Sunday, November 19, 2023

திறமையானவர் வெல்லட்டும் . . .

 







தேச பக்தியை கிரிக்கெட் வெற்றியில் தேடுவதென்பது மூடத்தனம் என்று கருதுகிறவன் நான்.

ஆனால் இன்று தேச பக்தி பெரு வெள்ளமென தேசமெங்கும் பாய்ந்து ஓடும். எப்படி ஐ.பி.எல் அணிகளை தங்கள் நகரத்தின் அணிகளாக மக்கள் கருதுகிறார்களோ, அது போலவே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அணியை இந்திய அணியாக கருதுகிறார்கள். அரசின் எந்த கட்டுப்பாட்டுக்கும் உட்படாதது இந்திய கிரிக்கெட் வாரியம் என்பது கூட பெரும்பாலான ரசிகர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை. ஆனாலும் அவர்கள் அதை இந்திய அணியாகவே நினைக்கிறார்கள், ஆதரிக்கிறார்கள். இறுதிப் போட்டியில் வெல்ல வேண்டுமென்று துடிக்கிறார்கள். அது இயல்பானதுதான். இந்திய கிரிக்கெட் வாரிய அணி வெல்ல வேண்டும் என்றுதான் நானும் விரும்புகிறேன். அது நேர்மையானதாக, திறமையின் அடிப்படையிலானதாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். 

"எல்லாம் பெர்ஃபெக்டா இருக்கு. அதுதான் சந்தேகமாகவும் இருக்கு" என்ற பாபனாசம் படத்து வசனம் நிறைய இந்தியர்களின் மனதிலும் ஓடிக் கொண்டுதான் இருக்கிறது. உலக கிரிக்கெட்டை ஆட்டி வைப்பது இந்திய கிரிக்கெட் வாரியம். கிரிக்கெட் வாரியமோ இந்தியாவின் மிகப் பெரிய கிரிமினலின் மகனின் கையில் உள்ளது.

அதனால்தான் சொல்கிறேன்.

இன்றைய ஆட்டத்தில் திறமையாக விளையாடுபவர்கள் வெல்லட்டும். வேடிக்கை பார்க்க வரும் வெட்டி விளம்பரப் பேர்வழி பீற்றிக் கொள்ள வாய்ப்பு தர வேண்டும் என்ற வகையில் போட்டியின் முடிவு அமைய வேண்டும்.

திறமையை வெளிப்படுத்தி உலகக் கோப்பையை வெற்றி கொள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அணிக்கு வாழ்த்துக்கள்.  



No comments:

Post a Comment