ளிட்ட அரசியல் சாசன பெஞ்ச் விசாரிக்க வேண்டிய 53 முக்கிய வழக்குகளை தொடாமல் அப்படியே ஓய்வில் சென்று விட்டீர்களமே, ஏன்?
பதில் சொல்வீங்களா யுவர் ஆனர்?
இன்று விழித்துக் கொண்டுள்ள உங்கள் மனசாட்சி, பதவியில் இருக்கும் போது ஏன் உறங்கியது?
Sunday, March 23, 2025
காண்டோ பல்லால் – முதல் சங்கி மூடன்
நேற்றைய பதிவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் இரண்டாவது சர்சங்க்சாலக் சத்ரபதி சிவாஜியின் மகன் “சாம்பாஜியை குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்யச் சொல்லி மானத்தை காப்பாற்றிக் கொள்ளச் செய்தான்” என்று எழுதியிருந்ததை குறிப்பிட்டிருந்தேன்.
கோழை,
சுயநலவாதி
அவன் காட்டிய பாதையில் இன்றும் ஆயிரக்கணக்கான சங்கிகள் பாஜக அரசால் தங்கள் வாழ்வாதாரம் அழிந்து போவதைக் கூடப் பற்றி கவலைப்படாமல் உசுப்பேற்ற்றப்பட்ட மதவெறி காரணமாக மூடர்களாக தங்களையே அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.
Saturday, March 22, 2025
சங்கி பெரும் கரடிகளே தூற்றிய சாம்பாஜி
சங்கிகள் இன்று சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி மீது திடீரென பாசத்தை பொழிந்து கொண்டு ஔரங்கசீப்பின் மீது வெறுப்பை கக்கிக் கொண்டு கலவரத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
“மராத்தா
சாம்ராஜ்யத்தை ஆள சாம்பாஜி தகுதியற்றவன், முன் கோபி, குடிகாரன், ஸ்த்ரீ லோலன்.”
சாம்பாஜி
குடிகாரன், பெண்களை வேட்டையாடுபவன், காண்டோ பல்லாலின் சகோதரி மீது சாம்பாஜியின் கொடிய
பார்வை விழுந்ததும் அவன் தன் சகோதரியை தற்கொலை செய்ய வைத்து மானத்தை காப்பாற்றிக் கொள்ளச்
செய்தான்”
Friday, March 21, 2025
கலவரத்தை தூண்டும் காவி சினிமாக்கள்
நேற்று நாக்பூர், இன்று அலகாபாத்
இப்படி ஒரு கேவலமான தீர்ப்பை ஒரு நீதிபதி அளிக்கிறார் என்றால் அவர் நிச்சயம் சங்கியாக மட்டுமே இருக்க முடியும். பெண்களை வெறும் போகப் பொருளாக அவர்கள் மட்டும்தான் பார்ப்பார்கள்.
அபத்தமான தீர்ப்பு அகற்றப்பட்டது
19, நவம்பர், 2021
கடந்தாண்டு
மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை ஒரு அபத்தமான தீர்ப்பை அளித்தது.
ஒரு சிறுமியை ஒரு கிழவன் பாலியல் சீண்டல் செய்தான் என்று போக்ஸோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கில்
அந்த சிறுமி ஆடைகள் அணிந்திருந்ததால், நேரடியான தொடுதல் இல்லாத காரணத்தால் வழக்கை தள்ளுபடி செய்தார் ஒரு பெண் நீதிபதி.
நல்ல வேளையாக அந்த தீர்ப்பிற்கு தடை விதிக்கப்பட்டது மட்டுமல்லாமல் தற்காலிக நீதிபதியாக இருந்த அந்த அம்மையாரை நிரந்தர நீதிபதியாக்காமல் பதவியிலிருந்து அகற்றினர்.
நேற்று உச்ச நீதிமன்றம் நாக்பூர் தீர்ப்பை ரத்து செய்துள்ளது. அது அபத்தமான ஒன்று என்றும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
"ஆடைகள் இருந்ததா, நேரடி தொடுதல் இருந்ததா இல்லையா என்பதெல்லாம் முக்கியமே இல்லை, பாலியல் சீண்டல் நோக்கம் இருந்ததா என்பது மட்டுமே முக்கியம்"
என்று மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளனர்.
குற்றவாளிகள் சட்டத்தின் குறைபாடுகளை பயன்படுத்தி தப்பிக்க அனுமதிக்கப் படக் கூடாது.
Wednesday, March 19, 2025
தெரு நாய் புரவலர்களுக்கு என்ன கட்டுப்பாடு?
மேலேயுள்ள கட்டுப்பாடு வரவேற்கத்தக்கது. இதனை சென்னை மட்டுமல்லாமல் தமிழ்நாடு முழுதும், ஏன் இந்தியா முழுதும் கூட விரிவுபடுத்த வேண்டும்.
வளர்ப்பு நாய்களை விட தீவிரமான பிரச்சினை தெரு நாய்கள். தெரு நாய்களை கட்டுப்படுத்த எந்த ஒரு உருப்படியான நடவடிக்கையையும் எந்த அரசும் இது வரை எடுக்கவில்லை. எடுப்பார்கள் என்ற நம்பிக்கையும் இல்லை.
ஆனால் கட்டுப்படுத்த இன்னொரு விஷயம் இருக்கிறது.
தெரு நாய்களை ஊக்குவிக்கும் பலர் இருக்கிறார்கள். தொழு நோயாளிகளுக்கு சேவை செய்ய வாழ்க்கையை அர்ப்பணித்த அன்னை தெரசா =வின் மறு பிறப்பு என்ற நினைப்பில் சிலர் பத்து ரூபாய் பிஸ்கெட் பாக்கெட்டை இருபது நாய்களுக்கு பிரித்து போடுகிறார்கள்.
அவர்கள் போடும் துண்டு பிஸ்கெட்டை சாப்பிடும் நாய்கள் அடுத்து அந்த தெருவில் செல்பவர்களை துரத்த ஆரம்பிக்கின்றன.
அப்படி தெரு நாய்களின் மீது கருணை உள்ளவர்கள், நடுத்தெருவில் தெருநாய்களுக்கு பிஸ்கெட் போடுவதற்கு பதிலாக அவர்களது வீட்டில் வைத்து வளர்க்கலாமே!
தெரு நாய்களைத்தான் கட்டுப்படுத்த முடியவில்லை, தெரு நாய்களை ஊக்குவிப்பவர்கள் மீதாவது கட்டுப்பாடு கொண்டு வரலாமே!
இளையராஜா-மோடி-மு.க.ஸ்டாலின்
நேற்று இளையராஜா, மோடியை சந்தித்துள்ளார். அதனை தமிழ்நாடு பாஜகவும் மற்ற சங்கிகளும் எப்படி ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்கள் என்று பாருங்கள். . .
மோடியே இளையராஜாவை அழைத்து பாராட்டினார் என்று சொல்கிறார்கள்.
இந்த சந்திப்பு குறித்து மோடியும் ட்விட்டரில் பதிவு போடுகிறார்.
தான் அழைத்து இளையராஜா வந்ததாக மோடி எங்கேயும் சொல்லவில்லை.
இளையராஜாவும் ஒரு பதிவு போட்டுள்ளார்.
மோடி அழைத்துச் சென்றதாக அவரும் சொல்லவில்லை.
இதில் என்ன டெக்னிகாலிட்டி இருக்கிறது என்று தோன்றலாம்.
சிம்பனிக்கு முன்பாக முதல்வர் இளையராஜாவை சந்தித்தது தொடர்பாக அவர் ஒரு பதிவு போட்டுள்ளார்.
முதல்வர் "நேரில் வந்து" வாழ்த்தினார் என்பதை அதில் அவர் பதிவு செய்துள்ளார். தொல்.திருமா, செல்வப்பெருந்தகை, ஜி.கே.வாசன், ஆட்டுக்காரன் ஆகியோர் அவரை வந்து சந்தித்தார்கள் என்பதையும் அவர் பதிவு செய்திருந்தார்.
சிம்பனிக்கு பிறகு மோடியை சந்தித்ததை பதிவு செய்த இளையராஜா, சிம்பனி முடிந்து சென்னை வந்த பின்பு அவர் சென்று முதல்வரை பார்த்ததை மட்டும் பதிவு செய்யவில்லை. ஆனால் முதல்வர் முன்பும் பதிவு செய்திருந்தார். இப்போதும் பதிவு செய்துள்ளார்.
இளையராஜாவின் அரை நூற்றாண்டு இசைப்பயணத்தை தமிழ்நாடு அரசு கொண்டாடும் என்ற முக்கிய செய்தியை இளையராஜா பதிவு செய்யாதது ஏனோ?
முதல்வரை நேரில் சென்று சந்தித்தது தெரிந்தால் மோடி கோபப்படுவார் என்ற அச்சமோ!
இளையராஜாவின் இசை இணையற்றதுதான். ஆனால் அவர் அரசியல்?
இதற்கிடையில் மோடி அழைத்து பாராட்டினார் என்று சங்கிகள் ஏன் வெட்டி விளம்பரம் செய்கிறார்கள்! மானங்கெட்டவர்கள்!
Tuesday, March 18, 2025
ஓடுவது மோடியின் வாடிக்கை . . .
கீழேயுள்ள செய்தியை படிக்கையில் எனக்கு அதிர்ச்சியோ, ஆச்சர்யமோ ஏற்படவில்லை.
கோவை பாஜக சூப்பர் ஆர்ப்பாட்டமப்பா . . .
கோவையில் பாஜக நடத்திய ஆர்ப்பாட்டத்தின் காணொளி கீழே உள்ளது.
மோடி ஊழல் பேர்வழி என்று ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்து கண்டித்த கோவை சங்கிகளுக்கு பாராட்டுக்கள்.
பிகு: குரல் மாற்றப்பட்டது என்று சங்கிகள் தப்பித்துக் கொள்ள முயற்சிக்கலாம். காணொளியை இன்னொரு முறை பாருங்கள். "மோடி ஊழலைக் கண்டித்து" என்ற முழக்கம் வந்தவுடன் அந்த வெள்ளை தாடி சங்கியும் வயதான தாடி சங்கியும் அதிர்ச்சியில் மௌனமாவதே காணொளி உண்மையானது என்பதற்கு சான்று. . .
Monday, March 17, 2025
பன்றி வண்டி கிடைக்கலையாம் எச்.ராசா
நேற்று காவல்துறை கைது செய்த போது எச்.ராசா எனும் ஐகோர்ட், போலீஸ் வேனில் ஏற மாட்டேன் என்று கலாட்டா செய்துள்ளது. நாய் ஏற்றும் வண்டியில் நான் ஏற மாட்டேன் என்று விளக்கமும் சொல்லியுள்ளது.
அந்த ஜந்துவிற்கு நாய் வண்டியே அதிகமென்றும் அதன் குணாம்சம் கொண்ட பன்றிகளை ஏற்றும் வண்டி கிடைக்காததால் நாய் வண்டியை எடுத்து வந்தார்கள் என்பதை அந்த ஐகோர்ட்டிடம் யாராவது சொல்லவும்.
சீனா, ட்ரம்ப்தான் பயம் - ஆனா 56 இஞ்சர்தான்
லெக்ஸ் ஃப்ரீட்மென் என்ற ஊடகவியலாளரிடம் மோடி நடத்திய பேட்டி நாடகத்தில் தன் கால் வெள்ளை ஷூவுக்கு பாலிஷ் போட காசில்லை என்று மோடி உருட்டிய உருட்டு மட்டுமே மக்களால் கலாய்க்கப்பட்டது. அதை தாண்டியும் பல முக்கிய விஷயங்கள் அந்த பேட்டியில் உள்ளது. (இரண்டு பதிவுகளுக்கான content)
அந்த பேட்டியில் ட்ரம்பை புகழோ புகழு என்று புகழ்கிறார். அமெரிக்காதான் முக்கியம் என்ற நிலைப்பாட்டில் அவர் இருப்பது என்னை பார்ப்பது போலவே இருக்கிறது என்று செல்பி பீற்றல் வேறு. ட்ரம்பின் நடவடிக்கைகள் இந்தியாவிற்கு உருவாக்கும் பாதிப்புக்கள் பற்றி வாய் திறக்கவே இல்லை.
அதே போல சீனா பற்றியும் பம்முகிறார். அண்டை நாடுன்னா எல்லைப் பிரச்சினை இருக்கத்தான்யா இருக்கும், அதையெல்லாம் பேசித்தான் தீர்க்கனும், சீனா ஜனாதிபதி கூட நான் பேசியிருக்கேன். என்று பதுங்குகிறார்.
ஆனால் அதே சமயம்
பாகிஸ்தான் மீது சீறுகிறார், அதானிக்கு வணிக ஒப்பந்தம் பெறுவதற்காக நானே பாகிஸ்தான் போனாலும் கதைக்காகவில்லை என்பதை வெளிப்படையாக சொல்லாவிட்டாலும் அதுதான் உண்மை என்பது நமக்கு தெரியுமல்லவா!
பேட்டியில் இல்லாவிட்டாலும் இன்னொரு செய்தியை காலையில் படித்தேன். சீனாவுடன் எல்லை பிரச்சினை தீவிரமானது. ஆனால் அது பற்றி பம்மும் மோடி மியன்மர் எல்லையில் 1500 கிலோ மீட்டர் தூரத்திற்கு முள் வேலி போடுகிறார்.
ஆக இவர் வீரமெல்லாம் எளியோருடன் மட்டுமே . . .
போட்டோவுக்கு போஸ் கொடுக்க வெட்கமில்லையா?
Sunday, March 16, 2025
பீஷ்மரைக் கொன்ற சிகண்டி – பாகம் 2
பீஷ்மரைக்
கொண்ட சிகண்டி யார் என்ற பதிவின் இணைப்பு இங்கே உள்ளது . . . அதனை முதலில் படித்து விடுங்கள்.
பிறகு இரண்டாம் பாகத்தை தொடர்வோம்.
பீஷ்மரைக்
கொல்ல முருகனிடம் தவமிருந்து பெற்ற மாலை இருந்தும் யாரும் உதவ முன் வராத காரணத்தால்
அம்பை துருபதன் அரண்மனை கதவின் மீது மாலையை மாட்டி விட்டு தீக்குளித்து இறந்து போனது
வரை கடந்த பாகத்தில் பார்த்தோம்.
அம்பை
துருபத மன்னனின் மகளாக மீண்டும் பிறக்கிறாள். சிகண்டி என்று பெயர் சூட்டப்படுகிறாள். பருவ வயது வந்தவுடன் அரண்மனையின் வாயிலில் இருந்த
மாலையை தன் கழுத்தில் போட்டுக் கொள்கிறாள். இந்த செய்தி அறிந்ததும் துருபதன் நடுங்கிப் போகிறான். பீஷ்மருடைய பகைக்கு
ஆளாகி விட்டோமே என்று பதற்றம் ஆட்டி வைக்க, சிகண்டியை காட்டுக்கு துரத்தி விடுகிறான்.
காட்டுக்கு
போன சிகண்டி என்ன ஆனாள் என்பது தெரியவில்லை. இதற்கிடையில் இன்னொரு சம்பவம் நடக்கிறது.
துருபதன் முன்பொரு முறை துரோணரை அவமதித்தமைக்கு பழி வாங்க, அவன் மீது படை எடுக்க வேண்டும்
என்று துரோணர் குரு தட்சணை கேட்க (அர்ஜுனனிடம் துரோணர் கட்டை விரல் கேட்கவில்லை என்பது
கவனிக்கத்தக்கது) அர்ஜூனன், துருபதனை தோற்கடித்து
தேரில் கட்டி இழுத்து வருகிறான்.
இதனால்
கடுப்பான துருபதன், துரோணரை கொல்லக்கூடிய ஒரு மகனும் அர்ஜூனனை மணந்து கொள்ள ஒரு மகளும் வேண்டும் என்றும் ஒரு தீவிர யாகம் வளர்க்க, யாகத்தீயிலிருந்து ஒரு
மகனும் மகளும் வெளி வருகின்றனர். அந்த மகன்
திருஷ்டத்யுமன், மகள் திரௌபதி.
இந்த
காலகட்டத்தில் பெண்ணாக காட்டுக்கு துரத்தப்பட்ட சிகண்டி ஆணாக மாறி மீண்டும் துருபதன்
அரண்மனைக்கு வருகிறான். தான் செய்த தவத்தின் பலனாக ஆணாக மாறியதாக சொன்ன சிகண்டியை அனைவரும்
ஏற்றுக் கொள்கிறார்கள்.
காலம்
ஓடிக் கொண்டே இருக்க மகாபாரத போரும் வந்து விடுகிறது.
பாண்டவர்களின்
தளபதியாக சிகண்டியை நியமிக்கலாம் என்பது தர்மனின் யோசனை. தன்னுடைய மைத்துனன் திருஷ்டத்யுமனன்தான் தளபதியாக இருக்க வேண்டும் என்ற அர்ஜூனனின் கருத்துதான்
எடுபடுகிறது.
போர்
தொடங்கி விட்டது. பாண்டவர்கள் தரப்பில் பெரும் சேதம் கௌரவர்கள் தளபதி பீஷ்மரை யாராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அதிலும்
ஒன்பதாம் நாளன்று நிலைமை படு மோசம்.
அதனால்
அன்று நள்ளிரவு சதியாலோசனை நடக்கிறது. கிருஷ்ணன்
கொடுத்த யோசனையை அமலாக்க முடிவு செய்கிறார்கள்.
மறுநாள்
அர்ஜூனன் தேரிலே சிகண்டியும் ஏறிக் கொண்டு பீஷ்மர் மீது அம்பு எய்கிறான். பெண்கள் மீது
தாக்குதல் நடத்தக்கூடாது என்பது பீஷ்மரின் கொள்கை. சிகண்டி முந்தைய பிறப்பில் அம்பையாக
பிறந்தவள், இந்த பிறப்பிலும் முதலில் பெண்ணாக பிறந்தவள் என்பதால் சிகண்டி மீது அம்புகள்
எய்யாமல் அமைதியாக இருக்கிறார். சிகண்டியின் அம்புகளால் பலவீனமான, எதிர் தாக்குதலும் நடத்தாத பீஷ்மர் மீது அர்ஜூனனும் சரமாரியாக சரம்
தொடுக்க பீஷ்மர் இறந்து போகிறார்.
பெண்ணாக பிறந்த சிகண்டியை கவசமாக பயன்படுத்திக் கொண்டுதான்
அர்ஜூனன் பீஷ்மரை கொன்றான்.
கிருஷ்ணனின்
சதியைத்தான் சங்கிகளும் பயன்படுத்துகின்றனர். பெண்ணாக இருந்தால் எதிர் தாக்குதல் நடத்த
மாட்டார்கள் என்பதால் பெண்களின் பெயரில் பொய்ப்பிரச்சாரத்தை கூசாமல் செய்கிறார்கள்.
அப்படிப்பட்ட சிகண்டிகள் மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் ஏராளமானவர்கள் இருக்கிறார்கள்.
அவற்றில்
எத்தனை சிகண்டிகளை அதன் மாடரேட்டர்களே இயக்குகிறார்களோ!
Saturday, March 15, 2025
மோடி இந்து கிடையாதா மோகன் பகவந்த்?
மோகன் பகவந்த் உதிர்த்த முத்து கீழே . . .
Friday, March 14, 2025
எழுத்தாளர்களும் தோசை மாவும் . . .
கடையில் வாங்கும் மாவு என்றாலே எழுத்தாளர்களுக்கு அலர்ஜியாகி விடும் போல.
புளிச்ச மாவை திருப்பி கொடுக்கும் போது நடைபெற்ற சண்டையும் ஆஜான் மருத்துவ மனையில் சேர்ந்து பொய் வழக்கு போட்டு புளிச்ச மாவு என்று அதன் பின் அழைக்கப்பட்டதெல்லாம் இலக்கிய உலகின் அசிங்க வரலாறு.