Tuesday, December 13, 2022

அண்ணல் பிரகடனங்களை சங்கிகள் ஏற்பார்களா?

 


நாக்பூரில் எங்கள் சங்கத்தின் அகில இந்திய மாநாடு சில வருடங்கள் முன்பாக நடைபெற்ற போது அண்ணல் அம்பேத்கர் புத்த மதத்தை தழுவிய இடமான தீட்சா பூமிக்கு சென்றிருந்தேன்.

அப்போது அண்ணல் அம்பேத்கர் வெளியிட்ட பிரகடனங்களை ஒரு தூணில் பொறித்துள்ளார்கள்.

 



அவை இங்கே  . . .

 

1)        பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகியோரை கடவுளாக கருதவோ, வழிபடவோ மாட்டேன்

2)        ராமனையோ கிருஷ்ணனையோ கடவுளாகக் கருதி வழிபட மாட்டேன்.

3)        கௌரி, கணபதி போன்ற ஹிந்து தர்மம் சொல்கிற எவரையும் கடவுளெனக் கருதி தொழ மாட்டேன்.

4)        கடவுள் அவதாரமெடுத்தார் என்பதை ஒருபோதும் நம்ப மாட்டேன்.

5)        புத்தர் விஷ்ணுவின் அவதாரம் எனச் சொல்வது தவறு மட்டுமல்ல, விஷமத்தனமான பிரச்சாரமும் கூட.

6)        திதி போன்றவற்றை நான் செய்ய மாட்டேன்.

7)        புத்த தர்மங்களுக்கு முரணான, எதிரான எதையும் நான் செய்ய மாட்டேன்.

8)        பிராம்மணர்கள் மூலம் எந்த சடங்கையும் செய்ய மாட்டேன்.

9)        அனைத்து மனிதர்களும் சமம் என்பதை நான் நம்புகிறேன்.

10)     சமத்துவத்தை உருவாக்க நான் பாடுபடுவேன்.

11)     புத்தரின் உயரிய கொள்கைகளை பின்பற்றுவேன்

12)     புத்தரின் பத்து கோட்பாடுகள் படி நடந்து கொள்வேன்.

13)     அனைத்து ஜீவராசிகளையும் நேசிப்பேன்.

14)     நான் திருட மாட்டேன்.

15)     நான் தகாத உறவில் ஈடுபட மாட்டேன்

16)     நான் பொய் சொல்ல மாட்டேன்.

17)     எந்த போதைப்பொருளையும் நான் உட்கொள்ள மாட்டேன்

18)     புத்த தர்மத்தின் மூன்று அடிப்படைகளான ஞானம், கருணை, நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வாழ்வேன்.

19)     மனிதகுல வளர்ச்சிக்கு ஊறு விளைவிக்கிற, மனிதர்களை சமமற்றவர்களாகவும் இழிவாகவும் நடத்துகிற ஹிந்து தர்மத்தை துறந்து புத்த தர்மத்தை தழுவிகிறேன்.

20)     இனி புத்த தர்மப்படியே நடந்து கொள்வேன் என சபதமேற்கிறேன்.

 இப்போது அண்ணலுக்கு காவிச்சட்டை போட்ட அர்ஜுன் சம்பத் வகையறாக்களும் அம்பேத்கர் இந்து மதத்திற்கு எதிராக எதுவும் சொல்லவில்லை என்று சொல்லும் சங்கிகளும் அண்ணல் அம்பேத்கரின் பிரகடனங்களில் ஒன்றையாவது ஏற்பார்களா?

பிகு: அங்கே எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்து கொள்கிறேன். சும்மா ஒரு விளம்பரம்தான் . . .




 

2 comments:

  1. தந்தை பெரியாரின் சிலையின் கீழ் எழுதி வைத்துள்ளதைப் போல அண்ணலின் சிலைக்குக் கீழ் இந்த பிரகடணத்தை எழுதி வைக்காதது தான் தவறு. அதைச் செய்திருந்தால் இவர்கள் அந்தப் பக்கமே வந்திருக்க மாட்டார்கள்.
    இனியாவது செய்வார்களா?

    ReplyDelete
  2. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete