அக்டோபர்
மாதத்தில் மட்டும் இதுவரை 85,790 கோடி ரூபாய் இந்தியப் பங்குச்சந்தை மூலமாக இந்தியாவிலிருந்து
வெளியேறி உள்ளது.
சமூகத்தில் மாற்றத்தை விரும்பும் ஒரு சாமானிய ஊழியனின் குரல், உழைக்கும் மக்களின் எதிரொலி
அக்டோபர்
மாதத்தில் மட்டும் இதுவரை 85,790 கோடி ரூபாய் இந்தியப் பங்குச்சந்தை மூலமாக இந்தியாவிலிருந்து
வெளியேறி உள்ளது.
உபி
முதல்வர் மொட்டைச்சாமியார் இப்போது எல்லா கூட்டங்களிலும் “இந்துக்கள் பிளவு பட்டிருந்தால்
கொல்லப்படுவார்கள்” என்று பேசிக் கொண்டிருக்கிறாராம். அவர் இந்துக்களை ஒற்றுமைப்படுத்தத்தான்
அவ்வாறு பேசுவதாக ஆர்.எஸ்.எஸ் விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது.
சில முக்கியமான பணிகள் இருந்ததால் விஜய் பேசியதை நான் பார்க்கவில்லை./கேட்கவில்லை. ஆனால் அரசியல் கற்றறிந்த பல பொறுப்பானவர்களின் பதிவு, அந்த உரையை சினிமாவில் பேசும் பஞ்ச் டயலாக்குகளாகவும் அரசியல் தெளிவற்ற அவியலாகவும் இருந்தது என்றும் பதிவிட்டிருந்தனர்.
இதன்
மூலம் சுமந்து உலகிற்கு தெரிவிக்கும் செய்தி ஒன்றுதான்.
“இனி
எண்டே முதலாளி விஜய்”
கனடாவில் நிகழ்த்திய கொலை போல அமெரிக்காவிலும் ஒரு காலிஸ்தான் ஆதரவாளரை கொலை நடத்த அமித்ஷாவின் தலைமையிலான உளவுத்துறை RAW) திட்டம் தீட்ட, அது தோல்வியில் முடிந்துள்ளது. அந்த கொலைக்கான ஏற்பாடுகள் செய்ய அனுப்பப்பட்ட உளவாளி விகாஷ் யாதவ். கொலை முயற்சிக்கு அவன் ஏற்பாடு செய்த வாடகைக் கொலைகாரனே ஒரு அமெரிக்க உளவுத்துறை அதிகாரி. அதனால் அந்த கொலையும் நடக்கவில்லை. இந்திய சதியும் அம்பலமாகி விட்டது. இப்போது அமெரிக்கா விகாஷ் யாதவை தங்களிடம் ஒப்படைக்குமாறு நிர்ப்பந்தம் அளிக்கிறது.
“ஏ
அமெரிக்காவே, நீ மட்டும் பாகிஸ்தானுக்கு ரகசியமாக சென்று உன்னுடைய எதிரி ஒசாமா பின்
லேடனை கொலை செய்யலாம். நாங்கள் மட்டும் எங்கள் எதிரியை உன் நாட்டில் கொல்லக் கூடாதா?
உனக்கொரு நியாயம், எங்களுக்கு ஒரு நியாயமா? ஒசாமா பின் லேடனை கொன்றவர்கள் எல்லாம் நாயகர்களாக
கொண்டாடீனீர்களே! விகாஷ் யாதவ் மட்டும் குற்றவாளியா”
விகாஷ் யாதவ் குறித்த முந்தைய பதிவின் தொடர்ச்சி இது. RAW அதிகாரியான விகாஷ் யாதவ், நிகில் குப்தா என்ற அமெரிக்கவாழ் இந்தியர் மூலம் குர்பந்வத்சிங் பண்ணும் என்ற காலிஸ்தான் ஆதரவாளரை கொல்ல ஏற்பாடு செய்கிறார். வாடகைக் கொலைகாரனாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆள் அமெரிக்க உளவுத்துறை ஆள் என்பதால் திட்டம் அம்பலமானது.
விகாஷ் யாதவை பாதுகாக்க இந்திய அரசு என்ன செய்கிறது.
கை விட்டு விட்டது.
விகாஷ் யாதவ் RAW விலிருந்து எப்போதோ ராஜினாமா செய்து விட்டார். அதனால் அவரது நடவடிக்கைக்கும் மத்தியரசுக்கும் சம்பந்தம் கிடையாது என்று அமித்ஷாவின் உள்துறை கைவிரித்து விட்டது. இனி இந்த பிரச்சினையிலிருந்து தப்பிப்பது விகாஷ் யாதவின் சாமர்த்தியம். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை.
விகாஷ் யாதவ் சம்பவம் ஒரு தனித்த நிகழ்வல்ல.
குல்பூஷன் ஜாதவ் என்ற கப்பற்படை அதிகாரி பல வருடங்கள் பாகிஸ்தானில் உளவு பார்த்து சில நாச வேலைகளும் செய்து மாட்டிக் கொண்டு மரண தண்டனை பெற்றார். அவர் உயிர் இன்னும் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அவர் எப்போதோ கப்பற்படையிலிருந்து ஒய்வு வாங்கிக் கொண்டு விட்டார். அவரது நடவடிக்கைகளுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று கை விரித்து விட்டது.
ஆஸ்திரேலியாவில் உளவாளி வேலை பார்த்த நால்வரை அந்த நாட்டு அரசாங்கம் துரத்தி விட்டதால் அவர்கள் உயிர் பிழைத்தனர்.
கத்தார் நாட்டு நீதிமன்றம் அந்நாட்டில் உளவு பார்த்த எட்டு இந்திய கப்பற்படை அதிகாரிகளுக்கு மரண தண்டனை விதித்தது. அவர்கள் மோடியின் முதலாளிகளான இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாலோ என்னவோ கத்தார் அரசின் கையில் காலில் விழுந்து அவர்களை விடுதலை செய்ய வைத்து விட்டது.
வரலாற்றில் ஆராய்ந்தால் எக்கச்சக்கமான சிக்கிக் கொண்ட உளவாளிகளின் துயர ஓலத்தை கேட்க முடியும்.
இந்தியா என்றில்லை, எல்லா நாடுகளுமே உளவாளிகளை பயன்படுத்துகின்றன. உளவாளிகளின் பணி என்றைக்கும் நேர்மையானதல்ல. அழிவு வேலைகள் செய்வதோ அல்லது அழிவு வேலைகளுக்கான ஆயத்தங்களை செய்வதோதான். அதனால்தான் உளவாளிகள் சிக்கிக் கொள்ளும் போது அவர்களை ஏவி விட்டவர்கள், தங்களுக்கும் உளவாளிக்கும் சம்பந்தம் இல்லை என்று ஒதுங்கிக் கொள்கின்றார்கள்.
பணத்திற்காக, பதவிக்காக, சில அற்ப சந்தோஷங்களுக்காக, தேச பக்தி என்று உசுப்பேற்றுவதால் ஏற்படும் போலிப் பெருமிதத்திற்காக உளவாளி வேலை பார்க்கும் எவரும் நிம்மதியாக இருந்த முடியாது. மாட்டிக் கொள்ளும் வரை மிதப்பில் இருக்கலாம். மாட்டிக் கொண்டால் எதிர்காலம் நிர்மூலம்.
உளவாளிகள் எனும் அம்புகள் துயரத்தில் கதறும் அதே நேரத்தில் எய்தவர்கள் அடுத்த இளிச்சவாய் அம்புகளை தயாரித்துக் கொண்டிருப்பார்கள் என்பதுதான் சோகமான உண்மை.
ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் அவர்களின் முகநூல் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேன். சிலரது பிம்பம் ஆரம்பத்திலேயே தகர்ந்து போகும். இவரது பிம்பம் பணி ஓய்வின் போது . .
பு.நீ.தே - புதிய நீதி தேவதை . . . .
பெல்ஜியம் தோழர் இ.பா.சிந்தன் அவர்களின் முக நூல் பக்கத்திலிருந்து எடுத்தது. இஸ்ரேலால் கொல்லப்பட்ட ஹமாஸ் இயக்கத்தலைவர் யாஹ்யா சின்வர் அவர்களின் இறுதி உயில். தமிழாக்கம் செய்தவர் தோழர் ராஜ சங்கீதன்.
LAST MOMENTS OF YAHYA SINVAR என்ற இந்த காணொளியை யூடூயுபில் பாருங்கள். ஒரு கை வெட்டப்பட்டு வாழ்வின் இறுதித்தருணத்தில் இருக்கையில் பறந்து வரும் ட்ரோன் மீது ஒற்றைக் கையால் தடியை வீசி எரியும் தீரத்தை பார்க்க மறவாதீர். கீழேயுள்ள படத்தில் சொல்லப்பட்டது போல அமெரிக்க அடிமையாக பாலஸ்தீனத்திற்கு எதிரான சவுதி அரேபிய மன்னரின் அரியணையை விட சின்வரின் சோபா கம்பீரமானது.
பாலஸ்தீனத்தின் வரலாற்றில் அம்மக்களின் துரோகியாக, எதிரியாக மோடியும் பதிவு செய்யப்படுவார்.
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வர் எழுதியிருந்த இறுதி உயில் சுருக்கம்:
காலி செய்து விட்டு காவியா?
உருப்படியாக எதையும் செய்ய துப்பில்லாத மோடி அரசு வெற்று, வெட்டி நடவடிக்கைகள் எடுப்பதில் மட்டும் குறைச்சல் கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் லோகோவிற்கு காவிச்சாயம் பூசி விட்டு “கனெக்டிங் இந்தியா” என்ற வாசகத்தை “கனெக்டிங் பாரத்” என்று மாற்றியுள்ளது.
அப்படி லோகோவைற்கு காவி அடித்துள்ள மோடி அரசு,
பி.எஸ்.என்.எல் நிறுவனத்தை இழப்பின் பிடியிலிருந்து விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுத்தது கிடையாது.
பி.எஸ்.என்.எல் நிறுவனத்துக்கு மற்ற தொலை தொடர்பு நிறுவனங்கள் அளிக்க வேண்டிய பாக்கித் தொகையை வசூலித்துக் கொடுக்க எந்த முயற்சியும் எடுத்தது இல்லை.
பி.எஸ்.என்.எல் தனது கட்டமைப்பை மேம்படுத்த தேவைப்படும் இயந்திரங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்படுவதில்லை.
பி.எஸ்.என்.எல் மீட்பிற்காக அறிவிக்கப்பட்ட தொகையை கொடுக்கவும் இல்லை.
4 ஜி சேவை வருகிறது, வருகிறது என்ற சொல்லப் படுகிறதே தவிர, இன்னும் வந்த பாடில்லை.
ஒப்பந்த ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியம் ஒழுங்காக கொடுக்கப்படுவதில்லை.
“கண்ணாடியை திருப்பினால் ஆட்டோ ஓடாது” என்பது எந்த அளவு உண்மையோ அது போல லோகாவுக்கு காவிச்சாயம் பூசுவதன் மூலம் பி.எஸ்.என்.எல் நிலைக்காது, முன்னேறாது.
தான் வளர்த்த நாய் இறந்து விட்டது என்பதை நாகேஷிடம் வருத்தமாக சொல்லும் நண்பர் தான் அதற்கு பெயரெல்லாம் வைத்ததாக சொல்வார். அதற்கு நாகேஷ், “நாய்க்கு பேர் வச்சியே நாயே, சோறு வச்சியா?” என்று கேட்பார்.
“லோகோவுக்கு காவிச்சாயம் பூசினியே, பி.எஸ்.என்.எல் பிரச்சினைகளை தீர்க்க என்ன செய்தாய்” என்று நாம் கேட்க வேண்டும்.
தமிழுக்கு போதுமான நிதி ஒதுக்குவது கிடையாது தமிழ்நாட்டைச் சேர்ந்த திட்டங்களுக்கும் நிதி ஒதுக்கீடு கிடையாது. தமிழ்த்தாய் வாழ்த்துக்களின் வரிகளை வெட்டுபவரின் ஆளுனர் பதவி பாதுகாப்பாகவே இருக்கிறது. இதையெல்லாம் விட பெரிய கொடுமை ஒன்று உண்டு.
ஒவ்வொரு
முறை தமிழ்நாட்டிற்கு வரும் போதும் தப்பு தப்பா திருக்குறலைச் சொல்லி அதை கொலை செய்வது.
திருப்பதி ஸ்ரீனிவாச கல்யாணத்தை வெளியூர்களில், வெளி நாடுகளில் நடத்துவது பற்றிய பதிவின் தொடர்ச்சி இது.
ஏனாம்?
ஆகம
விதிகளில் அப்படியெல்லாம் எதுவும் சொல்லப்படவில்லை என்று சொல்லி வழக்கை நீதிமன்றம்
தள்ளுபடி செய்து விட்டது.
நேஷனல் டெமாக்ரடிக் அலையன்ஸ் என்று அழைக்கப்படும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு நரேந்தர் தாமோதர்தாஸ் கோ அனுஷாசான் என்று காஞ்சிபரம் கடைசி சங்கராச்சார்யர் புதிய விளக்கம் கொடுத்துள்ளதாக சொல்லும் ரங்கராஜ் பாண்டேவின் சாணக்யா, அனுஷாசான் என்பதற்கு புல்லரிக்கும் விரிவாக்கம் ஒன்றையும் கொடுத்துள்ளது.
“நாட்டு
மக்களின் பாதுகாப்பு, அடிப்படை வசதி மற்றும் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும்
அரசு நிர்வாகம்’ என்று அர்த்தம் சொல்கிறார்
பாண்டே.
ஆமாம், மோடி, விஜயேந்திர சரஸ்வதி ஆகியோருக்கும் ஒழுக்கம் என்பதற்கும் என்ன சம்பந்தம்!
“திராவிட நல் திருநாடும்” என்ற வாசகம் ஆர்.எஸ்.எஸ்.ரெவியின் கட்டளைப் படிதான் தூர்தர்ஷன் விழாவில் பாடப்படவில்லை என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை. கவனச்சிதறல் என்றெல்லாம் தூர்தர்ஷன் சொன்னது வெறும் கதை. முதலமைச்சர் சொன்னது போல அது திராவிட ஒவ்வாமைதான். “தமிழர் நல் திரு நாடும்” என்ற டூல்கிட் படி சங்கிகள் போட்ட பதிவுகள் அந்த ஒவ்வாமையை நிரூபித்தது.
ஆனாலும் தமிழ்நாடு முழுக்க எழுந்த கண்டனங்கள் உண்மையிலேயே ரெவிக்கு கிலி கொடுத்து விட்டது.
அதனுடைய
விளைவுதான் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து வெட்டாமல் பாடப்பட்டதும்,
ரெவி அதற்கு வாயசைத்ததும்.