நேற்று கூட்டத்திலும் பயணத்திலும் இருந்ததால் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு டிமோ பதிலளித்ததை அதிர்ஷடவசமாக பார்க்கவில்லை.
இன்று நாளிதழில் படித்தால் அந்த உரையில் (வழக்கம் போலவே, எதிர்பார்த்தது போலவே) சரக்கொன்றுமில்லை.
மணிப்பூர் மக்களோடு நாடே நிற்கின்றது என்ற வஜனமும் முந்தைய ஆட்சியாளர்களை சாடலும் வெற்று உதார்களும் மட்டுமே.
"நாடே மணிப்பூர் மக்களோடுதான் நிற்கிறது. நீயும் உன் ஆட்சியும் கட்சியும் ஏன் நிற்கவில்லை?"
என்பதுதான் கேள்வியே.
"ஐம்பது முறை வட கிழக்கு மாநிலங்களுக்கு சென்றதாக பீற்றிக் கொள்கிறாயே, பிரச்சினையின் போது எங்கே பதுங்கிக் கொண்டாய்?"
என்ற கேள்விக்கு ஏனய்யா பதில் சொல்ல மறுக்கிறாய்?
டிமோவுக்கு பிடிக்கவே பிடிக்காத இடத்தில் ஒன்றரை மணி நேரம் இருக்க வைத்தது நம்பிக்கையில்லா தீர்மானம். இதை விட ஒரு கேவலமான பிரதமர் உலகில் எங்கும் இருக்க முடியாது.
படம் நன்றி: எழுத்தாளர் தோழர் முத்து கிருஷ்ணன்.
No comments:
Post a Comment