மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.கனகராஜ், சங்கி திருப்பதி நாராயணனின் ஒரு ட்வீட்டுக்கு எதிர்வினை ஆற்றியிருந்தார்.
பொய்யும் அவதூறுமே உங்கள் மூலதனம் என்பது தெரியும் சார் Narayanan Thirupathy
ஆனாலும் இப்படியா?
ஏதோ கேரள அரசே திட்டமிட்டு கழிவை தமிழகத்தில் கொட்டுவதுபோல் பேசுற அந்த குணம் இருக்கே அதுதான் சார் சங்பரிவாரின் சிறப்பே!
அது சரி! அபாயகரமான சிந்தனைக் கழிவை தத்துவம் எனக் கொண்டாடும் உங்களிடம் வேறென்ன எதிர்பார்க்க முடியும்?
உடனே திருப்பதி நாராயணனின் வக்கீலாக ஆஜராகி விட்டார் மூத்த்த்த வார்த்தை வியாபாரி மாலன்.
கேரள அரசு கொட்டுவதாக அவர் பதிவில் இல்லையே? அரசு கொட்டாமல் இருக்கலாம். ஆனால் அதைத் தடுக்க வேண்டிய பொறுப்பு அதற்கு உண்டா இல்லையா,?
இதற்கு தோழர் கனகராஜே தக்க பதிலடி கொடுத்து விட்டார்.
கேரள அரசுக்கு தண்டனை அளிக்க வேண்டும் என்பதன் பொருள் என்ன சார்?
வேறு சிலரும் மாலன் நாராயணாருக்கு கடுமையான பதில் கொடுத்தார்கள்,
பாவம் வயதானவரை இப்படி கலாய்க்கிறார்களே என்று அவருக்கு ஆதரவாக நான் களமிறங்கினேன்.
என்னுடைய பின்னூட்டம் கீழே
பாவம் சார் நீங்க, பார்வைக்குறைபாட்டுக்கு கண் மருத்துவரையும் புரிதல் குறைபாட்டுக்கு மன நல மருத்துவரையும் அணுகி சிகிச்சை பெற வேண்டிய முதியவர் நீங்கள் என்பதைக் கூட கணக்கில் கொள்ளாமல் உங்களை இப்படி கலாய்க்கறாங்களே சார்! இனிமேலாவது இந்த கம்யூனிஸ்டுங்க கிட்ட வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்காம இருங்க.
என்ன நான் சொன்னது சரிதானே!
No comments:
Post a Comment