Wednesday, December 20, 2023

மாரி செல்வராஜூம் மறை கழண்ட சங்கிகளும்


நேற்றிலிருந்து சங்கிகள் புலம்பிக் கொண்டிருக்கிற விஷயம் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ், அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுடன் நெல்லை வெள்ள நிவாரணப்பணிகளில் உடன் இருப்பதுதான்.

சுமந்து, சவுக்கு சங்கர் போன்ற பெரிய சங்கிகள் தொடங்கி மத்யமர் ஆட்டுக்காரன் குழு சில்லறை சங்கிகள் வரை மாரி சேல்வராஜூக்கு அங்கே என்ன வேலை என்பதை அசிங்கமாக எழுதிக் கொண்டே இருக்கிறார்கள்.

 











பெயரளவிற்கு மகளிர் மசோதாவை  நிறைவேற்றிய அன்று திரைப்பட நடிகைகளுக்கு பெண் ஜனாதிபதிக்கே அனுமதி மறுக்கப்பட்ட நாடாளுமன்றத்தில் என்ன வேலை என்று அன்று  யாரும் கேட்கவில்லை. இந்தியக் குடிமக்கள் என்ற முறையில் அவர்கள் அங்கே சென்றதை குறை கூற ஒன்றுமில்லை. மகளிர் மசோதாவிற்காக தொடர்ச்சியாக போராடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தோழர் பிருந்தா காரத், சுபாஷினி அலி போன்ற தலைவர்களை அழைத்து கௌரவித்திருந்தால் பொருத்தமாக  இருந்திருக்கும் என்பது வேறு விஷயம்.

 

மாரி செல்வராஜ், நெல்லையின் மண்ணின் மைந்தன். அவரது சொந்த கிராமமே வெள்ளத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ள நிவாரணப் பணிகளுக்காக அவர் அங்கே செல்கிறார். அமைச்சருடன் உள்ள நல்லுறவை மக்களுக்காக பயன்படுத்திக் கொள்கிறார். முதிய எழுத்தாளர் இந்துமதி போல தன் சுய நலத்துக்காக தன் தொடர்புகளை பயன்படுத்திக் கொள்கிறார்.

 

தன் சொந்த மண்ணில் நிவாரணப்பணி ஆற்ற மாரி செல்வராஜ் சென்றதில் சங்கிகளுக்கு என்ன பிரச்சினை?

 

சென்னை  வெள்ளம் போல நெல்லை வெள்ளத்தை பயன்படுத்த நினைத்தார்கள். தூத்துக்குடி எம்.பி எங்கே என்று போலி பேராசிரியர் ராமசீனு தொடங்கி ஏராளமான சங்கிகள் அரசியல் செய்ய நினைத்து பல்பு வாங்கினார்கள்.

 

வேறு விஷயம் கிடைக்காததால் இவரை வைத்து விளையாடுகிறார்கள்.

 

மு.க.ஸ்டாலினின் கட்டத்தின் படி அவர் முதல்வராக வாய்ப்பில்லை என்ற ஜோசியரின் வாக்கை நம்பி அது பலிக்காமல் போனதிலிருந்தே விரக்தியின் உச்சத்தில் போனவர்கள் முதல்வரையும் அவர் பையனையும் வசை பாடுவதை ஒரு கடமையாகவே செய்து வருகிறார்கள்.

 

ஜாதிய மேட்டிமைப் புத்தியினை சாடி படமெடுத்துக் கொண்டிருப்பதால் மாரி செல்வராஜை நினைத்தாலே  சங்கிகளுக்கு பற்றிக் கொண்டு வரும். இருவரையும் ஒன்றாக பார்த்தால் அவர்கள் எப்படி தாங்குவார்கள்.

 

தமிழ்நாடு முழுதும் மழை, பனி காரணமாக இருந்தாலும் பொறாமைத்தீ அவர்கள் மனதில் கொழுந்து விட்டு எரிவதால் பாவம் சங்கிகள் மறை கழண்டு போன பைத்தியங்களாக மாறி விட்டார்கள். 

No comments:

Post a Comment