சுமந்து சங்கிகளால் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து பிறகு பகிர்கிறேன் என்று நேற்று எழுதியிருந்தேன். அந்த பதிவு இங்கே. நடுநிலை வேடம் போடுவதை நிறுத்தி விட்டு ஒழுங்காக சங்கியாக மட்டும் நடந்து கொண்டால் அவருக்கு கூலியாவது சரியாக கிடைக்கும். ஒரு பக்கத்திலிருந்து மட்டுமே அடி கிடைக்கும்.
அலைபேசி
செட்டுகள் 99 % இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது என்ற மத்திய அமைச்சரின் ட்வீட்டிற்கு
இந்தியாவில் இணைக்கப்படுகிற (ASSEMBLING) என்று சுமந்து சொல்லி விட சங்கிகள் அவரும்
நம் சக சங்கிதானே என்றெல்லாம் பார்க்காமல் அநியாயத்துக்கு அசிங்கப்படுத்தி விட்டார்கள்.
சங்கிகள்
அவ்வாறு செய்வதில் ஆச்சர்யப்பட ஏதுமில்லை. டிமோவைத் தவிர மற்ற அனைவரையும் அப்படித்தான் தாக்குவார்கள்.
என்ன
பிரச்சினை என்று சட்டென்று நினைவுக்கு வரவில்லை. ஏதோ ஒரு தனிப்பட்ட இஸ்லாமியக் குடும்பத்திற்கு
விசாவா பாஸ்போர்ட்டோ கொடுக்க அனுமதி வழங்கினார் என்று நினைவு.
அதற்கு
என்னவெல்லாம் பேசினார்கள்!
பாகிஸ்தானுக்கு
போ!
முஸ்லீமிடம்
கிட்னி வாங்கியதால் முஸ்லீமாகிவிட்டார்.
முஸ்லீம்
கிட்னி என்பதால் இதயமும் முஸ்லீம் கிட்னி.
லவ்
ஜிஹாத்தை ஆதரிக்கிறார்.
இப்படியே
ஏராளமாய். இதில் முஸ்லீம் என்ற வார்த்தையை நான்தான் பயன்படுத்தினேனே தவிர அவர்கள் கொச்சையாகத்தான்
எழுதியிருந்தனர்.
இத்தனைக்கும்
சோனியா காந்தி பிரதமராகக் கூடாது என்று கூடாது என்று கூச்சல் எழுப்பி அவர் பிரதமரானால்
நாள் வெள்ளைப்புடவை கட்டுவேன் என்று பரபரப்பை ஏற்படுத்தி சோனியா காந்திக்கு பிரேக்
போட்டவர்.
அவரையே
சங்கிகள் அசிங்கப்படுத்தினார்கள் என்றால் கூலிக்கு மாரடிக்கும் சுமந்து நடுநிலை நாடகம் போட்டால் மட்டும் விடுவார்களா என்ன?
No comments:
Post a Comment