சீனாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா இதுவரை நூறு பதக்கங்களை வென்றுள்ளது. இனியும் வெல்ல வாய்ப்பு உள்ளது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை இந்தியா வென்றுள்ள அதிகபட்ச பதக்கங்கள் இந்த முறைதான்.
ஹாக்கிப்போட்டியில் ஆடவர் அணி தங்கம் வென்று அடுத்தாண்டு பாரிஸில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதியாகியுள்ளனர்.
விற்போட்டி, பேட்மிண்டன், பிரிட்ஜ், கபாடி, மல்யுத்தம் என பல்வேறு விளையாட்டுப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
இந்தியா சீனாவில் நிகழ்த்தி வரும் சாதனைகள் எத்தனை பேருக்கு தெரியும்?
சமூக வலைத்தளங்களில் கூட பெரிய பரபரப்பு இல்லை. அந்த நிசப்தத்தில் இந்திய விளையாட்டு வீரர்களின் உழைப்பும் முயற்சியும் அமுங்கிப் போய் விட்டது.
நாமாவது இந்திய வீரர்களை மனதார வாழ்த்துவோம்.
பிகு; இந்தியாவின் துயரமான டிமோ, வெற்றி பெற்றவர்களோடு புகைப்படம் எடுத்துக் கொண்டு ட்விட்டரில் போட அனுமதிக்கக்கூடாது. மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டத்தை ஒடுக்கி, குற்றவாளிக்கு பாதுகாப்பு கொடுத்த அந்தாளுக்கு அதற்கெல்லாம் தகுதியே கிடையாது.
No comments:
Post a Comment