லடாக் தன்னாட்சி வளர்ச்சி கவுன்சில், கார்கில் அமைப்புக்காக நடந்த தேர்தலில் மொத்தமுள்ள 26 இடங்களில் 21 இடங்களில் இந்தியா கூட்டணியின் தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் கட்சி வெற்றி பெற, இரண்டு இடங்களை சுயேட்சைகளை வெல்ல, பாஜக இரண்டே இடங்களில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது. ஒரு இடத்திற்கான முடிவு தெரியவில்லை.
காஷ்மீருக்கான அரசியல் சாசனப்பிரிவு 370 நீக்கப்பட்டு மாநில அந்தஸ்து பறிக்கப்பட்ட பின்பு நடந்த முதல் தேர்தல் இது.
2019 க்குப் பிறகு பாஜக செய்த அராஜகங்களை இந்தியா கூட்டணியும் நாங்கள் கொண்டு வந்த வளர்ச்சியை பாரீர் என்று பாஜகவும் தேர்தலை சந்தித்தது.
உங்களால் எந்த வளர்ச்சியும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது என்று அந்த மக்கள் வாக்களித்து விட்டனர்.
வாஜ்பாய் அரசின் மெத்தனத்தால் ஆக்கிரமிக்கப்பட்ட கார்கில் பகுதியை இந்திய ராணுவ வீரர்கள் மகத்தான தியாகம் செய்து மீட்டெடுத்தார்கள்.
அது போல மத வெறி பிடித்த கிரிமினல்களால் ஆட்சி என்ற பெயரில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இந்தியாவை இந்தியா கூட்டணி மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது கார்கில்.
No comments:
Post a Comment