குஜராத்தை நான் எடுத்துக்கறேன், நீ டெல்லியை எடுத்துக்கோ என்பது போன்ற கணபதி பேக்கரி டீலிங்கே குஜராத் சட்டப்பேரவை, டெல்லி கார்ப்பரேஷன் தேர்தல் முடிவுகள். இதற்கு மேல் சொல்ல ஏதுமில்லை. பாஜகவுக்கு ஆதரவாக இஸ்லாமியர்களின் ஓட்டை பிரிப்பதையே இலக்காகக் கொண்டு செயல்படும் ஓவைசியோட என்ன டீலிங் என்பதுதான் தெரியவில்லை.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வெட்டியாய் நடந்ததற்குப் பதிலாக குஜராத்தில் அந்த ஒற்றுமை யாத்திரையை நடத்தியிருக்கலாம்.
மிஸ்டர் கார்கே, உங்க ஹிமாச்சல் பிரதேஷ் எம்.எல்.ஏ க்களை ஜாக்கிரதையா பார்த்துக்குங்க. சாமி முன்னாடி சத்தியம் செஞ்சும் கோவாவில் கட்சி மாறினவங்க உங்க காங்கிரஸ் எம்.எல்.ஏ க்கள்!
No comments:
Post a Comment