Thursday, August 10, 2023

மகாத்மா காந்தி கொள்ளுப்பேரனா இருந்தாலும்

 


நேற்று மகாத்மா காந்தியின் கொள்ளுப்பேரன் துஷார் காந்தி கைது செய்யப்பட்டு போலீஸ் நிலைய லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார். 

சமூக செயற்பாட்டாளர் டீஸ்தா செதல்வாட் வீட்டிலேயே அடைக்கப்பட்டு விட்டார்கள்.

என்ன தவறு செய்தார்கள்?

மேலே உள்ள படத்தைப் பாருங்கள்.

கடந்தாண்டு தென் மண்டல மாநாடு வேலூரில் நடைபெற்ற போது பிரச்சாரப் பயணத்தின் நிறைவுப் பொதுக்கூட்டத்தை "வெள்ளையனே வெளியேறு தினம்" அன்று நடத்தினோம்.

மேலே சொன்ன இருவரும் அன்றைய தினத்தை குறிக்கும் அமைதிப் பேரணியில் கலந்து கொள்ள புறப்பட்டவர்கள்.

பாஜகவிகுத்தான் அமைதியும் பிடிக்காது, சுதந்திரமும் பிடிக்காது. அதனால் பேரணியை தடை செய்து இவர்களையும் கைது செய்து விட்டனர்.

வெள்ளையனே வெளியேறு தினம் அவர்களுக்கு வில்லங்கமானது கூட.

அப்போராட்டத்தை காட்டிக் கொடுத்த துரோகி, கருங்காலிதான் அடல் பிஹாரி வாஜ்பேய் என்பதும் நினைவுக்கு வருமே. 

No comments:

Post a Comment