Sunday, October 8, 2023

விழித்துக் கொண்ட நியாயவான்களே!

 


இஸ்ரேலின் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதல் உலகெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. ஹமாஸ் நடத்திய தாக்குதலைக் கண்டித்து நாங்கள் இஸ்ரேலுடன் நிற்கிறோம் என்று உலகெங்கும் பல நியாயவான்கள் (மணிப்பூர் மக்களை கைவிட்ட டிமோ உட்பட)  என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்கள்.

நல்லது. 

இத்தனை நாள் உறக்கத்தில் இருந்தவர்கள் இப்போதாவது விழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி.  உங்கள் உறக்கத்தை முற்றிலுமாக கலைக்க நல்ல டீயோ, காபியோ குடித்து விட்டு (டிமோ கோமியம்தான் குடிப்பார் என்றால் அது அவரின் விருப்பம்) ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன்பாக இஸ்ரேல் இது நாள் வரை என்ன செய்து கொண்டிருந்தது என்பதை கொஞ்சம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.

அப்பாவிகள் யார் கொல்லப்பட்டாலும் யாரால் கொல்லப்பட்டாலும் தவறுதான்.

இன்று இஸ்ரேலிய மக்களின் இறப்பிற்காக கதறி அழுகிறவர்கள் யாராவது இஸ்ரேலால் கொல்லப்பட்ட லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்களுக்காக கண் கலங்கியதாவது உண்டா?

பாலஸ்தீனத்தின் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி அப்பகுதியை ஆக்கிரமித்துக் கொண்டே  இருக்கிற இஸ்ரேல் மீது சிறு விமர்சனமாவது செய்ததுண்டா?

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளரும் எழுத்தாளருமான தோழர் அ.முத்துகிருஷ்ணன் பகிர்ந்து கொண்ட ஒரு படத்தை நான் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.


கூடாரத்தில் ஒட்டகம் புகுந்த கதையாக பாலஸ்தீனம் எப்படி இஸ்ரேலால் சுருக்கப்பட்டது என்பதை படம் பார்த்து உணருங்கள்.

தோழர் முத்து கிருஷ்ணன் இன்னொரு கேள்வியையும் எழுப்பி இருந்தார். உலகிலேயே மிகவும் சக்தி வாய்ந்த உளவுத்துறை என்று புகழப்படுகிற இஸ்ரேலின் உளவுத்துறைக்கு ஹமாஸின் தாக்குதல் பற்றி ஏன் தெரியவில்லை என்று கேட்டு அதற்கு ஒரு ஊகத்தையும்சொல்கிறார்.

செல்வாக்கு முற்றிலும் சரிந்து போய், நீதி மன்றத்தோடு மோதிக் கொண்டிருக்கிற இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹூவுக்கு தன் மீதான பிரச்சினைகளை திசை திருப்ப ஹமாஸின் தாக்குதல் தேவைப் பட்டிருக்குமோ என்பது அவரது ஊகம்.

அதனை நாம் நிராகரிக்க முடியாது. 2019 தேர்தலுக்கு முன்பாக உளவுத்துறை எச்சரித்தும் கூட புல்வாமாவில் சி.ஆர்.பி.ஃஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்படுவதை வேடிக்கை பார்த்த கொடூரர்களின் ஆட்சியில் அல்லவா நாம் வாழ்கிறோம்!

இஸ்ரேலுக்காக இதயம் துடிக்கிற நியாயவான் கனவான்களே (நீங்கள் அப்படிப்பட்ட அடைமொழிகளுக்கெல்லாம் அருகதை அற்றவர்கள் என்ற போதிலும்) கீழே உள்ள படத்தை பாருங்கள்.


பாலஸ்தீனப் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒப்பந்தத்தை உருவாக்கியதற்காக 1994 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் அவர்கள்.

அந்த ஒப்பந்தத்தில் பாலஸ்தீனர்களின் உரிமைகளை விட்டுக் கொடுத்து விட்டார் என்று அப்போது யாசர் அராபட் விமர்சிக்கப்பட்டார். 

அந்த அற்ப ஒப்பந்தத்தைக் கூட நிறைவேற விடாத பெருமை இன்றைய இஸ்ரேல் பிரதமர் நெத்ன்யாஹூ வுக்கே உண்டு.

உங்கள் மனிதாபிமானம் உண்மை என்றால் குறைந்தபட்சம் அந்த ஒப்பந்தத்தையாவது அமலாக்கச் சொல்லுங்கள். ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து இஸ்ரேலை வெளியேறச்சொல்லுங்கள். 

No comments:

Post a Comment