ஒரு இறுதிப் போட்டி எப்படி இருக்க வேண்டுமோ, அந்த இலக்கணப்படி அமைந்த இறுதிப் போட்டி நேற்றைய போட்டி.
முதல் பாதியிலேயே அர்ஜெண்டினா இரண்டு கோல்களை அடிக்க, பிரான்ஸ் அணியும் அவ்வளவு வேகம் காண்பிக்காததால் போட்டி முடிந்து விட்டது போன்ற தோற்றமே ஏற்பட்டது. கடைசி பதினைந்து நிமிடங்களில் எங்கிருந்துதான் பிரான்ஸ் அணியின் எம்பாம்பேவுக்கு வேகம் வந்ததோ! அவரை தடுக்க தடுப்பாட்டத்திற்கு பதில் தப்பாட்டம் ஆட பெனால்டி கிடைத்து முதல் கோலை அடித்தார். அடுத்த இரண்டாவது நிமிடத்தில் இரண்டாவது கோலையும் அடிக்க ஆட்டம் கூடுதல் நேரத்திற்கு சென்றது.
கூடுதல் நேரத்தில் பந்து பெரும்பாலும் அர்ஜெண்டினா வசமே இருக்க மூன்றாவது கோலும் அடிக்கப்பட்டது. தொலைக்காட்சியில் நேர்முக வர்ணனை செய்து கொண்டிருந்தவர்களே, அர்ஜெண்டினா மூன்றாவது முறையாக உலகக் கோப்பையை வெல்கிறார்கள் என்று சொல்ல தொடங்கி விட்டார்கள். மீண்டும் ஒரு தவறு, மீண்டும் ஒரு பெனால்டி. இரு அணிகளும் சமமாகியது.
கடைசியில் பெனால்டி ஷூட் அவுட்டே வெற்றியாளர்களை தீர்மானித்தது.
2014 ல் பயிற்சியாளராக வெற்றி பெற மாரடோனா ஆசைப்பட்ட கோப்பையை அவரது சீடன் 2022 ல் வெற்றி பெற்றார்.
எந்த சூழலிலும் பதற்றத்தை காண்பித்துக் கொள்ளாத மெஸ்ஸிக்கே இந்த உலகக் கோப்பை சொந்தம்.
அதிக கோல்களை அடித்தமைக்கான தங்கக் காலணி கிடைத்தும் கோப்பையை கோட்டை விட்டதால் கொண்டாட முடியாத நிலை எம்பாம்பே விற்கு . . .
எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் இறுதி நிமிடம் வரை காத்திருக்க வேண்டும் என்ற பாடத்தை கற்றுக் கொடுத்தது கத்தார் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள்.
2022 உலகக் கோப்பை முடிந்து விட்டது. 2024 தேர்தல் கோப்பை காத்திருக்கிறது. மெஸ்ஸியின் அணியாய் ஒன்று திரண்டால் இந்தியா வெற்றி பெறும், பாசிஸ சக்திகளிடமிருந்து விடுதலை பெறும், இறுதித் தருணம் வரை முயற்சி செய்வோம். . .
No comments:
Post a Comment