பொட்டு வைக்காத பெண்களின் புகைப்படத்தை விளம்பரத்தில் வெளியிட்டதால் கஜானா ஜ்வெல்லரிக்கும் நல்லி சில்க்ஸுக்கும் எதிராக ட்வீட்டி அவர்களின் விளம்பர தூதராகினார் சங்கி எஸ்.ஆர்.சேகர்.
அடையார் ஆனந்த பவன் உரிமையாளர் தந்தை பெரியாரை பாராட்டி ஒரு வார்த்தை சொன்ன காரணத்திற்காக அந்த ஹோட்டலை புறக்கணிக்கச் சொல்லி சங்கிகள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அநேகமாக அதன் காரணமாகவே அந்த ஹோட்டலின் வணிகம் அதிகமாகும் என்று நினைக்கிறேன்.
இப்படியே இன்னும் எத்தனை நிறுவனங்களுக்கு சங்கிகள் விளம்பரம் தேடித் தரப்போகிறார்களோ!
பிகு: ஏ2பி ஹோட்டலின் இட்லி, சாம்பார், சாப்பாடு ஆகியவை சுமார்தான் என்றாலும் அவர்களின் காபி எனக்கு பிடிக்கும். பருப்பு போளி, தேங்காய் போளி ரொம்பவே பிடிக்கும்
சலிப்பில்லாமல் துவக்ககால உற்சாகத்துடன் தொடர்ந்து தன் உணர்வுகளை வெளிப்படுத்திவரும் தோழருக்கு இதயபூர்வமான வாழ்த்துகள்.
ReplyDelete