Saturday, December 2, 2023

கனடா கொலைகள் போலவே அமெரிக்காவிலும்

 


கனடா வாழ் சீக்கியர்களை இந்திய அரசு ஆள் வைத்து கொல்கிறது என்பது கனடா நாட்டின் குற்றச்சாட்டு. கொல்லப்பட்டவர்களுக்கு காலிஸ்தான் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தப்பட்டது. ஆனால் அஅவர்கள் டெல்லியின் எல்லையில் நடந்த விவசாயிகளின் போராட்டத்திற்கு தங்களால் இயன்ற நிதியுதவியை செய்தவர்கள் 

 இந்திய அரசின் மீது அதே குற்றச்சாட்டு மீண்டும் வைக்கப்படுகிறது. இது பற்றி ஓமன் வாழ் மருத்துவர் திரு சென்.பாலன் எழுதிய பதிவை பகிர்ந்து கொள்கிறேன்.

 இந்தியா இப்படியெல்லாம் செய்யுமா என்றெல்லாம் அதிர்ச்சியடைய வேண்டாம். எல்லா நாடுகளும் செய்யும். டிமோ அரசு நிச்சயம் செய்யும். ரத்தக்கறை படிந்த கரங்களைக் கொண்ட டிமோதானே இந்தியப் பிரதமர்! இந்த பிரச்சினையை தீர்க்க யாராவது சில அதிகாரிகளை பலியாடுகளாக்கி முக்கியக்குற்றவாளிகள் தப்பிவிடுவார்கள் பாருங்கள்.

 

சர்வதேச ஆயுதக் கடத்தல் மற்றும் போதைப் பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருப்பவர் நிகில் குப்தா. அவரை இந்திய அரசு அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டு அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒருவரை கொ*லை செய்ய உதவி கேட்கிறார்.

 

நிகில் குப்தா அமெரிக்காவில் இருக்கும் கிரிமினல் ஒருவரிடம் தனக்கு ஒரு கூலிப்படை அடியாளை ஏற்பாடு செய்து தரும்படி கேட்கிறார். அவரும் நிகில் குப்தாவிற்கு ஒரு அடியாளை ஏற்பாடு செய்து தருகிறார். மர் - டர் திட்டத்திற்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கூலியாக பேசப்படுகிறது. அதில் 15,000 டாலரை முன்பணமாகத் தர நிகில் குப்தாவும் இந்திய அரசு அதிகாரியும் சம்மதிக்கின்றனர்

 

அனைத்தும் நன்றாகச் செல்லும் போது நிகில் குப்தா இந்திய அரசு அதிகாரியிடம் இந்த உதவிக்கு கைமாறாக குஜராத்தில் தன் மீது இருக்கும் கிரிமினல் வழக்குகளை தள்ளுபடி செய்யச் சொல்லி கேட்கிறார். அதற்கு இந்திய அதிகாரி தனதுபாஸ்ஸிடம் பேசிவிட்டதாகவும் அனைத்து வழக்குகளும் தள்ளுபடி ஆகிவிட்டது எனவும் கூறுகிறார்

 

அமெரிக்காவில் இவர்கள் கொல்ல திட்டம் போட்டது இந்திய வம்சாவழியைச் சேர்ந்த ஒரு சீக்கியரை. அவர் அமெரிக்க குடிமகன்

 

கனடாவைச் சேர்ந்த ஹர்தீப் சிங் என்ற சீக்கியரை சிலர் துப்பாக்கியால் சுட்டுக் கொ*ன்றனர். அந்த வீடியோவை அமெர்க்க கூலிப்படைக்கு அனுப்பிய நிகில் இதேபோல கொ*ல்ல வேண்டும் என்கிறார். இந்திய அரசு அதிகாரியோ நியூயார்க்கிலும், கலிபோர்னியாவிலும் நமக்கு இதேபோல டார்கெட் உள்ளது என நிகில் குப்தாவிற்கு மெசேஜ் அனுப்புகிறார். அந்த செய்தி அனுப்பப்பட்ட கணினியின் ஐபி முகவரி தில்லியில் உள்ள ஒரு அரசு நிறுவனம்

 

இந்தத் திட்டத்தை விரைவாக முடிக்க வேண்டும் என இந்திய அதிகாரி அவசரப்படுத்துகிறார். அப்படி என்றால் 1,50,000 டாலர் பணம் கொடுக்க வேண்டும், அதில் 25,000 முன்பணமாக வேண்டும் என்கிறார் அந்த அமெரிக்க அடியாள்

 

இதற்காக அமெரிக்காவில் இருக்கும் தனது சோர்ஸ் மூலம் மேலும் 15,000 டாலர் பணத்தை அடியாளிடம் சேர்ப்பிக்கின்றார் இந்திய அரசு அதிகாரி

 

இப்போது தான் சினிமாவை மிஞ்சும் ட்விஸ்ட். அமெரிக்க புரோக்கர், அடியாள் அனைவருமே அமெரிக்க காவல்துறையைச் சேர்ந்த அண்டர் கவர் ஏஜண்ட்கள். இதுவரை பேசிய அழைப்புகள், மெசேஜ்கள், பணம் கொடுக்கும் போது எடுத்த வீடியோ என பக்காவாக ஆதாரத்தை சேகரித்துவிட்டனர். நிகில் குப்தாவை நைசாக பேசி செக் குடியரசு நாட்டிற்கு வரவைத்து அங்கு கைது செய்துவிட்டனர். அவருக்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு அதிகாரி உட்பட அனைவரையும் குறிப்பிட்டு இப்போது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது

 

ஒரு நாட்டின் குடிமகனை அந்த நாட்டிலேயே வைத்து இன்னொரு நாடு கொல்வது தீவி*ரவாதம் அல்லது போர் தொடுப்பதற்கு ஒப்பானது. சர்வதேச அளவில் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இந்த வழக்கு மாறியுள்ளது. ஏற்கனவே கனடா அரசும் இந்தியா மீது இதே குற்றச்சாட்டை கூறியுள்ளது

 

பொதுவாக இப்படி பெரிய சிக்கல் என்றால் காதும் காதும் வைத்தது போல் தூதரக அதிகாரிகளே பேசி முடித்துவிடுவார்கள். ஆனால் இம்முறை அமெரிக்க அரசு பொதுவெளியில் அனைத்தையும் புட்டு புட்டு வைத்துவிட்டது. என்ன செய்ய திட்டமிட்டுள்ளார்கள் எனத் தெரியவில்லை

 

No comments:

Post a Comment