நேற்றிலிருந்து உலவிக் கொண்டிருக்கிறது இந்த படம்.
ஆயிரம் காரணங்கள், ஆயிரம் விளக்கங்கள் கொடுத்தாலும் இதனை ஏற்க முடியாது. மேயரே நின்று கொண்டு வர முன் வந்திருந்தாலும் முதல்வர் இதை அனுமதித்திருக்கக் கூடாது. ஏற்கனவே அவரை உங்கள் மந்திரிகள் ஒரு மேயராக நடத்தாமல் சின்ன பெண்ணாகவே நடத்துவது குறித்த விமர்சனங்கள் வந்திருக்கும்.
அதிமுகவில் மீண்டும் இணைந்த உதிர்ந்த ரோமம் எஸ்.டி,எஸ், இது போல ஏ1 ன் வேனில் தொங்கிக் கொண்டு வந்ததை உங்கள் தந்தை எப்படியெல்லாம் நக்கல் அடித்தார் என்பதை நினைவு படுத்திக் கொள்ளுங்கள். சத்யராஜ் படத்தில் அது ஒரு காட்சியாகவே வந்தது.
சென்னையில் தண்ணீர் தேங்காமல் படகு ஓட்டும் நாடகம் நடத்த முடியாமல் ஆட்டுக்காரனும் அவன் வகையறாக்களும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
வெறும் வாயிலேயே வடை சுடும் அவர்களுக்கு அவல் கொடுக்காதீர்கள். ஆட்சியின் மீது தோழமைக்கட்சியினர் முன் வைக்கும் விமர்சனங்களை சரி செய்திடுங்கள்.
இந்தியாவை காப்பாற்ற தமிழ்நாடு முக்கியம். அதனை கட்டுக்கோப்பாய் பாதுகாக்க, குறைகளை சரி செய்வது இன்னமும் முக்கியம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDelete