Thursday, December 14, 2023

மம்தா, மாயாவதி, கேரள மன்னராட்சி

 



 

பஹூஜன் சமாஜ் கட்சியின் அடுத்த வாரிசாக மாயாவதியின் அண்ணன் மகன் முடிசூடப்பட்டுள்ளார்.

 

ஏற்கனவே திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் மம்தாவின் வாரிசாக அவரது அண்ணன் மகன் அபிஷேக் பானர்ஜி முடி சூடப்பட்டுள்ளார்.

 

முந்தைய கேரள மன்னராட்சியில் அரசன் திருமணம் ஆகாதவராக இருக்க, அடுத்த மன்னராக அரசின் அக்கா மகன் நியமிக்கப்படுவான்.

 

இங்கே இரு கட்சிகளிலும் அரசி திருமணமாகாதவராக இருப்பதால் அண்ணன் மகனுக்கு முடி சூடப்பட்டுள்ளது.

 

மற்ற கட்சிகளில் சோழ, பாண்டிய அரசு பின்பற்றப்படுவது போல அல்லாமல் இவர்கள் மட்டும்  கேரள பாணியை பின்பற்றுகிறார்கள்.

 

இப்படிப்பட்ட முடியாட்சிகள் இல்லாத கட்சிகளாக கம்யூனிஸ்ட் இயக்கங்கள் மட்டுமே உள்ளது.

No comments:

Post a Comment