தமிழ்நாட்டு
அரசு அமலாக்கியுள்ள காலை உணவுத் திட்டத்தையும் அதனால் பயன் பெறும் மாணவர்களையும் அசிங்கப்படுத்தி
தின மனு இதழ் செய்தி வெளியிட்டது. அந்த செய்தியை பகிர நான் விரும்பவில்லை.
மனசாட்சி உள்ள எவராலும் அதனை கண்டிக்காமல் இருக்க முடியாது. இந்த அசிங்கத்தை கண்டித்து தமிழ்நாட்டின் முதல்வர் வெளியிட்ட செய்தி முக்கியமானது. கண்டனத்தோடு நிறுத்திக் கொள்ளாமல் அப்பத்திரிக்கைக்கு அரசு விளம்பரங்களை நிறுத்துவது, நூலகங்களில் வாங்குவதை நிறுத்துவது போன்ற நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
ஒரு தோழர் சொன்னதன் அடிப்படையில் அந்த பக்கம் தலை வைத்து படுப்பதில்லை என்றாலும் கூட இன்று மத்யமர் ஆட்டுக்காரன் குழுவில் இச்செய்தி குறித்து ஏதாவது கருத்துக்களை தெரிவித்துள்ளனரா என்று மெனக்கெட்டு போய்ப் பார்த்தேன்.
அந்த அரிய முத்துக்களை நீங்களும் பாருங்கள்.
இதிலே
பெண்ணின் பெயரில் வந்துள்ளதெல்லாம் ஃபேக் ஐ.டி. குழுவின் அட்மினோ, மாடரேட்டர்களோ யாரோ
ஒருவர் பெண்ணின் பெயர்களில் ஒளிந்து கொண்டு தரக்குறைவாக எழுதி வருகிறார்கள். சிகண்டி
என்ற திருநரை முன்வைத்து பீஷ்மரின் வில்லை
அமைதியாக்கிய அதே உத்தி.
தின
மலர் வெளியிட்ட செய்தியை விட அதற்கு முட்டு கொடுத்த சங்கிகள் அனைவரும் தினமலரையும்
விட கேவலமானவர்கள்.
No comments:
Post a Comment