ரயில்
வரும் நேரத்தை அறியும் ரயில்யாத்ரி ஆப்பில் காணப்பட்ட குளறுபடி குறித்து முன்பொரு முறை
எழுதியிருந்தேன்.
அதன்
பின்பு எந்த ஆப்பையும் பயன்படுத்துவதில்லை. நேரடியாக indianrail.gov.in என்ற ரயில்வே இணைய தளத்தில் பார்ப்பேன்.
போன
வாரம் என் மகனை ரயிலேற்றி விட காட்பாடி ரயில் நிலையத்துக்குச் சென்றேன். அவன் செல்ல
வேண்டிய ரயில் எங்கே இருக்கிறது என்று நான்
என் அலைபேசியில் பார்த்த அதே நேரத்தில் என்
மகனும் அதே நேரத்தில் அதே இணைய தளத்தை அவனது அலைபேசியிலிருந்து பார்த்தான் சரியான நேரத்தில்
வருவதாக எனக்கு சொன்ன அதே தளம் பத்து நிமிடம்
தாமதமாக வருவதாக அவனுக்குச் சொன்னது.
இன்னும்
ஒரு முறை பார்த்தோம். அப்போதும் அதே மாதிரிதான் வந்தது.
ஏன்
இந்த குழப்பம்?
இதனை
நம்பி ரயில் நிலையத்துக்கு செல்வதை திட்டமிட்டால் சிக்கல்தான்.
பிகு:
கடைசியில் ரயில் பத்து நிமிடம் தாமதமாகத்தான் வந்தது.
No comments:
Post a Comment