Monday, December 11, 2023

காஷ்மீர் இனி ???????????

 



காஷ்மீர் மக்களின் உரிமைகளுக்கு சவப்பெட்டி செய்தது டிமோ அரசு. அந்த சவப்பெட்டியின் மீது ஆணிகளை அடித்துள்ளது உச்ச நீதிமன்றம். அரசு செய்தது எல்லாம் சரி என்று சொன்னதற்குப் பிறகு எழுத இனி என்ன இருக்கிறது?

வழக்கு விசாரணையின் போது கேட்ட கேள்விகளுக்கும் இப்போது வந்துள்ள தீர்ப்பிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. ஏன் காஷ்மீர் தொடர்பான அரசியல் சாசன ஷரத்துக்களுமே கூட எந்த சம்பந்தமும் இல்லை.

இந்த தீர்ப்பை கொடுப்பதற்கா இத்தனை ஆண்டுகள் வழக்கை தொடாமல் காலம் தாழ்த்தினார்கள்?

நீதிபதிகள் தீர்ப்பு எழுதவில்லை. ஓய்வுக்குப் பிந்தைய பதவிகளுக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள் என்று எங்கோ படித்தது நினைவுக்கு வருகிறது.

இனி காஷ்மீர் என்ன ஆகும்?

அதானி போன்ற கார்ப்பரேட்டுகளின் வேட்டைக் காடாகும். பாதிக்கப்படும் மக்கள் மிருகத்தனமாக அடக்கப்படுவார்கள். குரல் கொடுப்பவர்கள் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டு நசுக்கப்படுவார்கள்.

 

No comments:

Post a Comment