தமிழ்நாட்டு போலீஸில் சங்கிகள் ஆழமாக ஊடுறுவியுள்ளார்கள். மகாத்மா காந்தி நினைவு நாள் கூட்டத்தில் அவரை கொன்றது கோட்சே என்று சொல்லக் கூடாது என ஒரு போலீஸ் அதிகாரி கோவையில் தோழர் ஜி.ராமகிருஷ்ணனோடு மல்லுக்கு நின்றது நினைவில் உள்ளதா?
அதே போல இரண்டு சம்பவங்கள் நேற்று நடந்துள்ளது/
ஈரோடு புத்தக விழாவிற்குள் “இந்துத்துவ பாசிசம்- வேர்களும் விழுதுகளும்” என்ற நூலையும் “அர்த்தமற்ற இந்து மதம்” என்ற இரு நூல்களை புத்தக விழாவில் விற்கக்கூடாது என்றும் விளம்பரப் பதாகையைக் கூட வைக்கக்கூடாது என்றும் ஒரு போலீஸ் ஆய்வாளர் கலாட்டா செய்துள்ளார்
சென்னை புளியந்தோப்பு ஸ்டேஷன் ஆய்வாளரோ “இங்கே ராமராஜ்யம்தான் நடக்கும். பிடிக்கவில்லையென்றால் பாகிஸ்தானுக்கோ சவுதிக்கோ போய் விடு” என்று பேசியுள்ளார்.
தமிழ்நாட்டு காவல்துறைக்குள் காவியாடுகள் ஊடுறுவியுள்ளது என்பதையே இச்சம்பவங்கள் உணர்த்துகின்றன. இது மிகவும் ஆபத்தானது. ஆட்டுக்காரன், ஹெச்.ராசா போன்றவர்கள் போல காவல்துறை நடந்து கொண்டால் தமிழ்நாட்டில் அமைதி நிலவுமா?
திருப்பூர் அதிகாரி மாற்றல் செய்யப்பட்டுள்ளார். புளியந்தோப்பு அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இது போதாது.
அவர்கள் மீது துறை ரீதியிலான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அதை விட முக்கியமாக காவல்துறைக்குள் ஊடுறுவியுள்ள காவியாடுகளை அரசு கண்டறிந்து பிரியாணி போட்டு விட வேண்டும்.
No comments:
Post a Comment