Sunday, March 31, 2024

ராமநாதபுரத்தில் அஞ்சு ஓ.பி.எஸ்

 




அரசியல் அனாதையாகிப் போன முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக போட்டியிடும் ராமநாதபுரம் தொகுதியில் அவரைத் தவிர இன்னும் நான்கு ஓபிஎஸ் கள் போட்டியிடுகிறார்கள்.

ஓட்டக்காரத்தேவர் மகனான முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன்

ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம்,

ஒய்யாரம் மகன் பன்னீர்செல்வம்

ஒச்சத்தேவர் மகன் பன்னீர் செல்வம்

ஒய்யத்தேவர் மகன் பன்னீர்செல்வம்

என்று இன்னும் நான்கு ஓ.பன்னீர்செல்வங்களை போட்டியிட வைத்து குழப்பத்தை உருவாக்க முயற்சித்துள்ளனர்.



பாவம், இதற்காக ஓ.பி.எஸ்ஸால் இன்னொரு தர்ம யுத்தம் நடத்த முடியாது என்பதுதான் அவருக்கான பெருந்துயரம் . . .

உன் குடும்பம் கிடையாது மோடி

 



 வாட்ஸப்பிலே ஒரு கடிதம், முதலில் இந்தியிலும் பின்பு ஆங்கிலத்திலுமாக தட்டச்சு செய்து, ஆங்கிலக் கடிதத்திலும் இந்தியில் கையெழுதிட்டதாக அக்கடிதம் இருந்தது. அதை படிக்கும் அளவு பொறுமை இல்லை. பொய்களைத் தவிர வேறெதுவும் இருக்கப்போவதில்லை. அதனால் படிக்கும் அளவு அந்த கடிதமும் வொர்த் இல்லை. எழுதிய ஆளும் வொர்த்  இல்லை.

 அந்த கடிதத்தின் துவக்கத்தில் சொல்லப்பட்ட “என் குடும்ப உறுப்பினரே” என்பதுதான் மிகவும் கோபத்தை தருகிறது.

 மோடியின் குடும்ப உறுப்பினராக இருக்கும் அளவிற்கு அவ்வளவு கேவலமானவனா நான்? மோடி குடும்ப உறுப்பினர் என்றழைக்கும் அளவிற்கு தரம் தாழ்ந்து விட்டேனா?

 என்ன வேண்டுமானாலும் சொல் மோடி, உன் குடும்ப உறுப்பினர் என்று சொல்லி அசிங்கப்படுத்துவதை மட்டும் நிறுத்து.

 பிகு 1 : இந்த செய்தி அனுப்பிய எண் பிசினெஸ் என்று சொன்னது. மோடிக்கு விளம்பரம் செய்யும் அந்த வணிகத்தை செய்வது யார் அரசா? பாஜகவா?

 அரசு என்றால் அது தவறு. மோடியின் தேர்தல் பிரச்சாரம் அரசின் செலவில் நடக்கக்கூடாது.

 பாஜக என்றால் அதில் பிரதமரின் லெட்டர்ஹெட்டையும் சிங்கச் சின்னத்தையும் பயன்படுத்தியது தவறு.

 பிகு2 : மோடியின் குடும்பம் ஏன் கேவலமானது என்பதை நேரம் கிடைக்கும் போது விரிவாக எழுதுகிறேன்.

 

Saturday, March 30, 2024

வெண்ணிலவே, தரையில் உதித்தாய் . . .

 


விஜய் நடித்த "துப்பாக்கி" திரைப்படத்தில் வரும் "வெண்ணிலவே, தரையில் உதித்தாய்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ணத்தில் . . .

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

என்ன ஆட்டுக்காரா கூலிப்படையோடு சகவாசமா?

 


நேற்றைய ஆங்கில இந்து நாளிதழில் வெளியான செய்தி கீழே உள்ளது.


என்ன ஆட்டுக்காரா, எந்த சமுதாய வாக்குகளை நம்பி கோவைக்கு ஓடி வந்தாயோ, அந்த சமுதாய வாக்குகளே உன்னுடைய சவகாசம் காரணமாக பறி போய் விடும் போலிருக்கே! நோட்டாவுக்கு அதிகமாகவாவது விழுமா? 

Friday, March 29, 2024

அப்போ மோடி என்ன கிழவன்????

 


பாஜக ஐ.டி விங் ட்விட்டரில் பகிர்ந்து கொண்டிருக்கிற படம் கீழே . . .




1962 ல் பிறந்த தோழர் தொல்.திருமாவளவனை கிழட்டுச் சிறுத்தை என்று வர்ணித்துள்ளார்கள். சரி, அது அப்படியே இருக்கட்டும்.

1962 ல் பிறந்தவரே கிழவன் என்றால் 1950 ல் பிறந்ததாக சொல்லப்படும் மோடி எப்படிப்பட்ட கிழவன்? படு கிழவன்? குடுகுடு கிழவன்? அதையும் சொல்லுங்கப்பா ஐ.டி விங் புத்திசாலி வாலிபர்களே!

மேலே படத்தில் உள்ளவர் வேலூரில் ஐந்தாண்டு காலம் மேயராக எதுவும் செய்யாத வேஸ்ட் பீஸ். அதிமுகவில் இருந்தவரை அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்று சுவரொட்டி அடித்து அவர் சிலைக்கு மாலை போட வருவார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பாக நாங்கள் மாலை அணிவிக்க செல்லும் போது பார்த்துள்ளேன். பாஜகவிற்கு தாவிய பின்பு அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளன்றுஅவரும் தலைமறைவாகி விடுவார். அவர் அச்சிடும் சுவரொட்டிகளும். 

இப்போது இன்னொன்று கூட நினைவுக்கு வந்தது. அது பிறகு . . . .

பணப்பூர் வேலை நாளும் AFSPA தொடர்வதும்

 


நேற்று இரவு முழுதும் மணிப்பூர் ஆளுனர், 41 % கிறிஸ்துவர்கள் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், இன்னமும் அமைதி திரும்பாத ரத்த பூமியில் ஈஸ்டர் பண்டிகை அன்று அலுவலக நாளாக அறிவித்து உருவாக்கிய சர்ச்சைதான் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்திருந்தது. பின்பு அந்த உத்தரவு திரும்பப் பெறப்பட்டது.

இந்த சர்ச்சையின் பின்னணியில் வேறு ஏதோ வில்லங்கத்தை சத்தம் இல்லாமல் பில்லா ரங்கா கூட்டணி செய்திருக்கும் என்று சந்தேகம் வந்தது.

ஆம். நிஜம்தான்.

இன்றைய செய்தித்தாள் உண்மையைச் சொன்னது.

ராணுவத்திற்கு தரப்பட்டுள்ள கொடூரமான, ஜனநாயக விரோதமான ராணுவப்படைகள் சிறப்பு அதிகாரச்சட்டம் நாகாலாந்து மற்றும் அருணாசலப் பிரதேசத்தில் இன்னும் ஆறு மாதத்திற்கு விரிவு படுத்தப்பட்டுள்ளது.

அதற்கு ஒரு நாள் முன்பாக AFSPA ஐ திரும்பப் பெறுகிறோம் என்று அமித்ஷா வஜனம் பேசியுள்ளார்.

மக்களின் சுதந்திரத்தை பறிக்க, யாராலும் கேள்வி கேட்க முடியாத அதிகாரத்தை கொடுத்துள்ள ஆட்சியாளர்கள் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டுமா?

சிந்திப்பீர்

Thursday, March 28, 2024

எந்த சினிமாவில் நாட்டாமை?

 


தேவயானியை சூர்யவம்சம் படத்தில் கலெக்டராக்கியது போல ராதிகாவை எம்.பி யாக்குவேன் என்று சொன்ன நாட்டாமை அவர்களே, ராதிகாவை எந்த படத்தில் எம்.பி ஆக்குவேன் என்பதை மட்டும் சொல்லவில்லையே?

ஆனால் நீங்க ரொம்ப லேட்டு.

மணிரத்தினத்திடம் சொல்லி பொன்னியின் செல்வன் படத்திலேயே அனிருத்த பிரம்மராயர் வேடத்தில் ராதிகாவை நடிக்க வைத்திருந்தால் பிரதம அமைச்சராக நடித்த பெருமையே கிடைத்திருக்குமே!

ஐய்யோ! அது ஆண் வேடமாயிற்றே என்று யோசித்தீர்களா?

மணிமேகலை பாத்திரத்தையே படத்தில் தூக்கி விட்டார். மதுராந்தகன்தான் செம்பியன் மாதேவியின் அசல் மகன் என்று கதையை மாற்றி சேந்தன் அமுதனையும் பூங்குழலியையும் அம்போவென்று விட்டு விட்டார்.

ஆதித்த கரிகாலனும் அருள்மொழியும் குந்தவையும் சந்திப்பதாக நாவலின் ஐந்து பாகத்திலும் இல்லாததை புதிதாக கொண்டு வந்தார்.

இவ்வளவு மாத்தினவரு அநிருத்த பிரம்மராயரை மட்டும் பெண்ணாக மாத்தி இருக்க மாட்டாரா என்ன?

CAA - வரம் அருளும் பூசாரிகள்

 


குடியுரிமைச்சட்டத்தின்படி குடியுரிமை வேண்டும் என்று விண்ணப்பம் கொடுப்பவர்களின் மதம் என்ன என்பதை உறுதி செய்யும் சான்றிதழை அவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள கோயில், சர்ச் அல்லது வழிபாட்டுத் தளத்தின் பூசாரிகள் கொடுத்தால் போதுமாம்.

மேலே உள்ள செய்தி இன்றைய ஆங்கில இந்து நாளிதழின் முதல் பக்க செய்தி.

ஆக, இனி பூசாரிகள் காட்டில் மழைதான்.. பண மழைதான் . . .

ஏன் எந்த மதம் என்பது முக்கியமாகிறது.

பாகிஸ்தான், வங்க தேசம், ஆப்கானிஸ்தானிலிருந்து வந்த இந்து, கிறிஸ்துவர், சீக்கியர், பார்ஸி, புத்த, ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே குடியுரிமைக்காக விண்ணப்பிக்க முடியும்.

இந்நாடுகளில் இருந்து அகதிகளாக வந்த இஸ்லாமியர்களோ, மியன்மர், இலங்கை ஆகிய நாடுகளிலிருந்து வந்த எந்த மதத்தவரும் விண்ணப்பிக்கவே முடியாது.

குடியுரிமைச்சட்டத்தின் முதல் கோணல் இதுதான்..

Wednesday, March 27, 2024

தமிழ்நாடு மட்டும் போதாது . . .

 


முகநூலில் பார்த்த அருமையான படம்.

ஆனால் தமிழ்நாடு மட்டும் மோடியை சுண்டி விட்டால் போதாது.

ஒட்டு மொத்த இந்தியாவும் செய்ய வேண்டிய பணி.

ஏனென்றால்

மோடி ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் எதிரி.

இந்திய மக்களின் முன்னேற்றத்திற்கும், ஒற்றுமைக்கும், சுய மரியாதைக்கும் கருத்துரிமைக்கும், ஜனநாயகத்திற்கும் எதிரி.

அதனால்

ஒட்டு மொத்த இந்தியாவும் மோடியை நிராகரிக்க வேண்டும். 

Tuesday, March 26, 2024

இனி "பாரத்மாதா கீ ஜெய்" கிடையாதா சங்கிகளா?

 


குடியுரிமைச்சட்டத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் பகிர்ந்து கொண்ட முக்கியமான தகவல் என்ன தெரியுமா?

சங்கிகள் கதற கதற கத்தும் "பாரத் மாதா கீ ஜெய்" என்ற முழக்கம் யாரால் வந்தது தெரியுமா?

"மாதார்-இ-வடன், பாரத் கீ ஜெய்" என்ற முழக்கமே பாரத் மாதா கீ ஜெய் என மாறியது.

அதை உருவாக்கியது யார்?

அஜிமுல்லாகான்.

யார் இவர்?

நானா சாகேப் பற்றி பள்ளிக்கூடத்தில் படித்தது நினைவில் உள்ளதா?

1857 சிப்பாய் புரட்சி என்றழைக்கப்பட்ட  விடுதலைப் போரில் பங்கேற்ற முக்கிய மன்னன் நானா சாகேப்.

நானா சாகேப்பின் பிரதம அமைச்சரும், பிரிட்டிஷாருக்கு எதிராக போராட வேண்டும் என்ற சிந்தனையை நானா சாகேப் மனதில் விதைத்ததும் மற்ற அரசர்களை ஒன்றிணைத்ததும் வரலாற்றில் பெரிதும் மறைக்கப்பட்ட வீரருமான அஜிமுல்லாகான் தான் அந்த முழக்கத்தை உருவாக்கியவர்.

சங்கிகள் ரோஷக்காரர்கள், இஸ்லாமியர்களின் ஓட்டுக்கள் வேண்டாம் என்று கொள்கையோடு உள்ளவர்கள் ஒரு முஸ்லீம் உருவாக்கிய முழக்கத்தை மட்டும் பயன்படுத்துவார்களா!

இனி பாரத் மாதா கீ ஜெய் க்கு பதிலாக என்ன கத்துவார்கள்?

பிகு: சங்கிகளுக்கு தேசப்பற்று என்று எந்த ........................கிடையாது. அவர்கள் பாரத் மாதா கி ஜெய் என்பதெல்லாம் வெறும் நாடகம். ஆகவே அவர்கள் கத்தத்தான் கத்துகிறார்கள். 

Monday, March 25, 2024

வண்ணமயமாகட்டும் இந்தியா!

 

ஒற்றைத்தன்மையை திணிக்க முயலும் பாஜகவை நிராகரித்து இந்தியாவின் பன்முகத் தன்மையை பாதுகாப்போம்.

இந்தியாவை பாதுகாக்க இந்தியா அணியை வெற்றி பெறச் செய்வோம். 

ஹோலி பண்டிகை போல வாழ்வும் 

இன்று JNU, நாளை இந்தியா . . .

 


புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் பேரவைத் தேர்தலில் இடதுசாரி கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

பாஜகவின் திரைப்படத்துறை அல்லக்கைகள் "ஜஹாங்கீர் நேரு யுனிவர்சிட்டி"" என்ற பெயரில் படமெடுத்து அசிங்கப்படுத்தினார்கள்.

பாஜகவின் குண்டர் படையான ஏ.பி.வி.பி யிடம்

அடியாட்கள் பலம், 

பண பலம்,

போலீஸ் பலம்,

அதிகார பலம்

ஊடக பலம்

என அனைத்தும் இருந்தும், மாணவர்கள் ரௌடிகளாலும் போலீசாலும் நிர்வாகத்தாலும் மிரட்டப்பட்டாலும் பாஜகவின் பொறுக்கிகள் அணியை தோற்கடித்து இடதுசாரிகளை வெல்ல வைத்துள்ளனர்.

இளைய சமுதாயத்தின் சிந்தனைப் போக்கிற்கான உதாரணம் இது.

இதுதான் நாளை இந்தியா முழுதும் எதிரொலிக்கும். இந்தியா வெல்லும். 

Sunday, March 24, 2024

வெட்கப்படுகிறேன் சுதா ரகுநாதன்

 


உங்கள் மகள் ஆப்பிரிக்கர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட போது நீங்கள் கடுமையாகத் தாக்கப்பட்டீர்கள். உங்களுக்கு எந்த மேடையும் தரக் கூடாது என்று அழுத்தம் தரப்பட்டது. உங்களைச் சார்ந்தவர்கள்தான் அந்த எதிர்ப்பினை முன்னெடுத்தவர்கள். திருமணம் என்பது இரண்டு தனிப்பட்டவர்களின் சொந்த விஷயம் என்றாலும் தங்களின் பாரம்பரியம் பாதிக்கப்பட்டதாக கருதி உங்களை வசை பாடினார்கள்.

அப்போது உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தது முற்போக்கு சக்திகள். நானும் கூட எழுதினேன்.

இரண்டு நாட்கள் முன்பாகக்கூட ர.கா சிஸ்டர்ஸ் வன்மத்தை கக்கிய நேரம், இவர்கள் சுதா ரகுநாதனுக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்களா என்று எழுதினேன்.

ஆனால் உங்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்த அனைவரது முகத்திலும் கரியைப் பூசி விட்டீர்கள். பாரம்பரியத்தை பாதுகாப்பது முக்கியம் என்ற பெயரில் பிற்போக்குத்தனத்தை உயர்த்திப் பிடிக்கும் உங்களுக்காக குரல் கொடுத்தமைக்கு உண்மையிலேயே வெட்கப்படுகிறேன்.

இந்த சங்கித்தனத்துக்கு நாளை உங்களை பாராட்டி ஆட்டுக்காரன் எழுதினால் கூட ஆச்சர்யப்பட் ஒன்றுமில்லை. 

ஆனாலும் உங்களை பாராட்ட வேண்டும்.

இவ்வளவு மோசமான சிந்தனையுள்ளவராக இருந்தும் உங்கள் மகளை ஆணவக் கொலை செய்யாமல் ஆப்பிரிக்கருக்கு திருமணம் செய்து வைத்தீர்களே, அதற்குத்தான் . . .

Saturday, March 23, 2024

ஸ்ரீரங்க, ரங்கநாதனின் . . .

 


கமலஹாசன் நடித்து இளையராஜாவின் இசையில் சந்தானபாரதி இயக்கத்தில் வெளியான "மகாநதி" படத்தில் வரும் "ஸ்ரீரங்க, ரங்கநாதனின்" பாடலின் வயலின் வடிவம், என் மகனின் கைவண்ண்த்தில்  . . . 

யூட்யூப் இணைப்பு இங்கே . . .

உள்ளே அழுகை, வெளியே சிரிப்பு, சங்கி துயரமிது

 


"உள்ள அழுகுறேன், வெளிய சிரிக்கறேன், நல்ல வேஷம்தான், வெளுத்து வாங்கறேன்" என்ற முதல் மரியாதைப் பாடலுக்கு ஏற்றார்போல இரண்டு சங்கிகள் இப்போது உலவுகிறார்கள்.


தென் சென்னை தொகுதியில் நின்று மந்திரியாகும் கனவில் பல காலம் சீன் போட்டு, பிரபலமாக வேண்டும் என்பதற்காக தோழர் சு.வெ மீது அவதூறு விஷம் கக்கி ஜெயிலுக்குப் போன அயோக்கியன் எஸ்.ஜி.சூர்யா. காத்திருந்தவன் காதலியை அமெரிக்க மாப்பிள்ளை கை பிடிப்பது போல அந்த தென் சென்னை தொகுதி கவர்னர் பதவியை ராஜினாமா செய்து விட்டு வந்த தமிழிசை அக்காவிற்கு போய் விட்டது. அந்த சோகத்தை மறைத்து என்னமா தியாகி வேஷம் போட்டுள்ளார் பாருங்கள்.

இரண்டு முறை தோற்றுப் போன பொன்னாருக்கு எம்.பி சீட் தர மாட்டாங்க, நாம பி.ஜே.பி க்கு போனால் கன்னியாகுமரி தொகுதியை தட்டி தூக்கி விடலாம் என்று விளவங்கோடு எம்.எல்.ஏ பதவியை இழந்து பாஜக சென்ற பச்சோந்தி விஜயதாரணியின் கனவில் மண்ணைப் போட்டு விட்டு ஹேட்ட்ரிக் தோல்விக்காக பொன்னாருக்கே சீட்டு கொடுத்து விட்டார்கள்.

எம்.எல்.ஏ வும் போச்சு  எம்.பி.சீட்டும் கிடைக்கலை என்று மனதுக்குள் புலம்பும் நிலைக்கு கொண்டு வந்து விட்டார்கள்.

என்ன! இவர்களுக்கு ஒரே ஒரு ஆறுதல் உண்டு.

நின்று மோசமாக தோற்பதிலிருந்து தப்பித்து விட்டார்கள்/ 

தாமரையே வடை

 


எங்கள் பகுதியில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி கீழே உள்ளது. தாமரையே விடை என்பதை விட வடை என்பது பொருத்தமாக இருக்கும் என்பதால் விடையை வடையாக மாற்றி விட்டேன். எல்லோரும் வழக்கமாக உளுந்து வடையின் படத்தை போடுவதால் மாறுதலுக்கு மசால் வடையின் படத்தை போட்டுள்ளேன்.

இப்பதிவின் நோக்கம் விடையோ, வடையோ இல்லை.

ஒரு கட்சி வேறு ஒரு கட்சியின் தலைவர்களின் படங்களை போட்டும் அக்க்ட்சியின் சின்னங்களை போட்டு அடித்து வைப்பதும் முறையாகுமா? இது தேர்தல் விதிகளுக்கு உட்பட்டதுதானா?

மோடியின் படத்தைப் போட்டு

திருடன்,

பொய்யன்,

புரோக்கர்,

கொலைகாரன்,

வேஷதாரி,

மத வெறியன்

என்று எழுதி தாமரை படத்தின் மீது அடித்து வைத்தால் அதை அனுமதிப்பார்களா?

பிகு: மோடிக்கு நான் எதற்கு விளம்பரம் தர வேண்டும் என்பதற்காக அவரை கம்பிகளுக்கு பின்னால் இருப்பது போல மாற்றி விட்டேன்.

Friday, March 22, 2024

அசிங்கமா போச்சே ரெவி

 


பெரிய வீராதி வீரன் மாதிரி ஆட்டுத்தாடி ரெவி சீன் போட்டுக் கொண்டு சனாதனப் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தாலும் “பில்டிங் ஸ்ட்ராங்கு, பேஸ்மெண்ட் வீக்” என்பதை அவ்வப்போது பல சம்பவங்கள் காட்டிக் கொடுத்து விடுகின்றன.

அப்படித்தான் இப்போது பொன்முடி விஷயத்திலும் அசிங்கப்பட்டு நிற்கிறது ஆட்டுத்தாடி.  உச்ச நீதிமன்றம் சூடு கொடுத்த பின்பு அவருக்கு வேறு வழியில்லை.

முதல்வரும் பொன்முடியும் ரெவியை பார்த்த பார்வை அருமை. ரெவியின் அந்த வருத்தமான புன்னகை அருமையிலும் அருமை . . . ரெஸ்ட் ரூம் போவது உட்பட தான் செய்யும் எல்லாவற்றையும் ட்விட்டரில் பதிவு செய்யும் இந்த நிகழ்ச்சி பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை.



இந்தியாவைப் பொறுத்தவரைக்கும் அரசியல் சாசனம்தான் எல்லாமும். அதை மீற யாருக்கும் உரிமை கிடையாது என்பதைத்தான் உச்ச நீதிமன்றம் அழுத்தமாக பதிவு செய்துள்ளது.

இதை ரெவி உள்ளிட்ட சங்கி வகையறாக்களும் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும். ஆனால் திருந்த மாட்டார்கள் என்பதுதான் யதார்த்தம்,,,,

 

கோவை வாக்காளர்களே, பிரியாணி செய்யுங்கள்

 


கோவை வாக்காளப் பெருமக்களே, உங்களுக்கோர் அரிய வாய்ப்பு. இந்தியாவின் மிகப் பெரிய பொய்யன் மோடியின் வாரிசான தமிழ்நாட்டின் அண்டப்புளுகன், ஆகாசப் புளுகன் ஆட்டுக்காரன் உங்கள் தொகுதியில் போட்டியிடுகிறான்.

ஒரு சாதாரண பள்ளி மாணவனுக்கு உள்ள அறிவு கூட இல்லாத அரைவேக்காடு,

கலவரத்தைத் தூண்ட அலையும் கயவன்,

சிறுபான்மை மக்கள் மீது விஷத்தைக் கக்கும் வெறியன்,

வாயைத் திறந்தால் பொய், பொய், பொய்யைத் தவிர வேறு எதுவும் அறியாதவன்.

ஊடக முதலாளிகளால் ஊதிப் பெருக்கப்படும் போலி.

தமிழ்நாட்டு அரசியலின் விபத்து.

இப்பேற்பட்ட ஒரு ஜந்துவை தோற்கடித்து அரசியலில் இருந்தே துரத்தி அடிக்கும் நல் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது.

ஆட்டுக்கறியில் பிரியாணி செய்யும் நீங்கள், ஆடு வளர்ப்பதாக சொல்லித் திரிபவனின் எதிர்கால கனவுகளை ரோஸ்ட் செய்து சிறப்பானதொரு பிரியாணி செய்வீர்.

ஆட்டுக்காரனின் டெபாசிட்டை இழக்க வைப்பீர். தமிழ்நாடே உங்களைப் பார்த்து தலை வணங்கும். 

Thursday, March 21, 2024

ஒரு விருதும் போலிப்புனிதங்களும்

 


கர்னாடக சங்கீத அளவில் ஒரு குட்டிக்கலகம் நடந்து கொண்டிருக்கிறது. STORM IN A CUP என்று ஆங்கிலத்தில் சொல்வது போல ஒரு கோப்பைக்குள் வீசும் சூறாவளி என்று கூட சொல்ல முடியாத அளவிற்கு ஒரு குட்டிக் கலகம்.

சங்கீத வித்வத் சபை என்று அழைக்கப்படுகிற மியூசிக் அகாடமி இந்த ஆண்டு அதன் சங்கீத கலாநிதி விருதை இசைக் கலைஞர் டி.எம்.கிருஷ்ணாவிற்கு அறிவித்திருப்பதற்கு ஒரு கோஷ்டி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஞ்சனி-காயத்ரி சகோதரிகள் தாங்கள் மியூசிக் அகாடமியில் பாட மாட்டோம் என்று அறிவித்துள்ளார்கள். முகநூலிலும் பதிவிட்டுள்ளனர்.

ME TOO புகாருக்கு உள்ளானதால் கச்சேரி நிகழ்த்த அனுமதி மறுக்கப்பட்ட ரவிகிரண் அவருக்கு அளிக்கப்பட்ட சங்கீத கலாநிதி விருதை திரும்பக் கொடுக்கப்போவதாக அறிவித்துள்ளார்.

பிற்போக்குச் சிந்தனைகளை கதாகாலட்சேபம் வழியாக விதைக்கும் விசாகா ஹரி, துஷ்யந்த் ஸ்ரீதர் போன்றோரும் எதிர்த்துள்ளனர். அபஸ்வரம் ராம்ஜி நக்கலடித்து ஸ்லோ பாய்சன் கொடுக்கிறார்.

இத்தனை பேரும் எதிர்க்கும் அளவிற்கு டி.எம்.கிருஷ்ணா விருதுக்கு தகுதியற்ற மொக்கைப் பாடகரா? இசைத்திறன் கொஞ்சமும் இல்லாமல் ரெகமெண்டேஷனில் விருது பெறுகிறாரா?

இல்லை.
நிச்சயமாக இல்லை.

இவர்களின் எதிர்ப்பெல்லாம் இசையால் அல்ல, அதையும் தாண்டியது.

கர்னாடக சங்கீதத்தின் புனிதத்தை சிறுமைப்படுத்தியவராம். 
அதென்ன சிறுமைப்படுத்துதல்?
சபா மேடைகளைத் தாண்டி மீனவக் குப்பங்களில் இசை நிகழ்ச்சி நடத்தியது, மற்ற மதக் கடவுள்களைப் பற்றி பாடியது. 

ஐயப்பனைப் பற்றி கே.ஜே.யேசுதாஸ் பாடலாம், காசி விஸ்வநாதர் கோயிலில் பிஸ்மில்லாகான்  ஷெனாய் வாசிக்கலாம். ஆனால் டி.எம்.கிருஷ்ணா வேற்று மதக் கடவுளை பாடினால் தவறாம். 

கர்னாடக சங்கீதம் புனிதமானதா என்ற கேள்விக்கு கே.பாலச்சந்தர், அப்படி ஒரு புடலங்காயும் கிடையாது என்று முப்பத்தி ஐந்து வருடம் முன்பே உன்னால் முடியும் தம்பி படத்தில் சொல்லி விட்டார்.

"என்னமோ ராகம், என்னென்னமோ தாளம், தலையை ஆட்டும் புரியாத கூட்டம்"
என்ற வரியை நிலைக்க வைக்கும் முயல்பவர்கள் இவர்கள்.

"கவலை ஏதுமில்லை, ரசிக்கும் மேட்டுக்குடி, சேரிக்கும் சேர வேண்டும், அதுக்கும் பாட்டு படி"
என்பதற்கு பதற்றமாகி விடுகிறார்கள்.

புனிதத்தை சிறுமைப்படுத்துகிறார் என்ற குற்றச்சாட்டின் பின்னணி இதுதான்.

தியாகராஜரை விமர்சித்தார். எம்.எஸ்.சுப்புலட்சுமியை விமர்சித்தார் என்பது அடுத்த குற்றச்சாட்டு.

தியாகராஜரைப் பற்றி என்ன பேசினார் என்று எனக்கு தெரியாது. ஆனால் தியாகராஜரைப் போல அன்றாட உணவுக்கு வீடு வீடாக உஞ்சவிருத்தி சென்று வசூலிக்கும் நிலையில் எந்த இசைக்கலைஞரும் இல்லை. "நிதி சால சுகமா?" என்ற பாடலை பாட கூசுபவர்கள்தான் இன்றைய வித்வான் சிரோண்மணிகள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி அதிகமாக மார்க்கெட்டிங் உத்திகளால் முன்னிறுத்தப்பட்டவர் என்பதில் உண்மையில்லாமல் இல்லை. அதை அவர் செய்யவில்லை. செய்தவர் அவரது தந்திரக்கார கணவரான சதாசிவம். எங்கள் தோழர் ச.சுப்பாராவ் தமிழாக்கம் செய்த நூலை படியுங்கள் புரியும்.

ர,கா சகோதரிகளின் முகநூல் பதிவு அவர்களின் உண்மையான எரிச்சலை அம்பலப்படுத்தி விட்டது.

ஒரு சமுதாயத்தை அழித்தொழிப்பேன் என்று சொன்ன, அந்த சமுதாயப் பெண்களை இழிவு படுத்திய பெரியார் என்றழைக்கப்படும் ஈ.வெ.ரா வை இவர் பாராட்டுகிறார்.

பெரியார் மீது சொல்லப்பட்ட குறிப்பிட்ட இந்த இரண்டு குற்றச்சாட்டுக்களும் அபாண்டமானவை. அனந்தகிருஷ்ண்ன் பட்சிராஜன் என்ற நாஜிப் பெரியவர் தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் அவதூறு இது. 

மீ டூ சமயத்தில் பட்ட அசிங்கத்திற்கு இப்போது எதிர்வினையாற்றுகிறார் சபலப் பேர்வழி ரவி கிரண். 

டி.எம்.கிருஷ்ணா மீது இவர்களுக்கெல்லாம் வேறென்ன பிரச்சினை?

கலை, கலைக்கு என்ற நிலைக்கு பதிலாக கலை யாவும் மக்களுக்கே என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

கர்னாடக இசை உலகில் நிலவிய பேதங்களை தன் நூல்கள் வாயிலாக அம்பலப்படுத்தியுள்ளார். அதிலே செபாஸ்டியனும் சகோதரர்களும் என்ற நூல் மிருதங்கம் உருவாக்கும் கலைஞர்களைப் பற்றியது. அது பல உண்மைகளை சொன்னது.

மத நல்லிணக்கம், மதச் சார்பின்மை ஆகியவற்றை தொடர்ந்து வலியுறுத்துபவர்.

மிக முக்கியமாக 

குடியுரைமைச் சட்டத்திற்கு எதிரான டெல்லி ஷாகின்பாத் போராட்டத்தில் கலந்து கொண்டவர். போராட்ட கீதம் என்றழைக்கப்பட்ட "ஹம் தேகேங்கே (நாம் காண்போமே" பாடலை பல மொழிகளில் பாடியவர், 

இது ஒன்று போதாதா? 

ரஞ்சனி காயத்ரி சகோதரிகளுக்கு மியுசிக் அகாடமி தலைவர் என்,முரளி கொடுத்த பதில் "உங்களுக்கு உள் நோக்கம் உள்ளது" என்று சுட்டிக் காட்டியுள்ளார்.

ஆதிக்க சக்திகளின் குரல் இச்சகோதரிகள் வாயிலாக வெளிப்பட்டுள்ளது. அவர்களைப் பாராட்டுபவர்கள் எல்லோரும் அதே சிந்தனை கொண்டவர்கள்தான். 

இப்போது டி.எம்.கிருஷ்ணாவிற்கு எதிராக பொங்குகின்ற கர்னாடக இசை வித்வான் சிரோண்மணிகள் யாராவது மகள் ஆப்பிரிக்கரை திருமணம் செய்து கொண்டதற்காக  சுதா ரகுநாதன் ஆபாசமாக வசை பாடப்பட்ட போது, அவருக்கு மேடைகள் மறுக்கப்பட வேண்டும் என்று அழுத்தம் அளிக்கப்பட்டபோது அவருக்கு ஆதரவாக வாய் திறந்தார்களா?

மேட்டிமைச் சிந்தனைக்கு புனிதப் போர்வை போர்த்தும் போலிகள்தான் இவர்கள்.. . .


Wednesday, March 20, 2024

பாஜகவில் பறவைகள் வேண்டாமாம்.

 


பாஜகவில் இன்னும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கவில்லை. ஆனால் அதற்குள் குடுமி பிடி சண்டை தொடங்கி விட்டது.

திமுகவிலிருந்து பாஜக போய், அங்கிருந்து நீக்கப்பட்டு மீண்டும் இணைக்கப்பட்ட திருச்சி சூர்யா, போலிப் பேராசிரியன் ராம.சீனுவை திருச்சியில் நிறுத்தக் கூடாது என்று ட்வீட்டியுள்ளார்.



இன்னொரு சூர்யா நிற்க ஆசைப்படும் தென் சென்னைக்குத்தான் டமில்மூசிக் குறிவைக்கிறாராம். அவர் என்ன ட்வீட்டுவாரா?

மூன்றாவது இடத்துக்கு வருவதற்கு எதற்குத்தான் சண்டை போடுகிறார்களோ! ஒரு வேளை கட்சி கொடுக்கும் காசை ஆட்டையப் போடுவதற்கோ!

ரத்தினவேலு வில்லன் மோடி

 


ஆட்டுக்காரன் சொன்னதை வைத்து அளந்து விட்டு மோடி அசிங்கப்பட்ட சம்பவம் கீழே . . .



ரத்தினவேலு பெயரைச் சொன்னால் ஆதிக்க ஜாதி ஓட்டுக்கள் கிடைக்கும் என்று கணக்கு போட்ட ஆட்டுக்காரனின் அறிவே அறிவு.

ஆமாம் மோடி, நெஜமாவே கைலாஷ் யாத்திரை போனீங்களா? இல்லை அதுவும் வழக்கமான பொய்தானா?

Tuesday, March 19, 2024

ஆழ்ந்த அனுதாபங்கள் தமிழிசை

 


தோற்றுப் போன ஆளுங்கட்சி அரசியல்வாதிகளுக்கு அளிக்கப்படும் ஜாக்பாட் பரிசு கவர்னர் பதவி. உங்களுக்கும் சந்திரசேகர் ராவிற்கும் பிரச்சினை என்பதால்”தாமரை மலர்ந்தே தீரும்” என்று தொண்டை வறண்டு போகும் அளவு கத்தியதால் பாண்டிச்சேரி கவர்னராக எக்ஸ்ட்ரா போஸ்டிங் வேறு கொடுத்தார்கள்.

ஆனால்  நீங்கள் அதையெல்லாம் ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நிற்க தயாராகி விட்டீர்கள்?

எங்கே நிற்கப் போகிறீர்கள் தமிழிசை மேடம்?

ஸ்டெரிலைட் வேதாந்தா முதலாளி அனில் அகர்வாலிடம் வாங்கிய எலும்புத்துண்டுக்காக  பனிரெண்டு பேரை சுட்டுக் கொன்றீர்களே அந்த தூத்துக்குடியிலா? போன முறை கனிமொழி அவர்களிடம் தோற்றுப் போன அதே தொகுதியிலா? ஊரே மூழ்கிப் போனாலும் மோடி எட்டிக்கூடப் பார்க்காத அந்த தூத்துக்குடியிலா?

நீலகிரித் தொகுதியின் கன்பர்ம்ட் வேட்பாளர் என்று சொல்லப்பட்டு வந்த எல்.முருகன், ஆட்டுக்காரனின் அளப்பை நம்பாமல், துண்டைக் காணோ, துணியைக் காணோம் என்று தலை தெறிக்க ஓடி மத்தியப் பிரதேசத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினரானதை பார்த்துமா ரிஸ்க் எடுத்துள்ளீர்கள்?

பாண்டிச்சேரி தொகுதியில் நிற்பீர்களோ?

பாண்டியைப் பொறுத்தவரை நீங்கள் வெளியாள். உங்கள் கட்சி ஆட்களே உங்களுக்கு சீட் கிடைக்க விட மாட்டார்கள். அப்படியே மேலிடச் செல்வாக்கு மூலம் கிடைத்தாலும் உங்கள் கட்சி ஆட்களும் கூட்டணியான என்.ஆர்.காங்கிரஸ் ஆட்களுமே உங்களை தோற்கடித்து விடுவார்கள்.

இந்த முறை தோற்றுப் போனால் இன்னொரு முறை கவர்னர் பதவி தர மோடியே ஜெயிக்கப்போவதில்லை.

ஆக உள்ளதையும் எதிர்காலத்தையும் இழந்து நொந்து போகப்போவதற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

 

ரோட் ஷோ - என்ன ஆட்டுக்காரா இதெல்லாம்?

 


மோடி நேற்று நடத்திய சாலைக் காட்சி அதாங்க ரோட் ஷோ பற்றி சங்கிகள் ஆஹா, ஓஹோ என்று பீற்றிக் கொண்டிருந்தார்கள்.

அது வழக்கம் போல வெற்று பீற்றல் என்பதை இரண்டு தோழர்களின் முகநூல் பதிவுகள் அம்பலப்படுத்தியது.

வங்கி ஊழியர் சங்கத்தலைவரும் எழுத்தாளருமான தோழர் ஜா.மாதவராஜ்

கோயம்புத்தூர் ‘Road Show'வை கொஞ்ச நேரம் பார்த்தேன். வாங்கிக் கொடுத்த பூக்களை வாரியிறைத்துக் கொண்டும், மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டும், தேமே என்றும் இரண்டு கரையோரங்களிலும் ஒற்றை வரிசையில் மெலிதாய் கூட்டம் நிற்க, அவர்களுக்குப் பின்னால் ஒரு கூட்டம் எதோ மாரத்தான் போல கூடவே ஓடிக்கொண்டே வந்தார்கள். இரு கரையோரமும் அடர்த்தியாய் கூட்டம் இருப்பது போல காட்டுவதற்காக ஆரம்பத்திலிருந்து கடைசி வரை இரண்டரை கி.மீ தூரமும் விதியே என்று ஓடிக்கொண்டிருந்தார்கள். வெறும் show.
இதைத்தான் ஆங்கில ஊடகங்கள் Mega show என்றும், stunning crowd என்றும் ஊதிக்கொண்டிருந்தன.

வழக்கறிஞரும் எழுத்தாளருமான தோழர் இரா.முருகவேள்

மோடி வருகைக்கு நான் நினைத்த அளவுக்கு கூட்டத்தை காணோம். பெரும்பாலும் ஆர் எஸ் புரம் வட இந்தியர்கள், திருப்பூரில் இருந்து அழைத்து வரப் பட்ட மக்கள். ஜெயலலிதா கோவை விவசாய கல்லூரிக்கு வரும் போது கூடும் மாபெரும் கூட்டங்களை பார்த்த கண்களுக்கு இது ஒன்றுமே இல்லை.

இவ்வளவு நாள் அதிமுக தான் பிஜேபியை பெரிய கட்சி போல காட்டிக் கொண்டு இருந்திருக்கிறது.

ஒரு பிரதமர் எவ்வளவு விஷயங்கள் பேச வேண்டி இருக்கும். Voc மைதானத்தில் கூட்டம் நடத்தி இருந்தால் நானெல்லாம் கூட போய் பார்த்து இருப்பேன். ரோடு ஷோ என்று அவர் பேசவே இல்லை. பெரும்பாலும் வீடுகள் இல்லாத வணிக பகுதிகள் வழியே காரில் செல்வது என்ன உத்தி என்று தெரியவில்லை.

கோவையில் ஆளாளுக்கு பிஜேபி என்று சுற்றுவது போலத் தெரிந்தாலும் உண்மை நிலை வேறு போலிருக்கிறது.

இத்தனை தடவை கோயம்பத்தூர் வந்த மோடிக்கு வெடிகுண்டுல இறந்தவங்களுக்கு அஞ்சலி செலுத்தனும்னு இப்போதான் ஞானோதயம் வந்ததா என்று கேட்டு வேற மானத்தை வாங்கறாங்க.

இதெல்லாம் பரவாயில்லை ஆட்டுக்காரா! மோடிக்கு என்ன வண்டி ஏற்பாடு செஞ்சிருந்த? அதில என்ன மாதிரி அலங்காரம் செஞ்சிருந்த?


தமிழ்நாட்டில் இந்த மாதிரி அலங்காரத்தை வண்டிகளில் எந்த சந்தர்ப்பங்களில் செய்வாங்கன்னு உனக்கும் தெரியலை. உன் அல்லக்கைகளுக்கும் தெரியலை. அந்த எழவை எதுக்கு என் வாயால சொல்லனும்!

நீ முட்டாள்னு நிரூபிச்சிக்கிட்டே இருக்க! இதுல உன்னை நம்பி தமிழிசை அக்கா வேற கவர்னர் பதவிகளை ராஜினாமா செஞ்சுட்டாங்க!

Monday, March 18, 2024

அசிங்கப்படுத்தாதீங்கய்யா - ஜேம்ஸ் பாண்ட்

 


கீழேயுள்ள மீமைப் பார்த்தால் ஜேம்ஸ் பாண்ட் வேடத்தில் நடித்தவர்கள் மனது என்ன கஷ்டப்படும்! பாவம் எனக்குப் பிடித்த சீன் கானரி, ரோஜர் மூர்  ஆகியோருக்காக வருத்தப்பட்டாலும்  000 எலக்டோரல் பாண்ட் என்பது மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்பதையும் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.


 

மார்ட்டின் 868 கோடி கொடுத்தது யாருக்கு?

 


இன்று சங்கிகளின் ட்விட்டர் பக்கங்கள் அனைத்தும் மார்ட்டின் திமுகவிற்கு கொடுத்த  500 கோடி ரூபாய் பற்றியே கூறியிருந்தது.

ஆம், திமுக 500 கோடி ரூபாய் வாங்கியிருந்தது உண்மைதான். அது எதற்காக என்பதை அந்த கட்சிதான் விளக்க வேண்டும்.

நிற்க மார்ட்டினிடமிருந்து திமுக பணம் பெற்ற விஷயத்தை புலனாய்வுப் புலிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிற, நேர்மையின் பிம்பங்கள் என்று தங்களை கருதிக் கொண்டிருக்கிற சங்கிகள் யாரும் கண்டுபிடிக்கவில்லை. மாறாக தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திர விபரங்களை திமுக தேர்தல் ஆணையத்திற்கு தெரிவித்திருந்தது. அதை வைத்துத்தான் சங்கிகள் ட்வீட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவிலேயே அதிக தொகைக்கு, அதாவது 1368 கோடிக்கு தேர்தல் பத்திரம் வாங்கியது மார்ட்டின்தான்.

அதில் திமுகவிற்கு கிடைத்தது 500 கோடி ரூபாய் என்றால் மீதமுள்ள 868  கோடி ரூபாய் போனது யாருக்கு?

பாஜக ஏன் தாங்கள் வாங்கிய தேர்தல் பத்திரம் பற்றி வாய் திறக்கவேயில்லை?

மார்ட்டினிடம் நாங்கள் பத்து லட்ச ரூபாய் கூட (தேர்தல் பத்திரம் வாங்க குறைந்த பட்ச தொகை பத்து லட்ச ரூபாய்) வாங்கவில்லை என்று ஏன் பாஜகவால் சொல்ல முடியவில்லை.

அந்த 868 கோடி ரூபாய் அவர்களுக்குத்தான் சென்றதால்தான் பாஜக கள்ள மௌனம் சாதிக்கிறதா?

 

Sunday, March 17, 2024

1989 ராஜீவ் போல மோடி . . .

 


ஜி.கே.மூப்பனார் ஒரு ஞானசூனியம் என்று வாழப்பாடி ராமமூர்த்தி சொன்னது நினைவில் உள்ளதா?

ஆனந்த விகடனில் மதன் போட்ட ஒரு கார்ட்டூனில் தூங்கிக்கொண்டிருக்கும் ஒரு சிறுவனை அவனது அப்பா "யார் வந்திருக்காங்க பாரு!" என்று உறவினர் ஒருவர் வருகையை முன்னிட்டு எழுப்ப முயல்வார்.  அந்த சிறுவனோ "போப்பா! ராஜீவ் காந்திதானே!" என்று சொல்லி தூக்கத்தை தொடர்வான். இது நினைவில் உள்ளதா? 

மேலே உள்ள இரண்டு சம்பவங்களும் 1989 சட்டப் பேரவைத் தேர்தலுக்கு முன்பாக ராஜீவ் காந்தி பல முறை நடத்திய தமிழ்நாட்டு பயணங்களை ஒட்டி நிகழ்ந்தது.

கூட்டணி வைக்காமல் தோற்றுப் போனதற்காக வாழப்பாடி மூப்பனாரை ஞானசூனியம் என்று தாக்கி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியையும் பரிசாக பெற்றார்.

நினைத்த போதெல்லாம் தமிழ்நாட்டுக்கு வந்த ராஜீவ்காந்திக்கு மக்கள் தோல்வியைத்தான் பரிசாகக் கொடுத்தார்கள்.

அதை விட மோசமான படுதோல்வியை தமிழ்நாட்டு மக்கள் மோடிக்கு கொடுப்பார்கள். அவர் ஒவ்வொரு முறையும் தமிழகத்திற்கு வர, வர தோல்வியின் அளவுதான் அதிகரிக்கும். அதை புரிந்து கொள்ள முடியாத ஞானசூனியம்தான் ஆட்டுக்காரன் என்பதும் முக்கியமானது.


முத்தூட் விளம்பரம் இனி இப்படி????

 


முத்தூட் பைனான்ஸ் கம்பெனி ஏதோ மிகப் பெரிய கம்பெனி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவ்வளவு பெரிய கம்பெனி இல்லை போல, ஆமாம். வெறும் மூன்று கோடி ரூபாய்தான் தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளார்கள்.


ஆகவே இனி அக்கம்பெனியின் விளம்பரம் கீழே உள்ளது போல இனி வருமோ?



யானையை பிச்சையெடுக்க் வைப்பது போல ED

 


வலிமையான, கம்பீரமான, பிரம்மாண்ட உருவம் படைத்த யானைகளை எப்படி பிச்சையெடுக்க வைத்தார்களோ, 


அது போல, சுயேட்சையாக, நேர்மையாக செயல்பட வேண்டிய அமலாக்கப் பிரிவை தேர்தல் பத்திரங்களுக்காக பிச்சைக்காரர்கள் போல ரெய்ட் அனுப்பிய பெரிய பிச்சைக்காரர்கள் பாஜக ஆட்சியாளர்கள். 

ஏன் மோடி என்னென்னமோ கெட் அப் போட்டீங்க, கொள்ளைக்காரன் மாதிரியும் பிச்சைக்காரன் மாதிரியும் ஏன் கெட் அப் போடலை? அதுதானே உங்களுக்கு ரொம்ப பொருத்தமா இருந்திருக்கும்!


Saturday, March 16, 2024

5000 டாலர் கேட்டது தப்பாங்க?

 


போலி முகநூல் ஐ.டி களுடன் உரையாடுவது எனக்கு ஒரு பொழுது போக்கு. இரண்டு நாட்கள் முன்பாக எங்கள் தஞ்சைக் கோட்டச்சங்க மூத்த தலைவரும் என்னுடைய சின்ன மாமனாருமான தோழர் எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் பெயரில் ஒரு நட்பழைப்பு வந்திருந்தது.

 அது போலிக் கணக்கு என்று தெரிந்தும் தோழர் எஸ்.ஆர்.கே அவர்களை ஒரு முறை கேட்டு உறுதிப்படுத்திக் கொண்டேன்.

 பிறகுதான் ஆட்டம் தொடங்கியது.

 நட்பழைப்பை ஏற்று நானே இன்பாக்ஸில் தகவல் அனுப்பினேன். குசலம் எல்லாம் விசாரித்த பின்பு எனக்கு உதவ முடியுமா என்ற கேள்வியை நானே முதலில்  கேட்டு விட்டேன். சொல்லுங்கள் என்று அந்த போலி பெரிய மனதோடு சொல்ல, கூகிள் நிறுவன பங்குகளை வாங்க 5000 டாலர் வேண்டும் என்று கேட்க, என் டோக்கியோ வங்கி எண்ணை அனுப்புகிறேன் என்று சீனும் போட அந்த போலி என்னை ப்ளாக் செய்து விட்டது.

 




கேட்கறதுதான் கேக்கறோம், கொஞ்சம் பெரிசா கேப்போம்னு ஐயாயிரம் டாலர் கேட்டா அது ஒரு குத்தமாங்க? அதுக்கு போய் கோபிச்சிக்கிட்டு ப்ளாக் செஞ்சிட்டாரு                        

 பிகு : இந்த சம்பவம் நடந்தும் நாலு நாளாச்சு. எழுதியும் இரண்டு நாளாச்சி. காலையில் சொன்ன அதே காரணம்தான். நெடும் பயணம் காரணமாக புதிதாக எழுத முடியாததால் பகிர்ந்து கொள்கிறேன்.

மதுரை AIIMS – முரட்டு முட்டு

 


மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில்தான் பார்த்தேன். மோடியின் சாதனையாக மதுரை ஏ.ஐ.ஐ.எம்.எஸ் கட்டப்பட்டதாக சொல்லப்பட்டிருந்தது. ஒரு மோடி ஆதரவாளர் உட்பட பலரும் கழுவி ஊற்றிக் கொண்டிருந்தார்கள்.

அவருக்கு சப்போர்ட்டாக இன்னொரு சங்கி வந்து பயங்கரமான காரணம் ஒன்றை கூறினார்.

மதுரை  AIIMS கட்டுவதற்கு திமுக அரசு இடம் கையகப்படுத்திக் கொடுக்கவில்லை என்பதால்தான் கட்டுமானப்பணி துவங்கவில்லை என்பது அந்த சங்கியின் வாதம்.


 

நிலம் கையகப்படுத்தப்படாமல் பின் எப்படி அங்கே மோடி அடிக்கல் நாட்டினார் என்று கேள்வி கேட்டால் அதற்கு பதில் சொல்லாமல் அந்த சங்கி அடுத்த பொய்யைச் சொல்லப் போய் விட்டார்.

 இப்படிப்பட்ட பொய்யர்களும் பொய்களை நம்பி பரப்பும் முட்டாள்களும்தான் மோடியின் மூலதனம்.

 ரொம்ப நாளா ட்ராப்டிலேயே இருந்தது. இன்று ஒரு நெடும் பயணம், அதனால் இதனை பகிர்ந்து கொ:ள்கிறேன்.

Friday, March 15, 2024

ரத்தத்தைக் கூட துடைக்க மாட்டீங்களாடா????

 


யாரோ அவங்க வீட்டிலேயே பின்னாடிலியிருந்து கீழே தள்ளி விட்டாங்களாம். கீழே விழுந்து நெத்தியில அடி, மூக்கில அடி, ரத்தமா ஒழுகுது. ஆஸ்பத்திரியில சேர்த்து மூனு தையல் போட்டாங்க, ஆஸ்பத்திரியிலேயே தங்கி ரெஸ்ட் எடுக்க சொன்னா, மக்களுக்கு செய்ய வேண்டிய வேலை இருக்குன்னு கிளம்பியாச்சு.

இதெல்லாம் செஞ்சது மோடின்னுதானே நெனச்சீங்க?


 

இவங்களும் மோடி மாதிரியேதான். டுபாக்கூர், முரடு.

 மம்தா பானர்ஜியின் லேட்டஸ்ட் ஸ்டன்ட் இது.

 யம்மா மம்தா உங்க குடும்பத்து ஆளுங்க ரொம்பவுமே மோசம். கீழே தள்ளி விடறாங்க, கொட்டற ரத்த்ததை (அது மெல்லிசா வழியற மாதிரிதான் ஏற்பாடு) துடைக்கக் கூட மாட்டேங்கறாங்க. அவங்களை முதலில் வீட்டை விட்டு வெளியே அனுப்புங்க, நாளைக்கு கொலை கூட செய்ய தயங்க மாட்டாங்க, படுபாவிங்க.

 ஏம்பா திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தொண்டருங்களா, உங்க தீதிக்கு நிஜமாவே அடிபட்டதுன்னு நம்பியா ஆஸ்பத்திரிக்கு கூட்டம் கூட்டமா வந்தீங்க?

 தொண்டர் மைண்ட் வாய்ஸ் : அப்படி நம்பி வரலைன்னா எங்க உடம்பிலிருந்து ரத்தம் கொட்ட வச்சி எங்களை ஆஸ்பத்திரியில படுக்க வச்சுடுவாங்களே

பத்து கோடி கொடுத்தது அவங்கதானா?

 


தேர்தல் பத்திர விபரங்களை தேர்தல் ஆணையம் தன் இணைய தளத்தில் வெளியிட்டு விட்டது. கில்லாடித்தனமான ஒரு வேலையை செய்துள்ளது. இரண்டு பட்டியல்களை வெளியிட்டுள்ளது. கொடுத்தது ஒன்று, பெற்றது இன்னொன்று. யார் யாருக்கு எவ்வளவு கொடுத்தார்கள் என்ற விபரம் கிடையாது. ரொம்பவும் மெனக்கெடாமல் அதை அவ்வளவு சுலபமாக கண்டறிய முடியாது.

அந்த பட்டியல் குறித்து எழுத நிறைய உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.

பட்டியலைப் பார்த்துக் கொண்டிருந்த போது கண்ணில் ப்ட்ட ஒரு விபரம் உருவாக்கிய சந்தேகத்தை இங்கே எழுதியுள்ளேன்.


 

PEGASUS PROPERTIES LIMITED என்ற நிறுவனம் பத்து கோடி  ரூபாய்க்கு தேர்தல் பத்திரம் வாங்கியுள்ளது.

 இந்தப் பெயர் நினைவில் உள்ளதா?

 ஆமாம்.

 இந்திய மக்களை மோடி அரசு உளவு பார்க்க மென் பொருள் கொடுத்த இஸ்ரேல் நிறுவனத்தின் பெயரும் பெகாஸஸ் தான்.

 


இரண்டும் ஒன்றா என்று உறுதிப்படுத்திக் கொள்ள இணையத்தில் தேடினால் போதுமான விபரங்கள் கிடைக்கவில்லை. சந்தேகத்தை அதிகப்படுத்தும் ஒரு முக்கியத்தகவலைத் தவிர.

 ஆம்.

 

PEGASUS PROPERTIES LIMITED நிறுவனம், ஒரு வெளிநாட்டு நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற தகவல்தான் அது.

 அந்த நிறுவனத்தின் இணைய தளத்தில் அதற்கு மேல் செல்ல முடியவில்லை.

 அதனால் இரண்டும் ஒன்று என்றே தோன்றுகிறது. மேலதிக விபரம் தெரிந்தவர்கள் இருப்பின் விளக்கவும்.