மோடி தன் வழக்கமான செட் ப்ராப்பர்டியான தன் அம்மாவோடு போட்டோ செஷன் நடத்திய போது அவர் அணிந்திருந்த சால்வை கண்ணைக் கவர்ந்தது. அதன் விலை 1650 டாலர் என்றும் இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 1,36,000 என்று தகவலும் இருந்தது.
மோடியின் மதிப்பை குறைக்கவே இப்படி செய்கிறார்கள் என்று சந்தேகம் வந்ததால் மோடி அணிந்து கொண்ட சால்வை பற்றி நானும் கொஞ்சம் இணையத்தில் தேடினேம்.
நான் நினைத்தது சரிதான்.
மோடியின் மதிப்பை குறைக்கும் முயற்சிதான்.
ஆம்,ஜெண்டில்மேன் & வுமன்,
அந்த சால்வையின் விலை ரூபாய் 2,26,000 தான்.
15 லட்ச ரூபாய்க்கு கோட்டு வாங்கிக் கொடுத்த முதலாளிங்க, ரெண்டே கால் லட்சத்துக்கு சால்வை வாங்கித் தர மாட்டாங்களா!
இந்தியாவையே மோடி மூலமா வாங்கி கல்லா கட்டும் முதலாளிங்க, காஷ்மீர் சால்வை கூட வாங்கித் தர மாட்டாங்களா!
நாம நம்ம வீட்டுல வேலை பாக்கறவங்களுக்கு தீபாவளிக்கு புதுத்துணி வாங்கிக் கொடுப்போம்.
அது மாதிரி அதானியோ, அம்பானியோ அவங்க வீட்டு மாட்டுத் தொழுவத்துல வேலை பார்க்கிற மோடிக்கு புது சால்வை வாங்கிக் கொடுத்திருக்காங்க,
உங்களுக்கென்னய்யா பொறாமை!
No comments:
Post a Comment