குடிகாரக்கவி
என்று பிரசித்தி பெற்ற ஆஜானின் குண்டர்படை தளபதி லட்சுமி மணிவண்ணனின் இரு முகநூல் பதிவுகள்
கீழே.
பொருநை
நகைப்பிற்குரிய ஏராளம்
குளறுபடிகள். ஒரு இலக்கிய விழாவை இந்த திராவிட அரசால் திறம்படச் செய்ய இயலாது
என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.
பள்ளிக் குழந்தைகளை
வலிந்து அழைத்து வந்து அரங்குகளில் இறக்குகிறார்கள். வந்திருக்கும்
கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் இதனை எவ்வாறு எதிர்கொள்வது என்பதே
விளங்கவில்லை. குழந்தைகளிடம் தனியே அதற்கென்றே உரையாடுவது வேறு விஷயம். வழியின்றி
பார்வையாளர்கள் என்கிற பெயரில் அவர்களை கொண்டு நிரப்புவது அராஜகம்
இரண்டு அரங்குகளில்
பங்கு பெற்றேன். அதில் ஒன்று கவிதை அமர்வு. மூன்று கவிஞர்கள் பங்கேற்றோம். அதில்
சபரிநாதனுக்கு ஆறாயிரம் ரூபாய் ஊதியம். அதே அமர்வில் பங்கேற்ற எனக்கு மூவாயிரம்.
சபரிநாதன் பதறி இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதை என்னிடம் கொடுங்கள்
என்றார். உங்களுக்கு கிடைத்தது உங்களுக்கு என்று அவருக்குச் சொன்னேன். அவர் கழுகு
மலையில் இருந்து வருகிறார். நான் நாகர்கோயிலில் இருந்து சென்றிருக்கிறேன். முதலில்
அரசு இப்படி எளிய கூலியை சரஸ்வதிக்குத் தருவதே தவறு .இப்படி தந்தால் ஒழுங்கு
செய்யும் அதிகாரிகளுக்கும்,அவர்களுக்கு எடுபிடிகளாக காலங்காலமாக இருக்கும்
இடதுசாரிகளுக்கும் வாக்தேவி பேரில் மதிப்பே உண்டாகாது. அதிலும் இடது வலது சாதி மத
என்ஜிஓ என்னும் பாரபட்சங்கள். உண்மையில் இவை அசிங்கங்கள். இத்தகைய விழாக்களில்
பத்தாயிரத்திற்கும் குறைவாக எழுதுகிறவர்களுக்கு கொடுக்க கூடாது. பாரபட்சம்
கடைபிடித்தல் கூடவே கூடாது
இந்த பாரபட்சம்
எங்கிருந்து வருகிறது? இலக்கியத்தில் இருந்து அல்ல .இடதுசாரிகளே அரசின் பண்பாட்டு
புரோக்கர்களாக இருக்கிறார்கள். இடதுசாரிகள் நுட்பமான பாரபட்சம் கொண்டவர்கள்.
இடதுசாரிகளுக்கு இந்த பிச்சை வருமானம் அதிகமாக இருக்கும் படி அமைப்பை அவர்கள் வளைத்துக்
கொள்கிறார்கள். இத்தகைய குறைபாடுகள் இலக்கியத்தின் நன்மதிப்பை தரம் இறக்கக்
கூடியவை. கடமைக்காக அரசு இலக்கிய விழாக்கள் உருவாக்கி இலக்கியத்தை இழிவு செய்யக்
கூடாது
இரண்டாவது அமர்வுக்காக
இன்று பணமே தரவில்லை. இரண்டு அட்டைத் தட்டிகள் தந்திருக்கிறார்கள். அதை வைத்து
நான் என்ன செய்ய? தமிழக முதல்வருக்கு தபால் செய்து விடட்டுமா?
*********************************************************************
திருநெல்வேலி
ஆட்சியரிடம் இருந்து பொருநை இலக்கியத் திருவிழாவில் பங்கேற்றமைக்கு நன்றி
தெரிவித்து ஒரு கடிதம் அனுப்பி இருந்தார்கள். அதற்கு நான் எழுதி அனுப்பிய பதில்
கடிதம் இது
அன்புடன் உங்களுக்கு,
வணக்கம். இந்த நன்றி
அறிவிப்பினை நான் ஏற்கவில்லை. ஒரே அரங்கில் பங்கேற்றவர்களிலேயே தாங்கள் தந்த
சன்மானத்தில் பாகுபாடு காட்டினீர்கள். கவிதை அரங்கில் நாகர்கோயிலில் பணிபுரியும்
கழுகுமலையைச் சார்ந்த சபரிநாதனுக்கு ஆறாயிரம் தரப்பட்டது. அருகில் இருந்த எனக்கு
மூவாயிரம் தரப்பட்டது. சன்மானத்தில் இத்தகைய பாகுபாடுகளை ஒரு எழுத்தாளராக நான்
ஏற்றுக் கொள்ளவில்லை.
இரண்டாம் நாள் நாஞ்சில்
இலக்கியம் அமர்வு என்னுடைய தலைமையில் நடைபெற்றது. அதற்கு எனக்கு சன்மானம்
வழங்கப்பட வில்லை. பிறர் முன்னிலையில் எனக்கு அவமானமும் தலைகுனிவும் ஏற்பட்டது. இத்தனைக்கும் நான் இரண்டாம் நாளுக்கு மட்டுமே
வர சம்மதம் தெரிவித்து இருந்தேன்.
எனவே தங்களின்
பாகுபாடான நடத்தைக்கு எனக்கு விளக்கம் தேவை. அது எனக்கு ஏற்புடையதாக இல்லை ஆயின்
நீங்கள் பொருநை அரங்குகளில் தந்த இரண்டு அட்டைத்தட்டிகளையும் பணம் மூவாயிரத்தையும்
தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விடுவேன் என்பதை தாங்களுக்கு தாழ்மையுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்
உண்மையுள்ள,
லக்ஷ்மி மணிவண்ணன்
*********************************************************************************
பத்தாயிரம்
ரூபாய்க்கு சரக்கு வாங்கி அடித்து மட்டையாக முடியாத ஆத்திரத்தை இந்த குடிகார பிச்சைக்கார
கவிஞன் இடதுசாரிகள் மீது வெளிப்படுத்துகிறான். இதுவே இவனுக்கும் ஆறாயிரம் ரூபாய் கொடுத்திருந்தால்
மாவட்ட ஆட்சியரை பாராட்டி கவிதை பாடியிருப்பான்.
இது
போன்ற குடிகார பிச்சைக்காரனையெல்லாம் இலக்கிய
விழாவுக்கு அழைத்து ஒரு அமர்வுக்கும் தலைமை தாங்க வைத்த நெல்லை மாவட்ட ஆட்சியருக்கு
இதுவும் வேண்டும். இன்னமும் வேண்டும். வீட்டின்
அலமாரியில் வைக்க வேண்டிய நினைவுப்பரிசு இவனுக்கு
அட்டைத் தட்டியாகத் தெரிகிறது, நாயிடம் கிடைத்த தேங்காய் போல . . .
பிகு:
எழுதி நாளாச்சு. ஆஜான் சீடன் யோக்கியதை தெரிய வேண்டும் என்பதால் வெளியிடுகிறேன்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDelete