Monday, December 19, 2022

அந்த சிறுவன் மகிழ்ந்திருப்பான் அல்லவா!

 

நேற்று உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் இறுதிக்கட்டத்தில் அர்ஜெண்டினாவும் பிரான்சும் சம நிலையில் இருந்த போது எனக்கு எட்டு வருடங்கள் முன்பாக பிரேசிலில் அர்ஜெண்டினாவிற்கும் ஜெர்மனிக்கும் இடையே நடந்த இறுதிப் போட்டியின் கடைசி நிமிடங்களில் பார்த்த காட்சியும் அப்போது வலைப்பக்கத்தில் எழுதிய பதிவும்தான் நினைவுக்கு வந்தது.

அந்த பதிவும் புகைப்படங்களும் இங்கே.

 

04,ஆகஸ்ட், 2014

 

நெகிழ வைத்தது அந்தச் சிறுவனின் கண்ணீர்

 

உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளின் இறுதி ஆட்டத்தை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் இந்தக் காட்சியையும் கண்டிப்பாக கவனித்திருப்பார்கள்.

 








ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் ஜெர்மனி ஒரு கோல் போட்டதுமே அர்ஜெண்டினா ரசிகர்கள் வருத்தத்தின் எல்லைக்கே சென்று விட்டார்கள். கண்ணீர் கடலில் துயரம் தோய்ந்த  முகத்தோடு பார்த்துக் கொண்டிருந்தவர்களின் ஒரு சிறுவனும் இருந்தான்.

 

அதிகபட்சம் ஆறிலிருந்து எட்டு வயதிருக்கலாம் அந்த சிறுவனுக்கு. கண்களில் நீர் வடிந்து கொண்டிருக்க, அவனுக்கு பின்னே நின்றவர் அவனை இழுத்து ஆறுதல் சொல்ல முயற்சிக்க வேகத்தோடு அந்த கைகளை தட்டி விட்டான். அவன் முகத்தில் இருந்த சோகத்தை வார்த்தைகளில் விவரிப்பது கடினம்.

 

அவன் கண்ணீரும் கைகளைத் தட்டி விட்ட சோகமும் இன்னும் மனதிலேயே நிற்கிறது. 

 

அநேகமாக அந்த சிறுவன் வாலிபனாக நேற்றைய இறுதிப் போட்டியையும் பார்த்திருப்பான். மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பான்.

 

யார் கண்டது! அடுத்த உலகக் கோப்பை போட்டியில் விளையாடக் கூடச் செய்யலாம்!

 

 

No comments:

Post a Comment